Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை நல்லாட்சி-ஹிருணிகா விசனம்

Featured Replies

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை நல்லாட்சி-ஹிருணிகா விசனம்
 
 
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை நல்லாட்சி-ஹிருணிகா விசனம்
நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர விசனம் வெளியிட்டுள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த வர்கள் என்ற வகையில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
 
வீதியில் நடந்து செல்ல முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற வகையில் எம்மால் பதிலளிக்க முடியவில்லை. முன்னைய ஆட்சியை ஒழிக்கவும் புதிய ஆட்சியை ஏற்படுத்த முயற்சி எடுத்த பலர் இங்கிருக்கின்றார்கள். ஒருவேளை முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்களுக்கு என்ன நடக்குமென எம்மால் கூற முடியாது. அந்தளவிற்கு நாம் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக போராடினோம்.
 
லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்நெலிகொட ஆகியோரை முன்னிறுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவள் அல்ல ஆகவே தைரியமாக எதனையும் கூற முடியும். எங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கததிற்கு காணப்படுகின்றது. நாம் இல்லையென்றால் இந்த அரசாங்கம் இல்லை. 
 
சிவில் சமூகத்தினர் இல்லாவிடின் பிரதமர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ அல்லது அமைச்சரவையோ இன்று இல்லை. 10 வருட ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய மஹிந்தவை தோற்கடிக்க முடியுமாயின் நாம் ஏற்படுத்திய ஆட்சியில் எக்நெலி கொடவின் மனைவி போன்றவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் எங்களாலேயே முடியும் என்றார்.

http://onlineuthayan.com/news/23110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.