Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலபே மருத்துவக் கல்லூரி பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் : நீதிமன்றம்

Featured Replies

மாலபே மருத்துவக் கல்லூரி பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் : நீதிமன்றம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

malabe.jpg

மலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கான விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மாணவி இது தொடர்பில் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

 

குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போதே மேற்கண்டவாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16033

  • தொடங்கியவர்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டங்கள் சட்டரீதியானவை

 

மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்பு; பட்­ட­தா­ரி­களை வைத்­தி­ய சபையில் பதிவு செய்யவும் உத்­த­ரவு
 (எம்.எப்.எம்.பஸீர்)

மாலபே சைட்டம் (தொழில் நுட்பம் மற்றும் மருத்­துவ கற்­கை­க­ளுக்­கான தெற்­கா­சிய நிறு­வகம்) தனியார் மருத்­துவக் கல்­லூ­ரிக்கு மருத்­துவ பட்­டங்­களை வழங்க சட்ட ரீதி­யி­லான அதி­காரம் உள்­ள­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. 

அதன்­படி சைட்டம் தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியில் பட்டம்  பெற்று வெளி­யே­று­வோரை இலங்கை மருத்­துவ சபையின் தொழில் சார் வைத்­தி­யர்­க­ளாக பதிவு செய்­ய வேண்டும் எனவும் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. 

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை  நீதி­பதி விஜித் மலல்­கொட தலை­மையில் நீதி­பதி எஸ். துரை­ராஜா உள்­ள­டங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழுவே இந்த தீர்ப்பை அறி­வித்­தது. 

சைட்டம் நிறு­வ­னத்தில் பட்டம் பெற்ற தம்மை மருத்­துவத் துறையில் பதிவு செய்ய இலங்கை மருத்­துவ சபை மறுப்­ப­தாக குற்­றம்­சாட்டி, அந்த தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியில் பட்டம் பெற்று வெளி­யே­றிய மல்­ஷானி சுர­வீர ஆரச்சி மற்றும் திலும் சூரிய ஆரச்சி ஆகியோர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த ரீட் மனு மீதான தீர்ப்பின் போதே மேற்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக இலங்கை மருத்­துவ சபை, உயர் கல்வி அமைச்சர், உயர் கல்வி அமைச்சின் செய­லாளர் உள்­ளிட்ட தரப்­பினர் மனு­தா­ர­ரான மாண­வர்­களால் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் இந்த ரீட் மனு மீதான விசா­ர­ணை­களின் நிறைவில் இந்த தீர்ப்பு நேற்று வழங்­க­கப்­பட்­டது.

நேற்­றைய தினம் சைட்டம் தனியார் மருத்­துவக் கல்­லூரி சட்ட ரீதி­யா­னதா இல்­லையா என்­பது குறித்து மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­றி­விக்க ஏற்­பாடு செய்­தி­ருந்த நிலையில், நேற்று காலை நீதி­மன்ற வளா­கத்தை அண்­மித்து பர­ப­ரப்­பான சூழல் ஒன்று நில­வி­யது. 

மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அமைந்­துள்ள வாழைத்­தோட்ட பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புதுக்­கடை பகு­தியில் கறுப்பு நிற பட்­டி­களை தலையில் கட்­டி­ய­வாறும், சைட்ட நிறு­வ­கத்தை தடை செய், நீதி இல்­லையேல் சட்டம் எதற்கு போன்ற பதா­தை­களை ஏந்­தியும் ஆயிரக் கணக்­கானோர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வா­றா­ன­தொரு பர­ப­ரப்­பான சூழ­லி­லேயே மேன் முறை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி விஜித் மலல்­கொட தீர்ப்பை அறி­வித்தார்.

' சைட்டம் நிறு­வ­னத்தின் வைத்­திய பட்டம் சட்ட விரோ­த­மா­னது என குறிப்­பிட்டு பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பான இலங்கை மருத்­துவ சபை ஆட்­சே­ப­னங்­களை இம்­மன்றில் முன் வைத்­தி­ருந்­தது. எனினும் அந்த அனைத்து ஆட்­சே­ப­னங்­க­ளையும் இந்த நீதி­மன்றம் நிரா­க­ரிக்­கின்­றது.உயர் கல்வி அமைச்சர் வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் சைட்டம் நிறு­வ­னத்­துக்கு மருத்­துவ பட்­டங்­களை வழங்க பூரண அதி­காரம் உள்­ளது. அதனால் அந்த பட்­டங்­களை அங்­கீ­க­ரிக்க இலங்கை மருத்­துவ சபைக்கு எந்­த­வொரு சட்ட ரீதி­யி­லான தடை­களும் இல்லை. அதனால் சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூ­ரியில் மருத்­துவ பட்டம் பெறும் மாண­வர்­களின் பட்­டங்­களை ஏற்று அவர்­களை மருத்­துவ சபையின் தொழில் சார் வைத்­தி­யர்­க­ளாக பதிவு செய்­யு­மாறு இந்த நீதி­மன்றம் உத்­தர்­வி­டு­கின்­றது.' என தலைமை நீதி­பதி விஜித் மல­கொட தீர்ப்­ப­றி­வித்தார்.

2008 ஆம் ஆண்டு அப்­போ­தி­ருந்த அர­சாங்­கத்­தினால் சைட்டம் தனியார் கல்வி நிறு­வ­கத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இந் நிலையில் 2011 ஆம் ஆண்டு அப்­போது உயர் கல்வி அமைச்­ச­ராக இருந்த எஸ்.பி. திஸா­நா­யக்க அவ்­வ­ரு­டத்தின் ஆகஸ்ட் மாதம் வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக அந் நிறு­வ­னத்தின் வைத்­திய பட்­டங்­க­ளுக்கு சட்ட ரீதி­யி­லான அனு­மதி அளித்­தி­ருந்தார். இலங்கை மருத்­துவ சபை, அரச வைத்­திய அதி­கா­ரிகள் மற்றும் அரச பலக்­லைக்­க­ழக மாண­வர்­களின் எதிர்ப்­புக்கு மத்­தி­யி­லேயே இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக சைட்டம் மருத்­துவ பட்­டங்­க­ளுக்கு சட்ட ரீதி­யி­லான அனு­மதி அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனைத் தொடர்ந்து அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் இந்த தனியார் மருத்­துவக் கல்­லூரி தொடர்பில் கடு­மை­யான நிலைப்­பாட்­டி­லேயே இருந்த நிலையில் அனைத்து பல­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் இன்று வரை அந்த கல்­லூ­ரிக்கு எதி­ராக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இதன் பின்­ன­ணி­யி­லேயே மாலபே சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூரி மாண­வர்­களும் ஆர்ப்­பாட்­டங்கள் மற்றும் சட்ட ரீதி­யி­லான நகர்­வுகள் ஊடாக தமது பட்­டத்­துக்கு சட்ட ரீதி­யி­லான பெறு­ம­தியை கோரி வந்­தனர். அதன் படி கடந்த 2015 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சைட்டம் மருத்­துவ கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை ரீதி­யி­லான பயிற்­சி­களைப் பெற அனு­ம­தித்து உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அதன்­படி மாலபே தனியார் வைத்­திய கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு சிகிச்சைப் பயிற்­சி­களை அரச வைத்­தி­ய­சா­லை­களில் பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக சுகா­தார அமைச்சு உயர் நீதி­மன்றில் உறு­தி­ய­ளித்­தது. சட்ட வைத்­திய கற்­கைகள் மற்றும் பிரஜா வைத்­திய கற்­கைகள் தொடர்பில் கடு­வலை பொது சுகா­தார அதி­காரி அலு­வ­ல­கத்­திலும் அவி­சா­வளை ஆரம்ப வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சைப் பயிற்­சி­களை பெறு­வ­துக்கு வாய்ப்­ப­ளிப்­ப­தாக சுகா­தார அமைச்சு உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

 அரச வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பயிற்­சிக்கு அர­சாங்கம் சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூ­ரிக்கு அனு­ம­தி­ய­ளித்த போதும் அரச வைத்­திய அதி­கா­ரி­களின் எதிர்ப்பு கார­ண­மாக அப்­ப­யிற்­சி­களை வழங்­கு­வதில் சிக்கல் நீடித்­தது.

அடிப்­படை முரண்­பா­டுகள் தீரும் வரை அரச சொத்­துக்­களைப் பயன்­ப­டுத்தி தனியார் மருத்­துவக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு கற்­பிப்­பதில் இருந்து தவிர்ந்­து­கொள்­ளு­மாறு அரச வைத்தியர்கள் சங்கம் அனைத்து வைத்தியர்களையும் கோரியிருந்தது.

இதனால் சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு சிகிச்சைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைவிட அரச பலகலை மாணவர்கள் இந்த தனியார் கல்லூரிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். .

 இந் நிலையிலேயே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற தம்மை வைத்தியத்துறையில் பதிவு செய்ய இலங்கை வைத்திய சபை மறுப்பதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான விசாரணையின் தீர்ப்பானது நேற்று வழங்கப்பட்டுள்ளது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.