Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலிமுகத்திடலில்...

Featured Replies

காலிமுகத்திடலில்...
 

article_1486202144-2.jpg

இலங்கையில் 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று (04) காலை இடம்பெற்றது.

'தேசிய ஒற்றுமை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

article_1486202162-16.jpgarticle_1486202172-8.jpgarticle_1486202182-28.jpgarticle_1486202194-31.jpgarticle_1486202209-_DSC0383.jpgarticle_1486202218-_DSC0507.jpgarticle_1486202225-_DSC0515.jpgarticle_1486202234-_DSC0539.jpgarticle_1486202245-_DSC0592.jpgarticle_1486202255-_DSC0639.jpgarticle_1486202263-_DSC0655.jpgarticle_1486202283-_DSC0688.jpgarticle_1486202291-_DSC0755.jpgarticle_1486202302-_DSC0792.jpg

(படப்பிடிப்பும் பட உதவியும்: வருண வன்னியாராச்சி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

- See more at: http://www.tamilmirror.lk/190973/க-ல-ம-கத-த-டல-ல-#sthash.KypoVK1y.dpuf
  • தொடங்கியவர்

நல்லிணக்கம் மற்றும் மத சகவாழ்வு என்பன அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக வளர்ச்சிக்கு வித்திடுகிறது

Published by Pradhap on 2017-02-04 15:02:49

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக வளர்ச்சி என்பன நல்லிணக்கம் மற்றும் மத சகவாழ்வில் தங்கியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

fafaf2.jpg

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு - காலி முகத்திடலில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடும் சுதந்திரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

அதுமாத்திரமின்றி அரசாங்கம் தற்போது பொருளாதார சுதந்திரத்துக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது.

இதனால் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தாம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளின் போதும் கடமைகளை உண்மையாக நிறைவேற்ற வேண்டும்.  ஊழல் மோசடி இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். 

நாட்டின் தேசிய ஒற்றுமைக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் சர்வதேச மட்டத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களை  நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகவே கருதமுடியும் என்றார்.

http://www.virakesari.lk/article/16226

  • தொடங்கியவர்

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது

sri-1.jpg

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது.  7,782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின பேரணி இடம்பெற்றுள்ளது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி  சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இன்று பொருளாதார சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் ஒன்றிணைவோம் என தெரிவித்தார்.

5.jpg

‘தேசிய ஐக்கியம்’ எனும் தொனிப்பொருளில் அபிமானம் மிக்க வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

21ஆம் நூற்றாண்டில் நாட்;டில் பூரணமான ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாம் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும். இதன்போது இளைஞர்களுக்கே அரசாங்கம் முதலிடம் கொடுப்பதுடன் அறிவை மையப்படுத்திய கல்வி முறை, மற்றும் பொருளாதாரம் என்பவற்றுடன் புதிய உற்பத்தி பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் செயல்முறையின் உரிமையாளர்களும் பொறுப்பாளர்களும் எமது இளைஞர் சமூகமே எனத் தெரிவித்தார்.

21வது நூற்றாண்டிற்கு பொருத்தமான நவீன அரசாங்கம் என்ற வகையில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் போன்றே சமூக அபிவிருத்தியும் எமது உன்னதமான தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு மிக அவசியமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அந்த விடயங்களை அடைவதற்கு நாட்டில் இன நல்லிணக்கமும் சமயம் சார்ந்த நல்வாழ்வும் வலுவடைதல் அவசியம் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் இன நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் பாரிய அர்ப்பணிப்புடனும், தீர்மானத்துடனும் செயற்படுத்தப்படும் திட்டங்கள் இன்று தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பாராட்டு பெற்றுள்ளன. எனினும் அவற்றிற்கு எதிராக செயற்படும் சில சந்தர்ப்பவாத சக்திகளும் உள்ளன. குறுகிய எண்ணங்களோடு செயற்படும் அந்த சந்தர்ப்பவாத சக்திகளை தாய் நாட்டிற்கு எதிரான சக்திகளாகவே தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பி சுபீட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்துகையில் சகல அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மோசடி, ஊழல், வீண்விரயம் மற்றும் களவுகள் என்பவற்றை இல்லாதொழித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுதல் அவசியமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், புதிய உற்பத்திகள், உற்பத்திச் செயலணியின் வினைத்திறன், விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களினதும் வலுவினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி அவர்கள் அதன்போது தெரிவித்தார்.

நிலையான வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற இலக்கை அடைவதன் மூலம் பொருளாதார சுதந்திரத்தை பெற முடியும் எனவும் அதற்காக  அர்ப்பணிப்புடன் வேலை  செய்ய சமூகத்தின் அனைத்து பிரிவினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
6.jpg
குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

(Pix By: Sudath Silva)

1.jpg2.jpg3.jpg4.jpg7.jpg8.jpg9.jpg10.jpg11.jpg12.jpg14.jpg15.jpg17.jpg18.jpg19.jpg20.jpg21.jpg22.jpg24.jpg25.jpg26.jpg29.jpg31.jpg

http://globaltamilnews.net/archives/16331

  • தொடங்கியவர்

பிர­தம நீதி­ய­ரசர், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா உட்­பட இரா­ஜ­தந்­தி­ரிகள் பலரும் பிர­சன்னம்

 

எதிர்க்­கட்சித் தலைவர் கலந்­து­கொள்­ள­வில்லை; சுமந்­திரன் சமுகம்
ஆர்.யசி

தேசிய ஒற்­றுமை மற்றும் ஐக்­கி­யத்தை பிர­தி­ப­லிக்கும் வகையில் இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் காலி முகத்­தி­டலில் இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, அமைச்­சர்கள், முப்­படை தள­ப­திகள், சர்­வ­தேச நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரிகள் உள்­ளிட்ட பெருந்­தி­ர­ளானோர் நிகழ்வில் கலந்­து­கொண்­டனர். மேலும் 8000 படை வீரர்கள் பங்­கு­பற்­ற­லுடன் இரா­ணுவ அணி­வ­குப்பு நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.

 கொழும்பு காலி முகத்­தி­டலில் இந் நிகழ்­வுகள் காலை 8.00 மணிக்கு சர்­வ­மத தலை­வர்­களின் பிரார்த்­த­னை­க­ளுடன் ஆரம்­ப­மா­கின. நிகழ் வில் ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சே­ன­வினால் இலங்­கையின் தேசி­யக்­கொடி ஏற்­றி­வைக்­கப்­பட்­டது. 

பிர­தி­நி­திகள்

ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற இந்த சுதந்­திர தின நிகழ்வில் ஜனா­தி­ப­தியின் பாரியார், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அவ­ரது பாரியார் ,பிர­தம நீதி­ய­ரசர் ஸ்ரீ பவன் மற்றும் அவ­ரது பாரியார்,சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய மற்றும் அவ­ரது பாரியார், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா மற்றும் அவ­ரது பாரியார், ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்கள் , பிர­தி­ய­மைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரிகள், வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் முப்­படை பிர­தா­னிகள், தள­ப­திகள், பொலிஸ் அதி­கா­ரிகள், அரச அதி­கா­ரிகள் பொது­மக்கள் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.

எதிர்க்­கட்சித் தலைவர்

பிர­சன்­ன­மா­க­வில்லை.

நேற்­றைய சுதந்­திர தின நிகழ்வில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை. அதே­வேளை யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.மேலும் நிகழ்­வு­களில் பொது எதி­ர­ணியின் எந்­த­வொரு உறுப்­பி­னரும் சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

இரு மொழி­க­ளிலும் தேசிய கீதம்.

நேற்று சுதந்­திர தின நிகழ்­வுகள் ஆரம்­பிக்கும் போது சிங்­கள மொழியில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. முடிவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. இதில் கொழும்பின் பிர­பல தமிழ், சிங்­கள, முஸ்லிம் பாட­சா­லை­களின் 100 மாண­வர்கள் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்­டனர்.

பாது­காப்பு அணி­வ­குப்பு

மேலும் சுதந்­திர தின நிகழ்வில் முப்­ப­டை­களின் சார்பில் 7888 வீரர்கள் கலந்­து­கொண்­டனர். இதில் இரா­ணு­வத்தை சேர்ந்த 4156 வீரர்கள் அடங்­குவர். அத்­துடன், இரா­ணுவ யுத்த வாக­னங்­களின் பவ­னியும் இடம்­பெற்­றது. அதே­போன்று கடற்­ப­டையை சேர்ந்த 916 வீரர்கள் பங்­கு­பற்­றினர். கடற்­படை போர்க்­கப்­பல்­களின் பவ­னியும் கடற்­படை அணி­வ­குப்பும் இடம்­பெற்­றது. மேலும் விமா­னப்­ப­டையை சேர்ந்த 1125 பேரின் பங்­கு­பற்­ற­லுடன் போர் விமான சாகச நிகழ்­வு­களும், விமா­னப்­படை அணி­வ­குப்பும் இடம்­பெற்­றது. மேலும் சிவில் பாது­காப்பு படையின் 664 வீரர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் அவர்­க­ளது அணி­வ­குப்பும், பொலிஸ் பிரிவின் 927 பேரின் பங்­கு­பற்­ற­லுடன் பொலிஸ் அணி­வ­குப்பும் இடம்­பெற்­றது. அத்­துடன் ஜனா­தி­ப­திக்கு மரி­யாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டன.

விசேட வீதி போக்­கு­வ­ரத்து

மேலும் , சுதந்­திர தின நிகழ்வை முன்­னிட்டு கொழும்பின் பிர­தான வீதிகள் சிலவும் மூடப்­பட்­டன. குறிப்­பாக சுதந்­திர தின நிகழ்­வுகள் நடை­பெற்ற காலி முகத்­திடல் வீதிகள் காலை 5 மணி­யி­லி­ருந்து மதியம் 12 மணி­வரை மூடப்­பட்­ட­துடன் , சைத்­திய வீதி காலை 7 மணி­முதல் நண்­பகல் 12 மணி­வரை மூடப்­பட்­டது. கொள்­ளுப்­பிட்டி சந்­தியில் இருந்து காலி முகத்­திடல் வரை­யி­லான வீதி, கொள்­ளுப்­பிட்டி புனித மைக்கல்ஸ் வீதி, செரமிக் சாந்தி, லோட்டஸ் வீதி, கொம்­ப­னி­தெரு , யோர்க் வீதி உள்­ளிட்ட வீதிகள் காலை 8 மணி­முதல் மதியம் 12 மணி­வரை மூடப்பட்டன.

தூதரகங்களில் நிகழ்வுகள்.

அத்துடன் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், பிரேஸில் உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் இராஜதந்திரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் இலங்கை கடற்படையினரால் தேசத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு நிகழ்வுகள் நண்பகல் 12 மணியளவில் நிறைவடைந்தன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.