Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா, ஜப்பானுடன் பேச்சு நடத்திவருகின்றோம்

Featured Replies

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்ய இந்­தியா, ஜப்­பா­னுடன் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றோம்

Ranil2000-copy-2f63dda871da5598517c2f6e70158f5bec0be9e8.jpg

 

மஹிந்த ஓய்வுபெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்காது என்கிறார் ரணில்

 

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக திட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம். அதற்­காக ஜப்பான் மற்றும் இந்­தி­யா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம் என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க  தெரி­வித்தார்.  

மஹிந்த ராஜ­பக் ஷ இரு தட­வைகள் பதவி வகித்து விட்டு ஓய்­வு­பெற்று சென்­றி­ருந்தால் இன்று இந்த நாட் டில் ஒரு பிரச்­சி­னையும் வந்­தி­ருக்­காது. மஹிந்த ராஜ­பக் ஷ

ஓய்­வு­பெ­றா­­ததன் கார­ண­மா­கவே நாங்கள் பொது வேட்­பா­ளரை நிறுத்­தினோம். அப்­போது மக்கள் மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினர்.

நாட்டின் நல­னுக்­காவே ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

சாலி­ய­வெவ பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற பொதுக் கூட்­ட­மொன்றில் கலந்து கொண்­டு­உ­ரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றுகையில்,

ஜன­வரி மாதம் தான் பிர­தமர் பத­வியைப் பெற்று ஆட்­சியை கவிழ்ப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவும் அவ­ரது கூட்டு எதி­ர­ணியும் தெரி­வித்­தி­ருந்­தன. நான் வெளி­நாடு சென்­றி­ருக்­கும்­போது ஆட்­சியை பெற்றுக் கொள்­ளு­மாறு மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு கூறினேன். ஆனால் அர­சாங்கம் தேவை­யில்லை என்றும் தாங்கள் பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தற்­போது கூறு­கின்­றனர். அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் நுகே­கொடை கூட்­டத்­திற்கு வரு­வ­தாக கூறினர். ஆனால் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் கூட அதற்கு செல்ல­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வந்­தி­ருக்­கா­விடின் தான் ஓய்­வு­பெற எண்­ணி­யி­ருந்­த­தாக மஹிந்த ராஜ­பக் ஷ கூறி­யி­ருந்தார். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பற்றி பேசு­வ­தற்கு நான் தயார் இல்லை. நான் அதன் உறுப்­பினர் அல்ல. அவர்கள் தங்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­ளட்டும். ஆனால் நான் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பேச வேண்­டி­யுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­தன நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை கொண்டு வந்து இரண்டு முறை ஜனா­தி­பதி பதவி வகித்­து­விட்டு ஓய்­வு­பெற்று சென்றார். டி.பி.விஜே­ய­துங்க ஒரு­முறை பதவி வகித்து விட்­டு­சென்றார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இரண்டு முறை பதவி வகித்­து­விட்டு சென்றார். ஆனால் மஹிந்த ராஜ­பக் ஷ 18 ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்டு வந்து இரண்டு தடவை என்ற வரை­ய­றையை நீக்­கினார்.

அத­னை­வி­டுத்து அவர் இரண்டு தடவை பதவி வகித்து விட்டு ஓய்­வு­பெற்று சென்­றி­ருந்தால் இன்று இந்த நாட்டில் ஒரு பிரச்­சி­னையும் வந்­தி­ருக்­காது. மஹிந்த ராஜ­பக் ஷ ஓய்­வு­பெ­றா­ததன் கார­ண­மா­கவே நாங்கள் பொது வேட்­பா­ளரை நிறுத்­தினோம். அப்­போது மக்கள் மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினர். நாட்டின் நல­னுக்­காவே ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது.

மஹிந்த ராஜ­பக் ஷ இந்­த­நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அழித்­து­விட்டார். யுத்­தத்தின் பின்னர் நாட்டில் பாரிய அபி­வி­ருத்தி ஏற்­படும் என அனை­வரும் எதிர்­பார்த்­தனர். ஆனால் இறு­தியில் என்ன நடந்­தது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அழித்து தீவிர சிகிச்சை பிரி­வுக்கு அனுப்பி வைத்தார். நோயா­ளரை பரா­ம­ரிக்க முடி­யாத கட்­டத்­தி­லேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­தித்­தனர்.

மஹிந்த ராஜ­பக் ஷ அந்த நோய்க்கு மருந்து போட­வில்லை. குறைந்த பட்சம் காயத்தை சுத்­தப்­ப­டுத்­தவும் இல்லை. ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தி அதி­கா­ரத்தை பெற்று மக்கள் புரட்சி செய்தால் ரத்­து­பஸ்­வெல போராட்­டத்தை முடக்­கி­ய­து­போன்று முடக்க முயற்­சித்­தனர். ஆனால் இறு­தியில் நோயாளர் கஷ்­டப்­ப­டும்­போது டாக்டர் விட்டு ஓடி­விட்டார். நானும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அந்த நோயா­ளியை பொறுப்­பேற்றோம்.

மக்­க­ளுக்கு சுமையை சுமத்­து­வ­தற்­காக நாங்கள் அர­சாங்­கத்தை பொறுப்­பேற்க்­க­வில்லை. நாம் நாட்டை பொறுப்­பேற்­ற­போது இந்த நாட்டின் வரு­மானம் அன்­றாட செல­வு­க­ளுக்கே பொது­மா­ன­தாக இருக்­க­வில்லை. 2026 ஆம் ஆண்­டு­வரை நாங்கள் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஆனால் பொரு­ளா­தா­ரத்தை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்­பு­வது என்று எமக்கு தெரியும். அதனால் தான் அச்­ச­மின்றி அதனை பொறுப்­பேற்றோம்.

நாங்கள் வரியை அதி­க­ரிக்க மாட்டோம். எவ்­வா­றா­வது கடன்­களை மீள்­செ­லுத்­துவோம். அவர்கள் நோயா­ளியை விட்டு ஓடி­விட்­டாலும் நாங்கள் அந்த நோயா­ளியை பொறுப்­பேற்று தீவிர சிகிச்சை பிரி­வி­லி­ருந்து அகற்­றி­யி­ருக்­கின்றோம். காயத்தை சுத்­தப்­ப­டுத்தி மருந்­திட்­டுள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் எமக்கு இரண்டு பொறுப்­புகள் உள்­ளன. அதா­வது மக்­க­ளுக்கு வரு­மா­னத்தை பெற்றுக் கொடுப்­பதும், இளை­ஞர்­க­ளுக்கு சிறந்த எதிர்­கா­லத்தை பெற்றுக் கொடுப்­ப­துமே எம­து­நோக்­கங்­க­ளாகும்.

தேசிய அர­சாங்­கத்­தின பிர­தமர் என்ற வகை­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் என்ற ரீதி­யிலும் நான் மற்­றுமோர் பொறுப்­பையும் ஏற்றுக் கொண்டேன். அது ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தாகும். ஆட்­சியை இழந்த பின்னர் ஒரு­வ­ரு­டத்தில் மீண்டும் ஆட்­சிக்கு வர­மு­டியும் என மஹிந்த தரப்­பினர் முயற்­சித்­தனர்.

ஆரம்­பத்தில் ஆசி­யாவில் பல்­வேறு நாடுகள் எமக்கு பின்னால் நின்­றன. ஆனால் இன்று பங்­க­ளாதேஷ் போன்ற நாடுகள் கூட எம்மை தாண்டிச் சென்­றுள்­ளன. ராஜ­பக் ஷ நிர்­வாகம் இன்னும் ஐந்து வரு­டங்கள் இந்­நாட்டை ஆட்சி செய்­தி­ருந்தால் ஆப்­கா­னிஸ்தான் கூட எம்மை தாண்டி சென்­றி­ருக்கும்.

ராஜ­பக் ஷ ஆட்சி எமக்கு பெற்றுக் கொடுத்­த­வைகள் என்ன? உல­கத்தில் மிகப்­பெ­ரிய நீச்சல் தடா­கத்தை பெற்றுக் கொடுத்­தனர், மத்­தள வல­யத்தை பெற்றுக் கொடுத்­தனர் அவற்­றுக்­காக பெற்றுக் கொடுத்த கடனை அவர்கள் செலுத்­த­வில்லை. நாம் சீனா­வுக்கு சென்று சீன ஜனா­தி­ப­தி­யிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அத­ன­டிப்­ப­டையில் இலங்­கையும் சீனாவும் இணைந்து அம்­பாந்­தோட்­டையில் பாரிய அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்துள்ளன.

அதே­போன்று சர்­வ­தேச கொள்­கலன் துறை­முகம் உரு­வாக்­கப்­படும். 10 வரு­டங்­க­ளுக்குள் மத்­தள விமான நிலை­யத்­திற்கு 10 இலட்சம் பய­ணி­களை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். கொழும்­பிலும் பாரிய அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை ஆரம்­பித்தோம். ராஜ­பக் ஷ அர­சாங்கம் ஆரம்­பித்த துறை­முக நகர திட்­டத்தை நாங்கள் நிதி­ந­க­ர­மாக உரு­வாக்­கு­கிறோம். முழு மேல் மாகா­ணத்­தையும் பாரிய நக­ர­மாக அபி­வி­ருத்தி செய்வோம்.

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக திட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம். அதற்­காக ஜப்பான் மற்றும் இந்­தி­யா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். கல்வித் துறையை பாரிய அபி­வி­ருத்தி செய்து வரு­கின்றோம். 13 வருட கல்­வியை கட்­டா­ய­மாக்­கி­யுள்ளோம். சாதா­ரண தர பரீட்­சையில் சித்தியடையாவிடினும் 13 வருட கல்வி கட்டாயமானதாகும். எனவே இந்த நாட்டை முன்கொண்டு செல்வதற்கு வாத விவாதங்களை விடுத்து எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கட்சியின் தவிசாளருக்கும் பொது செயலாளருக்கும் ஆலோசானை வழங்கியிருக்கிறேன். இந்த நாட்டின் அபிவிருத்தியை பாதுகாக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். சாதாரண மக்களை பலப்படுத்த வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.