Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தேச அரசியலமைப்பினை காரணம் காட்டி நல்லாட்சியை கவிழ்க்க முடியாது

Featured Replies

உத்­தேச அர­சி­ய­ல­மைப்­பினை காரணம் காட்டி நல்­லாட்­சியை கவிழ்க்க முடி­யாது

vijithamuni-copy-db02b852ac1493ba1fc9ec9159d5f86582b77202.jpg

 

சிறு­பான்மை மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிட்டும் என்­கிறார் அமைச்சர்

 

ுதிய அர­சி­ய­ல­மைப்பு இன்னும் முழு வடிவம் பெற­வில்லை. எனவே உத்­தேச மட்­டத்­தி­லுள்ள அர­சி­ய­ல­மைப்பை முதற்­கா­ர­ணி­யாக  கொண்டு தேசிய அர­சாங்­கத்தை கவிழ்த்­து­விட முடி­யாது. அதே­நேரம் 

சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஒற்­றை­யாட்­சியின் கீழ் ஒரு நியா­ய­மான தீர்வை வழங்க வேண்டும் என்ற விட­யத்தில் அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­ற­தென நீர்ப்­பா­சன அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­லை­மைப்­பினை கார­ண­மாக காட்டி ஆட்­சி­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று கூட்டு எதி­ரணி தெரி­வித்து வரு­கின்­றமை குறித்து வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த 2015 ஜன­வரி எட்டம் திகதி ஆட்சி மாற்றம் இடம்­பெற்று கடந்த அர­சாங்கம் வீழ்த்­தப்­பட்ட பின்னர் அந்த அர­சாங்­கத்­தினால் விடுக்­கப்­பட்ட குறை­பா­டு­களை புதிய அர­சாங்கம் நிவர்த்­தித்து வரு­கின்­றது.

அதற்­க­மைய சில விட­யங்­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது அவற்றில் முக்­கி­ய­மான விட­ய­மாக நாட்டின் அடிப்­படைச் சட்­ட­திட்­டங்­களை வகுக்கும் அர­சி­ய­ல­மைப்பு புத்­து­ரு­வாக்கச் செயற்­பா­டு­களும் சடு­தி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­ட­ வண்ணம் உள்­ளன.

எனவே இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க செயற்­பா­டுகள் குறித்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஏனைய செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் பேசும் உரிமை நாட்டு மக்­க­ளுக்கும் ஏனைய தரப்­புக்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த கருத்து சுதந்­தி­ரத்­தினை பயன்­ப­டுத்தி இன்று பல்­வேறு விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டுக்களும் அர­சாங்­கத்தின் மீது முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

குறிப்­பாக இவற்றில் அர­சி­ய­ல­மைப்பு குறித்தே பாரிய விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. ஆனால் அவை ஏற்­பு­டைய விமர்­ச­னங்கள் அல்ல. காரணம் தற்­போதும் கூட அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் உத்­தேச மட்­டத்­தி­லேயே உள்­ளது. இவ்­வா­றுள்ள ஒரு அர­சி­ய­ல­மைப்பு குறித்து போலி­யாக விமர்­சிப்­பதில் அர்த்­த­மில்லை.

அதனால் அர­சி­ய­ல­மைப்பு இறுதி வடிவம் பெற்ற பின்னர் அதனை ஆராய்ந்­து­விட்டு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்­றத்­திற்கு விவா­தத்­திற்­காக விடப்­படும். தற்­போது முன்­வைக்­கப்­படு­கின்ற விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டுக்­களும் எதிர் தரப்­பி­னரால் அந்த சந்­தர்ப்­பத்தில் முன்­வைக்­கப்­பட்டால் சிறந்த­தாகும்.

  தமிழ் மக்கள் உட்­பட இந்­நாட்டு சிறு­பான்மை மக்­க­ளுக்கு இது­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் எமது நாட்டில் மறுக்­கப்­பட்டு வந்த உரி­மை­களை பெற்றுக் கொடுப்­ப­தற்­கான திருத்­தங்கள் அடங்­கிய ஒரு அர­சி­ய­ல­மைப்பு வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

இவ்­வா­றி­ருக்­கின்ற போது இந்த அர­சி­ய­ல­மைப்பு நாட்­டிற்கு ஏற்­பு­டை­ய­தல்ல என்று கூறிக்­கொண்டு ஆட்சி மாற்­றத்­தினை இல­குவில் ஏற்­ப­டுத்­தி­விட முடியும் என்று நாம் நம்­ப­வில்லை. ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஒற்­று­மையில் சக்­தி­மிக்க­தாக அத்­தி­வா­ர­மி­டப்­பட்டு அமைக்­கப்­பட்ட இந்த ஆட்­சியை எளி­தாக கவிழ்த்­து­விட முடி­யாது.

கூட்டு எதி­ர­ணி­யினர் இது குறித்து முன்­வைக்கும் விமர்­ச­னங்கள் அர்த்­த­மற்­றவை என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது. இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழ்

அர­சி­ய­ல­மைப்பு புத்­து­ரு­வாக்க செயற்பா டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.

நாட்டின் முழு சட்டவரையறையினையும் தீர்மானிக்கும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரம் ஏற்க முடியாது. அதனால் அரசியலமைப்பு சீர் திருத்த செயற்பாடுகள் சுதந்திரக்கட்சியின் கீழ் வந்துள்ளன என்பது உண்மையான காரணமல்ல. இதன் உண்மை தன்மை குறித்து அறிந்துக்கொள்ள பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.