Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்!

Featured Replies

அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்!

 

நுகேகோட வீதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

C3K29oIUYAAZuT7.jpg

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியின் காரணமாகவே, குறித்த பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15922

  • தொடங்கியவர்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி (UPDATE)
 
27-01-2017 02:23 PM
Comments - 0       Views - 193

article_1485507317-111111.jpg

  4.10pm ‘விவசாயி மகன், ஜனாதிபதியாக உள்ளபோது, வேலை தெரியாத அரசாங்கம், விவசாய மக்களை நாசம் செய்துள்ளது. அதன்காரணமாக, வயலில் விவசாயம் செய்ய முடியாதளவு இறைவனின் சாபம் கிடைத்துள்ளது” -ரொஷான் ரணசிங்க

4.06pm ‘மஹிந்த ராஜபக்ஷவின்  மீதான நன்றி பாராட்டுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என கருணா அம்மான் சிங்கள மொழியில் தெரிவித்துள்ளார்.

4.05pm முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பேரணியில் தமிழில் உரையாற்றினார்.

3.03pm  "மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மூன்று நேரம் சோறு சாப்பிட்ட மக்கள், இப்போது பலா இலை மற்றும்  க்ரோட்டன் இலையை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது " - டபிள்யூ எம்.பியதாஸ.

2.50pm மழையுடன் கூடிய காலநிலைய ஊடகவியலாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஊடகவியலாளர்களின் எதிர்ப்பையடுத்து ஒரு சிலருக்கு ஆசனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

2.46pm "தற்போதைய அரசாங்க பயங்கரவாதம் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலேயே இடம்பெறுகிறது" - பெங்கமுவே நாலக்க தேரர்.

2.42pm பெங்கமுவே நாலக்க தேரரால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.2.31pm “புரட்சிகர ஆரம்பம்” பேரணியை ஆரம்பிக்க வட்டினாபஹ சோமானநந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் ஆசி வழங்குகின்றனர்.

2.29pm பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க வந்துவிட்டார்கள்.

2.20pm ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவை கொளரவப்படுத்தி கூறிய கருத்துகள் ஒளிபரப்பட்டது. கூட்டத்தினர் குரல் எழுப்பினார்கள்.

2.18pm  முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும வந்துவிட்டார்.

2.16pm மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரும் வந்தடைந்துள்ளனர்.

2.14pm ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணிக்காக, நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/190534/ஒன-ற-ண-ந-த-எத-ர-க-கட-ச-ய-ன-ப-ரண-UPDATE-#sthash.mt2za68k.dpuf
  • தொடங்கியவர்

ஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்த என்னை மைத்திரி அரசியலில் தள்ளிவிட்டார் – மஹிந்த ராஜபக்ஸ

mahintha.jpg
ஓய்வு பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்த தம்மை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் அரசியலில் தள்ளிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.போலியான ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்காலத்தில் நாட்டில் பாரியளவில் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டை அபிவிருத்தி செய்யவே தாம் கடன் பெற்றுக்கொண்டதாகவும், இந்த அபிவிருத்தித் திட்டங்களின் பலன்களை தற்போது மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாது தாம் தேர்தலில் வேண்டுமென்றே தேர்தலில் தோற்றதாக கூறுவோர் ஏன் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் அரச சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/15427

  • தொடங்கியவர்

மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிப்பார்

GL-Peris-mahintha-Rajapaksha.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம் பிடிப்பார் என  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்தக் கட்சியை தாமாகவே தோற்கடித்த மிகவும் அற்புதமான தலைவராக மைத்திரி வரலாற்றில் இடம் பிடிப்பார் என தெரிவித்துள்ள அவர் அனைவரும் இணைந்து மஹிந்த ராஜபக்ஸ யுகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கோரியுள்ளார்.

சில தரப்பினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புகின்றனர் எனவும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இரவில் விழுந்த குழியில் பகலில் விழப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/15412

  • தொடங்கியவர்

கூட்டு எதிர்க்கட்சியின் மேடையில் கருணா – தாய் நாட்டுக்கு வெற்றி உண்டாகட்டும்

karuna.jpg
கூட்டு எதிர்க்கட்சியின் கூட்ட மேடையில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி எனப்படும் கருணா உரையாற்றியுள்ளார். தற்போது நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டமொன்று நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு தமிழ் மொழியில் கருணா உரையாற்றியிருந்தார்.

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது தமிழ் மொழியில் உரையாற்றுமாறு கோரியதாகவும் அதன் அடிப்படையில் தாம் தமிழில் உரையாற்றுவதாகவும் கருணா சிங்களத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நன்றி அறிந்தவர் எனவும், மஹிந்த ராஜபக்ஸ நாட்டை மீட்டு எடுத்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செய் நன்றியை எவரும் மறக்கக் கூடாது எனவும், தாய் நாட்டுக்கு வெற்றி உண்டாகட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/15402

  • தொடங்கியவர்
நுகேகொடை கூட்டத்தில் மகிந்தவின் பாதுகாப்பை பரிசோதித்த கூட்டு எதிர்க்கட்சி
 
 
நுகேகொடை கூட்டத்தில் மகிந்தவின் பாதுகாப்பை பரிசோதித்த கூட்டு எதிர்க்கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்றி அவரது வாகனம் மாத்திரம் முதலில் நுகேகொடை பொதுக்கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார். 
 
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 
 
நுகேகொடையில் நடைபெற்ற புரட்சி பேரணியில் மேலும் உரையாற்றிய அவர், ´முன்னாள் ஜனாதிபதியின் வாகனம் என்ற போர்வையில் நாம் பிறிதொரு வாகனத்தை அனுப்பு பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பரிட்சித்தோம்´ என தெரிவித்தார். 
 
கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதியின் வருகையை குறிக்கும் வகையில் தமது உரையை இடை நிறுத்தினார். 
2950210932.jpg
அந்த தருணத்தில் நிகழ்ச்சியை நெறிப்படுத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் வகையிலான அறிவிப்புகளை மேற்கொண்டார். 
 
எனினும், அந்த வாகனத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வராத நிலையில், சற்று நேரம் கழிந்து குறித்த வாகனம் பின்னோக்கி நகர்ந்தது. 
 
மீண்டும் தமதுரையை ஆரம்பித்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் வகையில் மஹிந்தவுக்கு பதிலாக போலியொன்றை எடுத்து வந்ததாக தெரிவித்தார். 

http://www.onlineuthayan.com/news/23208

  • தொடங்கியவர்

மஹிந்தவின் பேரணிக்கு பலா, குரோட்டன் இலைகளுடன் வந்த மக்கள் கூட்டம்..!

 

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்  நுகேகொடையில் இன்று மாலை நடைபெற்ற பேரணியில்  பெருந்திரளான மக்கள் கையில் பலா மற்றும் குரோட்டோன் இலைகளை ஏந்திவந்தனர்.

D021-mahinda-rally-nugagoda.jpg

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தி வாழ்க்கை செலவை உயர்த்தியுள்ளதால் தற்போது விலங்குள் உண்ணும் இலைகளை சாப்பிடும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை சித்தரிக்கும் முகமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த பலா மற்றும் குரோட்டன் இலைகளை ஏந்திவந்தனர்.

ccC3Lr3tLUYAAOi88.jpg

 நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மேசடி என்பவற்றை பிரதானப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

Ccccc3Lr3tLVYAATYb8.jpg

இதில் கூட்டு எதிரணியின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, ஜி.எல். பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

C3L6pnNUEAITVO8.jpg

மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் அவருடைய மகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/15935

  • தொடங்கியவர்

“புலிப் பயங்கரவாதத்தை அழித்த மாபொரும் தலைவனே எங்களுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ” (காணொளி இணைப்பு )

Published by Priyatharshan on 2017-01-28 12:04:24

இந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபொரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவென கருணா அம்மான் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

karuna.jpg

புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் பொது எதிரணியின் மக்கள் கூட்டம் நேற்று நுகேகொடையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கருணா அம்மான் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை, நாங்கள் ஒவருமே ஒருபோதும் மறக்க முடியாது. 

உலகத்திலே அழிக்க முடியாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து, இன்று இந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபொரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/15949

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.