Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஸ்மித் சாதனை சதம், மேக்ஸ்வெல் 82* : ராஞ்சி டெஸ்ட்டில் ஆஸி. ஆதிக்கம்

 

 
 
 
  • ராஞ்சியில் சதம் எடுத்து நாட் அவுட்டாக திகழும் ஸ்மித். | படம்.| ராய்ட்டர்ஸ்.
    ராஞ்சியில் சதம் எடுத்து நாட் அவுட்டாக திகழும் ஸ்மித். | படம்.| ராய்ட்டர்ஸ்.
  • தோள்பட்டையில் காயமடைந்த விராட் கோலி. அருகில் அஸ்வின். | படம். பிடிஐ.
    தோள்பட்டையில் காயமடைந்த விராட் கோலி. அருகில் அஸ்வின். | படம். பிடிஐ.
 

ராஞ்சியில் தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸி.கேப்டன் ஸ்மித் சாதனை சதமெடுக்க, மேக்ஸ்வெல் அரைசதம் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த ஸ்டீவ் ஸ்மித், தனது 19-வது டெஸ்ட் சதத்தை 13 பவுண்டரிகளுடன் எடுத்து 117 ரன்களுடனும், 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் கிளென் மேக்ஸ்வெல் 147 பந்துகளில் 82 ரன்களுடனும் முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக இதுவரை 47.4 ஓவர்களில் 159 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

முன்னதாக 2013 தொடரில் மைக்கேல் கிளார்க், மேத்யூ வேட் இதே 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 145 ரன்களே ஆஸி. அணி இந்தியாவில் எடுத்த அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். இதனை ஸ்மித், மேக்ஸ்வெல் கூட்டணி தற்போது கடந்து சென்றது.

விராட் கோலி காயம்:

40-வது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங் செய்யும் போது ஒரு பவுண்டரியைத் தடுத்தார் ஆனால் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, இதனால் முதல் நாள் ஆட்டத்தில் பாதி நாள் அவர் களத்தில் இல்லை, இது நிச்சயம் ஒரு பெரிய வேறுபாடுதான், கோலி களத்தில் இருந்தாரென்றால் வேறு, அவர் இல்லையென்றால் அது வேறு. இதன் பலனை முழுதும் ஸ்மித், மேக்ஸ்வெல் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும்.

ஆனால் அவர் காயம் அவ்வளவு கடுமையானது இல்லை என்பதால் நாளை அவர் களமிறங்குவதில் சிக்கலில்லை என்றே தெரிகிறது.

ஸ்மித் சாதனை:

சதம் எடுப்பதற்கு முன்னரே ஆஸி. கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 97 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களைக் கடந்தார். இவருக்கு முன்னிலையில் டான் பிராட் மேன் 56 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களையும், மேத்யூ ஹெய்டன் 95 இன்னிங்ஸ்களிலும் 5,000 ரன்களைக் கடந்துள்ளனர், ஸ்மித் 3-வது இடத்தில் உள்ளார்.

மேலும் இந்தச் சதத்தின் இன்னொரு முக்கியச் சாதனை என்னவெனில் இந்தியாவில் ஒரே தொடரில் 2 சதங்களை எடுத்த ஒரே ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் ஸ்மித், மேலும் மே.இ.தீவுகளின் கிளைவ் லாய்ட், இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான இந்தியாவில் ஆடும் தொடரில் 2 சதங்களை அடித்து ஸ்மித் 3-ம் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் இதுவரை 2 சதங்களை அடித்து சதம் அடித்த ஒரே வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.

டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு, கோலியின் புகார்களுக்குப் பிறகு சதம் அடித்து நிரூபித்தாலும் அவர் அதனை பெரிதாகக் கொண்டாடவில்லை, முரளி விஜய் பந்தை பவுண்டரி அடித்து சதம் கண்ட ஸ்மித் தன் ஹெல்மெட்டைக் கழற்றி மட்டையை காண்பித்தார் அவ்வளவே. ஒருவேளை இன்னிங்ஸ் இத்துடன் முடிவடையவில்லை இன்னும் பெரிய இன்னிங்ஸாக மாறும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஸ்மித்தின் கவனமும், கட்டுக்கோப்பும் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததற்கு நேர் எதிரானது. பிட்சும் எதிர்பார்ப்புக்கு மாறாக முதல் நாளில் அவ்வளவு மோசமாக ஆடவில்லை. பவுன்ஸ் சீராக இருந்தது, ஸ்பின்னர்களுக்கு பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை.

காலையில் வார்னர், ரென்ஷா 9.4 ஓவர்களில் 50 ரன்கள் என்ற நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருவருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெளியேறினர். ரென்ஷா குறிப்பாக தொடக்க இசாந்த், உமேஷ் ஸ்விங்கை திறம்பட எதிர்கொண்டார், வார்னருக்கு உமேஷ் வீசிய ஒரு பந்து மட்டைக்கு அருகில் எழும்பிச் சென்றது, வார்னர் அதிர்ச்சியடைந்தார். 19 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ஜடேஜாவின் புல்டாஸை ஜடேஜாவிடமே கேட்ச் கொடுத்தார், பொதுவாக இப்படிப்பட்ட பந்துகளுக்கு கேட்சிற்காக ஒரு பவுலர் உஷாராக முடியாது, அதனால்தான் ஜடேஜாவின் இந்த கேட்ச் சிறப்பு வாய்ந்தது.

இரண்டு அருமையான பிளிக், ஒரு கட் என்று 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த ரென்ஷா, உமேஷ் யாதவ்வின் சற்றே விலகிச் சென்ற பந்தில் எட்ஜ் செய்து கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷான் மார்ஷ் 2 ரன்களில் அஸ்வினிடம் பேட்-பேடு கேட்சில் வெளியேறினார்.

ஹேண்ட்ஸ்கம்ப், ஸ்மித் இணைந்து 51 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை அபாரமாக வீசி வந்த தருணத்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஹேண்ட்ஸ்கம்ப் லேட் ஸ்விங் யார்க்கரில் காலில் வாங்கி எல்.பி.ஆனார். ஹேண்ட்ஸ்கம்பின் மட்டை பந்தின் திசைக்கு சரியாக வந்தாலும் அவர் காலை சரியான நேரத்தில் விலக்கிக் கொள்ளவில்லை, ஸ்மித் ரிவர்ஸ் ஸ்விங்கை ஆடுவதற்கும் ஹேண்ட்ஸ்கம்ப் ஆடுவதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

மேக்ஸ்வெல் இதற்கு முன்னர் எந்த வடிவமாக இருந்தாலும் அதிகம் சந்தித்த பந்துகள் 98 மட்டுமே, இன்று அதிகபட்சமாக 147 பந்துகளை சந்தித்துள்ளார். இன்று அவர் ரவீந்திர ஜடேஜாவை சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்தார் ஆட்ட முடிவில் 82 ரன்களுடன் இவர் நாட் அவுட்டாகத் திகழ்கிறார். ஸ்மித் 117 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஸ்மித்-சாதனை-சதம்-மேக்ஸ்வெல்-82-ராஞ்சி-டெஸ்ட்டில்-ஆஸி-ஆதிக்கம்/article9587541.ece?homepage=true&ref=tnwn

  • Replies 136
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஸ்மித்தின் கால்காப்புக்குள்ளிருந்து பந்தை எடுத்து அவுட் கேட்ட விருத்திமான் சஹா

 
ஸ்மித்தின் கால்காப்பில் புகுந்த பந்தை எடுத்து கேட்ச் பிடித்ததாக அப்பீல் செய்த சஹா. | படம்.| பிடிஐ.
ஸ்மித்தின் கால்காப்பில் புகுந்த பந்தை எடுத்து கேட்ச் பிடித்ததாக அப்பீல் செய்த சஹா. | படம்.| பிடிஐ.
 
 

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி திணறியதை எடுத்துக் காட்டும் விதமாக ஆட்டத்தின் 80-வது ஓவரில் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

ஸ்மித் அப்போது 97 ரன்களில் ஆடி வந்தார். 80-வது ஓவரை ஜடேஜா வீச 3-வது பந்தை ஸ்மித் ஆடும் முயற்சியில் பந்து ஸ்மித்தின் கால்காப்புக்குள் சென்று தஞ்சமடைந்தது.

அது மட்டையின் உள்விளிம்பில் பட்டு கால்காப்புக்குள் தஞ்சமடைந்ததாகக் கருதிய விருத்திமான் சஹா, பந்தை ஸ்மித்தின் கால்காப்புக்குள்ளிருந்து எடுக்க முயன்றார், இந்த முயற்சியில் ஸ்மித் பின் வாங்கி சமநிலை தவறி கீழே விழுந்தார், ஆனால் ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத’(!) ’விக்ரமாதித்த’ விருத்திமான் கீழே விழுந்த ஸ்மித்தின் மீது விழுந்து புரண்டு கால்காப்பிலிருந்து பந்தை எடுத்து அவுட் கேட்டார்.

அவர் அவுட் கேட்க நடுவர்கள் வயிறு குலுங்க சிரித்து விட்டனர். சில நாட்களுக்கு முன் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கர் பவுல்டுக்கு ரிவியூ கேட்ட வீடியோ வைரலானது. அதுபோல் இந்த விருத்திமான் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் பந்து இன்சைடு எட்ஜும் கிடையாது, மேலும் அது ‘டெட் பால்’ என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/ஸ்மித்தின்-கால்காப்புக்குள்ளிருந்து-பந்தை-எடுத்து-அவுட்-கேட்ட-விருத்திமான்-சஹா/article9587869.ece?homepage=true

  • தொடங்கியவர்

http://sportzsdk.hotstar.com/common/socialmedia/star/gifs/cricket/Saha's_funny_moment.gif

மரண ரோஃபல் மொமண்ட்! 1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png

அவர் அவுட் கேட்க நடுவர்கள் வயிறு குலுங்க சிரித்து விட்டனர். சில நாட்களுக்கு முன் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கர் பவுல்டுக்கு ரிவியூ கேட்ட வீடியோ வைரலானது. அதுபோல் இந்த விருத்திமான் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • தொடங்கியவர்

தோள்பட்டையில் விராட் கோலிக்கு பலமான காயங்கள் இல்லை: பிசிசிஐ அறிக்கை

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் போது வலது தோள்பட்டையில் காயத்தால் அவதிப்பட்ட கோலிக்கு பலமான காயங்கள் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 
தோள்பட்டையில் விராட் கோலிக்கு பலமான காயங்கள் இல்லை: பிசிசிஐ அறிக்கை
 
மும்பை:

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து தனது ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ஸ்மித் 117(244) ரன்களுடனும், மேக்ஸ்வெல் 82(147) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதில் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் ஆட்டத்தின் 40-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஹேண்ட்ஸ்காம்ப் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்தார். பந்து பவுண்டரி லைன் நோக்கி சென்ற பந்தை கேப்டன் கோலி பாய்ந்து தடுத்தார். அப்போது அவரது வலது தோள்பட்டை தரையில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் பீல்டிங் செய்யாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
A59B0EE2-5B7E-4FE2-928A-1BA7F4962FDB_L_s
அதன்பின்னர் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவரது காயம் பெரிய அளவில் இருக்குமோ என்ற அச்சம் நிலவியது. மேலும் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்குவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விராட் கோலியின் வலது தோள்பட்டையில் தீவிரமான காயங்கள் ஏதும் இல்லை என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தோள்பட்டை காயத்திற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விராட் கோலி, வேகமாக குணமாகி வருவதாகதெரிவித்துள்ளது. மேலும் இந்த காயம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

மேலும் போட்டி நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கோலி சிகிச்சை பெற்றுக்கொள்ள உள்ளதாக பிசிசிஐ மருத்துவக்குழு கூறியுள்ளது.

இதுகுறித்து பீல்டிங் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் காயம் பெரிய அளவிற்கு மாறிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகத்தான் அவரை பீல்டிங் செய்ய அனுமதிக்கவில்லை. அவர் வேகமாக சென்றதால் வலது தோள்பட்டை பலமாக தரையை தாக்கியது’’ என்றார்.

மேலும் ஒருவேளை நாளை காலை போட்டியின் போது அவர் பீல்டிங் செய்ய களமிறங்கவில்லை என்றால், இந்திய அணி பேட்டிங்கின் போது அவர் தனது ஆட்ட வரிசையில் 4வதாக இறங்காமல், கீழ் வரிசையில் களமிறங்குவார் என்றும் ஸ்ரீதர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/16234434/1074230/No-serious-concerns-over-Kohlis-shoulder-injury-BCCI.vpf

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

 

http://sportzsdk.hotstar.com/common/socialmedia/star/gifs/cricket/Saha's_funny_moment.gif

மரண ரோஃபல் மொமண்ட்! 1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png

அவர் அவுட் கேட்க நடுவர்கள் வயிறு குலுங்க சிரித்து விட்டனர். சில நாட்களுக்கு முன் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கர் பவுல்டுக்கு ரிவியூ கேட்ட வீடியோ வைரலானது. அதுபோல் இந்த விருத்திமான் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை நான் நேரில் பார்த்து  கண்ணால் தன்னி வர சிரித்தேன்.அது ஒகே.இப்ப உங்கள் இணைப்பை பார்த்து வீட்டில் சிரிக்க மனிசி ஒரு மாதிரியாய் பாக்கிறா.இன்னும் சிரிச்சு முடிய வில்லை.

  • தொடங்கியவர்

காயம்: விராத் கோஹ்லி விலகினார்

 

ராஞ்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய கேப்டன் கோஹ்லி பாதியில் விலகினார். பீல்டிங்கின் போது இவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று துவங்கியது. பீல்டிங்கின் போது இந்திய கேப்டன் விராத் கோஹ்லியின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக 'பெவிலியன்' திரும்பிய இவருக்கு 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' எடுக்கப்பட்டது. இதில் காயம் உறுதி செய்யப்பட்டது. இதனால் இவர், 10 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ராஞ்சி டெஸ்டில் இருந்து கோஹ்லி விலகினார். இவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ரகானே, அணியை வழிநடத்துவார். கோஹ்லியின் விலகல், இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1731714

 

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நடந்த சுவாரஸ்யமான துளிகள்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் நடந்த சில சுவாரஸ்மான நிகழ்வுகளை பார்க்கலாம்.

 
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நடந்த சுவாரஸ்யமான துளிகள்
ஸ்டீவன் சுமித்தின் கால்களுக்கு இடையே சிக்கிய பந்தை சஹா எடுத்து அவுட் கேட்டு அப்பீல் செய்த காட்சி.
ராஞ்சி :

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. முதல் இரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்ற நிலையில் முன்னிலை பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பை இந்த டெஸ்ட் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் அடித்து களத்தில் நிற்கிறார். இந்த போட்டியில் நடந்த சில சுவாரஸ்மான துளிகளை இப்போது பார்க்கலாம்.

* இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய்க்கு இது 50-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 29-வது இந்தியர் விஜய் ஆவார்.

* ராஞ்சியில் டெஸ்ட் கிரிக்கெட் நடப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 26-வது டெஸ்ட் மைதானமாகும். ஒட்டுமொத்த அரங்கில் 113-வது டெஸ்ட் மைதானமாகும்.

99123E9E-BF5B-42B3-B36C-3CBB6EF03BE5_L_s

* விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அடுத்தடுத்த டெஸ்டுகளில் மாற்றமின்றி அணியை ஒரு போதும் இறக்கியதில்லை. அந்த வினோதம் இந்த டெஸ்டிலும் நீடிக்கிறது. முகுந்துக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார்.

* ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 97 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ஜடேஜாவின் ஓவரை எதிர்கொண்டார். அப்போது பந்து அவரது இரண்டு கால்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. பந்து பேட்டில் உரசியதாக நினைத்த இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா உடனடியாக பந்தை அவரது கால்களுக்கு இடையே இருந்து எடுக்க முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி சுமித் கீழே விழுந்தார். ஆனாலும் விடாப்பிடியாக பந்தை எடுத்த சஹா அவுட் கேட்டு அப்பீல் செய்தார். நடுவர்களே அவரது செயலை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/17094629/1074261/3rd-Test-against-India-at-the-interesting-drops.vpf

  • தொடங்கியவர்

ராஞ்சி டெஸ்ட்: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 401/7

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை இழந்து 401 ரன்களை குவித்துள்ளது.

 
 
 
 
ராஞ்சி டெஸ்ட்: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 401/7
 
ராஞ்சி:
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
 
இந்நிலையில் இரு அணிகளிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதலில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 299 ரன்களை குவித்தது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 
 
87D48512-4FAF-4EDF-9917-5B5B1C55B50C_L_s
 
இதையடுத்து இன்று காலை துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட்களை இழந்து 401 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 153 ரன்களுடன் களத்தில் உள்ளார். 
 
இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா சார்பில்  உமேஷ் யாதவ் பவுலிங்கை துவங்கினார். முதல் அரை நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்கவில்லை. 
 
இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளை வரை 28 ஓவர்களை விளையாடிய ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 102 ரன்களை குவித்துள்ளது
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Australia 451
India 1/0 (1.1 ov)
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உமேஷ் யாதவின் 137 கி.மீ. வேகப் பந்தில் இரண்டாக உடைந்த மேக்ஸ்வெல் பேட்

ராஞ்சி டெஸ்டில் உமேஷ் யாதவ் 137 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து மேக்ஸ்வெல்லின் பேட்டை இரண்டாக உடைத்தது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.

 
உமேஷ் யாதவின் 137 கி.மீ. வேகப் பந்தில் இரண்டாக உடைந்த மேக்ஸ்வெல் பேட்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இதை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். உமேஷ் யாதவ் 137 கி.மீட்டர் வேகத்தில் வீசிய பந்தை மேகஸ்வெல் தடுத்தாடினார். அப்போது அவரது பேட் இரண்டாக உடைந்தது.

2E20068C-A401-499D-B18F-40E135ECC643_L_s

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம், அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் நகைச்சுவையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

7D8E960E-F113-4026-8ED1-C6E7F2AF191A_L_s

பின்னர் மேக்ஸ்வெல் அதே ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த இன்னிங்சில் அவர் 104 ரன்கள் சேர்த்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/17161624/1074364/Umesh-Yadav-Broke-Glenn-Maxwell-Bat-Into-Two.vpf

  • தொடங்கியவர்

டோனி ஸ்டைலில் ராஞ்சி டெஸ்டில் ரன்அவுட் செய்து அசத்திய ஜடேஜா

ராஞ்சி டெஸ்டில் டோனி ஸ்டைலில் ஹசில்வுட்டை ரன்அவுட் செய்து ஆஸ்திரேலிய அணியை 451 ரன்னில் ஆல்அவுட்டாக்கி அசத்தினார் ரவீந்திர ஜடேஜா.

 
 
டோனி ஸ்டைலில் ராஞ்சி டெஸ்டில் ரன்அவுட் செய்து அசத்திய ஜடேஜா
 
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பர் பணியிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பிங் செய்யும் வல்லமை படைத்தவர்.

டோனி எப்போதும் பந்தை ஸ்டம்பிற்கு பின் நின்று பிடிக்கமாட்டார். பீல்டிங் செய்து வீசப்படும் பந்தை ஸ்டம்பிற்கு முன்பக்கம் சென்றுதான் பிடிப்பார். பேட்ஸ்மேன்கள் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது ஸ்டம்பிற்கு முன்பக்கம் நின்று பந்தை பிடித்து பின்னால் பார்க்காமல் அப்படியே ஸ்டம்பை குறிபார்த்து தாக்குவதில் டோனி வல்லவர். இப்படி ஏராளமான ரன்அவுட்டை செய்து அசத்தியுள்ளார் டோனி். இப்படி ஒரு ரன்அவுட்டை இன்று ரவீந்திர ஜடேஜா செய்து அசத்தியுள்ளார்.

338D6962-3EAB-4507-8539-58BCAB811D2A_L_s

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ராஞ்சி டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா 450 ரன்கள் எடுத்திருக்கும்போது ஜடேஜா வீசிய பந்தை ஸ்மித் லெக்சைடு அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு ஓடினார். மறுமுனையில் ஹாசில்வுட் கிரீசை தொட இருக்கையில் பந்தை ஸ்டம்பிற்கு மிகவும் முன்பகுதியில் இருந்து பிடித்த ஜடேஜா, அப்படியே பின்னோக்கி வீசினார். அந்த பந்து ஸ்டம்பை சரியாகத் தாக்கியது. இதனால் ஹாசில்வுட் ஆவுட் ஆனார். ஆஸ்திரேலியாவும் 451 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

ஜடேஜா ரன்அவுட் செய்தது டோனியின் ரன்அவுட் யுக்தியை ஞாபகப்படுத்தியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/17194115/1074405/Ravindra-Jadeja-pulls-off-a-no-look-back-flick-run.vpf

  • தொடங்கியவர்

இந்தியா நிதான ஆட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

Murali Vijay

இந்தியா, ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 178 ரன்களும், மேக்ஸ்வெல் 104 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் ஜடேஜா 5 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள், அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை துவங்கியது. ராகுல் மற்றும் விஜய் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இதற்கிடையே, ராகுல் 67 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 42 ரன்களுடனும், புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.  ஆஸ்திரேலிய அணியின் கமின்ஸ் 1 விக்கெட் எடுத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட, இந்திய அணி 331 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

http://www.vikatan.com/news/sports/83911-india-1201-stumps-on-day-3-vs-australia.html

  • தொடங்கியவர்

கட்டாயம் தேவை என்றால் மட்டுமே கோலி பேட்டிங் செய்ய வேண்டும்: கவாஸ்கர் அறிவுரை

 

ராஞ்சி டெஸ்டில் கட்டாயம் தேவை என்றால் மட்டுமே விராட் கோலி பேட்டிங் செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
 
கட்டாயம் தேவை என்றால் மட்டுமே கோலி பேட்டிங் செய்ய வேண்டும்: கவாஸ்கர் அறிவுரை
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்யவில்லை.

நேற்றிரவு ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காயம் பெரிய அளவில் இல்லை என்பது தெரியவந்தது. இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டி என்பதால் கோலி பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கோலி பேட்டிங் செய்வார் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணயின் முன்னாள் கேப்டனும், டி.வி. வர்ணனையாளருமான கவாஸ்கர், தேவைப்பட்டால் மட்டுமே கோலி பேட்டிங் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கோலியின் காயம் பெரியதாக இல்லை. ஆனால், அவர் ஒரு மனிதன்தான். ஆகையால், மைதானத்தில் களம் இறங்கி விளையாடத்தான் ஆசைப்படுவார். உண்மையிலேயே, அவர் பீல்டிங் செய்யாமல் இருப்பது, அவர்கள் என்ன சொன்னார்களோ, அதை சற்று அதிகமாகத்தான் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் நான்காவது போட்டிக்கு உடற்தகுதி பெற முடியும்.

76353D56-CE9C-4EF7-8832-9F6713B86350_L_s

இந்திய அணியின் விக்கெட்டுக்கள் திடீரென சரிந்து, ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் முன்னிலை வகிக்க விடக்கூடாது என்ற நிலை வந்தால் மட்டுமே விராட் கோலி பேட்டிங் செய்ய வேண்டும். கோலி பேட்டிங் செய்யாமல் இருப்பது மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பொறுத்துதான் இருக்கிறது. தற்போது வரை ஆடுகளம் நல்ல நிலைமையில்தான் இருக்கிறது. ஆடுகளத்தில் பெரிய அளில் டர்ன் இல்லை. மோசமான பவுன்ஸ், சீமிங்கும் இல்லை. இந்தியா நாளை முழுவதும் பேட்டிங் செய்வது அவசியம். அவர்கள் முழு நேரம் பேட்டிங் செய்தால் விராட் கோலிக்கு நாளை முழுவதும் ஓய்வு கிடைக்கும்.

ரகானே 4-வது வீரராகவும், கருண் நாயர் ஐந்தாவது இடத்திலும், அஸ்வின் 6-வது இடத்திலும், சகா 7-வது இடத்திலும் களம் இறங்க வேண்டும். அவர்கள் பேட்டிங் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, நாளை முழுவதும் பேட்டிங் செய்தால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ரன்னை நெருங்க முடியும். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அதிக அளவில் முன்னணி பெற்று விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/17205248/1074411/Sunil-Gavaskar-Advises-Virat-Kohli-to-Bat-Only-if.vpf

  • தொடங்கியவர்
Australia 451
India 212/2 (79.2 ov)
India trail by 239 runs with 8 wickets remaining in the 1st innings
  • தொடங்கியவர்

டெஸ்ட்: சதத்துடன் ஆஸி.யின் சவாலை எதிர்கொண்ட புஜாரா!

 

 
pujara564

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் புஜாரா அற்புதமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 178 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 185 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 42, புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடர்ந்தபோது மிகவும் கவனமாக ஆடிய முரளி விஜய் அரை சதம் எடுத்தார். 129 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் அவர் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

விஜய் - புஜாரா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி 100 ரன்கள் வரை சேர்த்தார்கள். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸ்டம்பிங் ஆகி 82 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். சதமடிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

இன்றைய நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 73 ரன்கள் சேர்த்துள்ளது. 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 70.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. புஜாரா 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின்போது பந்து பவுண்டரிக்கு செல்வதை பாய்ந்து சென்று தடுத்தார் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் காயமடைந்த கோலி, 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். ஆனால் 2-வது நாள் ஆட்டத்தின்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தோள்பட்டையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் அவுட் ஆனபின்பு ஆடவந்தார் கோலி.

உணவு இடைவேளைக்குப் பிறகு, 155 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் புஜாரா. இந்த டெஸ்டிலாவது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

கோலி சென்றபிறகு ரஹானே களத்துக்குள் வந்தார். மீண்டும் இன்னொரு புஜாரா - ரஹானே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்பியபோதும் புஜாரா கவனமாக ஆடிவந்தார். 214 பந்துகளில் சதம் எடுத்து அசத்தினார் புஜாரா. இதில் 14 பவுண்டரிகள்.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 109, நாயர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்றைய நாளின் முடிவில் ஆஸி.-யின் ஸ்கோரை இந்தியா எட்டிவிடுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் ஆஸி. அணியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியைத் தடுமாறச் செய்தது. நாளின் கடைசிப் பகுதியில் அதிக ரன்கள் குவிக்கலாம் என்று திட்டமிட்ட நிலையில் அதை நிறைவேற்றமுடியாத அளவுக்குச் சூழல் மாறிப்போனது. முச்சதத்துக்குப் பிறகு ரன்கள் குவிக்கத் தடுமாறும் கருண் நாயர், இந்த ஆட்டத்திலும் ஏமாற்றினார். 23 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். இந்தத் தொடரில் ரன்கள் எடுக்கத் தடுமாறும் இன்னொரு வீரர் அஸ்வின். ஆனால் அவரும் 3 ரன்களில் டிஆர்எஸ் முறையீட்டுக்குப் பிறகு அவுட் ஆகி ஏமாற்றினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா - சாஹா ஜோடி இறுதிவரைப் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.

3-ம் நாளின் முடிவில் இந்திய அணி 130 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130, சாஹா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/mar/18/டெஸ்ட்-சதத்துடன்-ஆஸியின்-சவாலை-எதிர்கொண்ட-புஜாரா-2668392.html

  • தொடங்கியவர்

ராஞ்சி டெஸ்ட்: புஜாராவை அவுட்டாக்க முடியாததால் மாற்று தந்திரத்தை கையாண்ட ஆஸ்திரேலியா

ராஞ்சி டெஸ்டில் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலையாக நின்ற புஜாராவை வீழ்த்த முடியாததால் மாற்றுத் தந்திரத்தை கையாண்டது ஆஸ்திரேலியா.

 
ராஞ்சி டெஸ்ட்: புஜாராவை அவுட்டாக்க முடியாததால் மாற்று தந்திரத்தை கையாண்ட ஆஸ்திரேலியா
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுக்களை இழந்து 240 ரன்கள் சேர்த்துள்ளது. ஒரு நாள் முழுவதும் சுமார் 90 ஓவரில் 240 ரன்கள் என்பது மிகவும் குறைவுதான். ஒரு ஓவருக்கு சராசரியாக 3 ரன்கள் கூட வரவில்லை.

இந்த ஆடுகளத்தில் ரன்அடிக்க மிகவும் கடினமாக இருந்தது என்றாலும், ஆஸ்திரேலியா சிறந்த வகையில் பந்து வீசி நெருக்கடி கொடுத்தது. 328 பந்துகளை சந்தித்து 130 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ள புஜாரா, இன்றைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை 139 பந்தில் 40 ரன்கள்தான் எடுத்திருந்தார். நேற்றைய ஆட்ட முடிவில் 26 பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்று மதிய உணவு இடைவேளை வரை 139 பந்தில் 40 ரன்கள்தான் சேர்த்திருந்தார். முதல் செசனில் 113 பந்தில் 30 ரன்கள் எடுத்திருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்த பின் ஆட்டம் தொடங்கியது. 155 பந்தில் புஜாரா அரை சதத்தை தாண்டினார்.

அதன்பின் புஜாரா, தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். 214 பந்தில் சதத்தை தொட்டார். தேனீர் இடைவேளையின்போது 232 பந்தில் 109 ரன்கள் சேர்த்திருந்தார். அதாவது மதிய இணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய செசனில் 93 பந்தில் 69 ரன்கள் சேர்த்தார்.

இதனால் தேனீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி யோசனை செய்தது. தற்போதைய நிலையில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கவில்லை. அதே சமயம் அவரை அவுட்டாக்கும் நோக்கத்தில் விளையாடினால் அதிக அளவில் ரன்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே, இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஓ'கீபே-யை ஒருபக்கம் புஜாராவிற்கு பந்து போட வைக்க வேண்டும். அவர் லெக் ஸ்டம்பிற்கு வெளியே தொடர்ந்து பந்து வீசினால் புஜாரா காலால் தடுத்து விளையாடுவார். இதனால் ரன்கள் குவிக்க இயலாது என்று திட்டம் தீட்டினார்கள். அதே சமயத்தில் மறுமுனையில் வேகப்பந்து மூலம் நெருக்கடி கொடுத்து மற்ற வீரர்களை அவுட்டாக்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.

5EED29B1-9877-46A3-A8A4-EE460D583E70_L_s

இதன்படியே தேனீர் இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தில் தங்களது தந்திரங்களை வெளிப்படுத்தியது. இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் புஜாரா 328 பந்தில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி செசனில் இந்தியா 31 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புஜாரா கடைசி செசனில் 94 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். எதிர்முனையில் விராட் கோலி, ரகானே, கருண் நாயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/18200755/1074603/Ranchi-Test-australia-Strategy-against-pujara-in-last.vpf

  • தொடங்கியவர்

ராஞ்சி டெஸ்ட்: இந்தியா 603 ரன்கள் குவித்து டிக்ளேர்; 152 ரன்கள் முன்னிலை

ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் 152 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ராஞ்சி டெஸ்ட்: இந்தியா 603 ரன்கள் குவித்து டிக்ளேர்; 152 ரன்கள் முன்னிலை
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 178 ரன்னும், மேக்ஸ்வெல் 104 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவை விட 91 ரன்கள் பின்தங்கியிருந்தது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் ஆடுகளத்துடன் ஒட்டிக் கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலியா எவ்வளவு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. அந்த அணி நான்கு ரிவியூ வாய்ப்பையும் பயன்படுத்தி வீணாக்கியது.

இன்றைய 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடியது. அதன்பின்பு தேனீர் இடைவேளை வரையும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். இந்தியா தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்திருந்தது. இரண்டு செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் அபாரமாக விளையாடினார்கள்.

புஜாரா 190 ரன்னுடனும், சகா 99 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சகா ஒரு ரன் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் விளாசினார் புஜாரா.

02CA9F92-DDBD-4EA9-9BFE-DD7E4DCA486D_L_s

சகா சதமும், புஜாரா இரட்டை சதமும் அடித்த பின்னர் அதிரடியாக விளையாட முடிவு செய்தனர். இதனால் புஜாரா 202 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ரன்னை எடுக்க அவர் 525 பந்துகளை சந்தித்தார். அடுத்து வந்த ஜடேஜாவும் அதிரடியாக விளையாடினார்.

சகா 233 பந்துகளை சந்தித்து 117 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். உமேஷ் யாதவை ஒரு முனையில் வைத்துக் கொண்டு ஜடேஜா அதிரடி காட்டினார். ஜடேஜா 46 ரன்கள் எடுத்திருக்கும்போது உமேஷ் யாதவ் அவுட் ஆனார்.

210-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஜடேஜா அரைசதம் அடித்தார். அவர் 51 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதே ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது இந்தியா 9 வி்க்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 210 ஓவர்களை சந்தித்து 9 வி்க்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்துள்ளது.

323D301D-4344-4BF3-BF0C-AE7A416AA2FD_L_s

இந்தியா முதல் இன்னிங்சில் 152 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று குறைந்தது 8 ஓவருக்குமேல் இருக்கிறது. இன்றைய ஆட்டம் முடிவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினால், இந்தியாவிற்கு சாதகமாக இந்த போட்டி மாறலாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/19162112/1074683/Ranchi-Test-india-603-runs-declare-in-1st-innings.vpf

  • தொடங்கியவர்

ராஞ்சி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 23/2; வார்னர், லயன் அவுட்

ராஞ்சி டெஸ்டில் ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்ட முடிவில் 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. வார்னர், நைட்வாட்ச்மேன் லயன் ஆட்டமிழந்தனர்.

 
ராஞ்சி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 23/2; வார்னர், லயன் அவுட்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. புஜாரா, சகா ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவை விட 152 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இன்றைய நான்காவது நாளில் 8 ஓவரை சந்திக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.  வார்னர், ரென்ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். 2-வது ஓவரை ஜடேஜா விசினார். இடது கை பந்து வீச்சாளர்களுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை பிட்ச் செய்யும் இடத்தில் அதிக அளவில் கரடுமுரடாக ஆடுகளம் மாறியிருந்தது. இதனால் ஜடேஜாவிற்கு பந்து அதிக அளவில் டர்ன் ஆனது.

ஜடேஜா வீசிய 2-வது ஓவரின் நான்கு ரன்கள் எடுத்தனர். 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் வார்னர் ஒரு பவுண்டரி அடித்தார். 4-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 1 ரன் எடுக்கப்பட்டது.

6-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை அந்த கரடுமுரடான இடத்தில் (Rough) பிட்ச் செய்தார். வார்னர் காலை முன்னால் வைத்து ஆட முயற்சி செய்தார். பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையில் சென்று ஸ்டம்பை தாக்கியது.

5E3A5994-71B8-4B5A-870B-AB91FCC99E40_L_s


இன்றைய நாளின் கடைசி ஓவரான 8-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் நைட்வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் ஸ்டம்பை பறிகொடுத்தார். அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது ஆஸ்திரேலியா 129 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரென்ஷா 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். நாளை கடைசி நாளில் ரென்ஷாவுடன் ஸ்மித் ஜோடி சேர்வார். இந்த ஜோடியை விரைவில் பிரித்து விட்டால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் வார்னரைத் தவிர ரென்ஷா, ஷேன் மார்ஷ், வடே மற்றும் ஹசில்வுட் ஆகிய நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்கள் ஜடேஜா பந்தை எதிர்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/19182815/1074705/Australia-losses-2-wickets-in-4th-day-end-india-leads.vpf

  • தொடங்கியவர்

525 பந்துகளை சந்தித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய புஜாரா

ராஞ்சி டெஸ்டில் புஜாரா 525 பந்துகளை சந்தித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். சுமார் 8 3/4 மணி நேரம் களத்தில் நின்று அசத்தியுள்ளார்.

 
 
 
 
525 பந்துகளை சந்தித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய புஜாரா
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 178 ரன்கள் அடித்தார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. 3-வது நபராக களம் இறங்கிய புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்த அவர், 525 பந்தில் 21 பவுண்டரியுடன் 202 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சுமார் 8 3/4 மணி நேரம் களத்தில் நின்றார்.

525 பந்துகளை சந்தித்த புஜாரா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்விவரம் வருமாறு-

1. 521 பந்தில் இரட்டை சதம் அடித்தன் மூலம் மெதுவாக இரட்டை சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் பி. குருப்பு 548 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார். அதன்பின் மார்வன் அட்டப்பட்டு 531 பந்திலும், டி.ஹௌட்டன் 524 பந்திலும், கேரி கிர்ஸ்டன் 522 பந்திலும், தற்போது புஜாரா 521 பந்திலும், கிராண்ட் பிளவர் 520 பந்திலும் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

CCCFAA01-FB7D-4654-95E3-35E3F46A14DD_L_s

2. 505-வது பந்தை சந்திக்கும்போது இந்திய மண்ணில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 2005-ல் பெங்களூருவில் 504 பந்துகளை சந்தித்ததுதான் அதிகபட்ச பந்துகளாக இருந்தது. தற்போது 525 பந்துகளை சந்தித்து புஜாரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2010-ம் ஆண்டு அம்லா 473 பந்துகளை சந்தித்து 3-வது இடத்தில் உள்ளார்.

3. 496 பந்துகளை சந்தித்த போது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டிராவிட் 2004-ம் ஆண்டு ராவல் பிண்டியில் 495 ரன்கள் எடுத்ததே இந்திய பேட்ஸ்மேன் சந்தித்த அதிகபட்ச பந்தாக இருந்தது. சித்து 491 பந்துகளை சந்தித்து தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.

D2912219-A320-49EA-9EC6-A4CE88044F72_L_s

4. புஜாரா இதற்கு முன்பு 2012-ல் இங்கிலாந்திற்கு எதிராக அதிகபட்சமாக 389 பந்துகளையும், அதே ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக மும்பையில் 350 பந்துகளையும் சந்தித்திருந்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/19155749/1074681/Pujara-record-Most-balls-faced-in-an-innings-in-India.vpf

  • தொடங்கியவர்

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவர் செய்த காமெடி

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில் நடுவர் கிறிஸ் கேபனி (நியூசிலாந்து) செய்த காமெடி அனைவரையும் சிரிக்க வைத்தது.

 
 
 
 
ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவர் செய்த காமெடி
 
ராஞ்சி :

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா இரட்டை சதமும், சஹா சதமும் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்திய வீரர் புஜாரா 142 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை விளாச முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டின் கையில் சிக்கியது. விக்கெட் கீப்பரோ, பந்து வீசிய ஹேசில்வுட்டோ அவுட் கேட்டு அப்பீல் செய்யவில்லை.

29C93125-59FE-4218-838A-0567F389D378_L_s

அதற்குள் நடுவர் கிறிஸ் கேபனி (நியூசிலாந்து) அவுட் என்பது போல் விரலை உயர்த்த தொடங்கினார். பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்யாததால் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக தூக்கிய விரலை அப்படியே தொப்பி மீது சொறிந்தபடி சமாளித்து விட்டார்.

அவரது செயல் விக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களை திகைப்புக்குள்ளாக்கியது. அதே நேரத்தில் மற்றவர்கள் நடுவரின் காமெடியை கண்டு சிரித்து விட்டனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/20090720/1074762/Ranchi-Test-cricket-umpire-comedy.vpf

  • தொடங்கியவர்

தோள்பட்டை காயம் குறித்து கேலி: பதிலடி கொடுத்த விராட் கோலி

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டின் 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்த போது அவரை வெறுப்பேற்றும் விதமாக விராட் கோலி தனது தோள்பட்டையை தட்டிகாட்டியபடி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

 
 
 
 
தோள்பட்டை காயம் குறித்து கேலி: பதிலடி கொடுத்த விராட் கோலி
 
இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டல் ராஞ்சி டெஸ்டிலும் தொடருகிறது. 3-வது நாள் ஆட்டத்தின் போது பந்தை பவுண்டரி அருகே பாய்ந்து விழுந்து தடுத்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலியை போன்று தன் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வலிப்பது போல் நடித்து கேலி செய்தார்.

இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று சுடச்சுட பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்த போது அவரை வெறுப்பேற்றும் விதமாக தனது தோள்பட்டையை தட்டிகாட்டியபடி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/20095157/1074773/India-vs-Australia-match-Virat-Kohli-Gives-David-Warner.vpf

Australia 451 & 131/4 (57.0 ov)
India 603/9d
Australia trail by 21 runs with 6 wickets remaining
  • தொடங்கியவர்

ராஞ்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: தொடரை நிர்ணயிக்கிறது தரம்சாலா

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

 
 
 
 
ராஞ்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: தொடரை நிர்ணயிக்கிறது தரம்சாலா
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 152 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. ரென்ஷா 7 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ரென்ஷாவுடன் ஸ்மித் களம் இறங்கினார். ரென்ஷா 15 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்மித் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

அப்போது ஆஸ்திரேலியா 29.1 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

புஜாரா - சகா ஜோடி எப்படி இந்தியாவை மீட்டதோ, அதேபோல் இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து மீட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய 2-வது செசனிலும், அதன்பின் நடைபெற்ற 3-வது செசனிலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

D1ED46BB-D833-431B-BCA9-E9A8DA436293_L_s

இதற்கிடையே ஒன்றிரண்டு ரன்களாக திரட்டி இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 35 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தபோது மார்ஷ் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

7-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் உடன் வடே ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 100 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்னுடனும், வடே 9 ரன்னுடனும் களத்தில் இருந்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

16983DFA-C8B3-42E4-94C4-1B81CD34534B_L_s

ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி 25-ந்தேதி தரம்சாலாவில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். இதனால் தரம்சாலா போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் முதல் நாளில் இருந்தே போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/20163058/1074914/Ranchi-Test-Draw-series-decided-in-dharamsala-Test.vpf

  • தொடங்கியவர்

ராஞ்சி டெஸ்ட்: இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை நேரில் வந்து பார்த்தார் டோனி

 

ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை மகேந்திர சிங் டோனி நேரில் வந்து கண்டு ரசித்தார். இந்த போட்டி டிராவில் முடிந்தது.

 
 
ராஞ்சி டெஸ்ட்: இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை நேரில் வந்து பார்த்தார் டோனி
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் கடந்த 16-ந்தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் சொந்த ஊர் ராஞ்சி. ராஞ்சி மைதானத்திற்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

தனது சொந்த ஊர் மைதானம் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ளதால், முதல் நாள் ஆட்டத்தை நேரில் வந்து கண்டுகளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றதால் அவரால் ராஞ்சி மைதானத்திற்கு வரமுடியவில்லை.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் ஜார்கண்ட் அணி பெங்கால் அணியிடம் வீழ்ந்தது. இதனால் டோனி டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் இன்று மதியத்திற்குப்பின் திடீர் பயணமாக ராஞ்சி மைதானம் வந்து ஆட்டத்தை ரசித்தார்.

ஆட்டம் முடியும் வரை மைதானத்தில் இருந்து போட்டியை பார்த்தார். டோனியை டி.வி. ஸ்கிரீனில் காண்பித்தபோது உள்ளூர் ரசிகர்கள் டோனி... டோனி... என உற்சாக குரல் எழுப்பினார்கள்.

2014-ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/20184958/1074949/India-vs-Australia-MS-Dhoni-pays-a-visit-on-final.vpf

  • தொடங்கியவர்

62 ஒவர் நின்று இந்தியாவின் வெற்றியை பறித்த ஷேன் மார்ஷ்- ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி

 

 
 

ராஞ்சி டெஸ்டில் 62 ஓவர்கள் நிலைத்து நின்ற ஆஸி.யின் ஷேன் மார்ஷ் - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி, இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டது.

 
 
 
 
62 ஒவர் நின்று இந்தியாவின் வெற்றியை பறித்த ஷேன் மார்ஷ்- ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டி இன்று டிராவில் முடிந்தது. எப்படியும் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஷேன் மார்ஷ்- ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி அதை முறியடித்துவிட்டது.

முதல் இன்னிங்சில் 152 ரன்கள் பினதங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஆட்டம் தொடங்கியதும் மதிய உணவு இடைவேளைக்கு முன் முக்கிய பேட்ஸ்மேனான ரென்ஷா மற்றும் ஸ்மித் ஆகியோரை இழந்தது.

அதன்பின் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றியது.

48534B81-3100-4698-8278-908F772E014B_L_s

இருவரும் இணைந்து 62 ஓவர்களை சமாளித்து விட்டனர். 29.1-வது ஓவரில் ஸ்மித் அவுட்டான பிறகு 91.2-வது ஓவரில்தான் ஷேன் மார்ஷ் ஆட்டம் இழந்தார். 197 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார் மார்ஷ். ஹேண்ட்ஸ்காம்ப் 200 பந்தில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இருவரும் இணைந்து 397 பந்துகளை சந்தித்துள்ளனர். 100 ஓவரில் இவர்கள் 66.1 ஓவர்களை சமாளித்தனர். இதனால் இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/20191021/1074953/Ranchi-Test-Shane-Marsh-Handscomb-Snatched-india-victory.vpf

  • தொடங்கியவர்

110 ஓவரில் வெறும் 3 விக்கெட்டுகள்: ராஞ்சியில் அஸ்வின், லயன் ஜொலிக்காத காரணம் என்ன?

ராஞ்சி டெஸ்டின் ஆஃப் ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் நாதன் லயன் ஜொலிக்காததற்கு மிட்செல் ஸ்டார்க் களத்தில் இல்லாததுதான் காரணம் என கங்குலி கூறியுள்ளார்.

 
110 ஓவரில் வெறும் 3 விக்கெட்டுகள்: ராஞ்சியில் அஸ்வின், லயன் ஜொலிக்காத காரணம் என்ன?
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. சுழற்பந்து வீச்சில் இந்திய வீரர் ஜடேஜா மட்டும் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

லெக் ஸ்டம்பிற்கு சற்று வெளியே ஆடுகளம் கரடுமுரடாக (rough) மாறியிருந்தது. அந்த இடத்தை பயன்படுத்தி இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினார்.

ஆனால் ஆஃப் ஸ்டம்பிற்கு வலது புறம் ஐந்து நாட்கள் ஆகியும் ஆடுகளம் கரடுமுரடாக மாறவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 34 ஓவர்கள் வீசிய அஸ்வின் 114 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே அடங்கும். 2-வது இன்னிங்சில் 30 ஓவர்கள் வீசி 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். 10 மெய்டன் ஓவர்கள் வீசினார்.

ஆஸ்திரேலியாவின் வலது கை சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் முதல் இன்னிங்சில் 46 ஒவர்கள் வீசி 163 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும். 2-வது இன்னிங்சில் பந்து வீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

தலைசிறந்த பந்து வீச்சாளர்களான இவர்கள் இரண்டு பேரும் 110 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளனர். இதற்கு மிட்செல் ஸ்டார்க்கின் மிஸ்சிங்தான் காரணம் என்று கங்குலி கூறியுள்ளார்.

9E335FAE-0910-4EE3-9C98-799268EC7A4B_L_s

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் ஓவர் தி ஸ்டிக் எடுத்து பந்து வீசுவார். இதனால் அவர் கால் பதிக்கும் இடம் கரடு முரடாக மாறும். அப்படி மாறினால் அந்த இடத்தில் ஆஃப் ஸ்பின்னர் பந்து வீசும்போது அதிக அளவில் டர்ன் ஆகும். அந்த வாய்ப்பில்லை.

AA3B4D8A-2A53-47EB-A43F-C489DA15FCEC_L_s

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ராஞ்சி டெஸ்டில் ஆஃப் ஸ்பின்னர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை. இதற்கு காரணம் மிட்செல் ஸ்டார்க் இல்லாததுதான். அவர் இல்லாததால் ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே கரடுமுரடான (Rough) பகுதி உருவாகாமல் போய்விட்டது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/21171512/1075155/Mitchell-Starc-absence-caused-off-spinners-pale-show.vpf

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/21171512/1075155/Mitchell-Starc-absence-caused-off-spinners-pale-show.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.