Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊசலாட்டத்தின் பிடிக்குள்...

Featured Replies

ஊசலாட்டத்தின் பிடிக்குள்...

 

ரொபட் அன்­டனி

தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இருக்­கின்ற சக்தி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இருக்­கின்­றதா? என்றால் அது கேள்­விக்­கு­றிதான். தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மைத்­திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்­தால்தான் 95 ஆச­னங்கள் கிடைக்கும். அப்­ப­டி­யி­ருந்தும் 96 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. கூட்டு எதி­ரணி இணைந்­து­கொள்ளும் பட்­சத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுதந்­திரக் கட்­சிக்கு ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது. ஆனால் 106 ஆச­னங்­க­ளைக்­கொண்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இந்த நாட்டில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் எதிரும் புதி­ரு­மாக செயற்­பட்­டு­வந்­தன. அர­சியல் பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளிலும் இந்த இரண்டு கட்­சி­களும் ஒன்­றுக்கு ஒன்று வேறு­பட்ட மற்றும் வித்­தி­யா­ச­மான கொள்­கை­க­ளையே கொண்­டுள்­ளன.

இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைக்­குமா? என்­பது கன­விலும் முடி­யாத விட­ய­மா­கவே இருந்து வந்­தது. இலங்­கையில் இதற்கு முன்னர் பல கட்­சிகள் இணைந்து தேசிய அர­சாங்­கங்­களை அமைத்­த­போ­திலும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தி­ருக்­க­வில்லை.

அதன்­படி இந்த இரண்டு கட்­சி­களும் இணை­வது என்­பது பேச்­ச­ள­வில்­ கூட கடந்த காலங்­களில் எமது நாட்டு அர­சி­யலில் சாத்­தி­ய­மாக இருக்­க­வில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு அதுவும் நடந்­தது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கும் சூழலும் உரு­வா­னது.

உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் அனைத்துத் தரப்­பி­னரும் மூக்கில் விரலை வைக்கும் வகையில் தேசிய அர­சாங்­கமும் உரு­வா­கி­யது. குறிப்­பாக இதன்­போது மகிழ்ச்­சி­ய­டைந்த பல தரப்­பினர் இருந்­தனர். அதில் தமிழ் மக்கள் அதி­க­மா­கவே இருந்­தனர். காரணம் தங்­க­ளது நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை தமிழ் மக்­க­ளுக்கு மேலோங்­கி­யி­ருந்­தது.

தேர்தல் முறை மாற்றம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு விரை­வான பொரு­ளா­தார அபி­வி­ருத்தி உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை பிர­தா­ன­மா­கக் கொண்டே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. இது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்­றிலும் கைச்­சாத்­திட்­டன.

ஆனால் பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளுக்கு மத்­தியில் இல்லை... இல்லை.... பல்­வேறு எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னாலும் அமைக்­கப்­பட்ட நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் இன்று ஊச­லா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது என்ற நிலைமை ஆகி­விட்­டது.

என்­னதான் நடக்­கின்­றது நாட்டின் அர­சி­யலில் என்ற கேள்வி எழு­கின்­றது? அனைத்து நகர்­வு­களும் பர­ப­ரப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றன. அர­சியல் கட்­சி­களால் நடத்­தப்­ப­டு­கின்ற அர­சியல் நட­வ­டிக்­கை­களும் களத்தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கின்­றன.

2017 ஆம் ஆண்டில் ஆட்­சியைக் கவிழ்ப்பேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறி­வ­ரு­கின்ற நிலையில் மறு­புறம் அர­சாங்­க­மா­னது ஆட்­சியைக் கவிழ்க்க ஒரு­போதும் இட­மில்லை என சூளு­ரைத்து வரு­கி­றது. இவ்­வாறு நிலை­மைகள் சூடா­கவே நகர்ந்து செல்­கின்­றன.

 அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரி­யங்­கர ஜய­ரத்ன எம்.பி. பத­வியை இரா­ஜி­னாமா செய்­தமை சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தாக அத்­து­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்­தமை உள்­ளிட்ட விட­யங்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்புத் தொடர்பில் கேள்­வி­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

குறிப்­பாக அர­சாங்­கத்தின் மீது பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைத்து விட்டே அத்­து­ர­லிய ரத்ன தேரர் சுயா­தீ­ன­மாக செயற்­படப் போவ­தாக கூறி­யுள்­ள­துடன் சிவில் அமைப்­பு­களை இணைத்துக் கொண்டு அர­சாங்­கத்தைத் திருத்­தப்­போ­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை அத்­து­ர­லிய ரத்ன தேரரின் இந்த அறி­விப்­பா­னது பாத­க­மா­ன­தா­கவே அமைந்­தி­ருந்­தது. மேலும் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான விட­யத்தை முன்­வைத்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள மஹிந்த தரப்­பி­ன­ருக்கு அத்­து­ர­லிய ரத்ன தேரரின் அறி­விப்­பா­னது இனிப்­பா­ன­தா­கவே அமைந்­தது. இது இவ்­வா­றி­ருக்க அண்­மையில் கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றி­யி­ருந்த சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுசில் பிரே­ம்­ஜ­யந்த சர்ச்­சைக்­கு­ரிய விடயம் ஒன்றை வெளியிட்­டி­ருந்தார்.

அதா­வது கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின் போது தனது விருப்­பத்­துக்கு மாறாக சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­ வேண்­டி­யேற்­பட்­ட­தாக சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார். அதா­வது கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ள­ராக இருந்த சுசில் பிரேம்­ஜ­யந்த திடீ­ரென அப்­ப­த­வி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டி­ருந்தார். அப்­போது அந்த விடயம் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக இருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த தற்­போது தனது விருப்­பத்­துக்கு மாறான சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார். இதுவும் சில விட­யங்­களை கோடிட்­டுக் ­காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. அது மட்­டு­மன்றி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அதி­ருப்­தி­யு­ட­னேயே இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேராவும் ஐக்­கிய தேசிய கட்­சியை கடு­மை­யாக விமர்­சித்­து­ வ­ரு­கின்றார். தேசிய பிரச்­சினை தீர்வு என்ற ஒரே விட­யத்­துக்­கா­கவே தாம் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­தாக கூறி­வ­ரு­கின்றார்.

இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தின் நீடிப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கக்­கூ­டி­ய­வா­றான நகர்­வுகள் தொடர்ந்து இடம்­பெற்­று­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. மேலும் அடுத்­த­டுத்து இவ்­வ­ரு­டத்தில் பல தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்­ளன. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடுப்­ப­கு­தியில் நடை­பெறும் என நம்­பப்­ப­டு­கின்­றது. எனினும் தேர்தல் உறு­தி­யாக எந்த முறையில் நடை­பெறும் என்று இது­வரை கூற முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள எல்லை மீள் நிர்­ணய அறிக்­கை­யா­னது வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­ப­ட­வுள்­ளது. ஆனால் அதில் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கு பாரிய பாதிப்பு காணப்­ப­டு­வ­தா­கவும் எனவே அந்த அறிக்­கையை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டக்­கூ­டாது என்றும் கோரி­வ­ரு­கின்­றன.

இந்­நி­லையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் விட­யத்தில் என்ன நடக்கும் என்­ப­தனை உறு­தி­யாக எதிர்­வு­கூற முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆனால் எது எவ்­வாறு இருப்­பினும் கிழக்கு வட மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் இவ்­வ­ருடம் நடந்­தே­யா­க­வேண்டும்.

எனவே வருட நடுப்­ப­கு­தியில் கிழக்கு வட மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களை எதிர்­பார்க்க முடியும். அந்­த­ வ­கையில் இந்தத் தேர்­தலில் வரப்­போகும் முடி­வுகள் சில­வேளை தேசிய அர­சாங்­கத்தின் நீடிப்பை முடி­வுக்கு கொண்­டு­ வந்து­வி­டுமோ அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் சுதந்­திரக் கட்­சி­யி­னதும் திரு­ம­ணத்தை முறித்­து­வி­டுமோ என்ற கேள்வி எழு­கின்­றது.

என்­னதான் கூறி­னாலும் சுதந்­திரக் கட்­சியை பொறுத்­த­வரை மஹிந்த ராஜ­பக் ஷ இன்னும் பிர­ப­ல­மா­ன­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மஹிந்த அணியின் ஆத­ர­வின்றி தேர்­தலில் வெற்­றி­பெ­று­வது என்­பது சுதந்­திரக் கட்­சிக்கு கடி­ன­மா­ன­தாகும்.

அதற்­கா­கவே எதிர்­வரும் மாகாண சபை தேர்­தல்­களை மையப்­ப­டுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வையும் ஒரு குடையின் கீழ் கொண்­டு­வர சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் முயற்­சிக்­கின்­றனர். இவ்­வாரம் மாகாண சபை­களின் முத­ல­மைச்­சர்கள் முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­தித்­த­மையின் பின்­ன­ணியும் அது­வா­கவே இருந்­தி­ருக்­கின்­றது.

ஆனால் மஹிந்­த­வையும் மைத்­தி­ரி­யையும் ஒன்­றி­ணைப்­பது சாத்­தி­யமா என்­பதே இங்கு எழு­கின்ற பிர­தான கேள்­வி­யாகும். இவ்­வாறு மஹிந்த தர­ப­் பி­ன­ரையும் மைத்­திரி தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைப்­ப­தற்கு சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் முயற்­சிக்­கின்­றனர் என்றால் மறு­புறம் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து சுதந்­திரக் கட்சி வில­கப்­போ­கின்­றது என்­பதே அதன் உள்­ளார்ந்த அர்த்­த­மாகும். அல்­லது தேசிய அர­சாங்­கத்தில் தொடர்ந்து நீடிப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி விரும்­ப­வில்லை என்றே அர்த்­த­மாகும்.

இவ்­வாறு பார்க்­கும்­போதும் தேசிய அர­சாங்கம் என்ற திரு­ம­ணத்தின் ஆயுட்­காலம் நீடிக்­குமா? என்ற சந்­தேகம் நியா­ய­மா­கவே எழு­கின்­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் பெற்­றது.

அந்­த­வ­கையில் எந்­த­வொரு கட்­சிக்கும் அர­சாங்­கத்தை அமைக்க அப்­போது பெரும்­பான்மை பலம் இருக்­க­வில்லை. அதனால் அனைத்து தரப்­பி­னையும் ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­விட்டு இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. தற்­போது இரண்டு வரு­டங்­களும் கடக்­கப்­போ­கின்­றன. குறிப்­பாக இரண்டு வரு­டங்­க­ளுக்­கா­கவே இந்த தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது.

அதன்­படி இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் முடி­வ­டை­ய­வுள்­ளது. ஆனால் தொடர்ந்து 2020 ஆம் ஆண்­டு­வரை இந்த தேசிய அர­சாங்­கத்தை இழுத்துச் செல்ல முடியும் என ஆளும் தரப்­பினால் தெரி­விக்­கப்­பட்­டாலும் அதன் சாத்­தி­யங்கள் தற்­போது கேள்­விக்­கு­றியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன.

ஆனால் தேசிய அர­சாங்கம் நீடிக்­காமல் இடை­ந­டுவில் திரு­மணம் முறி­வ­டை­யு­மாயின் அதனால் ஏமாற்­றத்­துக்கு உள்­ளாகும் ஒரு பிரி­வினர் உள்­ளனர். அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை மூலம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி என்­பன கிடைக்கும் என எதிர்­பார்த்­தி­ருக்கும் மக்­க­ளுக்கு ஏமாற்றம் கிடைக்கும்.

எனவே அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் தேசிய அர­சாங்கம் உடைந்­து­வி­டு­மாயின் ஐக்­கிய தேசிய கட்சி இல­கு­வாக தனித்து அர­சாங்­கத்தை அமைத்­து­விடும். அதா­வது தற்­போ­தைய அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்­டு­வரை கவிழ்க்க முடி­யாது. ஆனால் தேசிய அர­சாங்கம் முறி­வ­டை­யலாம். எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் நீடிக்கும். தேசிய அர­சாங்கம் உடைந்தால் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்கும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவு கிடைக்கும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு இருக்­கின்ற சக்தி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இருக்­கின்­றதா? என்றால் அது கேள்­விக்­கு­றிதான். தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மைத்­திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்­தால்தான் 95 ஆச­னங்கள் கிடைக்கும். அப்­ப­டி­யி­ருந்தும் 96 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. கூட்டு எதி­ரணி இணைந்­து­கொள்ளும் பட்­சத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுதந்­திரக் கட்­சிக்கு ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது.

அப்­படி பார்க்­கும்­போது தேசிய அர­சாங்கம் உடைந்­தாலும் அது ஐக்­கிய தேசிய கட்­சிக்கே நன்­மை­யாக அமையும் என்­பது தெரி­கின்­றது. அத­னால்தான் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எவ்­வி­த­மான கவ­லை­யு­மின்றி அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­கின்றார் போன்று தெரி­கின்­றது. எவ்­வா­றெ­னினும் தேசிய அர­சாங்­கத்தை உடைத்­துக்­கொள்ளும் வகை­யி­லான பார­து­ர­மான தீர்­மானம் ஒன்­றுக்கு அர­சாங்கம் செல்­லுமா என்­பது விவா­தத்­துக்கு உரிய விடயமாகும்.

எனினும் தற்போது அடிக்கடி நாட்டில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள் பல்வேறு விடயங்களை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளன. குறிப்பாக அவ்வப்போது சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கும்போது எங்கே தேசிய அரசாங்கம் உடைந்துவிடுமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுகின்றது.

ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து தேசிய நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தாலும் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்த எந்த விடயமும் நிறைவேற்றப்படாது என்று கூறுகின்ற ஒரு சிலரும் நாட்டில் உள்ளனர். என்னதான் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் தென்னிலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க ஒருபோதும் இதயசுத்தியுடன் செயற்படாது என்று சிலர் கூறுகின்றனர். அத்துடன் புதிய அரசியலமைப்பும் முன்வைக்கப்படாது என்றும் காலம் மட்டுமே கடத்தப்படும் என்றும் சில தரப்புக்கள் கூறிவருகின்றன.

இவ்வாறு பாதகமான எதிர்வுகூறல்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த விடயங்களில் இறுதியில் மக்களே ஏமாற்றப்படுகின்றனர். அந்த நிலைக்கு நல்லாட்சி அரசாங்கமும் சென்றுவிடக்கூடாது என்பதே முக்கியமாகும். மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் அரசாங்கம் அவசரப்பட்டு திருமணத்தை முறித்துக்கொள்ளாது என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-28#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.