Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியா?

Featured Replies

அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியா?

 

நாட்டில்  இடம்­பெற்ற யுத்த குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பில்  சர்­வ­தேச  விசா­ர­ணை­யொன்று தேவை­யென்ற அழுத்தம்  வலி­மைப்­பட்டு  வரு­கின்ற நிலையில் முன்னாள் போரா­ளிகள் இன்­னும்­  செ­யற்­ப­டு­கி­றார்கள். வெளி­நாட்­ட­ளவில் இயங்கிக்  கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­றெல்லாம் கூறு­வது போக்கை திசை­த் தி­ருப்பும் ஒரு ராஜ­தந்­திர உபா­ய­மா­கவே கரு­தப்­பட வேண்டும்.

 

கடந்த அர­சாங்­கத்தால் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்கும் 12 ஆயிரம் முன்னாள் புலி­களைக் கைது செய்­யுங்கள். இவர்கள் சர்­வ­தேச அமைப்­பு­க­ளு­டனும் ஏனைய புரட்­சி­கர செயற்­பாட்­டா­ளர்­க­ளு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள் என கடு­மை­யான இன­வாதக் குரலை எழுப்பி வரு­கிறார் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க.

சம்­பிக்க ரண­வக்­கவின் இக் கருத்­தா­னது இரண்டு விட­யங்­களைக் குடை­பி­டித்துக் காட்­டு­வ­தாக அமை­கி­றது. ஒன்று விடு­தலைப் புலி­கள் அ­மைப்பு உள்­நாட்­ட­ளவில் மீள் எழுச்சி பெற்று வரு­கின்­றது, அதை முளை­யி­லேயே கிள்ளி விட வேண்­டு­மென்ற முன்­னெச்­ச­ரிக்­கை­யா­கவும் மற்­றொன்று சர்­வ­தேச விடு­தலை அமைப்­பு­க்க­ளு­டனோ அல்­லது பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளு­டனோ தொடர்பு கொண்டு மீண்டும் நாட்டில் ஒரு ஆயுதப் போரை உரு­வாக்க முயற்சி செய்து வரு­கின்­றார்கள் என்ற மறை பொருளில் புலி­களைக் கைது செய்­யும் ­படி அர­சாங்­கத்­துக்கு அழுத்­த­மான கோரிக்­கை­யொன்றை பகி­ரங்­க­மாக விடுத்­துள்ளார்.

இக் ­கோ­ரிக்­கையை அர­சாங்கம் உண்­மை­யென ஏற்­றுக் ­கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­றதோ என்­னவோ, அண்­மைக்­கா­ல­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ விடு­தலைப்புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெற்று வரு­கின்­றது. நாடு கவ­ன­மாக இருக்க வேண்­டு­மென்று அடிக்­கடி அர­சாங்­கத்தை எச்­ச­ரித்து வரு­வது போலவே அமைச்சர் சம்பிக்க ரண­வக்­கவின் கருத்தும் வக்­கி­ரமும் இன­வா­தமும் கலந்த கருத்­தாக காணப்­ப­டு­கி­றது.

அண்மைக் கால­மாக மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வாக இருக்கும் எதி­ர­ணி­யினர் குட்­டையைக் குழப்­பு­வ­தற்­காக இவ்­வா­றான ஆதா­ர­மற்ற கருத்­து­க்களைக் கூறி வரு­வதை கேட்டுக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இறுதி யுத்­தத்­தின் ­போது இரா­ணு­வத்­தினால் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சரண் அடைந்­த­வர்கள் என்ற தொகு­திக்குள் விடு தலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் சர்­வ­தேச அழுத்தம், இந்­திய அர­சாங்­கத்தின் ஆலோ­சனை, ஐக்­கிய நாடுகள் சபையின் வேண்­டு­தல்­க­ளுக்கு அமைய புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டார்கள்.

விடு­தலை செய்­யப்­பட்ட முன்னாள் போரா­ளி­களில் ஆண்கள், பெண்கள், ஊன­முற்றோர், பொது மக்கள், ஆயு­தங்­க­ளுடன் நேர­டி­யாக பங்­கெ­டுத்துக் கொண்­ட­வர்கள், அதா­வது ஆயுதப் பயிற்சி பெற்­ற­வர்கள், அர­சியல் மற்றும் அபி­வி­ருத்தி மருத்­து­வத்­ துறை சார்ந்­த­வர்கள் என பல­துறைப் பிரி­வு­களைச் சேர்ந்­த­வர்கள், விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்­களில் 90 வீத­மா­ன­வர்கள் வாழ்­வா­தார வழி­களைத் தேட முடி­யா­மலும் பெற முடி­யா­மலும் அல்­லல்­படும் கணி­ச­மான தொகை­யினர், வட கிழக்கு கிரா­மங்­களில் நிறை­யவே காணப்­ப­டு­கி­றார்கள். அர­சாங்கம் இவர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்கும் செயல் முறையை செய்­தார்­களே தவிர வாழ்­வி­யலை, வாழ்­வா­தா­ரத்தை ஒழுங்­கு­ப­டுத்தும் எந்த உத­வி­க­ளையும் செய்­ய­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு இவர்­களால் தொடர்ந்தும் அர­சாங்­கத்தின் மீது முன்­வைக்­கப்­பட்­டு­ வ­ரு­வதை தினந்­தோறும் கேட்டு வரு­கின்றோம். இன்னும் சொல்லப் போனால் வாழ்­வா­தா­ரத்­துக்கு வழி­காண முடி­யாமல் தற்­கொலை முயற்­சி­க­ளுக்கு முயலும் முன்னாள் போரா­ளி­க­ளையும் காண ­மு­டியும்.

சமூ­க­வியல் பார்வை கொண்டு பார்ப்பின் உள­வியல் தாக்­கங்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்கும் பெண் போரா­ளிகள், மணம் முடிக்க முடி­யா­மலும், சமூ­கத்தால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டா­த­வர்­க­ளா­கவும் காணப்­படும் கவ­லை­யான நிலை கொண்­ட­வர்­க­ளாக ஒரு­புறம் காணப்­ப­டு­கின்­ற­ போது இன்­னு­மொ­ரு­ புறம் இன்னும் இன்னும் இவர்­களைச் சந்­தே­கக்­கண் ­கொண்டு பார்த்து புல­னாய்வுப் பிரி­வி­னரின் தேடுதல் நட­வ­டிக்­கை­களும் விசா­ர­ணைப்­ப­ட­லமும் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­வது நாளாந்தம் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற விடயம்.

இவ்­வாறு பல திசை­க­ளிலும் துன்­பங்­களை அனு­ப­வித்து சமூ­கத்தின் பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகங்­கொ­டுக்க முடி­யாமல் தவிர்த்துக் கொண்­டி­ருக்­கின்ற முன்னாள் போரா­ளி­களை செத்­த­ பாம்பை அடிப்­பது போல் அவர்­களைக் கைது செய்­யுங்கள் என மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் பேசி­ வரும் அமைச்­சர்­க­ளாலும் இன­வா­தி­க­ளாலும் இந்­நாட்டில் சமா­தா­னமும் நல்­லி­ணக்­கமும் வந்­து­ வி­டு­மென்று எதிர்­பார்ப்­பது எந்­த­ளவு பைத்­தி­யத்­த­ன­மான எதிர்­பார்ப்பு என்­பது சொல்­லா­மலே விளங்கக் கூடிய விட­ய­மாகும்.

12 ஆயிரம் முன்னாள் போரா­ளிகள் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­ற­ போதும் கணி­ச­மான அள­வினர் ஊனம் கொண்­ட­வர்­க­ளா­கவும் நோய்­வாய்ப்­பட்­ட­வர்­க­ளா­க­வுமே காணப்­ப­டு­வதே யதார்த்தம். இவர்­க­ளுக்­கென விசேட வாழ்­வாதாரத் திட்­டங்­க­ளையோ குடி­யி­ருப்­பு­க­ளையோ செய்து கொடுப்­பதில் அரசு அதிக அக்­கறை காட்­ட­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யா­கவே நிரூ­பிக்­கப்­ப­டு­கின்ற உண்மை. சில கிரா­மங்­களில் வாழும் இந்த ஊன­முற்ற போரா­ளி­க­ளுக்கு சமுர்த்தி வழங்­கு­வதில் கூட பார­பட்சம், காட்­டப்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

அமைச்சர் குறிப்­பிட்ட முன்னாள் போரா­ளி­களில் இன்­னொரு வகை­யா­ன­வர்கள் சர­ண­டைந்த போரா­ளிகள். இவர்கள் பற்­றிய தெளி­வான ஆதா­ர­மான எந்தத் தக­வல்­க­ளையும் பெற முடி­ய­வில்­லை­யென்­பது உல­க­ளா­விய ரீதியில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட விவ­கா­ர­மாகும். இவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்டோர் பட்­டி­யலில் இடம்­பெ­று­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றார்கள்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் மிக நீண்ட கால­மா­கவே பல்­வேறு போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவர்கள் தொடர்­பாக கருத்துத் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இவர்கள் பற்றி எந்தத் தக­வ­லு­மில்­லை­யென்றும் எங்கு போய் நாம் தேடு­வது என இன்­னொரு அமைச்­சரும் கூறி­யி­ருப்­பது கேலித்­த­ன­மான வாச­கங்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­ன்றன.

இவ்­வாறு சூழ்­கொண்ட நிலையில் காணப்­ப­டு­கின்ற எத்­த­னையோ வகை­யான பிரச்­சி­னைகள் நாட்டில் பற்­றி­யெ­ரிந்து கொண்­டி­ருக்­கும் ­போது, முன்னாள் போரா­ளி­களை மீண்டும் கைது செய்து சிறையில் அடை­யுங்கள் எனப் பொறுப்­பற்ற முறையில் ஒரு அமைச்சர் கூறு­வது நாட்டின் நல்­லாட்­சிக்­கான நேரான குறி காட்­டி­யாகத் தெரி­ய­வில்­லை­யென்­பதே உண்­மை­யாக உண­ரப்­பட வேண்­டிய விடயம்.

அமைச்­சரின் இன்­னொரு கூற்று நெறிப்­ப­டுத்தும் விவ­கா­ர­மென்­ன­வெனில் சர்­வ­தேச அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வரும் புலி­களின் உறுப்­பி­னர்­களை அந்­தந்த நாட்டில் கைது செய்து சட்­டப்­படி இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க விடுத்­துள்ளார்.

முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் அவர்கள் தமது ஆட்­சிக் ­கா­லத்தில் ஒரு கருத்தைக் கூறி­யி­ருந்தார். விடு­தலைப் புலி­களை யுத்த வடிவில் நாம் வெற்றி கொண்­டாலும் சர்­வ­தேச அளவில் இயங்­கி­வரும் விடு­தலைப் புலி­களின் வலை­ய­மைப்பை இன்னும் எங்­களால் உடைக்க முடி­யாமல் இருக்­கின்­றது என்ற கருத்தை கூறி­யி­ருந்தார். அன்­றைய கருத்தை மறு பதி­வீடு செய்யும் வகை­யி­லேயே அமைச்­சரின் இப்­போ­தைய கருத்து காணப்­ப­டு­கி­றது.

ஒரு இனத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய அமைப்­பொன்றை பயங்­க­ர­வாத அமைப்­பென்று முத்­திரை குத்தி அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா இந்­தியா என்ற நாடு­க­ளி­லெல்லாம் தடை செய்­யப் ­பண்ணி போதா­தற்கு இறுதிப் போருக்கு அந் ­நா­டு­களில் எல்­லா­ வ­கை­யான உத­வி­க­ளையும் பெற்று பயங்­க­ர­வா­தத்தை அடி­யோடு இல்­லாது ஒழித்­து­ விட்டோம். உல­கி­லுள்ள எந்த நாட்­டாலும் முடி­யாத ஒரு காரி­யத்தைச் செய்து முடித்­தி­ருக்­கி­றோ­மென மார்­தட்டும் இலங்கை அர­சாங்­கமும் அதனைச் சார்ந்­த­வர்­களும் இன்னும் விடு­தலைப் புலிகள் அமைப்பு ரீதி­யாக செயற்­பட்டு வரு­கின்­றார்கள் என கண்­மூ­டித்­த­ன­மான. பொய்­களைக் கூறி நாட்டில் தேடப்­பட வேண்­டிய அர­சியல் தீர்வை குழப்­பு­வ­தற்­கா­கவும் இன்­னொரு திசை­நோக்கி திருப்­பு­வ­தற்­கா­கவும் எடுக்­கப்­பட்டு வரும் தந்­தி­ரோ­பாயம் என பார்க்­கப்­பட வேண்டும். அத்­துடன் நாட்டில் இடம்­பெற்ற யுத்த குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று தேவை­யென்ற அழுத்தம் வலி­மைப்­பட்டு வரு­கின்ற நிலையில் முன்னாள் போரா­ளிகள் இன்­னும்­ செ­யற்­ப­டு­கி­றார்கள். வெளி­நாட்­ட­ளவில் இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­றெல்லாம் கூறு­வது போக்கை திசை­த் தி­ருப்பும் ஒரு ராஜ­தந்­திர உபா­ய­மா­கவே கரு­தப்­பட வேண்டும்.

ஏலவே ஐரோப்­பிய நாடுகள் உட்­பட பல்­வேறு நாடு­களில் வாழும் புலம்­பெயர் தமி­ழர்­களைப் பட்­டியல்படுத்தி தடை­செய்­த­துடன் வெளி­நாட்டில் உள்ள சமூக நலன் சார் அமைப்­பு­க்களை பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் என பட்­டியல் இட்டு தடை செய்த நிலை­மைகள் எல்லாம் புலம்­பெயர் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு விலங்கு மாட்டத் துடிக்கும் கைங்­க­ரி­ய­மா­கவே இருந்­தது.

இவற்றின் உள்­நோக்­க­மாக இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­ காணும் தீவிர செயற்­பாட்டில் இவர்கள் இயங்கக் கூடாது, ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச அபிப்­பி­ரா­யத்தை புலம்­பெயர் தமி­ழர்­களும் அங்கு இயங்­கி­ வரும் அமைப்­பு­க்களும் உரு­வாக்கி வரு­கின்­றார்கள். இதை இல்­லாது ஆக்கும் முயற்­சி­யா­கவே முன்­னைய அர­சாங்கம், புலம்­பெயர் அமைப்­பு­க்களை திட்­ட­மிட்ட முறையில் தடை செய்­தமை ராஜ­தந்­திர ரீதி­யான ஒரு உச்ச செயற்­பாடு என்­பதை யாரும் மறுத்து விட முடி­யாது.

பாரா­ளு­மன்றில் இருப்­ப­வர்­களில் குறிப்­பாக தமிழர் தரப்பு பிர­நி­தி­களில் பெரும்­பா­லானோர் இன்று ஜன­நா­யக ரீதியில் செயற்­பட்­டாலும் ஆரம்­பத்தில் இவர்கள் புலி­களின் கூட்­ட­ணியில் இருந்­துள்­ளனர். பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் தமி­ழர்கள் ஆயுதம் ஏந்தி அன்று எமக்கு எதி­ராகப் போரா­டி­ய­வர்கள் என விஷ­மத்­த­ன­மான இன­வா­தத்தைக் கக்­கி­யுள்ளார் அமைச்சர்.

இவரின் கூற்­றா­னது ஆரோக்­கி­ய­மான போக்கை சிதைத்து விடும் இன­வாத கூற்­றா­கவே இருக்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக தமி­ழர்கள் அர­சியல் தீர்­வுக்­காக காத்­தி­ருக்கும் இன்­றைய சம­நிலைப் போக்கை உடைத்­தெ­றிந்து அதில் குளிர்­காய நினைக்கும் போக்கும் எண்­ணமும் கொண்­ட­வர்கள் தேசிய அர­சாங்­கத்தில் ஒட்­டி­யி­ருக்கும் நிலை காணப்­ப­டும்­வரை நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கோ அல்­லது தேசியப் பிரச்­சி­னைக்கோ தீர்வு காணும் முன்­னெ­டுப்­பு­க்களை குழப்­பாமல் இருக்க வேண்­டிய ஒரு கால கட்­டத்தில் இருந்து கொண்­டி­ருக்­கி­றோ­மென்­பதே யதார்த்தம்.

இந்­திய இரா­ணுவம், வட – கிழக்கில் நிலை கொண்­டி­ருந்த காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாஸ, அந்­நியப் படை­களை நாட்டை விட்டு வெளி­யேற்ற வேண்­டு­மென்­ப­தற்­காக ஆயு­த­மேந்­திய விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆயுதம் வழங்­கினார், உடன்­பாடு கண்டார் என்ற நிலையும் அதன் பின் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் புலிகள் சில கோரிக்­கை­களை முன்­வைத்து உடன்­பாடு கண்­ட­தையும் பின் உடைத்துப் போன­மையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சமா­தான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டமை, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி பத­வியை அடைந்து விட வேண்­டு­மென்­ப­தற்­காக புலி­க­ளுக்கு பணம் கொடுத்தார். இர­க­சிய உடன்­பாட்­டுக்கு வந்தார் என்று கூறப்­படும் விவ­கா­ர­மெல்லாம் உண்­மை­யாக இருப்பின் ஆயு­த­மேந்­தி­ய­வர்­க­ளுடன் செய்து கொண்ட இந்த ஒப்­பந்­தங்கள் உடன்­பா­டுகள் எதை நோக்கி நடந்­தது என்­பது பற்றி இவ்­வகை அர­சி­யல்­வா­திகள் ஏன் சிந்­திக்கத் தவ­று­கி­றார்கள் என்­ பது புரி­யாத விட­ய­மா­கவே காணப்­ப­டு­கி­றது.

இன்று பாரா­ளு­மன்றில் இருக்கும் தமி­ழர்­களின் வழி­காட்­ட­லினால் இவை நடந்து கொண்­டது என்­பது கேட்­கப்­பட வேண்­டிய கேள்­வி­யாக உள்­ளது.முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உட்­பட தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான சக்­திகள், புலிகள் மீள் உரு­வாக்கம் பெறு­கின்­றார்கள் என்ற கட்­டுக்­க­தை­களை உரு­வாக்கி அதில் அர­சியல் லாபம்­ தேட முனை­ப­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­ கின்றார். புலி­களின் மீள் உரு­வாக்கம் என்ற செய்தி விஷ­மத்­த­ன­மாகப் பரப்பி இன்­றைய அர­சியல் தீர்வு நகர்­வு­க­ளையும் சர்­வ­தேச ரீதி­யாக ஏற்­ப­டக்­ கூ­டிய நெருக்­க­டி­க­ளையும் திசை திருப்பும் முயற்­சியில் மஹிந்த அணி­யினர் மாத்­தி­ர­மின்றி நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் ஒட்டிக் கொண்­டி­ருக்கும் சில அமைச்­சர்­களும் அர­சி­யல்­வா­தி­களுங் கூட இன்­றைய முன்­னெ­டுப்­பு­களை ஜீர­ணிக்க முடி­யா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

இன்னும் ஆழ­மாகப் பார்க்கப் போனால் சந்­தி­ரிகா அம்­மை­யாரின் அர சில் பிர­தான நாடி­க­ளாக இருந்து தீர்வுப் பொதி­களை இல்லாது ஒழித்தவர்கள் அதன் பின் மஹிந்த ராஜபக் ஷ காலத் தில் அவரை போகாத ஊருக்கு வழி காட்டியவர்கள் இன்று மைத்திரிபால அரசாங்கத்தில் ஒட்டாளர்களாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் தீவிரமான முயற்சிகளுக்கு குந்தகம் விளைவித்து குழப்பம் செயற்பாட்டில் மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதை மிக எளிதாகவே அறிந்து கொள்ளக் கூடி யதாகவுள்ளது.

இக் கைங்கரியத்தின் இன்னொரு படலந்தான் புலிகள் மீள் எழுச்சி பெற்று வருகின்றார்கள், சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து செயற் பட்டு வருகின்றார்கள் என்ற பழைய புராணமாகும். இராணுவம் விதி முறைகளை மீறியிருந்தால் அத்தகைய நியதி மீறல்களை விசாரணை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதவொன்று அதேபோல் மக்களைப் பணயம் வைத்து படுகொலைக்கு ஆளாக்கிய விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கருத்தும் ஒரு சில சிங்கள அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்படுகிறது. இதன் கருத்து யாதெனில் விடுதலைப் புலிகளை யுத்த தளத்தில் நாம் அழித்துவிட்டாலும் மன் னிப்பு வழங்கப்பட்ட 12 ஆயி ரம் புலிகளுக்கும் அதேபோன்று புலம் பெயர் அமைப்புக்கள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அனைவரும் தண் டிக்கப்பட வேண்டுமென்ற வக்கிரபுத்தி யுடன் இக் கருத்துக்களை தூவி வருவது நாட்டின் நல்லாட்சிக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான அரசியல் தீர்வை இல்லாது ஒழித்து விட எத்தனிக்கும் ஒரு நாசகாரச் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-04#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.