Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் மீளுருவாக்கத்திற்கு மஹிந்த ராஜபக் ஷவே காரணம்

Featured Replies

புலி­களின் மீளு­ரு­வாக்­கத்­திற்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவே காரணம்

Untitled-1-copy-8d2c1702edfb9287cc290468ad8e513f06c80456.jpg

 

முன்னாள் போரா­ளிகள் 12 ஆயிரம் பேரை விடு­வித்து நாட்டை

 அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கி­யுள்ளார் என்­கிறார் சம்­பிக்க ரணவக்க  

 

யுத்­தத்தில் அழிக்­கப்­பட்ட புலி­க ளின் நகர்­வு­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதியில் செயற்­படும் தமிழ் அர­சியல் தலை­வர்­களை கொலை­செய்­வதே இவர்­களின் இலக்­காக உள்­ளது. ஆகவே நாட்டின் இரா­ணுவ பாது­காப்பை பலப்­ப­டுத்தி புல­னாய்வு நட ­வ­டிக்­கை­களை மேலும் விஸ்­த­ரிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய  கட்சி தெரி­வித்­தது.  

புலி­களின் மீளுரு­வாக்­கத்­திற்கு முன்­னைய அர­சாங்­கமே கார­ண­மாகும். 12 ஆயிரம் புலி­களை விடு­தலை செய்து நாட்டை அச்­சு­றுத்­த­லுக்குள்ளாக்கி­யுள்­ள னர் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.   

 

ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் செய் தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே கட்­சியின் பிர­தி­நிதி சம்  

­பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட் டார். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க  தெரி­விக்­கையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனை கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த முயற்­சியை எமது புல­னாய்வுப் பிரி­வினர் முறி­ய­டித்­துள்­ளனர். இந்த கொலை முயற்­சியின் பின்­ன­ணியில் மிகப்­பெ­ரிய பயங்­க­ர­வாத திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விட­யங்கள் புல­னாய்வுப்பிரி­வி­ன­ருக்கு தெரிந்­தி­ருந்த நிலையில் சுமந்­தி­ரனின் உயிரை காப்­பாற்றும் நட­வ­டிக்­கைகளை அவர்கள் மேற்­கொண்­டுள்­ளனர். ஆனால் இந்த சம்­பவம் சாதா­ரண ஒரு சம்­பவம் அல்ல. ஒரு­வேளை இந்த முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்பின் இன்று நாட்டில் உள்ள அர­சியல் நிலை­மைகள் மாறி­யி­ருக்கும். அதேபோல் ஏற்­க­னவே சுமந்­தி­ரனை கொல்ல கடந்த ஆண்டு ஒரு திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அவரை கொல்ல ஒரு திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதை புல­னாய்வுப்பிரி­வினர் தடுத்­துள்­ளனர். இந்த நிலையில் இரண்­டா­வது முயற்­சி­யாக இந்த ஆண்டு ஜன­வரி 13 ஆம் திகதி கிளேமோர் குண்டு தாக்­குதல் நடத்த திட்டம் தீட்­டி­ய­தாக புல­னாய்வு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இத­னுடன் தொடர்­பு­பட்ட நான்கு பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் நால்­வரும் விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வாத அமைப்பின் முன்னாள் உறுப்­பி­னர்கள் என இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

இந்த சம்­பவம் முழு நாட்­டுக்கும் தெரி­விக்­கப்­பட வேண்­டிய ஒரு விட­ய­மாகும். நாம் ஆரம்­பத்தில் இருந்தே புலிகள் தொடர்­பி­லான எச்­ச­ரிக்­கையை விடுத்து வந்தோம். புலி­களின் மீள் உரு­வாக்கம் நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் சர்­வ­தேச நாடு­களில் புலி­களின் நட­வ­டிக்­கைகள் கையா­ளப்­பட்டு வரு­வ­தாகும் எச்­ச­ரித்தோம். யுத்தம் முடி­வுக்கு வந்­த­வுடன் நாட்டில் புலிகள் கொல்­லப்­பட்டு விட்­டனர். இனி­மேலும் புலி­களின் நட­வ­டிக்­கைகள் இருக்­காது என கூறிய நிலையில் நாம் அதை எதிர்த்து வந்தோம். இலங்­கையில் புலிகள் அப்­போது இருக்­க­வில்லை. ஆனால் பின்னர் 12 ஆயிரம் புலி­களை அர­சாங்கம் விடு­தலை செய்­தது. அதேபோல் புலி­களின் முக்­கிய நபர்கள் அப்­போதே தப்­பித்து வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றனர். ருத்­ர­கு­மாரன், நெடி­யவன், விநா­யகம் போன்­ற­வர்கள் இன்றும் அமெ­ரிக்கா, நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடு­களில் இருந்து இயங்கி வரு­கின்­றனர். இவ­ர்களின் ஈழக் கொள்­கையும் ஆயுத போராட்ட கொள்­கையும் இன்னும் இவர்­க­ளிடம் உள்­ளன.

அதேபோல் புலி­களின் நட­வ­டிக்­கைகள் இன்று மீண்டும் உரு­வா­கி­வ­ரு­கின்­றன என்­ப­தற்கு முன்­னைய அர­சாங்கம் செய்த தவ­று­களும் உள்­ளன. விடு­த­லைப்­பு­லி­களின் உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­தனர். இன்று வடக்­கிலும் கிழக்­கிலும் அவர்­களின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அதேபோல் அப்­போ­தைய புலி­களின் தலை­வர்­களை தப்­பிக்க வைத்­துள்­ளனர். இந்த நட­வ­டிக்­கைகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அப்­போ­தைய பாது­காப்பு அதி­கா­ரிகள் சில­ருக்கும் தெரிந்­தி­ருக்க வேண்டும். ஆகவே புல­னாய்வு தரப்பு இந்த உண்­மை­களை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றார்

 கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க தெரி­விக்­கையில்,

சர்­வ­தேச நாடு­களில் வாழும் புலம்­பெயர் புலி அமைப்­பு­களும் சரி இலங்­கை­யில் தமிழர் தரப்பும் இன்றும் தமது கொள்­கையில் இருந்து மாற­வில்லை. எனினும் புலி­க­ளுக்கும் தற்­போ­தைய தமிழ் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் இடையில் வேறு­பா­டுகள் உள்­ளன. புலிகள் ஆயுதம் மூலம் அடைய நினைக்கும் இலக்கை இவர்கள் ஜன­நா­யக ரீதியில் அடைய முயற்­சிக்­கின்­றனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், சுமந்­திரன் ஆகியோர் கொள்கை அடிப்­ப­டையில் வடக்கு கிழக்கு தனி அல­குகள் என்று செயற்­பட்­டாலும் அவர்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் ஜன­நா­யக ரீதியில் அமைந்­துள்­ளன. அதை நாம் மறுக்­க­வில்லை. அவ்­வா­றான நிலையில் இன்று ஆயுதம் மூலம் அடைய நினைப்­ப­வர்கள் இவர்­களை இலக்கு வைத்­துள்­ளனர். ஜன­நா­யக ரீதியில் நகரும் தமிழ் தலை­வர்­களை கொலை­செய்ய இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இப்­போது தமிழர் தரப்பு என்ன செய்­யப்­போ­கின்­றது.

அன்று புலி­களை வளர்­த்த­வர்­க­ளுக்கே இன்று புலிகள் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளனர். வட­மா­காண சபையும், வடக்கு முதல்­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் அன்று சர்­வ­தேச நாடு­களின் அமைப்­பு­க­ளு­டனும் புலி அமைப்­பு­க­ளு­டனும் இணைந்து செயற்­பட்ட நிலையில் இப்­போது ஆயுதம் ஏந்தும் புலி­களின் அச்­சு­றுத்தல் இவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இப்­போது இவர்கள் புலி­களின் விப­ரங்­களை வழங்கி இந்த நகர்­வு­களை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த வேண்டும். இன்று வடக்கில் புலி­களின் புல­னாய்வு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சுமந்­தி­ரனின் இலக்கு தவ­றி­யதை அங்­குள்ள ஒருவர் நோர்வே அமைப்­புக்கு தெரி­வித்­துள்ளார். அந்த தொலை­பேசி உரை­யா­டலை புல­னாய்வுப்பிரி­வினர் கண்­ட­றிந்­துள்­ளனர். ஆகவே உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

அதேபோல் வடக்கில் மாத்­திரம் அல்­லது நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் இரா­ணுவ பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்டும். அன்று அழிக்­கப்­பட்ட புலி­களின் நகர்­வு­க­ளுக்கு இன்று மீண்டும் உயிர் கொடுக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் அரசியல் தலைவர்கள் தான் இவர்களின் இலக்காக உள்ளனர். ஆகவே நாட்டின் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டும். அதேபோல் இன்று நாடு மோசமான நிலைமைக்கு திரும்பவும் தமிழ் அரசியல் வாதிகளே காரணமாகும். சிங்கள் இனவாதிகள் தமிழரை அழிப்பதாக கூறுகின்றனர். ஆனால் தமிழ் தரப்பே தமிழர்களை கொன்றனர். இப்போதும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. புலிகளை ஆதரித்து புலிகளை பலப்படுத்திய தமிழர் தரப்பே இன்று மீண்டும் ஆயுத மோதல்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கிவருகின்றது. ஆகவே இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழர் தரப்பு ஏற்றுகொள்ள வேண்டும் என்றார். 

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.