Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமிறக்கப்பட்ட முக்கிய ஆயுதம்..! ஆபத்தில் கோத்தா, மகிந்த!!

Featured Replies

ராஜபக்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் துணிந்து அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறும் முக்கிய நபரே சரத் பென்சேகா.அந்தவகையில் கடந்த ஆட்சியின் போது நாட்டுக்கு மிக முக்கிய புள்ளியாக இருந்த சரத் பொன்சேகா மகிந்தவினால் தண்டிக்கப்பட்டு அரசியலிலும், மக்களிடத்திலும் அநாதையாக்கி விடப்பட்டார்.

பின்னர் அவருக்கு ஆதரவும் பதவி கொடுத்து காத்து வருபவர் ரணில் விக்ரமசிங்கவே என்பது அனைவரும் அறிந்த விடயமே.

இப்போதைய நிலையில் நாட்டில் அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மகிந்த, கோத்தபாய போன்றோர் பொன்சேகாவினால் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்நோக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மகிந்தவை அடக்க ரணில் தரப்பிடம் இருக்கும் முக்கிய ஆயுதமே சரத் பொன்சேகா எனவும் அவருக்கு மகிந்த தரப்பின் முக்கிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெரிந்த காரணமாகவே அவர் அரசுடன் இணைந்து வருகின்றார்.  இதேவேளை அரசு தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் கூட சரத்பொன்சேகாவுடன் முரண்பட்டவர்களே. அந்த வகையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் கூட பொன்சேகாவின் எதிரியே.

இவ்வாறான ஒரு நபர் அரசுடன் இணைந்து இருப்பது ராஜபக்சர்களை அடக்க இருக்கும் ஓர் ஆயுதம் தக்க சமயத்தில் அது பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே என்றே கூறப்படுகின்றது. தற்போது ஆட்சிக் கவிழ்ப்பில் தீவிரமாக மகிந்த தரப்பு செயற்பட்டு கொண்டு வரும் வேளையில் அதற்கு முட்டுக் கட்டையாக பொன்சேகா களம் இறக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஊடகவியலாளர் லசந்தவின் கொலைக்கு முக்கிய காரணம் மகிந்தவும் பொன்சேகாவுமே என புலனாய்வு விசாரணையில் தெரிவித்தும் உள்ளார் பொன்சேகா. தொடர்ந்து இழுபறியாக இருக்கும் பொன்சேகா ஏற்கனவே விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் இப்போதே அவர் விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அரசின் அமைச்சராக உள்ள நானே விசாரணைக்கு வந்துள்ளேன் எனும் போது மகிந்தவும், கோத்தபாயவும் கட்டாயம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் நான் இவற்றிக்கு பொறுப்பு கூற வேண்டியது அவசியம் இல்லை. அப்போதைய பாதுகாப்பு செயலாளர், மகிந்த, பொலிஸ் மா அதிபர் மட்டுமே இவற்றிக்கு பொறுப்பு. நான் நாட்டில் தீவிரவாதத்தை மட்டுமே கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டவன், நாட்டில் கொலைகளை செய்தது வெள்ளை வேன் கடத்தலைச் செய்தது அனைத்துமே கோத்தபாய, மகிந்த தரப்பே.

லசந்த கொலைக்கும் அவர்களே காரணம். கோத்தபாயவிடம் இதற்காக பல இரகசியக் குழுக்கள் இருந்தன எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தக் கருத்துகள் இரண்டு கேள்வியை எழுப்புகின்றது. அதாவது இது வரைக்காலமும் இவர் பொறுமைக்காத்தது ஏன்? அரசு தரப்பு இத்தகைய முனைப்பை காட்டாதது ஏன்?

அடுத்தது அப்போதைய இராணுவத்தளபதிக்கு தெரியாமல் குழுக்களாக இராணுவ தரப்பு செயற்பட்டது எவ்வாறு? பெயருக்கு மட்டும் இவர் இராணுவ தளபதியா? அப்படி என்றால் இவரை வழி நடத்தியது யார்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறும் போது போத்தபாய, மகிந்த, பொன்சேகா அனைவருமே லசந்தவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவே மாற்றம் அடைவார்கள் என்பது நிச்சயம்.

அந்த வகையில் இப்போது லசந்த கொலை வழக்கு சூடு பிடித்துள்ளதற்கும், பொன்சேகா களம் இறங்கி உள்ளதற்கும் அனைத்துமே மகிந்தவை திசை திருப்ப அல்லது சில்லலில் சிக்க வைக்க மட்டுமே.

அதற்கான ஓர் ஆயுதமாக ரணில் வைத்துள்ள ஆயுதமான பொன்சேகா களம் இறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவை அனைத்துமே அரசியல் நாடகமே. மகிந்த தரப்பை முடக்க உச்சகட்டமாக பொன்சேகா தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதன் படி லசந்தவின் கொலைக்கு அடுத்து இன்னும் பல குற்றச்சாட்டுகளை பொன்சேகா ஊடாக மகிந்த தரப்பு மீது சுமத்தப்படும் என்பது இப்போதைய எதிர்பார்ப்பு.

எப்படி இருந்தாலும் கடந்த காலத்தில் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசு தரப்பினரால் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.

அதற்கான காரணம் மகிந்தவின் எழுச்சியை அடக்க பொன்சேகா மட்டுமே மிகப்பெரிய ஆயுதம் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/132736?ref=home

  • தொடங்கியவர்

சரத் பொன்சேகாவிடம் இன்று மீண்டும் விசாரணை!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த சமயத்தில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணி நேரம் விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் நேரடி உத்தரவுகளைப் பெற்று, நீதிக்குப் புறம்பான செயல்களை மேற்கொள்ளும் தனியான குழுவொன்று இராணுவத்தில் இயங்கியது என்பதை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலருமே, லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

போர் தொடர்பாக எமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்கும் இடையில் குரோதம் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறியவருகிறது.

இது தவிர முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது.

http://www.tamilwin.com/politics/01/132890?ref=morenews

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.