Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அத்துமீறியது சமூக விரோதிகளே' - கமிஷனர் ஜார்ஜ்

Featured Replies

george

 

 

சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், 'இன்று காலை போராட்ட களத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் பொறுமையாக பேசி மாணவர்களை கலந்து போகச் சொல்லினர். மக்களை அமைதியாக கலைக்கவே விரும்பினோம். ஆனால், கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் இதை எதிர்த்தனர்.

சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்குழுவில் சிலர் அச்சுறுத்தல் விடுப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தன. சமூக விரோத சக்திகள் உள்ளே புகுந்ததால் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சென்னையில் 7000 காவலர்கள், 1000 துணை ஆய்வாளர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். சென்னையில் நாளை காலை இயல்பு நிலை திரும்பும் ' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/78548-chennai-police-commissioner-george-press-meet-on-marina-protest.art

https://twitter.com/CNNnews18

  • தொடங்கியவர்

மெரீனாவில் பொலிஸாரின் அத்துமீறல்! இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்த இதுதான் காரணம்!

இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர்.

அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் பொலிஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.

அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது. உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்று அதற்கான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று சொல்லிவிட்டு அதுகுறித்த சில ஆவணங்களை இளைஞர்களிடம் கொடுத்தார். ஆனாலும் அங்கிருந்த இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

இந்நிலையில் 6.30 மணியளவில் அங்கே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த மைக்செட் வேனில் ஏறி நின்ற பாலகிருஷ்ணன் மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்,

“நாங்கள் பொறுப்பான துறையில் இருந்து கொண்டு, உங்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் நம்ப வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இல்லாதபோது அவசரச் சட்டம்தான் கொண்டு வரப்படும். அது பின்னர் சட்டமன்றத்தில் வைத்து நிரந்தரம் ஆக்கப்படும். இதுதான் நடைமுறை. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை. நீங்களாகவே கலைந்து செல்லுங்கள்” என்றார்.

அதன்பிறகு இளைஞர்கள், “சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பைப் பார்த்த பிறகு கலைந்து செல்கிறோம்” என்றனர். பொலிஸார் இதைக் கேட்பதாக இல்லை. “உடனே கலைந்து செல்லுங்கள்” என்று மீண்டும் எச்சரித்தனர்.

இளைஞர்கள், “கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. உடனடியாக கலைந்து செல்ல முடியாது. அவகாசம் தாருங்கள்” என்றனர். முதலில் 8 மணி நேரம் அவகாசம் கேட்டவர்கள், பொலிஸாரின் விடாப்பிடி எச்சரிக்கைக்குப் பிறகு, “2 மணி நேரமாவது அவகாசம் தாருங்கள்... நாங்கள் கலைந்து சென்று விடுகிறோம்” என்றார்கள். ஆனால், “போலீஸார் அவகாசம் தர முடியாது” என்றனர்.

உடனே இளைஞர்களைச் சுற்றி வளைத்த பொலிஸ் படை கூட்டத்துக்குள் புகுந்து இளைஞர்களை இழுத்து, வெளியே விட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இளைஞர்கள், “நாங்கள் தான் கலைந்து சென்றுவிடுகிறோம் என்கிறோமே... கொஞ்சம் அவகாசம் தானே கேட்கிறோம்... அதைத் தர உங்களைத் தடுப்பது எது...? 2 மணிநேரத்தில் நாங்களே கலைந்து சென்றுவிடுகிறோம்” என்றார்கள்.

பொலிஸார் இதை கேட்கத் தயாராக இல்லை. இளைஞர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதை அறிந்து வெளியே சென்ற இளைஞர்களும், கடற்கரையை நோக்கி வர ஆரம்பித்தனர்.

அவர்களைத் தடுக்கும் போது, திருவல்லிகேணியில் பொலிஸார் தடியடி நடத்தத் துவங்கினர்.

பொலிசாரின் இந்த அணுகுமுறையால் கோபமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரை பக்கம் ஓடி. அதன் ஓரமாக ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டப்படி நிற்கிறார்கள்.

“நாங்கள் இரண்டு மணி நேரம்தான் அவகாசம் கேட்டோம். அந்த நேரத்துக்குள் நாங்களே கலைந்து சென்று இருப்போம்... அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் மீது ஏன் இந்த வன்முறை” என்று கொந்தளித்தபடி கடலில் கைகோர்த்து நிற்கிறார்கள்.

http://www.tamilwin.com/india/01/132811?ref=youmaylike2

 
  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி

 
 
patti1_3122325f.jpg

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர்.

இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். சமாதானப் பேச்சு தொடங்கும் வரை, அங்கு இளைஞர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே அவர்கள் இருந்தனர்.

அப்போது, ஆவேசம் அடைந்த ஒரு பாட்டி உணர்ச்சிமயமாக வெகுண்டெழுந்து காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக களத்தில் இறங்கினார். அவரது உணர்வுபூர்வ செயல்பாடுகளைக் கண்டு போலீஸார் திகைத்தனர். போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்களோ அந்தப் பாட்டியிடம் நெகிழ்ச்சியோடு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். அதில் ஓர் இளைஞர் நெடுஞ்சான் கிடையாக அவர் முன்பு விழுந்து தலை வணங்கி தன் வணக்கத்தை தெரிவித்தது நெகிழவைத்த காட்சி. இந்த நிகழ்வு இங்கே புகைப்படத் தொகுப்பாக...

DSC_3980_3122284a.JPG

DSC_3982_3122285a.JPG

DSC_3990_3122286a.JPG

DSC_3994_3122287a.JPG

DSC_3995_3122288a.JPG

DSC_3996_3122289a.JPG

DSC_3997_3122295a.JPG

DSC_4012_3122296a.JPG

DSC_4009_3122297a.JPG

DSC_4013_3122299a.JPG

DSC_4014_3122300a.JPG

DSC_4015_3122301a.JPG

DSC_4019_3122302a.JPG

DSC_4020_3122303a.JPG

DSC_4021_3122304a.JPG

DSC_4026_3122308a.JPG

DSC_4027_3122310a.JPG

DSC_4023_3122307a.JPG

DSC_4025_3122311a.JPG

DSC_4024_3122312a.JPG

DSC_4028_3122313a.JPG

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படங்கள்-மெரினாவில்-உணர்வால்-மிரளவைத்த-பாட்டி/article9497493.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் நேற்று முன்தினம் (ஜனவரி 23)முடிவடைந்தபோது, சென்னையிலும், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் காவல்துறை நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

சென்னை வன்முறை; தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை

ஜனவரி 23-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை நகரக் காவல்துறை பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில், ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் வெற்றியடைந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றுவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு ஆறு மணியளவில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, போராட்டக்காரர்கள் உடனடியாகக் கலைந்துசெல்ல வேண்டுமெனக் கூறியது. ஆனால், போரட்டக்காரர்கள் அவகாசம் கோரினர். அதைக் காவல்துறை ஏற்கவில்லை.

இதையடுத்து, அவர்களில் சிலரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது காவல்துறை.

போர்க்களமான சென்னை கடற்கரை

மீதமிருந்தவர்கள், கடலை ஒட்டியுள்ள மணற்பரப்பை நோக்கி ஓடத்துவங்கினர். இதையடுத்து அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவே, போராட்டக்கரார்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தது காவல்துறை.

ஆனால், அதே நேரத்தில் சென்னையின் பிற பகுதிகளில் இருந்த கடற்கரையை நோக்கி வரும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. புதிதாக யாரும் வந்து போராட்டக்காரர்களுடன் இணைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து, கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளில் குவிந்தவர்கள் தடை ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிகளைத் தாண்டி தங்களை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

சிலர் தடைகளைத் தாண்டி காமராஜர் சாலையை அடைந்தபோது, அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. காமராஜர் சாலையில் மூன்று முறை கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதற்குப் பிறகு கடற்கரையை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை

நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, நடுக்குப்பம், ரூதர்போர்டு புரம் ஆகிய பகுதிகளில் கல்லெறிச் சம்பவங்கள் நடந்தன. இதற்குப் பிறகு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. கல்லெறியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியாத நிலையில், வீடுவீடாகப் புகுந்து, உள்ளிருந்தவர்களைத் தாக்கியது.

நடுக்குப்பம் பகுதியில் இருந்த மிகப்பெரிய மீன் சந்தை ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் முன்பாக இருந்த இருசக்கர வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

வாகனங்களுக்கு தீ வைத்தது காவல்துறையா?

இது தவிர, இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் தேவையின்றித் தாக்கும் காட்சிகளும் காவல்துறையினரே வாகனங்களுக்கும் வீடு ஒன்றுக்கும் தீவைக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தான் அந்தக் காட்சிகளப் பார்க்கவில்லையென்று தெரிவித்தார்.

அதற்குப் பிறகு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பான காட்சிகள் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

 

அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல்

இதே நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டக்காரர்களை கலைந்துசெல்ல வைக்கும் முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அலங்காநல்லூரில் நடந்த போராட்டம்

அலங்காநல்லூரில் நடந்த போராட்டம்

23ஆம் தேதியன்று, காலையிலிருந்தே கூட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறை பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கூட்டம் கலையாத நிலையில் தடியடியில் ஈடுபட்டது.

இதற்கிடையில், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

அலங்காநல்லூர் போராட்டத்தில் நடந்த வன்முறை

அலங்காநல்லூர் போராட்டத்தில் நடந்த வன்முறை

"இதில் காவல்துறை என்னைத் தனிமைப்படுத்தி தாக்குதல் நடத்தியது. ஓபிஎஸ்ஸையே எதிர்ப்பாயா என்று கூறி தலையிலும் கைகளிலும் கடுமையாகத் தாக்கினர். 23ஆம் தேதி என்னைப் பிடித்தவர்கள் 24ஆம் தேதி மாலை வரை என்னைக் கைதுசெய்ததாகக் காண்பிக்கவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்தும் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தார்கள்" என்று குற்றம்சாட்டுகிறார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மனித உரிமை ஆர்வலர் முகிலன்.

இவருக்கு தலை, கால், கை ஆகிய இடங்களில் கடுமையாக காயம் ஏற்பட்டிருக்கிறது.

 

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு

இதேபோல, வைகை நதிப் பாலத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரயிலை மீட்கும் முயற்சியின் போது கீழேயிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி 24ஆம் தேதியன்று வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தேடுவதாகக் கூறி, மீண்டும் காவல்துறையினர் மாட்டாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"இப்போதும் மாட்டாங்குப்பம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் உலவிவருகிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கவே பயமாக இருக்கிறது" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவரான முகில்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரான முகேஷ் பிபிசியிடம் இந்த வன்முறை குறித்துப் பேசியபோது, "நாங்கள் நான்கு மணி நேர அவகாசம் மட்டுமே கேட்டிருந்தோம். அந்த அவகாசத்தைக் கொடுத்திருந்தால் கலைந்து போயிருப்போம். அதைச் செய்யாமல் காவல்துறை வன்முறையில் இறங்கியது" என்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 23ஆம் தேதிவரை காவல்துறையும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைத்ததாக கூறப்பட்டுவந்த நிலையில், 23ஆம் தேதி வெடித்த வன்முறை காவல்துறைக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் போராட்டக்களத்தில் ஊடுருவிய தேசவிரோத சக்திகள்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்று கூறுகிறது காவல்துறை. ஆனால், அந்த சக்திகளை முன்கூட்டியே ஏன் கைதுசெய்யவில்லை எனக் கேள்வியெழுப்புகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

மனித உரிமை ஆணையம் தற்போது இந்த வன்முறை குறித்த ஆய்வில் இறங்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் இதனை விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

http://www.bbc.com/tamil/india-38742991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.