Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ஒரு முட்டாள் என்று கூறிய ஜே.ஆர் ஜயவர்தன : புதிய தகவல்களை கசிய விட்டது அமெரிக்கா

Featured Replies

பிரபாகரன் ஒரு முட்டாள் என்று கூறிய ஜே.ஆர் ஜயவர்தன : புதிய தகவல்களை கசிய விட்டது அமெரிக்கா

 

 

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அக்காலத்தில் முன்னெடுத்த பல நடவடிக்கைகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் அமெரிக்காவினால் கசிய விடப்பட்டுள்ளது.J.R.-Jayewardene-rajiv-gandhi-usa-prabha

இது குறித்த ஆவணங்கள் அமெரிக்க இராஜதந்திரியான பீட்டர் கல்பிரைத் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து மீட்பதற்கு இரண்டு தடவைகள் இலங்கை இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரமே இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க இராஜாதந்திரியான பீட்டர் கல்பிரைத்திடம், யாழ்ப்பாணத்தை மீட்குமாறு தமது படையினரிடம் இரண்டு தடவைகள் கூறியதாக ஜயவர்தன கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 1,200 இந்திய படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

 

1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் உடன்படிக்கை செய்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டும் காணப்படுகின்றது.

 

ஜே.ஆர். ஜயவர்தன – ராஜீவ் காந்தி ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை பகிர்வதாகவும் தமிழை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதாகவும் வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்திய படையினர் இலங்கைக்கு அனுப்பட்டிருந்தனர்.

 

1988 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் விட்டுக்கொடுப்பற்ற போக்கு குறித்து விமர்சித்த ஜே.ஆர்.ஜயவர்தன, பிரபாகரன் ஒரு முட்டாள் எனவும் கூறியதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ இன் ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஜே.ஆர் ஜயவர்தனவிற்கு வேறு உதவிகள் கிடைக்காத நிலையில், அவர் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த ஜே.ஆர்.ஜயவர்தன தீர்மானித்ததாக சி.ஐ.ஏ இன் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல்களை நடத்துவதாக அமெரிக்க இராஜதந்திரியிடம் ஜே.ஆர் ஜயவர்தன கூறியுள்ளார்.

 

இதன்பிரகாரம் 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தேர்தல்கள் நடைபெற்றிருந்தன.

 

இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்பட்டதாகவும் அமெரிக்க இராஜதந்திர கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.