Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைளில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்.!

Featured Replies

இலங்­கைளில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்.!

 

 

பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர தகவல்

"என்னால்முடியும், நம்மால் முடியும்" 

என்ற தொனிப்பொருளில் இம்முறை 

புற்றுநோய் தவிர்ப்பு தினம்

Brain_cancer.png

தொற்றா நோய் வரி­சையில் மிக முக்­கி­ய­மான  இடத்தை புற்­று­நோ­யா­னது பிடித்­துள்­ளது.  இலங்­கைளில் புற்று நோய் கார­ண­மாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்­பது பேர் வரை இறக்­கின்­றனர் என்று பதில் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜய­சுந்­தர பண்­டார தெரி­வித்தார்.

பெப்­ர­வரி 04 ஆம் திகதி உலக  புற்­றுநோய் தினம் அனுஷ்­டிக்­கப்­படு­கி­றது. இதனை முன்­னிட்டு நேற்று சுகா­தார,போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

cancer.jpg

அவர் மேலும் தெரி­விக்­கையில் 

உலகம் முழு­வதும் ஏழில் ஒரு மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற கார­ணி­யாக புற்­றுநோய்  காணப்­ப­டு­கின்­றது. உலக புற்­றுநோய் அறிக்­கை­யா­னது  14.1 மில்­லியன் புதிய புற்­று­நோ­யா­ளர்கள் கண்­டுப்­பி­டிக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆண்டு தோரும் 8.2 மில்­லியன் மக்கள் புற்­று­நோ­யினால் இறக்­கின்­றனர் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டும்  உலக புற்­றுநோய் தின பிர­சார தொனிப்­பொ­ரு­ளாக "என்­னால்­மு­டியும், நம்மால் முடியும்" என்­பது உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.    இந்த தொனிப்­பொ­ரு­ளு­ட­னான  2017 ஆம் ஆண்­டுக்­கு­ரிய உலக புற்­றுநோய் தினம், புற்­று­நோய்க்­கு­ரிய சிகிச்சை தீர்­வு­களை கண்­ட­றி­யவும் இதற்­கெ­தி­ரான போராட்­டத்தில் ஒரு உயிர்ப்­பான அணு­கு­மு­றையை கையா­ளவும் வழி­வ­குக்கும் என்­பதில்  சந்­தேகம் இல்லை.

இலங்­கையை பொறுத்தமட்டில் கடந்த காலங்­களை விட தற்­போது புற்­று­நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் தொகை அதி­க­மா­கி­யுள்­ளது. இதில் ஆண்­க­ளுக்கு பொது­வாக வாய்­குழி,தொண்டை,வாத­னாளி, நுரை­யீரல் போன்­ற­வற்றில் புற்­றுநோய் ஏற்­ப­டு­கின்­றது இதற்­கு­ பு­கை­யிலை, புகைப்­பி­டித்தல், மது, பாக்­கு­வ­கை­கள்­ ஆ­கி­ய­வற்றின் பாவனை கார­ணங்­க­ளாக அமை­கின்­றன.

பெண்கள் மார்­பக புற்­றுநோய்,கருப்பை கழுத்து புற்­று­நோ­யினால் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.  இதற்­கான பிர­தான கார­ண­மாக உடல் எடை அதி­க­ரிப்பு, பாலியல் தொற்­றுக்கள் என்­பன  உள்­ளன.  

புற்­று­நோயை இழி­வ­ள­வாக்­கு­வ­தற்கு நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு வேளைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. கராப்­பிட்­டிய, குரு­ணாகல், இரத்­தி­ன­புரி, கண்டி ஆகிய பிர­தே­சங்­களில் புற்­றுநோய் சத்­திர சிகிச்­சைக்­கான விசேட ஏற்­பா­டுகள் மேற்­கொள்ளப்­ப­ட­வுள்­ளன.  

புற்­று­நோயை  கட்­டுப்­ப­டுத்த மது­சாரம்,புகை­யிலை,பாக்கு வகை போன்­ற­வற்றில் அர­சாங்கம் தடை­களை வலுப்­ப­டுத்த வேண்டும்.   இரசாயன பாவனைகளை உணவு உற்பத்தியில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் அதிக உரைப்பான, சூடான உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.   இரசாயனம் கலந்த உணவுப் பாவனையை தவிர்ப்பதனாலும் புற்றுநோயை  இழிவளவாக்க முடியும்  என்றார்.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.