Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்சிலிர்க்க வைக்கிறது மெரீனா! உலகிற்கு பாடம் சொல்லிக்கொடும் இளைஞர்கள்! மெரீனாவில் இருந்து ஒரு பார்வை

Featured Replies

தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இந்திய அரசியலைப் பொறுத்த வரையிலும், எதிர்ப்பு போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்று எதை எடுத்தாலும் அது தமிழர்களிடத்தில் இருந்து, தமிழகத்தில் இருந்து தான் மற்றைய மாநிலங்களுக்கும் பரவும்.

கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த மொழிப்போர், இன்றளவும் பேசப்படும் அரசியல் மற்றும் உரிமை மீட்புப் போராக வரலாறாகி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பை கண்டித்து 1980ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தன்னெழுச்சியாக அன்றைய மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்திருந்தனர். அதேபோன்று, 2009ம் ஆண்டு ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பிற்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஈழ உணர்வாளர்கள் என்ற அத்தனை பேரும் களத்தில் இருங்கியிருந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் தாங்கள், பாதிக்கப்படுவதை உணர்ந்து ஜல்லிக்கட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தடைச்சட்டத்தை உடைப்பதற்கான அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அறப்போராட்டம், அமைதிப்போராட்டம், மௌனப்போராட்டம், மாணவர் எழுச்சி, உரிமை மீட்புப் போர் என்று பல்வேறு விதத்திலும் அழைக்கப்படுகிறது மாணவர்கள் எழுச்சியை. இது தமிழகம் எங்கும் மிகமிக அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

யாருமே இங்கே தலைவர்கள் இல்லை. யாரும் சொல்லிக்கொடுத்து போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களாகவே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூரில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று மெரீனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் படைகளோடு வீரஎழுச்சியாகி நிற்கிறது. ஆட்சியாளர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது. இந்நிலையில் தான் இன்று அனைவராலும் இந்தப் போராட்டத்தை வியந்து பார்க்க வைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.

குறிப்பாக இதுவரை காலமும் தமிழகம், இந்தியா உட்பட பல இடங்களில் நிகழ்ந்த போராட்டங்கள் வன்முறைகள், கலவரங்களில் தான் போய் முடியும். ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் இன்றி தொடர்கின்றது.

இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வாகனங்களை சாதாரணமாக நெருக்கடி இன்றி செலுத்திச் செல்ல முடிகின்றது.

போக்குவரத்து காவல்த்துறையினருக்கு உதவியாக நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.

பொதுவாக, இளைஞர்களை காவல்த்துறையினர் போக்குவரத்தின் போது மிரட்டுவர். ஆனால் இன்று இளைஞர்கள் போக்குவரத்தை சீர் செய்ய அவர்களுக்கு துணையாக நிற்கிறார்கள் காவல்த்துறையினர்.

பெண்கள் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை எந்தத் தொந்தரவும் வந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.

தமிழ் இளைஞர்களிடத்தில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லியில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்குமே தமிழர்கள் தலைமை தாங்கக் கூடிய வல்லமையும் திறமையும் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் இந்தியா முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

மெரீனா கடற்கரையில் மனிதத் தலைகளால் நிரம்பிக்கிடக்கிறது. இதை இந்திய மத்திய அரசாங்கம் வியந்து பார்த்துக் கொண்டே தன்னுடைய நகர்வை நகர்த்த வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஏனெனில் மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில், தமிழகத்தின் நிலை குறித்து மிக நேர்த்தியான மற்றும் ஆபத்தான நிலை குறித்து விபரிக்கப்பட்டிருந்ததால் தான் மோடி அரசாங்கம் பணிந்தது என்கிறார்கள்.

குறிப்பாக வன்முறையற்ற எதிர்ப்புக்களைத் தமிழ் மக்கள் காட்டிக்கொண்டிருப்பது அவர்களுக்கு தலைவலியாக மாறியிருந்தது. கலவரங்களாக போராட்டம் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் இலகுவில் அடக்கியிருக்கும். ஆனால், இப்போராட்டம் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டிருந்ததே அரசாங்கத்திற்கு சிக்கலை உருவாக்கியிருந்தது.

அதற்கு காரணம் ஒவ்வொரு தமிழனும் தான். தங்கள் எதிர்ப்பை அமைதியான வழியில் பதிவு செய்துகொண்டிருந்தனர்.

போராட்டத்திற்கு வந்தவர்களின் தாகத்தை, பசியை தீர்க்க தன்னார்வ தொண்டர்கள், உதவியாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் உதவிக்கரம் போராட்டத்தை வலுப்பெறச் செய்திருக்கிறது.

இளைஞர்கள் பெண்களை பாதுகாக்கிறார்கள். அச்சமின்றி பெண்களும் இரவில் தங்கியிருந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழன், இது தான் தமிழர் நாடு என்பதைக் காட்டி நிற்கிறது மெரீனாக் கடற்கரை. போராட்டம் என்றால் அது அறவழியிலும் இப்படியும் முன்னெடுக்கலாம் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

நாளைய இந்திய சமூகத்திற்கு மெரீனா கடற்கரையில் இப்பொழுது நடந்துவரும் போராட்டம் நல்லதொரு பாடமாக, வரலாறாக மாறியிருக்கிறது. ஒரு தன்னெழுச்சியான போராட்டம் அரசாங்கங்களை அடங்க வைத்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

தமிழர்களும், தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் யுவதிகள் விழித்துவிட்டார்கள். இனி தமிழகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அரசியல்வாதிகள் நிதானமாக சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இனி ஒரு விதி செய்வாய்…! என்னும் பாரதியின் வரிகளுக்கு இணங்க புது சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டிற்கான தடை அதை உடை என்று தொடங்கினார்கள். இன்று புதுசரித்திரம் படைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் நாளைய தலைவர்களுக்கு.

http://www.tamilwin.com/politics/01/132722?ref=home

  • தொடங்கியவர்

வழிநடத்தும் மெரீனா! தடுமாறும் அரசியல் தலைவர்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் சரியாக செயற்படவில்லை என்றால் மக்கள் அவர்களை வழிநடத்துவார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.

தொடர்ந்து தமிழகத்தில் நிலவிவந்த அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் பண்பாட்டின் மீது கைவைத்தவர்களின் துணிகரத்தையும், எதிர்த்து தமிழிகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் இத்தனை லட்சக்கணக்கில் திரண்டு இருப்பது இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.

மூன்றாண்டுகளாக அலங்கா நல்லூர் மக்கள் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிவந்திருந்தனர். தொடர்ந்து இது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடிப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஆனால், யாரும் இவ்வளவு தூரம் ஒரு போராட்டம் கருக்கட்டும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழகத்தில் ஒருவார காலமாக தொடர் போராட்டத்தால் திகைத்து நிற்கிறது மத்திய அரசு.

இது எதனால் வந்த விளைவு? நீண்ட காலமாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மெத்தனப்போக்கில் செயற்பட்டனர். எனினும் முன்னர் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றங்களை இது விடையத்தில் நாடியிருந்தார்.

ஆனாலும், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டிற்கு தடை மட்டும் கிடைத்தது. இருப்பினும் அப்போதைய காலகட்டத்தில் ஒரு தீர்மான கரமான அரசியல் தலைமைகள் இருப்பதாக மக்கள் உணர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, முதலமைச்சர் பதவில் இருந்தபடியே மரணமடைந்தார். தொடர்ந்து தமிழகத்தின் ஆட்சி நிலையில் தளம்பல் ஏற்பட்டிருந்தது.

மக்கள் விரக்தி அடைந்தனர். எனினும், அதற்கான எதிர்ப்பை காட்டவேண்டிய இடமும், சூழலும் சரியாக அமைந்திருக்கவில்லை.

இந்நிலையில் தான். தமது பாரம்பரியத்தின் மீது மத்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கைவைக்கும் பொழுது அதற்கு எதிராக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு இருப்பதைக்கண்டு தமிழ் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செயற்படுவது தான் அதன் கடமை. எனினும் தமிழக அரசாங்கம் தங்கள் சுய பிரச்சினைகளையும், பதவி, அதிகாரச் சிக்கல்களிலும் முரண்பட்டுக் கொண்டிருக்கையில் மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பலத்தைக் காட்ட களத்திற்கு இறங்கினர்.

செயலற்று இருந்தவர்களை செயற்பட வைத்திருக்கிறார்கள் மாணவர்கள். இன்று மாநில அரசாங்கம் மட்டுமல்ல, மத்திய அரசாங்கமும் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் பலம் கண்டு கதிகலங்கியிருக்கிறார்கள்.

தொடர்ந்து ஒரு வாரமாக தங்கள் போராட்டத்தை நேர்த்தியாக தொடர்கின்றார்கள். எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு.

ஆக, இன்று ஒட்டுமொத்த மாணவப்படையும் தம் எதிர்கால இருப்பை தீர்மானிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களின் இந்த எழுச்சி அடுத்த தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும்.

இனித் தமிழகம் மெல்லம் தலையெடுக்கும். நல்ல தலைவர்களின் வருகையோடு.

 

http://www.tamilwin.com/politics/01/132716?ref=youmaylike1

  • தொடங்கியவர்

'மெரினாவில் மாணவர்கள் திரண்டது எப்படி?' மத்திய அரசை அதிரச் செய்த உளவுத்துறை ரிப்போர்ட்

chennai_protest_jan_21a_12072.jpg

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

வரலாறாக மாறிய போராட்டம்! 

தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. வழக்கமாக ஒரு போராட்டம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பது உளவுத்துறையின் முக்கிய கடமை. ஆனால் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த தகவல்களை சரியாக உளவுத்துறை போலீஸார் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சட்டம், ஒழுங்கு போலீஸார். அதற்கு மாநில உளவுத்துறை போலீஸார், ’நாங்கள் ஏற்கெனவே தகவலைச் சொல்லி விட்டோம். ஆனால் உயரதிகாரிகள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை’ என்று சட்டம், ஒழுங்கு போலீஸாரை சாடுகின்றனர். மாநில உளவுத்துறை மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் இடையே இந்த பிரச்னை இப்படியிருக்க, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கே அதிர்ச்சித் தரும் அறிக்கையை அளித்து இருக்கிறது.

தவறான 'ரிப்போர்ட்'! 

இதுகுறித்து பேசிய மத்திய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், "மாநில அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வருவதே எங்களது வேலை. ஜல்லிக்கட்டுக்குத் தடை இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றே மத்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்தோம். தற்போது எங்கள் ரிப்போர்ட் தவறாகி விட்டது. உடனடியாக போராட்டங்கள் நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்குள்ள நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து ரிப்போர்ட் தயாரித்தோம். அதில், மக்களின் எழுச்சிப் போராட்டம், நிச்சயம் பெரியளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், வழக்கமாக ஒரு போராட்டம் என்றால் அதற்கு தலைமை ஒன்று இருக்கும். தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமையே இல்லை. இதனால் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் சிக்கல் இருப்பதையும் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.

chennai_protest_jan_21_12224.jpg

மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த விமர்சனங்களை அப்படியே சுட்டிக்காட்டி இருக்கிறோம். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு உடனடியாக சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக பெரியளவில் புரட்சி கூட வெடிக்கலாம். அதன்பிறகு மக்கள் சக்தியை தடை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முடிவு, மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம். எங்களது அறிக்கையின் முழுவிவரத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன்பிறகே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்க வேண்டும்!’’ என்றார். 

இளைஞர்கள் பட்டாளம்!  

மாநில உளவுப்பிரிவு போலீஸார் கூறுகையில், "அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடந்தவுடன் உடனடியாக எங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்களும் வழக்கம் போல இந்த போராட்டத்தை பெரியளவில் கண்டுகொள்ளவில்லை. எங்கள் ரிப்போர்ட் குறித்து ஆலோசனை கூட உயரதிகாரிகள் நடத்தவில்லை. ஆனால் அதற்குள் மெரினாவில் இளைஞர்கள் பட்டாளம் குவிந்து விட்டனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனர். இந்த தகவலையும் எங்கள் உயரதிகாரிகளுக்கு ரிப்போட்டாக கொடுத்தோம். அதன்பிறகே உயரதிகாரிகள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த விவகாரத்தில் தலையிட்டனர். இதற்கிடையில் தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. உளவுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரிவித்த போது அங்கிருந்து எந்த பதிலும் உடனடியாக வரவில்லை. 
 
 அமைதி காத்த அரசு!

'அமைதியாகவும், அறவழியில் போராட்டத்தை நடத்த வழிவகை செய்யுங்கள்' என்ற பதில் மட்டும் அரசிடமிருந்து கிடைத்தது. இதனால் போராட்டத்துக்கு எந்தவித இடையூறு செய்யாமல் பாதுகாவலர்களாக போலீஸார் மாற்றப்பட்டனர். அதற்கு போராட்டக்குழுவிடமிருந்தும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. நள்ளிரவில் நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அதையும் சுமூகமாக போராட்டக்குழுவினரே சமாளித்துக் கொண்டனர். இதனால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்துச் சூழ்நிலைகளும் சாதகமாக இருப்பதால் மெரினா உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துபவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக பெண்களும், குழந்தைகள், முதியோர்கள் போராட்டக்களத்தில் இருப்பதால் அவர்களைப் பாதுகாப்பதே எங்களது முக்கிய கடமையாக உள்ளது. ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்தவுடன் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் போராட்டக்குழுவினரை வீட்டுக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/78325-how-did-so-much-people-gather-at-marina-for-jallikattu-protest---central-govt-shocked-by-ib-report.art?artfrm=news_most_read

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்ற வீட்டினுள் அமைதியாக இருக்க முடியாத, உந்தி வெளியே தள்ளி, வெஸ்ட் மிசின்டெர் பாராளுமன்ற வளாகத்துக்கு நம் தமிழர் பலரை இழுத்த அதே உணர்வு.... அதோ அங்கே மெரினாவில்... 

  • தொடங்கியவர்

மெரீனாக் கடற்கரையில் நடந்தது என்ன? மாணவர்களின் காணொளி வெளியானது!

உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழக இளைஞர்கள் ஓர் அகிம்சையான போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

உலக மக்களுக்கும், இந்திய தேசத்திற்கும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

நிச்சையமாக இது நாளை இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு, இதேபோன்ற ஒரு போராட்டம் இனி இந்தியாவில் அமைதி வழியில் நடக்குமா என்பதை கனவிலும் நினைக்க முடியாது.

எனினும், மாணவர்களையும், இளைஞர்களையும் தமிழக காவல்த்துறையினர் இறுதி நாளான நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனைந்து தடியடி நடத்தினர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நின்ற வாகனங்களை காவல்த்துறையினரே கொளுத்திவிட்டனர் என்பதற்கான ஆதார வீடியோக்கள் இப்பொழு வெளியாகி சென்னையில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நேற்றைய தினம் வன்முறை அதிகமாக இருந்தாலும் இன்றைய தினம் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது சென்னையில்.

ஆனாலும், தமது அடுத்த போராட்டம் தொடரும் என்கிறார்கள் மாணவர்கள். இனிவரும் காலங்களில் எம்மீது தேவையற்ற திணிப்புக்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் இடம்கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தின் போது மாணவர்கள், இளைஞர்கள் தமிழை எவ்வாறு அழகாக கையாண்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்டினர், அவர்கள் பயன்படுத்திய எதுகை மோணை, சிலேடை அணிகளைப் பயன்படுத்தி எதிரப்புக்களை வெளிக்காட்டினர்.

அந்த காணொளிக்காட்சிகள் இப்பொழுது தொகுப்பாக வெளியாகியிருக்கிறது.

தமிழ் மொழியை அழகாக மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்ப்புக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

அவர்களின் உணர்ச்சி பொங்கிய கோசங்களை இணைத்திருக்கிறோம்.

http://www.tamilwin.com/politics/01/132960?ref=youmaylike2

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.