Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயாதீன ஆணைக்குழு விசாரணை வேண்டும் ஊழல் மோசடி தொடர்பில் ஏன் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை:எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சபையில் கேள்வி

Featured Replies

சுயாதீன ஆணைக்குழு விசாரணை வேண்டும்

03-5ba12406a30b5eb25adbfdc4644f9d402dd66907.jpg

 

ஊழல் மோசடி தொடர்பில் ஏன் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை:எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சபையில் கேள்வி
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மத்­திய வங்கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் ஊடாக விசா­ர­ணை செய்­யப்­பட வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டிய எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க் ­கி­ழமை மத்­திய வங்­கியின் பிணை முறி­வி­வ­காரம் மற்றும் அரச பொறுப்பு முயற்­சிகள் பற்­ றிய பாரா­ளு­மன்றக் குழுவின் (கோப் குழு வின்) விசா­ரணை அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

நாட்டில் பிர­தான தேர்­தல்கள்  வரும்­போது பிர­தான கட்­சி­யொன்று மற்­றொரு பிர­தான கட்­சியின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கின்­றது. இந்த செயற்­பா­டா­னது இங்கு வழக்­க­மா­கி­விட்­டது. ஆனால் ஊழல் மோச­டிகள் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன.  

ஒவ்­வொ­ரு­வரும் மற்­றை­ய­வரை விமர்­சித்து குற்­றஞ்­சாட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இருப்­பினும் ஊழல் மோச­டிகள் தொடர்­வதால் மக்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். தற்­போதும் அந்­நி­லைமை தொடர்­வதால் நாடும் மிகவும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. 

இவ்­வா­றான மோச­டிகள் நிறுத்­தப்­ப­ட­வில்லை என்றால் அது ஜன­நா­ய­கத்­துக்கே மிகவும் பாதிப்­பாக அமையும். பெரு­வா­ரி­யான ஊழல் மோச­டி­களே பல்­வேறு நாடு­களில் சர்­வா­தி­கா­ரத்­துக்கு வழி­வ­குத்­துள்­ளன. சொந்த பந்­தங்­க­ளுக்கு உய­ரிய பத­விகள் வழங்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்­துள்­ளன. 

இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. ஊழல் மோச­டிகள் நிறுத்­தப்­பட வேண்டும். அவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். 

ஐக்­கி­ய­தே­சியக் கட்சி, ஸ்ரீ லங்­கா­சு­தந்­திரக் கட்சி ஆகிய பிர­தான கட்­சி­களின் தலை­மையில் உள்ள தரப்­பினர் ஒருவர் மீது மற்­றை­யவர் குற்­றஞ்­சாட்டிக் கொள்­கின்­றனர். எனினும் தற்­போது வரையில் ஊழல் மோச­டியில் ஈடு­பட்­ட­தற்­காக யாரும் நீதி­மன்­றத்­தினால் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

அவ்­வா­றான நிலையில் பரஸ்­பர குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பதால் மக்­க­ளையும் எம்.பி.க்களையும் தான் முட்­டா­ளாக்­கு­கி­றீர்கள். இவ்­வாறு தண்­டனை வழங்­கப்­பா­டாது குற்­றச்­சாட்­டுக்­களை மட்­டுமே முன்­வைத்துச் செல்­வதால் மக்­களும் இவற்றைக் கண்டு சோர்­வ­டைந்து விட்­டனர். 

டீ.எஸ்.சேனா­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க, டட்­லி­சே­னா­நா­யக்க, சிறி­மா­வே­பண்­டா­ர­நா­யக்க போன்ற முன்னாள் தலை­வர்கள் தொடர்பில் இவ்­வா­றான மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் வந்­தி­ருக்­க­வில்லை. அதற்­காக ஜனா­தி­பதி சிறி­சே­னவோ அல்­லது பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவோ ஊழ­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்று நான் கூற­வில்லை. ஆனால் ஊழல்கள் தற்­போதும் இடம்­பெ­று­கின்­றன என்­பதை சுட்­டிக்­காட்­டு­கின்றேன். 

கடந்த ஆட்­சி­கா­லத்தில் அதி­க­ள­வான ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக குற்­ற­சாட்­டப்­பட்டு கைதுகள் இடம்­பெ­று­கின்ற போதிலும், தற்­போது வரைக்கும் யாருக்கும் தண்­டனை வழங்­கப்­ப­ட­வில்லை. போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­னவா?

உண்மை என்ன என்­பது பற்றி மக்­க­ளுக்கு தொிய­வேண்டும். கடந்த ஆட்­சியில் அதிக மோச­டிகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்றால் ஏன் இது­வரை எவ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே எனது கேள்­வி­யா­க­வுள்­ளது. 

அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக ஊழல் மோச­டி­குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கவே செய்­கின்­றன. 

இலங்கை மத்­திய வங்கி அதற்­கு­ரிய மதிப்பை தற்­போது இழந்­துள்­ளது. சட்­ட­ரீ­தி­யன ஒழுங்கு விதி­களை மீறி மத்­திய வங்­கியில் முறை­கே­டுகள் மற்றும் து‘்பிர­யோ­கங்கள் நடப்­பது இது முதற்­த­ட­வை­யல்ல. கடந்த ஆட்­சி­யிலும் கூட அப்­போ­தைய அரசாங்கத்துக்கான பிரசாரங்களுக்காக மத்தியவங்கி சார்பாக செயற்பட்டுள்ளது. 

மத்தியவங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிவிவகாரத்தை பொறுத்தவரையில், அதனுடன் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க விடப்படாமல் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 

அதற்காக உயரிய சுயாதீன விசாரணை ஆணைக்குழு வொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். குறித்த பணம் மக்களுக்கும் நாட்டுக்கும் உரியது. ஆகவே மக்களுக்கு உண்மை வௌிப்படுத்தப்பட வேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.