Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனம் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் தேர்தல் மைய அரசியல் கூடாது - விக்னேஸ்வரன்

Featured Replies

13237.jpg
 
கொள்கைகள் மக்கள் நலம் சார்ந்ததாக அமைய வேண்டும். தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அடுத்த தேர்தலை மையமாக வைத்து வகுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு,
வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்@ர் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆய்வரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு அமைவாக கொள்கைகள் இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகளுக்கு இலகுவாக இருக்கும். எனவே 2013-ம் ஆண் டில் வெளியிடப்பட்ட எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங் கூட உங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும். கொள்கைகள் மக்கள் நலம் சார்ந்ததாக அமைய வேண்டும். 
 
தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அடுத்த தேர்தலை மையமாக வைத்து வகுக்கப்படக் கூடாது. எனவே வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் யாவரையும் உள்ளடக்கிய நோக்கு ஆகியன கொள்கைத் திட்ட வகுப்பின் போது உள்ளேற்கப்பட வேண்டும். அதாவது முற்றான விவாதங்கள் நடைபெற்று வெவ்வேறு தேர்வுகள் அலசி ஆராயப்பட்டே கொள்கைகள் இயற்றப்பட வேண்டும். எங்கள் வடமாகாண மக்களுந்தான், அறிவுடையோருந்தான் பொதுவாகவே அறிவுக்கூர்மை உடையவர்கள். 
 
ஆனால் அதனுடன் சேர்ந்து வித்துவச் செருக்கும் அவர்களிடம் குடிகொண் டிருக்கின்றது. ஆகவே தான் சொல்வது மட் டுந்தான் சரி என்று அடித்துக் கூற முற்படுவார்கள். இதனால் கொள்கைகள் வகுப்பதில் சிரமங்களும் தாமதங்களும் ஏற்படக்கூடும்.
 
நன்நீரின் தொகை அளவு வரைவெல்லைக்குட்பட்டது என்றும் பாதிக்கப்படக்கூடிய ஒரு வளம் என்றும் அது உயிரினங்களின் வாழ்வின் உயிர் நாடி என்றும் அபிவிருத்திக்கும் சூழலுக்கும் அது அத்தியாவசியம் என்றும் கூறப்பட்டுள்ளன. அதாவது நீரானது குறிப்பிட்ட அளவே பாவனைக்குண்டு. அது எந்தளவு என்றுகூட எம்மால் கணிக்க முடியும். அதைவைத்தே எமது பாவனைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
 
நீர்முகாமைத்துவமானது நிலப்பயன் பாட்டையும் நீர்ப்பயன்பாட்டையும் இணைத்துச் செயற்பட வேண்டும். நீரின் தரம், தன்மை பற்றியெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும். சுன்னாகம் நீர் மாசுபடுதல் போன்றவை ஆராயப்பட்டு கழிவுப்பொருட்களின் வெளியேற்றல் பற்றியெல்லாம் இறுக்கமான தீர்மானங்களை நாங்கள் எடுக்கவேண்டும். இனினும் எமது நிலமும் நீரும் மாசுபடாதவாறு பாதுகாக்க வழிமுறைகளை நாங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.
 
நீருடன் தொடர்புடையதே சூழல். சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல் என்றாலேயே நீரை நன்நீராகப் பாதுகாத்து வைத்தல் என்று அர்த்தம் எனலாம். நீரைப் பாதுகாத்தல், சுத்தமாக வைத்திருத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் போன்ற அனைத்தும் உங்கள் பார்வைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீரானது வறிய மக்களுக்கும் கிடைக்கும் விதத்தில் முகாமைத்துவப்படுத்த வேண்டும். நன்நீருக்கு ஒரு விலை வைப்பதானால் அது யாவருடனும் பேசி முடிவெடுக்கப்பட வேண்டும்.
 
நீர் முகாமைத்துவம் சம்பந்தமான கொள்கைகள் மற்றைய துறைகளின் கொள்கைகளுக்கு முரணானதாக அமைதல் ஆகாது. எனவே காலத்திற்குக் காலம் சகல துறைகளினதும் கொள்கைகள் மறுபரிசீலனை செய் யப்பட வேண்டும்.
 
கொள்கை வகுத்தலானது புரிந்துணர்ந்து செய்யப்பட வேண்டியதொன்று. பலவிதமான முரண்பட்ட கருத்துக்களையும் மனதில் எடுத்து அவற்றைக் கடந்து தீர்மானங்களை எடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.    

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13237&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.