Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டடிற்கு வழங்கப்பட்ட ஆதரவு காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் வழங்கப்படுமா...?

Featured Replies

ஜல்லிக்கட்டடிற்கு வழங்கப்பட்ட ஆதரவு காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் வழங்கப்படுமா...?
 
 
ஜல்லிக்கட்டடிற்கு வழங்கப்பட்ட ஆதரவு காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் வழங்கப்படுமா...?
ஜல்லிக்கட்டடிற்கு ஆதரவு வழங்கி வெற்றி கண்டது போல காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் ஆதரவு வழங்கி இந்த போராட்டத்திற்கு வெற்றியீட்டி கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிக்கையில்,
 
யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் கடத்தப்பட்டவர்களும், இராணுவத்தினரிடம் உறவினர்களால் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களது நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவர்களது உறவினர்களுக்கு தகுந்த பதிலை தெரியப்படுத்தவில்லை.
 
மாறி மாறி வந்த அரசுகளை எல்லாம் நம்பியவர்களாக அவர்கள் இருந்தபோதிலும், எந்த அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாக இல்லை.
 
இந்தநிலையில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை என்ற பெயரில் காலங்களை கடத்தியதே தவிர அதனூடாக தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
அவர்கள் தமது சாத்வீக ரீதியிலான போராட்டங்களின் ஊடாக தமது உரிமையை கோருகின்ற போது வாக்குறுதியை அளிக்கும் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
 
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகம் ஒன்றினை அமைப்பதிலேயே காலத்தினை கடத்தும் அரசு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றதா என்கின்ற கேள்வியை எழுப்புகிறது.
 
இந்த நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
 
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உணர்வுபூர்வமாக இளைஞர்கள் ஆதரவு வழங்கி போராட்டங்களை நடத்தியிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இப்போராட்டத்திற்கும் இளைஞர்கள் அணிதிரண்டு தமது ஆதரவினை வழங்க வேண்டும்.
 
இந்தநிலையில் காணாமல் போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு அழுத்தத்தினை பிரயோகிக்கும் என்பதனையும் உறுதிபடத் தெரிவிக்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/23065

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.