Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்தது ஏன்?அமைச்சர் ஐங்கரநேசன் விளக்கம்

Featured Replies

நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்தது ஏன்?அமைச்சர் ஐங்கரநேசன் விளக்கம்
 
 
நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்தது ஏன்?அமைச்சர் ஐங்கரநேசன் விளக்கம்
நிலையான அபிவிருத்திச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் வடக்கு மாகாண சபையின் வேலைகளை மத்திய அரசாங்கம் தங்கள் வசப்படுத்தவே என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவிதுள்ளார்.
 
இன்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெற்ற யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம  விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் 
 
எமது அமைச்சுக்கு வரும் முறைப்பாடுகளில் அதிகமானவை கூட்டுறவு சம்பந்தமான முறைப்பாடுகளே ஆகும்.கூட்டுறவு அமைச்சு சரியாக இயங்கவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள் அதனை நான் ஒத்துக்கொள்கின்றேன் . அதற்கான காரணமாக நான் அறிவது கூட்டுறவு திணைக்கள ஊழியர்கள் உங்களை கண்காணிக்கிறார்களே தவிர உங்களுடன் இணைந்து ஒன்றாக செயற்பட வில்லை.அவர்கள் உங்களுடன் இணைந்து செயற்படுவார்களேயானால் கூட்டுறவு சார்ந்த முறைப்பாடுகள் எனது அமை ச்சுக்கு  வருவது குறைவாக இருக்கும்.
 
வடக்கு மாகாண சபை எதையுமே ஆதரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு மிகையாகவே உள்ளது.ஆனால் ஒன்றை மட்டும் விள ங்கிக் கொள்ளுங்கள் மக்களுக்கான அபிவிருத்தியை நாம் நிராகரிக்கவில்லை.எமது மக்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்க ளையே நாம் நாம் நிராகரித்து வருகின்றோம்.நிலையான அபிவிருத்திச் சட்டம் மிக விரைவாக பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்படவுள்ளது.அதனை வடக்கு மாகாண சபை நிராகரித்துவிட்டது.ஆனால் ஏன் அதனை நிராகரித்தோம் என்று தெரி யாமல் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
எமது நாட்டினை 3 அபிவிருத்தி பிரிவாக பிரிக்க உள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணம்,தெற்கு மேற்கு மாகாணம்,மத்திய மலை நாட்டுப் பிரதேசம் போன்ற 3 அபிவிருத்தி பிரதேச வலயங்களாக பிரித்து அபிவிருத்தி செய்யபடப்போகின்றது.அதாவது அபிவி ருத்தி அடைந்து வரும் நாடு என்பதனை நீக்கி அபிவிருத்தி அடைந்த நாடக மாற்ற வேண்டுமென அரசாங்கம் செயற்படு கின்றது.மிகவும் வரவேற்க தக்க விடயம்.ஆனால் இந்த அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த நிலையான அபிவிருத்தி குழு ஒன்றினை அமைக்கவுள்ளது.
 
இதற்காக 9 மாகாணங்களிலும் இருந்து ஒவ்வொரு பிரதிநிதி முதலமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள் அவர்களில் 3 பேர் மாத்திரமே அந்த நிலையான அபிவிருத்தி குழுவினால் தெரிவு செய்யப்படுவார்கள் ஒரு சுழற்சி முறை யில்.அந்த சுழற்சி முறையில் எத்தனையாவது வருடம் எமது பிரதி நிதிகள் உள்வாங்கப் படுவார்களோ தெரிய வில்லை.அவர்கள் உள்வாங்க படும் வரைக்கும் எமது மாகாணமும் அவர்களின் கையிலே நிலையான அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இருக்க போகின்றது என்பதனால் மாத்திரமே நாம் நிலையான அபிவிருத்திச் சட்டத்தினை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை நிரா கரித்தோம் என அவர் தனது உரையில்  தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/23533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.