Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி!

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் புனேவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்களில் சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா வெற்றி பெற 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக புஜாரா 31 ரன்கள் எடுத்தார்.

25048_15387.jpg

இதன்மூலம் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை மிரட்டிய, ஸ்டீவ் ஒகேஃப் இரண்டாவது இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

இரு அணி அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மார்ச் 4ம் தேதி துவங்குகிறது. 

  • Replies 136
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு அனில் என்ன சொல்லப்போகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மா சிறை சென்ற சோகத்தில் இந்தியஅணி சரியாக விளையாடவில்லை - சரஸ்வதி

 

  • தொடங்கியவர்

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

 
  • புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பெருமையுடன் ஆஸி. | படம்.| ராய்டர்ஸ்.
    புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பெருமையுடன் ஆஸி. | படம்.| ராய்டர்ஸ்.
  • ஓகீஃப் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆன விராட் கோலி. | படம். | ராய்டர்ஸ்.
    ஓகீஃப் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆன விராட் கோலி. | படம். | ராய்டர்ஸ்.
 

புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

குழிபிட்ச் போடுதலின் ‘பயனை’ இந்தியா அடைந்தது! புனே டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸிலும் 107 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது.

முதல் இன்னிங்சில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்களில் இந்தியாவை 7 விக்கெட்டுகளை இழக்கச் செய்த இடது கை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஓகீஃப் 2-வது இன்னிங்ஸிலும் அதே 35 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் 28.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேதன் லயன் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 441 ரன்கள் இமாலய இலக்கை எதிர்த்து சற்று முன் 34 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 107 ரன்களுக்குச் சுருண்டது.

நியுசவுத்வேல்ஸைச் சேர்ந்த 3 பேர் இந்த வெற்றிக்கு வித்திட்டனர். மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் புஜாரா, கோலியை வீழ்த்தி அரைசதம் எடுத்து இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்கள் பங்களிப்பு செய்தார், இந்த டெஸ்டின் ஹீரோ ஸ்டீவ் ஓகீஃப், இவரும் நியுசவுத் வேல்ஸைச் சேர்ந்தவர், மிக முக்கியமாக கேப்டன் ஸ்மித் அருமையான சதத்துடன் நியூசவுத்வேல்ஸ் பங்களிப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்திய அணி மொத்தம் இந்த டெஸ்ட் போட்டியில் 74 ஓவர்களையே சந்தித்து 212 ரன்களை மட்டுமே எடுத்தது. மாறாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் எடுத்த 27 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பீல்டர்கள் விட்ட கேட்ச்களின் உறுதுணையுடன் அருமையான உத்தியைக் கடைபிடித்து 109 ரன்களை அடித்தார். மிகவும் அற்புதமான பேட்டிங் ஆகும் இது, இந்தப் பிட்சில் சதம் எடுப்பதெல்லாம் சுலபம் கிடையாது. மேலும் இந்திய வீரர்கள் பந்தின் லைனைக் கணித்து ஆடாமல் பந்து ஸ்பின் ஆகும் என்று எதிர்பார்த்து உள்ளே வரும் பந்தில் அவுட் ஆகி வெளியேறினர். இந்தப் பிட்சில் இந்திய பேட்ஸ்மென்கள் தவறான கணிப்பினால் அவுட் ஆகினர் என்று கூறுவதற்கில்லை, இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையுமே தவறு.

ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்த பிறகு, 441 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்திய அணி உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கியது.

இந்திய அணியின் பேட்டிங்கில் சிறு முன்னேற்றம் என்னவெனில் முதல் இன்னிங்சில் 11 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது, 2-வது இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது.

ஆட்டமிழந்து ரிவியூக்களையும் காலி செய்த விஜய், ராகுல்:

ஆட்டத்தின் 5-வது ஓவரை ஓகீஃப் வீச பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார் முரளி விஜய் ஆனால் அது வேகமாக, பிளாட்டாக நேராக வந்த பந்து, பந்தின் லைனுக்கு ஆடாமல் திரும்பும் என்று எதிர்பார்த்து ஆடியதால் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். எல்.பி.ஆனது விஷயமல்ல, நேராக காலில் வாங்கிவிட்டு ரிவியூ சென்று ஒரு ரிவியூவை விரயம் செய்தார்.

இதற்கு ஒரு ஓவர் சென்று, ராகுல் 10 ரன்களில், லயன் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி உள்ளே திரும்பியது, முன்னால் வந்து ஆடியிருந்தால் கால்காப்பில் வாங்கியிருந்தாலும் நடுவருக்கு சந்தேகம் வந்திருக்கும் அவுட் கொடுக்காமல் கூட போயிருக்கலாம், அனால் நன்றாகப் பின்னால் சென்று பந்தைக் கடைசி வரை பார்த்து கடைசியில் கால்காப்பில் வாங்க எல்.பி.ஆனார். சரி! இவ்வளவு தவறையும் செய்து விட்டு ஏதோ தவறே செய்யாதது போலவும் நடுவர் தவறாக அவுட் கொடுத்தது போலவும் ரிவியூ கேட்டார். நடுவரின் தீர்ப்பு ஏற்கப்பட்டது, மொத்தம் 2 ரிவியூக்களையும் முக்கியமான ஒரு இன்னிங்சில் விரயம் செய்த 2-வது பெருமையைத் தேடிக்கொண்டார் ராகுல்.

விராட் கோலியின் தவறான அணுகுமுறை:

விராட் கோலி களமிறங்கி 37 பந்துகள் ஆடி 1 பவுண்டரியுடன் ஆடினார், ஓரிரு பந்துகளை திரும்பும் என்று நினைத்து பொறியில் சிக்குவதற்கான சுவட்டைக் காட்டினார். ஓகீஃபின் ஒரு ஆஃப் ஸ்டம்ப் நேர் பந்து கோலியின் பேடைத் தாக்கியது ஒரு பெரிய முறையீடு ஆனால் ஸ்மித் ரிவியூ செய்யவில்லை, ஒருவேளை ஸ்மித் ரிவியூ கேட்டிருந்தால் அது அவுட் ஆகியிருக்கும் ஏனெனில் முதலில் கால்காப்பில்தான் வாங்கினார், பந்து ஸ்டம்புக்கு நேரான பந்து. தப்பினார் கோலி.

பிறகு ஒரு ஓகீஃப் பந்தை எட்ஜ் செய்தார் அது ஸ்லிப்பில் முன்னால் விழுந்தது. ஒரு அருமையான ராஜகவர் டிரைவ் பவுண்டரிக்குப் பிறகே, ஓகீஃப் ரவுண்ட் தவிக்கெட்டில் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் செய்து லேசாக உள்ளே வரும் கோணத்தில் வீசினார், கோலி பந்து திரும்பும் என்று எதிர்பார்த்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் திரும்பவில்லை ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது, இந்தப் பிட்சில் எப்படி ஆடக்கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்தது கோலியின் பேட்டிங்.

47/3 என்ற நிலையில் புஜாரா, ரஹானே இணைந்து ஸ்கோரை 77 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 3 அருமையான பவுண்டரிகளுடன் ரஹானே 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஓகீஃபின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகி ரஹானேயை ஆட அழைத்தது, ஆனால் இந்த பிட்சில் பந்து அதுவாகவே நேராக வராது, கொஞ்சம் நின்று வந்தது, ரஹானே தனது ஸ்ட்ரோக்கைக் கட்டுப்படுத்தவில்லை கவரில் கேட்ச் ஆனது.

ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓகீஃபின் பிளாட் டெலிவரிக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். இம்முறை ஸ்மித் ரிவியூ செய்தார். விருத்திமான் சஹாவுக்கும் ஒரு பந்தை ஓகீஃப் சறுக்கிக் கொண்டு நேராக செல்லுமாறு வீச கால்காப்பில் வாங்கினார். 5 ரன்களில் வெளியேறினார். இதோடு தேநீர் இடைவேளை, இந்திய அணி 99/6.

இதே ஓவரில் புஜாரா 31 ரன்களில் ஓகீஃபின் அதே பந்துக்கு எல்.பி.ஆனார். மீண்டும் பந்தைத் திருப்ப முயற்சி செய்யாமல் ஆர்ம் பால் வீசினா ஓகீஃப் இதுவும் வேகமாக சறுக்கிக் கொண்டு சென்று புஜாராவின் கால்காப்பைத் தாக்கியது. மீண்டும் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் ஓகீஃப் திருப்ப முயற்சி செய்யவில்லை. ஓகீஃப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா லயன் பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இசாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் ஆகியோரும் லயனிடம் ஆட்டமிழக்க 33.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு இந்தியா சுருண்டு 333 ரன்களில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

மொத்தத்தில் இந்திய அணியை சகலதுறைகளிலும் தோற்கடித்தது ஆஸ்திரேலியா, ஆட்ட நாயகனாக ஓகீஃப் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் உத்வேகத்தை ஆஸ்திரேலியாவிடமிருந்து பறிப்பது கடினம், இனிமேல்தான் ஆஸ்திரேலிய அணி மேலும் அபாயகரமானது, கோலி தலைமையில் இந்திய அணிக்கு உண்மையான அக்னிப்பரிட்சை இந்தத் தொடர்தான்.

http://tamil.thehindu.com/sports/மீண்டும்-ஓகீப்-அபாரம்-3வது-நாளில்-333-ரன்களில்-இந்தியா-மோசமான-தோல்வி/article9559722.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒரு பேட்ஸ்மெனுக்கு 5 கேட்ச்களை விட்டால் வெற்றி பெற தகுதில்லை: விராட் கோலி பேட்டி

 

 
 
கோலி. | படம்.| ஏ.எப்.பி.
கோலி. | படம்.| ஏ.எப்.பி.
 
 

சமீப காலங்களில் இந்திய வீரர்கள் இவ்வளவு மோசமாக ஆடியதில்லை என்று கூறிய விராட் கோலி, பேட்டிங்கே அணியைத் தோல்விக்கு இட்டுச் சென்றது என்றார்.

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பேட்டிங்கே எங்கள் பின்னடைவுக்குக் காரணம். நாங்கள் சரியாக எங்களை செலுத்தி ஆடவில்லை, சொல்லிக்கொள்ளும் படியான பார்ட்னர்ஷிப்புகள் இல்லை. இதுதான் இதற்கு முன்னர் நம்மை பெருமைக்கு இட்டு சென்றது. ஆனால் இன்று காலைவாரிவிட்டது. எனவே பேட்ஸ்மென்கள் உறுதியாக ஆட வேண்டும். பேட்டிங் நிச்சயம் தரமானதாக இல்லை, எப்படி பேட் செய்ய கூடாது என்பதை வெளிப்படுத்தியதாகவே நம் பேட்டிங் அமைந்தது. இவ்வளவுதான் என்னால் கூற முடியும்.

இந்தப் பிட்சில் முதல் இன்னிங்ஸில் 155 ரன்களை முன்னிலை அளித்தது ‘கிரிமினல்’. 4-5 வீரர்கள் கணிப்பில் பிழை செய்தது அரிதாகவே நடக்கும், குறிப்பாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் தவறான கணிப்பு தொடர்ந்தது. இது படுமோசமான பேட்டிங்காகும். நாம் இதனை ஒப்புக் கொண்டு பெங்களூர் டெஸ்ட் போட்டியில் முன்னேற்றம் காட்ட வேண்டும். இன்னும் நிறைய கிரிக்கெட் இந்தத் தொடரில் மீதமுள்ளது.

நான் அவுட் ஆனவிதம் குறித்து கூற வேண்டுமெனில், நான் கொஞ்சம் முன் கூட்டியே பந்தை ஆடாமல் விட முடிவு செய்தேன், நான் பந்து மேலும் வர காத்திருந்திருக்க வேண்டும் அது என் தவறுதான்.

இது இன்னொரு சர்வதேச போட்டி, ஒன்றும் பெரிய டீல் இல்லை. வெற்றி பெறும்போது எப்படி அமைதியாக இருக்கிறோமோ அதே போல் தோல்வியடையும் போதும் அமைதியாக யோசிக்க வேண்டும்.

கடந்த முறை இது போன்று பேட்டிங் ஆடிய போது இலங்கையில் கால்லெ டெஸ்ட் போட்டியிலிருந்து அனைத்தும் மாறியது, தொடரை வென்றோம், அது போல்தான் எங்களை விழித்துக் கொள்ளச் செய்ய இந்தத் தோல்வி தேவைதான். இப்போதுதான் எந்தப் பகுதியில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதும், எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது குறிப்பாக சர்வதேச போட்டிகளில் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள கூடாது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே பேட்ஸ்மெனுக்கு 5 கேட்ச்களை விடும்போது நாம் வெற்றி பெற தகுதியற்றவர்கள், அதேபோல்தான் 11 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி பெறத் தகுதியில்லை என்றே பொருள். நாம் வென்றிருந்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் என்பதில் உறுதியாக உள்ளேன். முடிவுகளினால் நம் மனநிலை மாறுவதில்லை.

நான் பவுலர்களை குறைகூறவே மாட்டேன். நம் பேட்ஸ்மென்கள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். அவ்வளவு பெரிய லீடைக் கொடுத்து விட்டு மீண்டெழுவது இயலாத காரியம், பவுலர்கள் பெரிதளவு முயன்று பார்த்தார்கள்.

நல்ல கிரிக்கெட் ஆடினோம் வெற்றி பெற்றோம், மோசமாக ஆடினோம் தோல்வியடைந்தோம், அப்படித்தான் எளிமையாக இந்தத் தோல்வியை பார்க்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்தத் தவறுகளை செய்யாமல் வலுவாக திரும்ப வேண்டும். நிச்சயம் அடுத்த போட்டியில் இன்னும் தீவிரமாகக் களமிறங்குவோம், முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள்ளாக்குவோம்.

18-19 போட்டிகளில் தோல்வியுறாமல் ஆடிய பிறகே இந்தத் தோல்வி பற்றி அதிகம் நான் நினைக்கப்போவதில்லை. ஒரு ஆட்டம், தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு அங்கமே. நாம் தோற்கவே கூடாது என்பதாக மக்கள் நினைப்பதாக நான் கருதவில்லை. நல்ல கிரிக்கெட் ஆடவில்லை எனில் எந்த அணியும் நம்மை வீழ்த்தவே செய்யும். பவுலிங்கிலிருந்து பாசிட்டிவான அம்சங்களை எடுத்துக் கொள்கிறேன்.

நம் பவுலர்கள் பந்துகளை அதிகம் திருப்பியதால் எட்ஜைப் பிடிக்க முடியவில்லை. பந்தைக்குறைவாக திருப்பியவர்கள் விக்கெட் வீழ்த்தினர். ஒன்றுமேயில்லாத பிட்சில் கூட நாம் சரியாக நம்மை செலுத்திக் கொள்ளவில்லையெனில் அவுட் ஆகவே வாய்ப்புள்ளது.

நாம் சரியாக, கவனமாக ஆடாத போது பகுதி நேர வீச்சாளர் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்துவார். என்னைப் பொறுத்தவரை இந்த பேட்டிங் சரிவை இப்படித்தான் பார்க்கிறேன்.

பிட்சைக் குறைகூறிப் பயனில்லை, இதே போன்ற பிட்ச்களில்தான் முன்னரும் ஆடினோம், இந்தப் போட்டியில் சரியாக ஆடவில்லை அவ்வளவே.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/ஒரு-பேட்ஸ்மெனுக்கு-5-கேட்ச்களை-விட்டால்-வெற்றி-பெற-தகுதில்லை-விராட்-கோலி-பேட்டி/article9559842.ece?homepage=true

  • தொடங்கியவர்

70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட் வீழ்த்திய ஓ'கீபே-யின் சாதனைத் துளிகள்

புனே டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

 
70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட் வீழ்த்திய ஓ'கீபே-யின் சாதனைத் துளிகள்
 
புனேவில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியாவை 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 2 இன்னிங்சிலும் சேர்த்து 28.1 ஓவர்கள் வீசி 70 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 12 வி்க்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

1. வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் இந்திய அணியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்களில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதற்கு முன் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கிரேஜா 358 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அதை ஓ'கீபே முறியடித்துள்ளார்.

62172DB5-295D-4BB3-B7EF-9A2D2DFE8391_L_s

2. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஒருவர் இந்திய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஆலன் டேவிட்சன் 124 ரன்கொடுத்து 12 விக்கெட்டும், ஜெஃப் டைமோக் 166 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டும், கிரேஜா 358 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டும், ரிச்சி பெனாட் 105 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

86F31DB3-276E-4729-ABE5-BBF41BD15830_L_s

3. இடது கை சுழற்பந்து வீச்சாளர் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியதில் முதல் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன் 1934-ல் இங்கிலாந்து வீரர் ஹெட்லி வெரிட்டி 11 விக்கெட்டும், 2012-ல் மோன்டி பெனாசர் 11 விக்கெட்டும், 1979-ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் இக்பால் குவாசிம் 10 விக்கெட்டும், 1952-ல் மால்கம் ஹில்டன் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

D16B887D-A26B-4294-888A-8BE9E1B6140E_L_s

4. ஒட்டுமொத்தமாக இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். இயான் போத்தம் 1980-ம் ஆண்டு 106 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே வெளிநாட்டு வீரர் ஒருவர் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது 12 வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாசல் மெஹ்மூத் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆன்டி ராபர்ட்ஸ் 4-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ஆலன் டேவிட்சன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/25185957/1070455/Steve-O-Keefe-record-12-for-70-breaks-Australia-13year.vpf

  • தொடங்கியவர்

நாளை என்ற ஒன்று இல்லை என்பது போல் கொண்டாடுங்கள்: ஆஸி. வெற்றியைக் கொண்டாடும் குரல்கள்

 

 
ஸ்மித்துக்கு கை கொடுக்கும் கோலி. | படம்.! ஏ.எஃப்.பி.
ஸ்மித்துக்கு கை கொடுக்கும் கோலி. | படம்.! ஏ.எஃப்.பி.
 
 

2004-க்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் வெற்றியைச் சாதித்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளவை:

மிட்செல் ஜான்சன்: ஸ்டீவ் ஓகீஃப் பந்து வீச்சை ‘ஸ்டெடி’ என்றார் இந்திய பயிற்சியாளர். வெல்டன் ‘ஸ்டெடி ஸ்டீவ் ஓகீஃப்’

மைக்கேல் கிளார்க்: வீரர்களுக்கு வாழ்த்துக்கள், அபாரமான ஆட்டம்!

ஆடம் கில்கிறிஸ்ட்: அருமை ஆஸ்திரேலியா! நாளை என்ற ஒன்று இல்லாதது போல் கொண்டாடுங்கள்! பிறகு அடுத்த டெஸ்டில் கவனம் செலுத்துங்கள்.

மார்க் வாஹ்: புனேயில் என்னவொரு அருமையான வெற்றி! இந்தக் கணத்தை மகிழ்வுடன் கொண்டாடுங்கள், சிறப்பான ஒன்றின் தொடக்கம் இது.

ஷேன் வாட்சன்: புனேயில் அசைக்க முடியாத ஆஸியின் ஆட்டம். ஸ்டீவ் ஓகீஃப் பவுலிங்கில் மகிழ்ச்சி. அவர் இதற்காக கடினமாக உழைத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் அருமையான சதம் கூட.

பீட்டர் சிடில்: வெற்றி முழக்கத்தை உரத்த குரலில் பாடுங்கள்!

மைக்கேல் வான்: ஸ்டீவ் ஸ்மித்தின் சதம் அனைத்து காலங்களிலும் சிறந்த சதமாக பதிவுறும். இந்திய கடற்கரை மணல் பிட்சில் அஸ்வினுக்கு எதிராக சதம் எடுப்பது சுலபமல்ல.

டாம் மூடி: சவாலான பிட்சில் என்னவொரு தனிச்சிறப்பான ஆட்டம்!

சேவாக்: நல்ல நண்பர்கள் கடினமான காலங்களையும் எளிதாக்குவர். தோல்வி ஏமாற்றமே! நீங்கள் நல்ல நண்பர்தானா? நல்ல நண்பராக இருப்பதற்கான நேரம், இந்திய அணியை ஆதரிக்க வேண்டிய நேரம்.

ஃபவாத் அகமது: நீங்கள் வைத்த பொறியில் நீங்களே சிக்கியுள்ளீர்கள் இந்தியா! என்னவொரு அருமையான வெற்றி, மகிழுங்கள் வீரர்களே, ஆஸ்திரேலியா நீ அருமை.

http://tamil.thehindu.com/sports/நாளை-என்ற-ஒன்று-இல்லை-என்பது-போல்-கொண்டாடுங்கள்-ஆஸி-வெற்றியைக்-கொண்டாடும்-குரல்கள்/article9559822.ece

  • தொடங்கியவர்

இந்தியா மீண்டு வரும்: ஆஸி., வீரர்களை எச்சரிக்கும் ஸ்மித்

Smith

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வரும். எனவே, வீரர்கள் தன்னிறைவு அடையக்கூடாது. சரிவில் இருந்து மீண்டு வரக் கூடிய தரமான அணி இந்தியா. இதனால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 

எங்களது அணியினர் தொடருக்கு நல்ல திட்டத்தை வகுத்துள்ளனர். வீரர்கள் தன்னிறைவு அடையாமல் அடுத்தடுத்தப் போட்டிகளுக்கும் நல்ல திட்டங்களை வகுக்க வேண்டும். அதன் மூலம் தொடரை வெல்ல முடியும். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்' என்றார்.

http://www.vikatan.com/news/sports/82085-india-will-come-back-strongly-smith-warns-players.html

  • தொடங்கியவர்

ட்ரையான ஆடுகளம் தயாரிக்க வேண்டாம் என எச்சரித்தேன்: புனே ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்

பதிவு: பிப்ரவரி 27, 2017 17:46

 
 

ட்ரையான ஆடுகளம் அமைக்க வேண்டாம் என்று பிசிசிஐயிடம் எச்சரித்தேன் என்று புனே ஆடுகள பராமரிப்பாளர் பாண்டுரங் சல்காயோன்கார் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ட்ரையான ஆடுகளம் தயாரிக்க வேண்டாம் என எச்சரித்தேன்: புனே ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக அமைக்கப்பட்ட சவாலான ஆடுகளம்தான் ஆஸ்திரேலியா தொடரின்போது அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆடுகளத்தில் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பே தண்ணீர் விடுவதை நிறுத்தி மிகவும் ட்ரையான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள். இதனால் முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆக ஆரம்பித்துவிட்டது.

இந்த ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் வார்னே கூறுகையில், இது 8-வது நாள் பிட்ச் போன்று தோன்றுகிறது என்றார். அதேபோல் சுனில் கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆகியோரும் ஆடுகளம் அமைக்கப்பட்டது குறித்து தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.

புனே மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர் பாண்டுரங் சல்காயோன்கார், போட்டி தொடங்குவதற்கு முன் ஆடுகளத்தில் பந்து பறக்கும் என்றார். அதாவது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் பந்து பறப்பதற்கான வழியில்லை என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், ஆடுகளத்தை பார்வையிட்ட பின்னர் முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் புனே ஆடுகள பராமரிப்பாளர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுபோன்று ட்ரையான ஆடுகளம் வேண்டாம் என்று பிசிசிஐ-யிடம் எதிர்ப்பு தெரிவித்ததாக புனே ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புனே ஆடுகள பராமரிப்பாளர் பாண்டுரங் சல்காயோன்கார் மேலும் கூறுகையில் ‘‘புற்களை முற்றிலும் செதுக்கி எடுத்து ட்ரையான ஆடுகளம் தயார்படுத்துவதற்கு பிசிசிஐயிடம் நான் தெளிவான என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். நான் அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை. ஆனால் அவர்களிடம் தண்ணீர் ஊற்றாமல், புற்களை செதுக்கி எடுத்துவிட்டால் பேராபத்தில் முடியும் என்று நான் அவர்களிடம் கூறினேன். இதனுடைய பாதிப்பை உணர்ந்து, என்னுடைய முழு முயற்சியால் அவர்களை புரிந்து கொள்ள வைக்க முயற்சி செய்தேன்.

BCC439F3-F11C-4C43-A331-8AE036157860_L_s

நீங்கள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் ஆடுகள தயாரிப்பாளர் என்ற முறையில் உங்களுடைய பணியை ஏன் செய்யவில்லை? என்று கேட்டலாம், என்னால் என்ன செய்ய முடியும்?. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சர்வதேச போட்டிக்கான ஆடுகளத்தை தயார் செய்வதில் எங்களுடைய உதவி குறைக்கப்படுகிறது. பி.சி.சி.ஐ. ஆடுகள கமிட்டியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையில் அவர்களுடைய உத்தரவைதான் நாங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது.

5701C3F9-3933-4E10-8B58-BBA36DF030F4_L_s

இப்படித்தான் ஆடுகளம் தயாரிக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது இந்திய அணியில் இருந்தோ எந்த கோரி்க்கையும் வரவில்லை. அவர்கள் மூத்த ஆடுகள பராமரிப்பாளரிடம் வேண்டுமென்றால் பேசியிருக்கலாம். புனேவில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே ஆடுகளம் முற்றிலும் டர்ன் ஆகும் வகையில் தயார் செய்தது எனக்கு உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், என்னால் என்ன செய்ய முடியும்?’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/27174602/1070809/I-Had-Warned-BCCI-Against-Preparing-a-Dry-Pitch-Pune.vpf

  • தொடங்கியவர்

கோலி மிகப்பெரிய அளவிலும், வலுவான நிலையுடனும் திரும்புவார்: ஸ்டார்க் சொல்கிறார்

புனே டெஸ்டில் 0, 13 என குறைந்த ரன்களில் அவுட்டான விராட் கோலி மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் வலுவான நிலையுடன் திரும்புவார் என்று ஸ்டாக் கூறியுள்ளார்.

 
 
 
கோலி மிகப்பெரிய அளவிலும், வலுவான நிலையுடனும் திரும்புவார்: ஸ்டார்க் சொல்கிறார்
 
கடந்த சில மாதங்களாக விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வரும் அவருக்கு புனே டெஸ்டில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. முதல் போட்டியில் ஸ்டார்க் பந்தில் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹேண்ட்ஸ்காம்ப் கேட்சை முதல் ஸ்லிப் திசையில் நின்று கோட்டை விட்டார். மேலும் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுக்க விட்டுவி்ட்டார். இதனால் கோலியின் செயல்பாடு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

சுழற்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொள்ளும் புஜாரா, விராட் கோலியை முதல் இன்னிங்சில் ஒரே ஓவரில் வீழ்த்தி ஸ்டார்க் இந்திய அணியின் ரன் வேட்டைக்கு செக் வைத்தார்.

முதல் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடாவிட்டாலும் அதிலிருந்து மிகப்பெரிய அளவில், வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘இந்த தொடரில் விராட் கோலியின் விக்கெட்டுதான் முக்கிய விஷயமாக இருக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியும். இந்த தொடரில் நாங்கள் சிறப்பான இடத்தைப் பிடிக்க இன்னும் 6 முறை அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டியுள்ளது. அவர் பெரிய அளவில், வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்பது எங்களுக்குத் தெரியும்.

F0C0DF5D-3BEC-489C-ADD2-0FB0E5261BA8_L_s

கோலி ஒரு உலகத்தரமான வீரர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த வருடத்தில் மலைபோன்று ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி நல்ல நிலைமைக்கு திரும்புவார். இதனால் நாங்கள் எச்சரிக்கையாக செல்வோம்.

முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், டெஸ்ட் தொடரில் ஒரு வெற்றி என்பது தொடரை வெல்ல உதவாது என்பது தெரியும். இன்னும் மூன்று முக்கியமான போட்டிகள் வர இருக்கிறது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/28200900/1071065/Kohli-will-be-back-bigger-and-stronger-says-Starc.vpf

  • தொடங்கியவர்

புனே ஆடுகளம் மோசமானது: ஐ.சி.சி. போட்டி நடுவர் அறிக்கை- பி.சி.சி.ஐ. பதிலளிக்க உத்தரவு

இரண்டரை நாளிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டு வந்த புனே ஆடுகளம் மோசமானது என்று ஐ.சி.சி.யின் போட்டி நடுவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
புனே ஆடுகளம் மோசமானது: ஐ.சி.சி. போட்டி நடுவர் அறிக்கை- பி.சி.சி.ஐ. பதிலளிக்க உத்தரவு
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி புனேவில் நடைபெற்றது. முதல் ஓவரில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் இருந்தது. இதனால் போட்டி இரண்டரை நாளில் முடிவுக்கு வந்தது. ஆகவே, ஆடுகளம் குறித்து புகார் எழும்பியது.

இந்நிலையில் ஐ.சி.சி.யின் போட்டி நடுவர் கிறிஸ் பிராட், ஐ.சி.சி.யின் ஆடுகளம் மற்றும் பவுண்டரி கோடு அருகே பார்வையிடுதல் விதிகள் 3-ன்படி ஐ.சி.சி.க்கு ஒரு அறிக்கை அளித்தார். அதில் ஆடுகளம் மோசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

159DEBE4-AE43-4AFE-9C27-FB9553EEFFB0_L_s

இதனால் வரும் 14 நாட்களுக்குள் ஆடுகளம் குறித்து தங்களுக்கு பதில் அளிக்கும்படி, இந்த அறிக்கையை பிசிசிஐ-க்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. பிசிசிஐயின் விளக்கத்தை ஐ.சி.சியின் பொது மேலாளர் ஜெப் அல்லார்டைஸ், ரஞ்சன் மதுகலே ஆகியோர் ஆய்வு செய்வார்கள்.

36BC2D22-CAB3-464A-A66F-E855D504D370_L_s

புனே டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 70 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 12 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/28192032/1071059/ICC-Match-Referee-Rates-Pune-Pitch-As-Poor.vpf

  • தொடங்கியவர்

பெங்களூர் மைதானத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

 
 
 
 
பெங்களூர் மைதானத்தில் இந்தியாவை வெல்வது கடினம்: மைக்கேல் கிளார்க்
 
பெங்களூர்:

பெங்களூரில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கூறியதாவது:-

புனே டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இருந்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்குமா? என்று தெரியவில்லை.

இந்திய மண்ணில் முதல் இன்னிங்சில் குவிக்கும் ரன் முக்கியமானது. அதில் 450 ரன்னுக்கு மேல் எடுத்து விட்டால் யார் டாஸ் வென்றாலும் அது ஒரு பிரச்சினை இல்லை.

நீங்கள் முதல் இனனிங்சில் பேட்டிங் செய்வதை பொறுத்தே ஆட்ட முடிவு இருக்கும். இதனால் இரு அணிகளும் ரன் குவிக்க முயலும்.

கடின ஆடுகளமான புனேவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா எடுத்த 260 ரன் நல்ல ஸ்கோர் ஆகும். இந்த பிட்ச்சில் இந்தியாவுக்கு 150 ரன்னுக்கு மேல் வைத்து இருந்தாலும் அதை எடுப்பது கடினமானது.

புனே மைதானம் போல் பெங்களூர் இருக்காது. அங்கு இந்தியாவை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு கடினமாக இருக்கும்.
4ACBCE64-D0F9-40AF-83A7-A4FD8BEEBB82_L_s

இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீபன் சுமித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்பார்க், ஹாசல்வுட் ஆகியோருக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/03104221/1071572/Difficult-to-win-India-at-the-Bangalore-ground-says.vpf

  • தொடங்கியவர்

பெங்களூரு டெஸ்ட்டில் இந்தியாவுக்கு ஒரு டெஸ்ட்! ‘கோலி அண்ட் கோ’ ரெடியா?

ஜெயித்துக் கொண்டே இருக்கும் வரை, இந்த உலகம் பாராட்டிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் சொதப்பினாலும், விமர்சனங்கள் வரிசைகட்டும். ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வருவதற்கு முன்புவுரை, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் யாரிடமும் தோற்காமல் இருந்தது. ஆனால் புனே டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!

டெஸ்ட் போட்டி

ஒரு கேப்டனாக, சொந்த மண்ணில் முதல் டக் அவுட்டைத் தொடர்ந்து, முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார் கோலி. உடனே, ‘கோலி இனி என்ன செய்ய வேண்டும்’ என நிபுணர்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். முதலிடம் முக்கியமல்ல. அதைத் தக்க வைப்பதே கடினம். கோலி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இதுதான்!

புனே ஆடுகள பிரச்னை?

டெஸ்ட் போட்டி

5 நாட்கள் ஆடினால்தான் அது டெஸ்ட். ஆனால் புனே டெஸ்ட் 3 நாள்களிலேயே முடிந்துவிட்டது. முதல் நாளில், முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் அது ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக மாறியதுதான் வேதனை. இருந்தும், ஆடுகளத்தின் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. அந்தப் போட்டியின் நடுவராகச் செயல்பட்ட கிறிஸ் பிராடு, ஐசிசிக்கு அறிக்கை அனுப்பினார். அதில், ‘புனே ஆடுகளம் மற்றும் அவுட்ஃபீல்டு, ஐசிசியின் விதிமுறைப்படி இல்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பிசிசிஐ-யிடம் விளக்கம் கோரியுள்ளது ஐ.சி.சி. முதன்முறையாக புனேவில் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டதால், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடைசியாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய நாக்பூர் டெஸ்ட் போட்டியிலும், இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. அப்போதும் பிட்ச் மிக மோசம் என ஐசிசி-க்கு போட்டியின் நடுவர்கள் சார்பில் புகார் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் போட்டி

புனே பிட்ச் மற்றும் டி.ஆர்.எஸ் குறித்து, இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் கூறுகையில் ''புனே பிட்ச் மோசமானதல்ல. அது முதல் பந்திலிருந்தே சவால் அளிக்கும் ஆடுகளம். அவ்வளவே. எப்போதும் பேட்ஸ்மேனுக்குச் சாதகமான பிட்சில் ஆடுவதில் பயனில்லை. இத்தகைய பிட்ச்தான் நம் பொறுமைக்கும், திறமைக்கும் சவாலாக இருக்கும். எந்தப் பிட்சாக இருந்தாலும் அதற்கேற்ப நம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். புனேயில் பவுலர்கள் அருமையாக பந்து வீசினர். பேட்டிங்கில் சரியாக ஆடாதது ரிசல்ட்டை மாற்றி விட்டது. டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்தியதிலும் சொதப்பி விட்டோம். அடுத்த முறை இதை சரியான முறையில் பயன்படுத்துவோம். புனே தோல்வி பற்றி பேசினோம், தவறுகளை ஆராய்ந்தோம். முன்னேற்றம் குறித்து திட்டமிட்டோம்.. இலங்கையில் முதல் போட்டியில் தோற்றபின் தொடரை வென்றோம், எனவே பெங்களூரு டெஸ்ட்டில் தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். அனைத்துக் கேட்ச்களையும் பிடிப்போம்'’ என்றார்.

பெங்களூரு பிட்ச் எப்படி?

டெஸ்ட் போட்டி

புனே ஆடுகளத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஓஃகீப், 12 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்தியாவில் உள்ள அநேகமான மைதானங்களில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். எனவே அவரது அனுபவ அறிவை, தற்போது ஆஸ்திரேலிய அணி பயன்படுத்திக்கொள்கிறது. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான இந்திய மைதானங்களில், ஸ்பின்னர்களை வைத்தே அவர்கள் நம்மை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்! ஆக உள்நாட்டுச் சுழல் சாதகமே, இந்திய அணிக்கு பாதகமாக அமைந்ததால், இந்தத் தொடரில் மீதமுள்ள ஆட்டங்களில் இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை இந்திய அணி நிச்சயம் விரும்பாது. இரண்டாவது டெஸ்ட், பெங்களூருவில் நாளை தொடங்குகிறது. இதில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. எனவே, பந்துக்கும் பேட்டுக்குமான போட்டியாக இருக்கலாம். ஆடுகளமும் அதற்கேற்ப அமைக்கப்படலாம்.

டெஸ்ட் போட்டி

பெங்களூரு பிட்ச் பற்றி கர்நாடகா  கிரிக்கெட் சங்க செயலாளர் சுதாகர் ராவ் கூறுகையில், “இந்திய அணியிடம் இருந்து, எங்களுக்கு எந்தவிதமான பரிந்துரையும் வரவில்லை. பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையே நியாயமான போட்டி இருக்கும் வகையில் ஆடுகளத்தைத் தயார் செய்து வருகிறோம். ஒரு டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஆடுகளத்தை வழங்குவதே எங்களது நோக்கம். புனே போல இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் போட்டியை நாங்கள் விரும்பவில்லை. ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதனால் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தவில்லை. பொதுவாகவே போட்டி நடைபெறுவதற்கு இரண்டு - மூன்று நாட்களுக்கு முன்புவரை தண்ணீர் தெளிப்போம். அதன் பின்னரே ஆடுகளத்தின் தன்மையை அறிய முடியும்’’ என்றார்.

அணியில் மாற்றம் இருக்குமா?

டெஸ்ட் போட்டி

ரஹானேவை நீக்கிவிட்டு, முச்சத நாயகன் கருண் நாயரை சேர்க்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. பயிற்சியாளர் கும்பிளேவிடம் கேட்டபோது, ''வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்பட பல போட்டிகளில் ரஹானே சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே, அவரை நீக்க வாய்ப்பே இல்லை. கருண் நாயர் இந்தப் போட்டியில் இடம்பெறமாட்டார். அதேசமயம், அணிக்கு ஐந்து பவுலர் தேவையா, நான்கு பவுலர் தேவையா என ஆலோசித்து முடிவு செய்வோம். ஒருவேளை, அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்பட்டால், கருண் நாயர் தேர்வுசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது. புனே தோல்வியை மறந்து அடுத்த போட்டியில் கவனம் செலுத்தி வருகிறோம். பெங்களூரு டெஸ்ட்டில் களமிறங்கும் அணியை இன்னும் முடிவு செய்யவில்லை'' என்றார். இதற்கிடையே, காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா தற்போது தேறி விட்டதால், கடைசி இரண்டு போட்டிக்கான அணியில் இடம்பிடிப்பார் என தெரிகிறது.

கோலியின் திட்டம் என்ன?

டெஸ்ட் போட்டி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய ஐந்து டெஸ்ட்டில், 2 வெற்றி, ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்தது. இந்தத் தொடரில் 1 - 0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தாலும், அவர்கள் இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது, அந்த அணி கேப்டன் ஸ்மித்தின் பேட்டியைப் பார்க்கும்போதே தெரிகிறது. எனவே போதுமான இடைவெளிக்குப் பிறகு, பெங்களூரில் களமிறங்கும் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் ஆடி, மீதமிருக்கும் மூன்று போட்டிகளையும் ஜெயிக்க வேண்டும் என்பதே, கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்தியாவை வீழ்த்தி தனது முன்னிலையை அதிகரிக்கவே ஆஸ்திரேலியா விரும்பும். எனவே பேட்டிங், ஃபீல்டிங்கில் அதிக கவனமுடன் செயல்படுவது அவசியம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சொன்னதைப் போல, கோலியின் பேட் ''பழைய பன்னீர் செல்வம்'' போல அடிக்க ஆரம்பித்தால், வெற்றி சாத்தியம் என்றே தோன்றுகிறது! 

இது அசார் கணிப்பு!

டெஸ்ட் போட்டி

அணித் தேர்வு பற்றி, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாரூதின் கூறுவதும் ஏற்றுக் கொள்ளும்படியே இருக்கிறது. ''எந்த ஒரு பேட்டிங் சரிவும் அணிக்கு பின்னடைவே. நாம் தொடரை இழந்துவிட்டதாகக் கருதவில்லை, ஆனால் எந்தவிதமான பிட்ச்களில் நாம் ஆட விரும்புகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். பெங்களூரு பிட்ச் இவ்வளவு திரும்பாது என்றே எண்ணுகிறேன். எனவே ஜெயந்த் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக, கருண் நாயர் மற்றும் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்க்க வேண்டும். அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. இஷாந்த்தின் ‘பேக் ஆஃப் லெந்த்’ பந்து வீச்சு இங்கு பயனளிக்காது. ஸ்விங் வகைப் பந்துகளை வீசக்கூடிய புவனேஷ்வர் இங்கு அசத்துவார் எனத் தோன்றுகிறது. எனவே விராட் கோலி இந்தக் கோணத்தில் சற்று சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஓகீஃப் போல, ஜடேஜாவும் பிட்ச்சை புரிந்து கொண்டு, அதற்கேற்ற லைன் & லெந்த்தில் வீச வேண்டும்'' என அறிவுறுத்தியுள்ளார். 

http://www.vikatan.com/news/sports/82627-what-are-the-challenges-in-bangalore-test-to-be-faced-by-team-india.html

  • தொடங்கியவர்

இந்தியா பேட்டிங்! அபினவ் முகுந்த், கருண் நாயர் அணியில் சேர்ப்பு!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முரளி விஜய் மற்றும் ஜெயந்த் யாதவ்வுக்குப் பதிலாக, அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதில், முரளி விஜய்க்கு தோள்பட்டைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக அபினவ் முகுந்த் களமிறக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

C6C0-YKVAAA67gp_09598.jpg

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்

 

 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் கே.எல்.ராகுல் 105 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

 
 
 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்
 
பெங்களூர்:

சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.  இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இந்திய அணி கேப்டன் வீராட்கோலி `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ராகுலும், அபினவ் முகுந்தும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சிகரமாக இருந்தது. அபினவ் முகுந்த் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 11 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார்.
034C65BE-158F-483D-93D1-3F1282903C80_L_s

புஜாரா-ராகுல் ஜோடி மிகுந்த கவனத்துடன் விளையாடி 25 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. எனினும், லயன் பந்துவீச்சில் புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், விராட் கோலி இணைந்தார்.

இந்த, நிலையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 105 பந்துகளில் அரை சதம் கடந்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ராகுல் அடித்த 3-வது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/04132959/1071800/indvsaus-test-match-klrahul-scores-fifty.vpf

  • தொடங்கியவர்

ஸ்டம்புக்கு வந்த பந்தை ஆடாமல் விட்டு எல்.பி.ஆன கோலி ரிவியூவையும் விரயம்: இந்தியா திணறல்

 

 
 
 
நேதன் லயன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறும் விராட் கோலி. | படம். | ஏ.பி.
நேதன் லயன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறும் விராட் கோலி. | படம். | ஏ.பி.
 
 

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்குக்குச் சாதகமான பிட்சில் சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

நேதன் லயன் அற்புதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அதாவது புஜாரா, கோலி, ரஹானே என்று இந்திய நடுக்கள முதுகெலும்பைக் காலி செய்தார்.

பெங்களூருவில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அபினவ் முகுந்த், புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்திய அணியில் முரளி விஜய் ‘காயம்’ காரணமாக இடம்பெறவில்லை அவருக்குப் பதிலாக மற்றொர் தமிழக வீரரும் இடது கை பேட்ஸ்மெனுமான அபினவ் முகுந்த் சேர்க்கப்பட்டார். ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மெனாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்டார்க் வீசிய முதல் ஆஃப் வாலி பந்தை ராகுல் அருமையாக கவர் திசையில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். பிறகு ஒரு அடர்த்தியான எட்ஜில் பவுண்டரியுடன் முதல் ஓவரிலேயெ 10 ரன்கள் என்று இந்தியா தொடங்கியது.

8 பந்துகளைச் சந்தித்த அபினவ் முகுந்த் 2011-க்குப் பிறகு டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தும் 1 ரன் எடுக்க முடியாமல் மிட்செல் ஸ்டார்க்கின் நேர் புல்டாஸை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். யார்க்கர் முயற்சி புல்டாஸ் ஆனது, அதை நேராக ஆடாமல், கிராஸாக ஆடி எல்.பி.ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் ரிவியூக்களை விரயம் செய்ததால் அவருக்கு ரிவியூ அனுமதிக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

ஹேசில்வுட்டும் ஸ்டார்க்கும் கட்டுக்கோப்புடன் வீசினர். முதல் 12 ஓவர்களில் 6 மெய்டன்கள், ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுப்பதில் சிரமம் ஏற்படுத்தினர்.

ராகுல் தன் சொந்த பிட்ச் என்பதால் சரியாகவே ஆடினார், அவ்வப்போது ஹேசில்வுட் பந்துகள் அவரது பொறுமையைச் சோதித்தது. புனே பிட்ச் ஹீரோ ஓகீஃப், ராகுல் மேலேறி வந்து ஆட முயன்ற போது பிளைட்டில் அவரை ஏமாற்றினார். ஆனால் இம்முறை கேஎட்ச் ஆகவில்லை.ஹேண்ட்ஸ்கம்பிற்கு இடது புறம் தாழ்வாகச் சென்றது. கடினமான வாய்ப்பு. ராகுல் மீண்டும் விட்டுக் கொடுத்திருப்பார் ஆனால் அவர் அதிர்ஷ்டம் அவரைக் காப்பாற்றியது.

புஜாரா வழக்கம்போல் சில இறுக்கமான பந்து வீச்சிற்கு நிதானம் காட்டி 66 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் நேதன் லயன் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகு உள்ளே திரும்பி எழும்பிய பந்துக்கு முதலில் முன்னால் செல்ல நினைத்து பிறகு பின்னால் வந்து ஆட பவுன்சினால் பந்து மட்டையின் உள்விளிம்பில் மேலாகப் பட்டு ஹேன்ட்ஸ்கம்பிடம் கேட்ச் ஆனது.

கோலி இறங்கினார், ஸ்டார்க்கின் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பீட்டன் ஆகி அடுத்த ஃபுல் பந்தை கவருக்கும் மிடாஃபுக்கும் இடையே அபாரமாக பவுண்டரி அடித்தார்.

பிறகு கவரை காலியாக விட்டு கோலியை டிரைவ் ஆட வைத்து எட்ஜ் எடுக்கவைக்கும் முயற்சியில் லயன் ஒரு பந்தை வீச கோலி கவர் திசையிலேயே பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார். ஆனால் இதே ஓவரில்தான் அவர் 12 ரன்களில் இருந்த போது லயனின் ஸ்டம்பைக் குறிவைத்த ஆஃப் பிரேக் பந்தை ஆடாமல் விட முடிவெடுக்க கால்காப்பில் வாங்கினார் எல்.பி.என தீர்ப்பளிக்கப்பட்டது. ராகுலுடன் பேசி ரிவியூ செய்ய முடிவெடுத்தார், ஆனால் பெரிய திரையில் இவர் அவுட் என்று தெரிந்தவுடன் தீர்ப்புக்குக் காத்திருக்காமல் நடையைக் கட்டினார். விரயமான ரிவியூ. மீண்டும் அதிகமாக திரும்பும் என்று நினைத்து ஆடாமல் விட பந்து போதிய அளவு திரும்பியது.

அடுத்ததாக ரஹானே 2 பவுண்டரிகளுடன் திருப்தி அளிக்காத ஒரு இன்னிங்ஸில் 17 ரன்கள் எடுத்து லயன் வீசிய ஆஃப் பிரேக் பந்திற்கு மேலேறி வந்தார், பந்து திரும்பவில்லை மட்டையைக் கடந்து வேடிடம் சென்றது, வேட் சரியாகப் பந்தைச் சேகரிக்கவில்லை, ஆனால் ரஹானே கொஞ்சம் அதிகமாகவே கிரீசை விட்டு வந்ததால் ஸ்டம்ப்டு செய்யப்பட்டது.

தற்போது ராகுல் 70 ரன்களுடனும் கருண் நாயர் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், லயன், ஓகீஃப் இருவருக்கும் ஒரு சில பந்துகள் நன்றாகத் திரும்புகின்றன, ஒரு சில பந்துகள் திரும்புகின்றன. இந்தியா 51 ஓவர்கள் முடிவில் 128/4 என்று உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஸ்டம்புக்கு-வந்த-பந்தை-ஆடாமல்-விட்டு-எல்பிஆன-கோலி-ரிவியூவையும்-விரயம்-இந்தியா-திணறல்/article9570874.ece?homepage=true

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்தியா 168/5 - கோலி, ரகானே, கருண் நாயர் ஏமாற்றம்

பதிவு: மார்ச் 04, 2017 14:58

 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 168 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

 
 
 
 
2-வது டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்தியா 168/5 - கோலி, ரகானே, கருண் நாயர் ஏமாற்றம்
 
பெங்களூர்:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இந்திய அணி கேப்டன் விராட்கோலி `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ராகுலும், அபினவ் முகுந்தும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இந்திய அணியின் தொடக்க வீரர் அபினவ் முகுந்த் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 11 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார்.

053B882E-8534-45CB-9C8A-DDB844E76D55_L_s

புஜாரா-ராகுல் ஜோடி மிகுந்த கவனத்துடன் விளையாடி 25 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. எனினும், லயன் பந்துவீச்சில் புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 72 ஆக இருந்தது. புஜாரா அவுட்டானதைத் தொடர்ந்து உணவு இடைவேளை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், விராட் கோலி இணைந்தார்.நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 105 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி 12 ரன்கள் எடுத்தபோது நாதன் லயன் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்தது.இதனைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், ரகானே இணைந்தார். 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த ரகானே, லயன் பந்தில் ஸ்டம்ப்டு முறையில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 118 ஆக இருந்தது.

65E472A8-F302-4EC6-A9F3-442066F7D146_L_s

ரகானே அவுட்டானதைத் தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், கருண் நாயர் இணைந்தார். இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்ததால் கருண் நாயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த கருண் நாயர் ஓகீஃப் பந்தை எதிர்கொண்டு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 156 ஆக இருந்தது.

81F3C5E6-0D3B-4DA1-B7CA-27BE4552A21E_L_s

தற்போது 6-வது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். 59 ஓவர்களில் இந்திய அணி 168 ரன்கள் எடுத்தபோது தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. ராகுல் 79 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் நாதன் லயன் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஓகீஃப், ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/04145802/1071820/India-1685-at-tea-break-on-day-one-against-Australia.vpf

  • தொடங்கியவர்

லயான் சுழலில் சுருண்டது இந்தியா! முதல் இன்னிங்ஸில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்

Aus_lyon_15404.jpg

பெங்களூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் லயான் சுழலில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்னுக்கு சுருண்டது.

புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ராகுல்- முகுந்த் ஆகியோர் களம் இறங்கினர்.

அணியின் ஸ்கோர் 11 ஆக இருந்தபோது முகுந்த் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த புஜாரா 17 ரன்னிலும், கேப்டன் கோலி 12 ரன்னிலும், ரஹானே 17 ரன்னிலும், நாயர் 26 ரன்னிலும், அஸ்வின் 7 ரன்னிலும், சஹா ஒரு ரன்னிலும், ஜடேஜா 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். உமேஷ் டக் அவுட் ஆனார். 9-வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் ராகுல் ஆட்டம் இழந்தார். இவர் 90 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேயா வீரர் லயானின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 71.2 ஓவரில் இந்திய அணி 189 ரன்னுக்கு சுருண்டது. லயான் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க், கீஃபி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களம் இறங்க உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/82702-lyons-eight-packs-up-india-for-189.html

  • தொடங்கியவர்

நேதன் லயன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை; இந்திய அணி 189 ரன்களுக்குச் சுருண்டது

 

 
 
 
 
  • நேதன் லயன் 8 விக்கெட்டுகள்.| பெங்களூரு. | படம்: பிடிஐ.
    நேதன் லயன் 8 விக்கெட்டுகள்.| பெங்களூரு. | படம்: பிடிஐ.
  • நேதன் லயன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறும் விராட் கோலி. | படம். | ஏ.பி.
    நேதன் லயன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறும் விராட் கோலி. | படம். | ஏ.பி.
 

புனே தோல்விக்குப் பிறகான அனைத்து இந்திய பில்ட்-அப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேதன் லயன் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி முதல் நாளிலேயே 189 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தியாவில் வந்து வீசும் அயல்நாட்டு பவுலர் ஒருவர் எடுக்கும் அதிக விக்கெட்டுகளுக்கான சாதனையை நிகழ்த்தினார் நேதன் லயன். 22.4 ஓவர்கள் வீசிய நேதன் லயன் அதில் 4 மெய்டன்களுடன் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு முன்னர் லான்ஸ் குளூஸ்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆனால் அவர் 64 ரன்களை விட்டுக் கொடுத்தார், அந்த வகையில் நேதன் லயன் தற்போது குறைந்த ரன்களில் 8 விக்கெட்டுகளை இந்தியாவில் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். மீதி 2 விக்கெட்டுகளில் கருண் நாயர் விக்கெட்டை ஓகீஃபும், முகுந்த் விக்கெட்டை ஸ்டார்க்கும் வீழ்த்தினர்.

உணவு இடைவேளையின் போது 77/2 என்று இருந்த இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 168/5 என்று இருந்தது, தேநீர் இடைவேளைக்குப் பிறகு 189 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் உண்மையில் சிறப்பாக ஆடி 205 பந்துகள் தாக்குப்பிடித்து 9 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து கடைசியில் 9-வது விக்கெட்டாக லயன் பந்தில் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நேதன் லயன் அருமையாக பிட்சைப் பயன்படுத்திக் கொண்டார். அவரது பந்துகள் அருமையாக இறங்கியதோடு, ஓரளவுக்கு நல்ல பவுன்ஸ், பிட்ச் அளித்த உதவியைப் பயன்படுத்தி கூடுதலாக பந்தை டர்ன் செய்தார், ஆனால் டர்ன் ஆகாத பந்துகளில்தான் கடந்த டெஸ்ட் போல் இந்திய வீரர்கள் காலியாயினர்.

இந்திய அணியில் முரளி விஜய் ‘காயம்’ காரணமாக இடம்பெறவில்லை அவருக்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரரும் இடது கை பேட்ஸ்மெனுமான அபினவ் முகுந்த் சேர்க்கப்பட்டார். ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மெனாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டார்க் வீசிய முதல் ஆஃப் வாலி பந்தை ராகுல் அருமையாக கவர் திசையில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். பிறகு ஒரு அடர்த்தியான எட்ஜில் பவுண்டரியுடன் முதல் ஓவரிலேயெ 10 ரன்கள் என்று இந்தியா தொடங்கியது. 8 பந்துகளைச் சந்தித்த அபினவ் முகுந்த் 2011-க்குப் பிறகு டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தும் 1 ரன் எடுக்க முடியாமல் மிட்செல் ஸ்டார்க்கின் நேர் புல்டாஸை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். யார்க்கர் முயற்சி புல்டாஸ் ஆனது, அதை நேராக ஆடாமல், கிராஸாக ஆடி எல்.பி.ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ரிவியூக்களை விரயம் செய்ததால் அவருக்கு ரிவியூ அனுமதிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஹேசில்வுட்டும் ஸ்டார்க்கும் கட்டுக்கோப்புடன் வீசினர். முதல் 12 ஓவர்களில் 6 மெய்டன்கள், ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுப்பதில் சிரமம் ஏற்படுத்தினர். ராகுல் தன் சொந்த பிட்ச் என்பதால் சரியாகவே ஆடினார், அவ்வப்போது ஹேசில்வுட் பந்துகள் அவரது பொறுமையைச் சோதித்தது. புனே பிட்ச் ஹீரோ ஓகீஃப், ராகுல் மேலேறி வந்து ஆட முயன்ற போது பிளைட்டில் அவரை ஏமாற்றினார். ஆனால் இம்முறை கேஎட்ச் ஆகவில்லை.ஹேண்ட்ஸ்கம்பிற்கு இடது புறம் தாழ்வாகச் சென்றது. கடினமான வாய்ப்பு.

ராகுல் மீண்டும் விட்டுக் கொடுத்திருப்பார் ஆனால் அவர் அதிர்ஷ்டம் அவரைக் காப்பாற்றியது. புஜாரா வழக்கம்போல் சில இறுக்கமான பந்து வீச்சிற்கு நிதானம் காட்டி 66 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் நேதன் லயன் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகு உள்ளே திரும்பி எழும்பிய பந்துக்கு முதலில் முன்னால் செல்ல நினைத்து பிறகு பின்னால் வந்து ஆட பவுன்சினால் பந்து மட்டையின் உள்விளிம்பில் மேலாகப் பட்டு ஹேன்ட்ஸ்கம்பிடம் கேட்ச் ஆனது.

ஸ்டம்புக்கு வந்த பந்தை ஆடாமல் விட்டு எல்.பி.ஆகி ரிவியூவையும் விரயம் செய்த கோலி:

கோலி இறங்கினார், ஸ்டார்க்கின் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பீட்டன் ஆகி அடுத்த ஃபுல் பந்தை கவருக்கும் மிடாஃபுக்கும் இடையே அபாரமாக பவுண்டரி அடித்தார். பிறகு கவரை காலியாக விட்டு கோலியை டிரைவ் ஆட வைத்து எட்ஜ் எடுக்கவைக்கும் முயற்சியில் லயன் ஒரு பந்தை வீச கோலி கவர் திசையிலேயே பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார். ஆனால் இதே ஓவரில்தான் அவர் 12 ரன்களில் இருந்த போது லயனின் ஸ்டம்பைக் குறிவைத்த ஆஃப் பிரேக் பந்தை ஆடாமல் விட முடிவெடுக்க கால்காப்பில் வாங்கினார் எல்.பி.என தீர்ப்பளிக்கப்பட்டது. ராகுலுடன் பேசி ரிவியூ செய்ய முடிவெடுத்தார், ஆனால் பெரிய திரையில் இவர் அவுட் என்று தெரிந்தவுடன் தீர்ப்புக்குக் காத்திருக்காமல் நடையைக் கட்டினார். விரயமான ரிவியூ. மீண்டும் அதிகமாக திரும்பும் என்று நினைத்து ஆடாமல் விட பந்து போதிய அளவு திரும்பியது.

அடுத்ததாக ரஹானே 2 பவுண்டரிகளுடன் திருப்தி அளிக்காத ஒரு இன்னிங்ஸில் 17 ரன்கள் எடுத்து லயன் வீசிய ஆஃப் பிரேக் பந்திற்கு மேலேறி வந்தார், பந்து திரும்பவில்லை மட்டையைக் கடந்து வேடிடம் சென்றது, வேட் சரியாகப் பந்தைச் சேகரிக்கவில்லை, ஆனால் ரஹானே கொஞ்சம் அதிகமாகவே கிரீசை விட்டு வந்ததால் ஸ்டம்ப்டு செய்யப்பட்டது.

ரஹானே ஆட்டமிழந்த பிறகு கருண் நாயர் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நன்றாகவே ஆடிவந்தார், 24 ரன்களுக்குப் பிறகே இவர் நின்று ஆடியிருக்க வேண்டும், ஆனால் நேதன் லயன், ஓகீஃப், கேப்டன் ஸ்மித் தனது களவியூகங்களினால் கொடுத்த் நெருக்கடி காரணமாக ஓகீஃப் வீசிய பந்துக்கு எந்த ஒரு திட்டமும் இல்லாமல் கிரீஸை விட்டு வெளியே வந்தார், காற்றில் பந்து மெதுவாக வர பிட்ச் ஆன பிறகு கருண் நாயர் தடுத்தாட முனைந்தார், ஆனால் பந்தை அவரால் எட்ட முடியாமல் போக மட்டையைக் கடந்து வேடின் ஸ்டம்புக்கு ஆளாகி வெளியேறினார்.

அஸ்வினுக்கு லயன் அருமையாக வீசி செட் செய்தார், முதலில் அவரை முன்னால் வந்து ஆட ஆடவைத்து ஒரு பந்தை பின்னால் சென்று ஆடுமாறு பணிக்க பந்து திரும்பி எழும்பியது மட்டையில் பட்டு வார்னரிடம் கேட்ச் ஆனது.

விருத்திமான் சஹா 1 ரன் எடுத்த நிலையில் இயல்பாக வீசப்பட்ட சாதாரண பந்துதான் ஆனால் பந்தின் திசையை மாற்றியது லயனின் சாதுரியம், பின்னால் சென்றார் சஹா பந்து திரும்பும் என்று நினைத்தார் திரும்பவில்லை தடுத்தாட எண்ணி மட்டையைக் கொண்டு சென்றார் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

ஜடேஜா தடவியபடிதான் ஆடினார். 16 பந்துகள் தடவி 3 ரன்கள் எடுத்த நிலையில் லயனின் நேரான பந்து ஒன்றில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்மித்திடம் கேட்ச் ஆனது, இதே பந்துக்கு எல்.பி.அப்பீலும் இருந்தது, 3-வது நடுவர் தீர்ப்பளித்தார்.

கே.எல்.ராகுல் அருமையாக ஆடி 90 ரன்கள் எடுத்து லயன் பந்தை ஸ்பின்னுக்கு எதிரான திசையில் கவர் டிரைவ் ஆட நினைத்தார், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். பந்து மட்டையின் மேல் பகுதியில் பட்டு பிறகு பாலோ த்ரூவில் காலில் பட்டு மிட் ஆபில் கேட்ச் ஆனது.

அடுத்த பந்திலேயே இசாந்த் சர்மா பேட்-பேடு கேட்ச் கொடுத்து வெளியேற இந்திய இன்னிங்ஸ் லயனின் அடுத்த இன்னிங்ஸ் ஹேட்ரிக் வாய்ப்புடன் 189 ரன்களுக்கு முடிவுற்றது.

ஆஸ்திரேலியா இன்றைய தினத்தில் இன்னும் 11 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/நேதன்-லயன்-8-விக்கெட்டுகள்-வீழ்த்தி-சாதனை-இந்திய-அணி-189-ரன்களுக்குச்-சுருண்டது/article9570874.ece?homepage=true

  • தொடங்கியவர்

புனேவில் 12 ரன்னில் 7 விக்கெட், இன்று 16 ரன்னில் 5 விக்கெட்: இந்தியாவின் மோசமான பேட்டிங்

புனேவில் 11 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்த இந்தியா, இன்று 16 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மோசமான பேட்டிங் தொடர்கிறது.

புனேவில் 12 ரன்னில் 7 விக்கெட், இன்று 16 ரன்னில் 5 விக்கெட்: இந்தியாவின் மோசமான பேட்டிங்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறும் என்று அனைவராலும் கணிக்கப்பட்டது.

ஆனால், புனேவில் கடந்த 23-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. புனே ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைமையில் இந்தியா இருந்தது. 94-வது ரன்னில் ராகுல் அவுட் ஆனார். பின்னர் இந்தியா 105 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி 12 ரன்னில் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் இந்தியாவால் அதில் இருந்து மீளமுடியவில்லை.

E6239D64-9088-4DE0-9029-D921EA4E2D57_L_s
அபிநவ் முகுந்தை அவுட்டாக்கிய சந்தோஷத்தில் ஸ்டார்க்

இந்தியாவின் பேட்டிங் சொதப்பல் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோன்ற மோசமான பேட்டிங் இனிமேல் இருக்காது’’ என்றார்.

ஆனால், இன்று பெங்களூருவில் தொடங்கிய 2-வது போட்டியிலும் இந்தியா பேட்டிங் வரிசை மண்ணைக் கவ்வியுள்ளது. லோகேஷ் ராகுலைத் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஐந்து பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 174-வது ரன்னில் அஸ்வின் அவுட் ஆனார். அதன்பின் இந்தியா 189 ரன்களில் ஆல்அவுட் ஆனது. கடைசி 16 ரன்னில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

D2F4DA49-5AD2-4C55-8570-B2E1B427C97D_L_s
90 ரன்கள் சேர்த்த லோகோஷ் ராகுல்

பெங்களூரு ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் வெடிப்பு காணப்பட்டது. அந்த இடத்தை மையப்புள்ளியாக வைத்து லயன் 8 விக்கெட்டுக்களை அள்ளிவிட்டார். புனேவில் தொடங்கிய இந்தியாவின் சொதப்பல் பேட்டிங், பெங்களூரிலும் தொடர்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/04185950/1071880/India-worst-batting-continued-today-lost-5-wicket.vpf

  • தொடங்கியவர்

அஸ்வினின் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டேன்: 8 விக்கெட் வீழ்த்திய லயன் சொல்கிறார்

பெங்களூரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதற்கு அஸ்வினின் ஏராளமான வீடியோக்களை பார்த்ததுதான் காரணம் என்று லயன் கூறியுள்ளார்.

 
அஸ்வினின் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டேன்: 8 விக்கெட் வீழ்த்திய லயன் சொல்கிறார்
 
புனேவில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் பேட்டிங்கை சாய்த்தார். தற்போது நாதன் லயன் பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

நான் அஸ்வின் பந்து வீசிய ஏராளமான வீடியோக்களை பார்த்தேன். அதனடிப்படையில் பந்து வீச முயற்சி செய்தேன். அத்துடன் என்னுடைய பவுன்சர் முறையையும் சேர்த்து அபாரமாக பந்து வீசினேன் என்று லயன் கூறியுள்ளார்.

இன்று 8 விக்கெட்டுக்கள் சாய்த்தது குறித்து லயன் கூறுகையில் ‘‘எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரம் எனக்கு மிகப்பெரியதாக அமைந்தது. இன்று என்னுடைய அபார பந்து வீச்சால், முதல்முறையாக இந்திய மண்ணில் சிரிப்பை வெளிப்படுத்துகிறேன்.

C9DBBA37-52ED-47FF-9055-056F5A546A20_L_s

பிக்பாஷ் தொடரின்போது ஜான் டேவிசன் உடன் இணைந்து அதிக அளவில் பயிற்சி எடுத்தேன். தினமும் அரைமணி நேரம் பந்து வீசினேன். அவருக்கு எல்லா வகையிலும் இந்த சிறப்பு சென்றடையும். சில இடங்களில் வெடிப்பு காணப்பட்டது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அஸ்வினின் ஏராளமான பந்து வீச்சு வீடியோக்களை பார்த்துள்ளேன். ஆனால் என்னுடைய சாதகமான பவுன்சர் யுக்தியை அத்துடன் இணைத்துக் கொண்டேன். துபாய் பயிற்சி மையத்தில் 200 ஓவர்கள் வீசினேன். பந்து வீச்சு குழுவுடன் இணைந்து கடின பயிற்சி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் இந்தியாவில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து அதிக அளவில் விவாதித்தோம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/04204039/1071887/I-watched-a-lot-of-Ashwin-tapes-Nathan-Lyon.vpf

  • தொடங்கியவர்

பெங்களூரு டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 237/6; 48 ரன்கள் முன்னிலை

பெங்களூரு டெஸ்டில் 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 
 
 
 
பெங்களூரு டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 237/6; 48 ரன்கள் முன்னிலை
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்திருந்தது. வார்னர் 23 ரன்னுடனும், ரென்ஷா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வார்னர் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

C0DBFF8E-FBA9-4903-A629-B230AD14A114_L_s

அடுத்து வந்து ஷேன் மார்ஷ் ரென்ஷாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்தனர். ரென்ஷா 60 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷேன் மார்ஷ் 66 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

CFC9F6EB-E5DD-40E8-B97B-C1D8F5E8BA31_L_s
60 ரன்கள் சேர்த்த ரென்ஷா

இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. வடே 25 ரன்னுடனும், ஸ்டார்க் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

E58986CE-CC56-4235-8C55-EC8AE70314B3_L_s
ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா

தற்போது வரை ஆஸ்திரேலியா 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளன. அந்த அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் இந்திய டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/05165555/1071993/Australia-battle-to-a-lead-of-48-runs-on-Day-2-of.vpf

  • தொடங்கியவர்

கோலியின் எதிர்மறையான சிந்தனை சக வீரர்களையும் ஒட்டிக் கொண்டது: மார்க் வாக் கடும் தாக்கு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் எதிர்மறையான சிந்தனை, அணியின் மற்ற வீரர்களுக்கும் தொற்றிக் கொண்டு இந்தியாவை பாதித்துவிட்டது என மார்க் வாக் குற்றம் சாட்டியுள்ளார்.

 
கோலியின் எதிர்மறையான சிந்தனை சக வீரர்களையும் ஒட்டிக் கொண்டது: மார்க் வாக் கடும் தாக்கு
 
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் 0, 13 ரன்கள் எடுத்த அவர், தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அவரது மூன்று வகையான அவுட்டும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். முதல் இன்னிங்சில் வெளியே சென்ற பந்தை அடித்து அவுட்டாகிய அவர், அடுத்த இரண்டு இன்னிங்சிலும் பந்தை எதிர்கொள்ளாமலேயே அவுட் ஆனார்.

முதல் போட்டியில் மோசமாக தோல்வியடைந்த பிறகு, ‘‘எப்படி விளையாடக்கூடாது என்பது புனே ஆட்டம் ஒரு எடுத்துக்காட்டு. இதுபோன்று ஒருபோதும் விளையாட மாட்டோம்’’ என்று கூறினார். ஆனால் பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது போட்டியில் இந்தியா 189 ரன்னில் சுருண்டது.

B7809E33-F392-479D-AD89-539E47331447_L_s

இந்தியாவின் மோசமான ஆட்டத்திற்கு விராட் கோலியின் எதிர்மறையான சிந்தனைதான் காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் வாக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்து மார்க் வாக் கூறுகையில் ‘‘பெங்களூரு டெஸ்டில் இந்தியாவின் செயல்பாடு, புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதற்கு எதிர்மறையாக உள்ளது. அவரது மூளை மங்கிவிட்டது. இரண்டு பீல்டர்களை இடது பக்கம் நிறுத்திய பின், லயனின் பந்து பவுன்சர் ஆவதற்கு முன் கோலியின் பேடை தாக்கும் என்பது எனக்குத் தெரியும்.

02026C37-AD8A-49EE-AF4F-7D6030DB1C06_L_s

அதிக அளவு நோக்கத்துடன் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்று கோலி தனது பார்வையில் இருந்து கூறியிருந்தார். ஆனால், இப்படி விளையாடக்கூடாது என்பது அவர் முக்கியமான காரணமாக இருந்து விட்டார்.

விராட் கோலி எதிர்மறையான எண்ணத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் பேட்ஸ்மேனை சுற்றி அதிக அளவில் பீல்டர்கள் உள்ளனர். பந்து பவுன்சர் ஆகினால் பந்து இன்சைடு எட்ஜ் ஆகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் இப்படி நினைக்கவே கூடாது. அவரால் அடிக்க முடியும் என்றால், அவனது தூக்கத்தில் கூட பந்து ரன்னாக முடியும்.

விராட் கோலி உண்மையிலேயே கொஞ்சம் நேர்மறையான சிந்தனையுடன் உள்ளார். அது அவரது சக அணி வீரர்களையும் ஒட்டிக்கொண்டது. பெங்களூர் முதல் நாள் ஆட்டத்தில் அவர்கள் வந்ததும் சென்றதுமாகவே இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டானது குறித்து அவர்களை நினைத்து பார்த்தால், மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/05192008/1072007/Negative-Kohli-affecting-India-Waugh.vpf

  • தொடங்கியவர்

வித்தியாசமான முகபாவனையால் மிரட்டிய வீரர்கள்

நெருக்கடிக்கு மத்தியில் 2-வது நாளில் களம் புகுந்த இந்திய வீரர்கள் நேற்று களத்தில் ரொம்ப ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நின்றனர். இதனால் முறைப்பு, சீண்டல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.

 
வித்தியாசமான முகபாவனையால் மிரட்டிய வீரர்கள்
 
பெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்து 48 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

நெருக்கடிக்கு மத்தியில் 2-வது நாளில் களம் புகுந்த இந்திய வீரர்கள் நேற்று களத்தில் ரொம்ப ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நின்றனர். இதனால் முறைப்பு, சீண்டல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. ஸ்டீவன் சுமித் நேராக அடித்த பந்தை அஸ்வின் பிடிக்க முயன்ற போது, அதை தடுக்கும் விதமாக எதிர்முனையில் அசையாமல் நின்ற ரென்ஷா மீது மோதினார். இதை பார்த்த கோலி எரிச்சலுடன் அவரை நோக்கி ஏதோ சொன்னார். பிறகு நடுவரிடமும் புகார் கூறினார்.

இதே போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த்ஷர்மா, எதிரணி வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்ட விதம் ரசிக்க வைத்தது. அவரது பந்தில் ஸ்டீவன் சுமித் தடுமாறிய போது, அவரை நோக்கி இஷாந்த் ஷர்மா வித்தியாசமான முகபாவனையுடன் உரத்த குரலில் கத்தியதை பார்க்க திகைப்பாக இருந்தது.

C333066B-F5C6-4422-96AF-8AA2F59AE3F7_L_s

அதை கண்ட சுமித் உள்பட அனைவரும் சிரித்து விட்டனர். அடுத்த பந்தை எதிர்கொண்ட பிறகு சுமித்தும் அதே போன்று ஆக்ரோஷமான முக பாவனையை வெளிப்படுத்தினார். இதே பாணியில் ரென்ஷாவும் பதிலடி கொடுக்க தவறவில்லை.

கோலியுடனான வாக்குவாதம் குறித்து ரென்ஷா கூறுகையில், ‘அந்த சம்பவத்தின் போது என் அருகே ஓடி வந்த விராட் கோலி, புனே டெஸ்ட் போன்று மீண்டும் ஆட்டத்தின் பாதியிலேயே கழிவறைக்கு போக வேண்டியது தானே என்று கூறினார். அவர் இவ்வாறு சொன்னதை நான் வேடிக்கையாக எடுத்துக் கொண்டு சிரித்தேன்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/06095614/1072057/players-are-intimidated-by-a-different-facial-expression.vpf

  • தொடங்கியவர்

276 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் 3 வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் ஜடேஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

_11434.jpg

அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 வது நாள் ஆட்டத்தில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் சார்பில் ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 66 ரன்களும் மேட் ரென்ஷா 60 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ள நிலையில் இந்தியா 87 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.