Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன பிழை நடந்தாலும் அது எங்கள் தலையில்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
என்ன பிழை நடந்தாலும் அது எங்கள் தலையில்தான்
 
13419.jpg
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்ந்த நிலத்தை வழங்க மறுப்பதால் இப்போராட்டம் தொடர்வதில் மிகுந்த நியாயப்பாடு உண்டு.
 
யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுகிறது என்றால், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வது கட்டாயமானதாகும்.
 
இருந்தும் கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியாமல் மிகுந்த கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த மக்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ் விடத்தில் அந்த மக்களின் நியாயபூர்வமான போராட்டத்துக்கு தார்மீகப் பங்களிப்பை வழங்குவது மனிதநேயம் கொண்ட அனைவரதும் கடமை என்பதுடன் சொந்த நிலத்தில் குடியமர விரும்புகின்ற மக்களை அந்த இடத்தில் குடிய மர விடுவதே அரசாங்கத்தின் கடமையுமாகும்.
 
எனினும் இதுவரை அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மனத்திடம் கொண்ட கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் மண்ணை மீட்பதென திடசங்கற்பம் கொண்டு அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு சகல வழிகளிலும் ஆதரவு கிடைத்து வருகிறது.
 
நிலைமை இதுவாக இருக்கையில், கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணிலுடன் கதைத்திருந்தால் அதற்குத் தீர்வு கிடைத்திருக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
 
அவரின் கூற்றுப்படி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தவறான வழி என்பது போலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இது பற்றிக் கதைத்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்குமென்பது போலவும் அமைந்துள்ளது.
 
அவரின் கருத்தைப் பார்க்கும் போது அது தொடர்பில் சில ஐயவினாக்கள் எழவே செய்கின்றன.
அதாவது கேப்பாப்பிலவு மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு பல வருடங்களாகி விட்டன.
 
இது தொடர்பில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பிரதமர் ரணிலிடம் எடுத்து ரைக்கவில்லையா? பிரதமருடன் கதைத்திருந்தால் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்குமென்றால் இதுபற்றி பிரதமருடன் கதைக்க வேண்டிய பொறுப்பு கேப்பாப்பிலவு மக்களுடையதா? தமிழ் மக்களின் பிரதி நிதிகளினுடையதா? கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற தகவல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்குத் தெரியாதா? என்ற கேள்விகள் எழும்.
 
எது எவ்வாறாயினும் இனிமேல் தமிழ் மக்கள் எந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தமிழர் தலைகளில் தமிழ் அரசியல் தலைமையால் கொட்டப்படும் என்பது நிறுதிட்டமான உண்மை. 
 
இதில் ஒன்று கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் மீதான குற்றச்சாட்டு, அடுத்தது எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான குற்றச்சாட்டாக இருக்கும்.
 
ஆம், நாங்கள் கேட்பதையயல்லாம் தருவதாக நல்லாட்சியினர் இருந்தனர். எனினும் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியால் அது கெட்டுப் போய்விட்டது என்று தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை குற்றம் சாட்டும். இதை நம்பு வதற்கும் நம்மில் பலர் இருக்கவே செய்வர்.
 
என்ன செய்வது எதிரி வெளியில் என்றால் எதிர்கொள்வது சுலபம். ஆனால் தமிழர்களுக்கு எதிரி உள்வீட்டுக்குள் இருப்பதால் அழிவைச்  சந்திப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை எனலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.