Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் -முதல்வர் விக்கி கோரிக்கை

Featured Replies

பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் -முதல்வர் விக்கி கோரிக்கை
 
 
பயங்கரவாத முகத்தோடு  எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் -முதல்வர் விக்கி கோரிக்கை
50 வருடங்களுக்கு மேலாக ஒரு சட்டத்தரணியாகவும் அதில் பாதிக் காலம் நீதிபதியாகவும் பணியாற்றிய எனக்கு நாட்டின் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருக்கின்றது .எனவே பயங்கரவாத முகத்தோடு  எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
யாழ் செயலகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
 
இன்று உண்மையிலேயே எங்களுக்கு ஒரு நல்ல நாள்.  அமைச்சர் மங்கள  தனதுஅமைச்சின் நிர்வாகத்தை வாக்களித்தபடி பர வலா க்கி உள்ளார். இதன் மூலம் வெளிவிவகார அமைச்சின் ஒரு பிரிவை வடக்கு மாகாணத்துடன் நெருக்கமாக்கி உள்ளார்.  சர்வதேச சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் இப்பொழுது ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் . வெளிநாடுகளில் நாடு திரும்பக் காத்திருக்கும்  இலங்கையர்களை மீள அழைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு வெளிநாட்டு அமைச்சுக்கு நாம் அழுத்தம் கொடுக்கலாம்.இங்கிருந்தபடி வெளிநாட்டில் தொழிலாளர்களின் வேதன நிலுவை , நிவாரணப் பணம் , வருமதியாக உள்ள காப்பு றுதிப் பணம், சட்டரீதியாக வரவேண்டிய பணம் போன்றவற்றை பெற முடியும்.வெளிநாடுகளில் அநாதரவாக நிற்கும் இலங்கை யர்க்கு அங்கு இறந்தவர்களைப் புதைக்கும் உதவியையும் செய்யலாம்.வெளிநாட்டு அதிகாரிகளால் முடக்கப்பட்ட மீன்பிடிப் படகு களை விடுவிப்பது பற்றியும் இங்கிருந்து நடவடிக்கை எடுக்கலாம்.
 
இங்குள்ள பாதுகாப்பு நிலைமை பற்றியும் அந்நிய நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அறிவிக்கலாம் . வெளிநாடுகளில் குற்றச் செயல்கள் காரணமாக சிறையில் இருப்பவர்களை நியாயமாக விசாரிக்கும்படியும் கோரலாம் . சுருங்கச் சொல்வதானால் இதுவரை கொழும்புதான் செய்யவேண்டும்  என்று இருந்தவற்றை இனி எம்மால் செய்ய முடியும் . 
 
இதுகாலவரை  எமது மக்களுக்கு மொழி , பயண தூரம் , கொழும்பில் தங்கி நிற்கும் செலவு , பழக்கம் இல்லாத சூழலில் நடமாடும் சிரமம் என்று வடக்கில் இருந்து தெற்கு நோக்கிய பயணம் பலஅசௌகரியங்களைச் சந்திக்க வைத்தது . இடைத்தரகர்களை நம்பும் நிலை மேலோங்கி இருந்தது . இதனால் இந்தச் சந்திப்புகள் சில சமயங்களில் செலவை இரட்டிப்பாக்கின.
 
சில தெரிவு செய்யப்பட்ட பிரிவுகள் தவிர  விசா விண்ணப்பங்கள் இன்னமும் கொழும்பில்தான் செயல்முறைப்படுத்தப்படுகின்றன என்று நான் சொல்வது  இங்கே பொருத்தமாக இல்லாதிருக்கலாம் . இந்தச் செயல்முறையை தனியார் பிரிவே செய்து வருகின்றது பல்வேறு ராஜதந்திர தூதுக்குழுக்கள் சார்பாக அவற்றின் அனுசரணையுடன்  இவற்றின் கிளைகள் இங்கே அதைச் செய்யலாம் அமைச்சர் மங்கள சமரவீரவின்  இதற்கான முயற்சிகளை நாம் வரவேற்கிறோம் .
 
கௌரவ அமைச்சர் அவர்களே  நான் முதலமைச்சராக கனடா பயணமாகி அங்கு வாழ்கின்ற இலங்கை மக்களைச் சந்தித்தேன் . அவர்கள் எல்லோருமே எங்கள் திறன் அபிவிருத்தி, முதலீட்டு முன்னேற்ற ஆக்க முயற்சி,  கலாச்சார பரிமாறல் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் . எல்லோருமே நாட்டோடு இசைந்து இவற்றைச் செய்யத் தயாராக உள்ளா ர்கள் . ஆனால்  அரசும் அதிகாரிகளும்  வெளி நாட்டு இலங்கையர் மீது கொண்டுள்ள சில கருத்துக்கள் இவர்களை இலங்கை வராது தடுக்கின்றன . தெரிவு செய்யப்பட்ட தடை நீக்கங்களைக்  கொண்டுவராமல் எல்லா அமைப்புகளின் தடையையும் நீக்கி இங்கு வரும் ஒவ்வொரு நபரையும் நன்கு விசாரணை செய்யுங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன். 
 
. எங்கள் நலனுக்காக இவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கி  இவர்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணமுடையில் இருக்கும் அரசுக்கு இவர்கள் பணம் போய்ச்சேரும் வழியைப் பார்க்க வேண்டும் . 
 
இன்னொரு முக்கிய விடயம் பற்றியும் நான் இங்கே வெளிக்காட்டியாக வேண்டும் . காணமல் போனவர்களுக்காக  அவர்கள் உறவுகள் உண்ணாவிரதம் . ஆரம்பித்து இது நான்காவது தினம் . மருத்துவர்கள் நேற்றிரவு இவர்களைப் பரிசோதித்து கோமா நிலையை இவர்கள் அடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள் . இவர்களுக்கு உறுதி அளிக்கும் விதத்தில் ஏதாவது செய்யப்படல் வேண்டும் . ஒரு கூட்டத்தில் ஒரு தாய் தன் மகளின் படத்தை தூக்கிப் பிடித்தபடி  நிற்பதைக் காணமுடிகிறது .  குறைந்தபட்சம் இந்தப் இந்தப் பெண்ணின் இருப்பிடத்தையாவது கண்டுபிடிக்க வேண்டும் .அரசியல் காரணங்களுக்காக அவர்கள் இறந்து விட்டார்கள் அல்ல்லது வெளிநாடு போய்விட்டார்கள் என்று கூறுவது தவறு . உண்ணாவிரதம் இருப்பவர்களில் எவராவது இறந்தால் விளைவுகள் பாரதூரமாக மாறலாம் .  எனவே மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கும் இவர்கள் சம்பந்தமாக உடன் நட வடிக்கை எடுக்கும்படி நான் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இலங்கை வந்தபோது ஒரு விசேஷ செய்தியாளர் கொடூரமான மனிதபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று ஒரு அறிக்கை எனக்குக் கிடைத்தது . இங்குள்ள நிலைமையை இது தெளிவாகவே விளக்குகின்றது . 
 
இன்னொரு விடயத்தை நான் சொல்கிறேன் பரவலாக்கலுக்கும்அதிகாரப்பகிர்தலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அமைச்சர் நன்கு அறிவார் . இங்குள்ள தூதரக அலுவலகங்களில்  பரவலாக்கலை கொண்டு வருவதன் மூலம் கொழும்பு மத்தி விடாப்பிடியாக ஒன்றை வைத்திருப்பதை விட பலர் இதை பகிர்ந்து செய்ய முடியும் .
 
கிழக்கிலும் வடக்கிலும் இருக்கும் நாங்கள் எங்களை சிறுபான்மையினர்களாகக் கொள்ளவில்லை . நாம் நமது பிரதேசத்தில் பெரும்பான்மையினர்தான் . 1919 தொடக்கம் சிங்களத் தலைவர்கள்  இதை ஒப்புக்கொண்டுள்ளர்கள்.எனவே அதிகாரப்பகிர்வுக்கு முழு உரித்தான நாங்கள் இதைக் கோர முடிவதோடு எங்கள் வேலைகளை நாங்களே பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியும் எனத் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/23161

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.