Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்

sambathan.jpg
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களின் கேள்விக்கு நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வெளிவகார அமைச்சின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

சில மாதங்களுக்கு முன்பு வவுனியா சென்ற போது அந்த அணியை சேர்ந்த பல தாய்மார்கள் , மனைவிமார்கள்  என்னை சந்தித்தார்கள் அதனை தொடர்ந்து அந்த விடயத்தை பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையாக நாங்கள் கிளப்பி ஒரு விவாதம் நடத்தினோம்.

அதற்கு பிறகு தான் ஒரு சில மாதங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறப்பது என முடிவெடுத்து அது சட்டமாக பலவிதமான குழப்பங்களின் மத்தியில்  பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டம் இன்னும் அமுல் படுத்தப்படவில்லை இந்த பெற்றோர்கள் , மனைவிமார்கள் , பிள்ளைகள் என்ன கேட்கின்றார்கள்,  தங்கள் சொந்தங்களுக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகின்றார்கள் இராணுவத்தால் காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள் கணவன்மாருக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகின்றார்கள் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது பற்றி தெளிவான பதில் இருக்க வேண்டும் என்று கோருகின்றார்கள்

அவர்களது நியாயமான கோரிக்கை இந்த நிலைமை தொடர கூடாது உண்மையை அறிந்து மக்களது மனதில் சமாதானம் ஏற்பட கூடிய வகையில் அதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும் அந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு ஒரு அமைதி கொடுக்கப்பட வேண்டும். அவர்களது மனதில் சாந்தி ஏற்பட கூடிய வகையில் ஒரு முடிவுக்கு வந்து அது ஒரு உத்தியோக பூர்வமான முடிவாக வெளிவர வேண்டும். இந்த மக்களின் உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/15221

  • தொடங்கியவர்

'இவ்வருடத்துக்குள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்'
 
 

article_1485433118-222.jpg

-எஸ்.நிதர்சன்

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் 2017 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டபோது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒர் உண்மையான புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுவதாக இருந்தால் அந்த சமாதானம் சமத்துவத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சமத்துவம் ஏற்படுவதாக இருந்தால் இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

இவை, இந்த வருடத்துக்குள், அதாவது 2017 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

- See more at: http://www.tamilmirror.lk/190474/-இவ-வர-டத-த-க-க-ள-தம-ழ-மக-கள-ட-ய-ப-ரச-ச-ன-கள-த-ர-க-கப-பட-வ-ண-ட-ம-#sthash.qE8mqqI4.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை நியாயமானது

p25-9e30befa43032d4fc2d834ec9fd37192da501c45.jpg

 

விடிவு வேண்டும் என்கிறார் சம்பந்தன்
(எம்.நியூட்டன்)

மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு அந்த இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் மூலம் தங்­க­ளு­டைய சுய­நிர்­ணய உரி­மையை அடை­ய­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­

வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை நியா­ய­மா­னது. தனது கணவன், மகன் உயி­ருடன் இருக்­கி­றார்­களா? இல்­லையா? என்­பதை பற்றி அவர்கள் மன­த­ளவில் தத்­த­ளிக்­கி­றார்கள். இந்த நிலைமை தொட­ரக்­கூ­டாது எனவும் அவர் குறிப்பிட்டார்

வெளி­வி­வ­கார அமைச்சின் பிராந்­திய காரி­யா­லயம் நேற்­றை­ய­தினம் யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் திறந்­து­வைக்­கப்­பட்­டது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யாழ்ப்­பா­ணத்தில் வெளி­வி­வ­கார அமைச்சின் பிராந்­திய அலு­வ­லகம் திறந்து வைக்­கப்­பட்ட நிலையில் அச் செயலை முன்­னேற்­ற­க­ர­மா­ன­தாக கரு­து­கின்றோம்.

இதே­வேளை இந்த நாட்டில் சமா­தானம் ஏற்­பட வேண்­டும் என்பதற்காக சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில் நம்­பிக்கை கொண்­ட­வ­ராக வெ ளிவி­வ­கார அமைச்சர் இருந்­து­வ­ரு­கின்றார். அதற்­காக தன்­னு­டைய கருத்­தி­யலை வெளிப்­ப­டை­யாக கூறி­வ­ரு­கின்­றார்.

வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து பல இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வெளி­நா­டு­களில் குடி­பெ­யர்ந்து வாழ்ந்து வரு­கின்­றார்கள். இலங்கைத் தீவில் வேறு எந்த மாகா­ணத்தில் இருந்தும் அந்த அள­விற்கு மக்கள் குடி­யே­ற­வில்லை.

தமிழ் மக்­களில் 50 வீத­மான மக்கள் தற்­போது நாட்டில் வாழ­வில்லை. உல­கத்தின் பல நாடு­களில் வாழ்ந்து வரு­கின்­றார்கள். தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழு­கின்ற யாழ்.மாவட்­டத்தில் இந்த அலு­வ­லகம் திறக்­கப்­ப­டு­வது பொருத்­த­மான விடயம். ஏன் என்றால் இங்கு வாழு­கின்ற மக்­க­ளுக்கும் வெளியில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கும் தொடர்பு ஏற்­ப­டு­வது மட்­டு­மன்றி இவ்­வி­த­மான அலு­வ­ல­கத்தின் மூல­மாக அவர்கள் பல்­வேறு உத­விகள், வச­தி­களை பெறு­வ­தற்கு ஒரு வாய்ப்­பாக அமையும். எனவே இந்த அலு­வ­லகம் மிக சிறப்­பாக இயங்­க­வேண்டும்.

வெளி­வி­வ­கார அமைச்சு இன்று இந்த அலு­வ­லத்தை திறந்­துள்­ளது. இதன் மூலம் வெளி­வி­வ­கார அமைச்சின் கட­மைகள் இங்கு இடம்­பெ­ற­வுள்­ளன. இந்­நி­லையில் மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்க வேண்டும் என்று நீண்­ட­கா­ல­மாக கேட்­டு­வ­ரு­கின்றோம்.

எங்­க­ளு­டைய காணி­வி­ட­யங்கள், பாது­காப்பு, கல்வி, சுகா­தாரம், விவ­சாயம், கைத்­தெழில், நீர்ப்­பா­சனம் என பல விட­யங்­களை வழங்­கு­மாறு கோரி­வ­ரு­கின்றோம்.

மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு அந்த இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் மூலம் தங்­க­ளு­டைய சுய­நிர்­ணய உரி­மையை அடை­ய­வேண்டும் என நீண்­ட­கா­ல­மாக கேட்­டு­வ­ரு­கின்றோம்.

இந்த நாட்டில் மக்கள் மத்­தியில் உண்­மை­யான புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம் ஏற்­பட்டு இந்த நாட்டில் நிரந்­தர சமா­தானம் ஏற்­ப­டு­மா­யி­ருந்தால் அந்த சமா­தானம் சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஏற்­பட வேண்டும்.

சமத்­துவம் ஏற்­ப­டு­மானால் இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு அந்­தந்த மாகா­ணத்தில் வாழும் மக்கள் தங்­க­ளு­டைய வாழ்க்­கையை தாங்­களே நடத்­து­கின்ற நிலை ஏற்­ப­ட­வேண்டும். அந்த செயற்­பாடு ஆரம்­பிக்­கப்­பட்ட போதிலும் கூட சமீப காலங்­களில் சில, பல கருத்­துக்கள் கார­ண­மாக தாம­தங்கள் அடைந்­துள்­ளது. இந்த வரு­டத்­திற்குள் அதா­வது 2017 ஆம் ஆண்­டுக்குள் இந்த செயற்­பா­டுகள் நிறை­வேற்­றப்­படும் என நாங்கள் விரும்­பு­கின்றோம்.

இதனை தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி தமிழ் பேசு­கின்ற மக்கள் மட்­டு­மன்றி இந்த கருத்­திற்கு ஆத­ர­வாக பெரும்­பான்மை மக்கள் மத்­தி­யிலும் பெரும்­பா­ல­ன­வர்கள் இருந்து வரு­கின்­றார்கள்.

பெரும்­பான்மை அர­சி­யலில் இத்­த­கைய சிந்­த­னை­யுடன் தலை­வர்கள் சிலர் இருக்­கின்­றார்கள். அத­ன­டிப்­ப­டையில் இவ்­வா­றான முற்­போக்கு சிந்­த­னை­யா­ளர்கள் அனை­வரும் ஒன்­றாக அணி­தி­ரண்டு இந்த நாட்­டி­னு­டைய சுபீட்­சத்தை மனதில் கொண்டு இந்த நாடு உல­கத்தில் மதிப்­புடன் இருக்கும் வகையில் செயற்­ப­ட­வேண்டும்.

இந்த நாடு வளர்ச்­சி­ய­டைந்து பொரு­ளா­தார ரீதியில் முன்­னே­று­வ­தாக இருந்தால் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது அத்­தி­ய­வ­சி­ய­மான விட­ய­மாகும். அதனை யாரும் தடுக்­காது விரைவில் தீர்­வினை ஏற்­ப­டுத்த ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

இந்த நிகழ்வில் எனக்கு முன்­பே­சிய வட­மா­காண முத­ல­மைச்­சரும் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கல மகேஸ்­வ­ரனும் காணா­மல்­போனோர் தொடர்­பாக தற்­போது வவு­னி­யாவில் நடை­பெற்­று­வரும் உண்­ணா­வி­ரதம் குறித்து பேசி­னார்கள். சில மாதங்­க­ளுக்கு முன்பு வவு­னியா சென்­ற­போது காணாமல் போனோரின் தாய்­மார்கள், மனை­வி­மார்கள், உற­வி­னர்கள் என்னை சந்­தித்­தார்கள்.

 அதைத் தொடர்ந்து அவர்­களின் கோரிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் ஒரு ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மூல­மாக விவாதம் நடத்­தினோம். இதன் பின்னர் தான் சில வாரங்­க­ளுக்குள் காணாமல் போனோர் அலு­வ­லகம் திறப்­பது என்று முடி­வெ­டுத்து சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த சட்டம் இன்னும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

காணாமல் போனோரின் உற­வுகள் தங்கள் சொந்­தங்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய விரும்­பு­கி­றார்கள். இரா­ணு­வத்தால், முப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய விரும்­பு­கின்­றார்கள். அவர்கள் உயி­ரோடு இருக்­கின்­றார்­களா? இல்­லையா? என்­பதைப் பற்றி தெளி­வான பதில் இருக்க வேண்டும் என விரும்­பு­கி­றார்கள்.

இவர்­க­ளது கோரிக்கை நியா­ய­மா­னது. தனது கணவன், மகன் உயி­ரோட இருக்­கி­றார்­களா? இல்­லையா? என்­பதை பற்றி அவர்கள் மன­த­ளவில் தத்­த­ளிக்­கி­றார்கள். இந்த நிலைமை தொட­ரக்­கூ­டாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.