Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் பதவிக்கு மோதும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி

Featured Replies

முதல்வர் பதவிக்கு மோதும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி

 

 
edapadiops_3133206f.jpg
 
 
 

ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என 2 தரப்புகளும் உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட் டார். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 7-ம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத் தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து அதிமுக வில் சர்ச்சை வெடித்தது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி யும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் கடந்த 9-ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்கு மாறு வலியுறுத்தினர்.

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமையும் என்று நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த் துக் கொண்டிருக்கும் சூழலில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று கூறிய உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் சசிகலாவால் முதல்வர் பதவி ஏற்க இயலாத நிலை ஏற்பட் டுள்ளது.

தீர்ப்பு வந்தவுடன் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டினார். அதில் அதிமுகவின் சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் அழைப்பின் பேரில் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்களுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு ராஜ்பவனுக்கு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுநரை சந்தித்து அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத் தையும் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்ட 13 பேர் வந்திருந் தனர்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இரவு 7 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

விரைவில் ஆளுநர் முடிவு

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டி ருந்த வி.கே.சசிகலாவுக்கு அக்கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தும் கூட அவரை பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை முடிவு செய்ய சட்டப்பேரவையின் சிறப்புக் கூட் டத்தை ஒரு வாரத்தில் கூட்ட லாம் என ஆளுநருக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி நேற்று முன்தினம் ஆலோசனை வழங்கினார். தற்போது, சசிகலாவுக்குப் பதில், அந்த அணியின் புதிய சட்டப் பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில் என்ன முடிவு எடுப்பது என்பதில் ஆளுநருக்கு சட்ட ரீதியான சிரமங்கள் எதுவும் இனி இருக்காது என்று கூறப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மை பலம் உள்ளதாக தான் கருதும் ஏதேனும் ஒரு அணியை ஆட்சி அமைக்கவோ அல்லது யாருக்கு பெரும்பான்மை பலம் என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டுவது பற்றியோ ஆளுநர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வர்-பதவிக்கு-மோதும்-ஓபிஎஸ்-எடப்பாடி-பழனிசாமி/article9543527.ece?homepage=true

  • தொடங்கியவர்

எடப்பாடி பழனிச்சாமி Vs ஓ.பன்னீர்செல்வம்... இன்னொரு பக்கமும் இருக்கிறது...!

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை சந்தித்திருக்கிறார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் மந்திரி. அ.தி.மு.க.வின் நியமனப் பொதுச் செயலாளரான சசிகலாவின் ஆதரவாளர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், சசிகலா இடத்தில் இருந்து தமிழ்நாட்டை ஆளும் (?!) பொறுப்புக்கு இப்போது சசிகலாவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

ஓ.பி.எஸ் மூலமாக முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சசிகலாவுக்கு, நாட்டை ஆளும் வாய்ப்பு அமையவில்லை. 'கொடுத்தவனே, பறித்துக் கொண்டான்டி' என்பது போல சசிகலாவைப் பரிந்துரைத்த ஓ.பி.எஸ்-ஸே, சசிகலாவுக்கு எதிராகத் திரும்பியதால் அ.தி.மு.க-வுக்கு 1989-ம் ஆண்டு ஏற்பட்ட  சோதனை மீண்டும் வந்தது.

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைவாசத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால், சசிகலாவின் ஆதரவு மந்திரிகள் பத்துபேருடன் ஆளுநரைச் சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  

"மிஸ்டர் கவர்னர்... எங்கக்கிட்ட 125 எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்க. ஓ.பி.எஸ் கையில் 10 பேர்தான் இருக்காங்க. இதுதான் அந்தப் பட்டியல், சசிகலாபார்த்துநல்ல பதிலா சொல்லுங்க... நாங்கள் உடனே ஆட்சியை அமைக்க வேண்டும்." என்று அங்கே கேட்டுக் கொண்டிருக்கலாம்.

ஓ.பி.எஸ் பக்கமும், சில சிக்கல் வரலாறுகள் உள்ளன. ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர். தம்பி ஓ.ராஜா மீதான கொலை வழக்கில் இருந்து  அவரை விடுவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மகன்களுக்கு கட்சியில் உயரிய பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் உண்டு.

சட்டசபையில் ஓ.பி.எஸ்  தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடியாமல் போய், எடப்பாடிக்கே பெரும்பான்மை ஆதரவு  கிடைத்து தமிழகத்துக்கு 'எடப்பாடி' தான் முதல்வர் என்ற நிலைகூட வரலாம். அதனால், எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் பின்னணி பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். 1989-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வருகிறவர். காபந்து அமைச்சரவையில் இப்போதும் மந்திரியாக இருப்பவர்.

ரூபாய் மதிப்பிழப்பு என்ற அறிவிப்பை இந்திய பிரதமர் மோடி அறிவித்த அந்த நாளையும், மக்களெல்லாம் சொந்த பணத்தையே செலவிட முடியாமல் ஓடித்திரிந்ததையும் நாம் மறந்திருக்க முடியாது. மனிதர்களின் உறக்கத்திலும் பணம், பணம் என கண்களில் அந்த ரோஸ் நிற ஒற்றை நோட்டு ஆட்டம் காட்டிய வேளை அது. அந்த நேரத்தில்தான், பெங்களூருவில் நடத்தபட்ட ரெய்டில், கட்டுக்கட்டாக 5 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு மொத்தமாக ரோஸ் கலர் நோட்டுகள் பிடிபட்டன. ரெய்டில் சிக்கிய பணம், தமிழக அமைச்சர்களின் பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடுத்த ரெய்டு,  ஈரோடு பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்களின் உறவினர் வீடுகளிலும் நடந்தன.

ஈரோட்டை அடுத்துள்ள பூந்துறை வேலாங்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்த என்.ராமலிங்கம் என்பவரது வீட்டில் நடந்த ரெய்டு இதில் முக்கியமான ஒன்று. ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு 'ராமலிங்கம் கன்ஸ்டரக்சன்ஸ் கம்பெனி (ஆர்.சி.சி)' என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராமலிங்கம். ராமலிங்கத்துக்கு சொந்தமாக என்.ஆர்.ஹோல்டிங், என்.ஆர். எனர்ஜி, இன்பிரா, என்.ஆர். இன்ஜினீயரிங், கிரீன் புரொடக்சன் என்று ஏகத்துக்கும் தொழில்நிறுவனங்கள்  இருந்ததால், இந்த ரெய்டு பெரிதும் கவனிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் - சீனிவாசன் - பழனிச்சாமி

 

ராமலிங்கத்தின் நிறுவனங்களில் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை ராமலிங்கமும், இயக்குநர்கள் பதவியை அவரது மகன்களான சந்திரகாந்த், சூர்யகாந்த் ஆகியோரும் நிர்வகித்து வந்தனர். சென்னை, கோவை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனங்களுக்கு அலுவலகங்களும் உள்ளன. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் வணிக சுழற்சியும் உண்டு.
ராமலிங்கத்தின் வீடு, செட்டிபாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், நெருங்கிய உறவினர்கள் வீடுகள், நண்பர்களின் வீடுகள், என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடந்தது. 

ராமலிங்கத்தைச் சுற்றி நடந்த இந்த சோதனையில் புதியதாக வெளியிடப்பட்ட ரோஸ் நிற 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.5.7 கோடி அளவில் கைப்பற்றப்பட்டன. பழைய செல்லாத பணம் உள்பட தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் என்று கணக்கில் காட்டப்படாத வருமானங்களும், ஆவனங்களும் சிக்கின.

பெருமளவில் புதிய ரூபாய் நோட்டுகள், ராமலிங்கத்துக்கு கிடைத்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில்,  ஈரோட்டில் உள்ள 3 தனியார் வங்கிகளில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதும், இதற்கு வங்கி மேலாளர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. ரூ. 5.7 கோடி மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ராமலிங்கத்தின் பின்னணி குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன. அதாவது, ராமலிங்கத்தின் இளைய மகனுக்கு பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியத்தின் இளைய மகளை மண முடித்துள்ளனர். தொழிலதிபர் சுப்பிரமணியத்தின் மூத்த மகள் எடப்பாடி பழனிச்சாமியின் மூத்த மகனை மணமுடித்த வகையில் மருமகளாவார். எடப்பாடி பழனிச்சாமியும், தொழிலதிபரான ராமலிங்கமும் மகன், மகள்களை மணமுடித்துக் கொடுத்த வகையில் சம்பந்தி முறை உறவினர்கள் ஆவர்.

தமிழக பொதுப்பணித்துறை மந்திரியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால் கட்டுமானம் தொடர்பான ஒப்பந்தப் பணிகள் எளிதில் ராமலிங்கத்துக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகம் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட பொன்விழா நுழைவாயில் கட்டுமான பணியையும் ராமலிங்கத்தின் நிறுவனம்தான் செய்திருந்தது. இதேபோல தமிழக அரசின் பல பணிகளை அந்த நிறுவனம் எடுத்துச் செய்துள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை மந்திரியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதே அவருடைய சம்பந்தியின் கைகளுக்கு பொதுப்பணி கான்ட்ராக்டுகள் போயின. நாட்டில் ஐந்து ரூபாயைத் தேடி மக்கள் ஓடிக் கொண்டிருந்த 'பண மதிப்பிழப்பு' காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டாகவே 5 கோடிக்கு மேல் அவர் சம்பந்தியிடம் ரெய்டில் கிடைக்கிறது.

ஆளுநர் யாரையாவது அழைத்துவிட்டுப் போகட்டும்; யாராவது நம்மை ஆண்டுவிட்டுப் போகட்டும் என்ற விரக்தி நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த விரக்தி நிலையானது 'அரிதாரம்' பூசாத புது சீரமைப்புக்கே மக்களை மெல்ல, மெல்ல நகர்த்தும் என்ற நம்பிக்கையும் துளிர்த்திருக்கிறது.

 

http://www.vikatan.com/news/coverstory/80864-another-side-of-o-panneerselvam-and-edappadi-palanisamy-faction.html

  • தொடங்கியவர்

மக்கள் விருப்பம் பன்னீர்செல்வம் பக்கம்

 

 
 
ppl_3133257f.jpg
 
 
 

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டுமெனவும் திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக முதலிபாளையம் கழகச் செயலாளர்):

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர, கட்சியினர் ஆதரிக்க வேண்டும்.

ராஜன் (அதிமுக திருப்பூர் மாநகர் 42-வது வார்டு பொருளாளர்):

அதிகாரம், ஆணவம், குடும்ப ஆதிக்கம் தமிழகத்தில் மீண்டும் நுழைவதற்கு, நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியைத் தொடர வேண்டும்.

ஷாஜகான் (தனியார் தொழிலாளி - திருப்பூர்):

தாமதிக்கப்பட்ட நீதியாக இருந்தாலும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகி நிலையான ஆட்சி வழங்கலாம்.

சுரேஷ் (பூக்கடைத் தொழிலாளி - திருப்பூர்):

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்டது போன்ற ஆட்சியை, ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும்.

டி.ராஜலெட்சுமி (தனியார் நிறுவன ஊழியர் திருப்பூர்):

தவறு செய்தால் தண்டனையை அனுபவித்துதான் தீர வேண்டும். செய்த தவறுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள்தான் முதல்வராக வர வேண்டும்.

கிறிஸ்டினா (தனியார் பள்ளி ஆசிரியை திருப்பூர்):

தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்புக்கும் கடந்த முறை நீதிமன்றம் வழங்கியதைப்போல், மேல்முறையீடு செய்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. தவறுக்கான உறுதியான தீர்ப்பாகவே பார்க்கிறோம். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும்.

நடராஜன் (மூங்கில் கூடை விற்பனை தொழிலாளி திருப்பூர்):

தீர்ப்பை வரவேற்கிறோம். மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது.

எஸ்.விஜயகுமார் (பின்னலாடைத் தொழிலாளி திருப்பூர்):

சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கட்சி உடையாமல், அடுத்த 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை தொடர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியைவிட அனுபவம் வாய்ந்த ஓ.பன்னீர்செல்வமே முதல்வர் பணியை தொடர வேண்டும்.

சி.மகேந்திரன் (பொள்ளாச்சி எம்.பி.):

நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யக்கோரி கட்சி சார்பில் வலியுறுத்தப்படும்.

ஆர்.எஸ்.கனகராஜ் (விவசாயி - உடுமலை):

இத்தீர்ப்பு மூலமாக, மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் மீட்டெடுத்துள்ளது. ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு பாடம் புகட்டுவதாய் அமைந்துள்ளது. இனியாவது லஞ்சம், ஊழல் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்.

கலா (சிறு வியாபாரி உதகை):

இதுபோன்ற தீர்ப்புகள், ஊழல்வாதிகளுக்கு பாடமாக இருக்கும். உண்மை வெளி வந்துள்ளது.

ராஜா முகமது (அதிமுக உதகை நகர முன்னாள் செயலாளர்):

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினோம். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுவோம். இத்தீர்ப்பை ஏற்றுகொள்கிறோம்.

சரவணன் (சுற்றுலா பயணி பெங்களூரு):

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு, ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை. இதை வரவேற்கிறேன்.

பா.மு.முபாரக் (திமுக நீலகிரி மாவட்டச் செயலாளர்):

திமுக தொடர்ந்த இவ்வழக்குக்கு வெற்றி கிடைத்துள்ளது. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதைபோல், இத்தீர்ப்பு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு சரியானது என தெரியவந்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், இத்தீர்ப்பு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/மக்கள்-விருப்பம்-பன்னீர்செல்வம்-பக்கம்/article9544256.ece?homepage=true

  • தொடங்கியவர்

பன்னீர்செல்வத்தை இயக்குபவர் இவரா..! - என்ன சொல்கிறார் ரெட்டி? #VikatanExclusive

Amarprasath_reddy_15107.jpg

பன்னீர்செல்வத்தை பின்னால் இருந்து இயக்கியவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி என்றும், அவர் பா.ஜ.க.வின் உளவு ஏஜென்ட் என்றும் சமூக வலைத்தளத்திலும் தகவல்கள் வெளியாகி வைரலானது. யார் அவர் என்று விசாரித்தோம். நீண்ட தேடலுக்குப்பிறகு அவரிடம் பேசினோம். 

 உங்களை பா.ஜ.க.வின் உளவு ஏஜென்ட் என சொல்கிறீர்களோ, அது உண்மையா?

 "நான் பிறந்தது சென்னையில்தான். தொழில்முனைவோர் கூட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்துடன் நீண்ட நட்பு எனக்கு உள்ளது. அது அரசியல் சார்ப்பற்றது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். வர்தா புயலின்போது அவருடைய பணிகளைப் பாராட்டினேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பன்னீர்செல்வம் எடுத்த முடிவுக்கும் ஆதரவு அளித்தேன். இதைத்தவிர என்னை பா.ஜ.க.வின் உளவு ஏஜென்ட் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள். இதுகுறித்து விளக்கமும் கொடுத்துள்ளேன்" 

நீங்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதன் நோக்கம் என்ன?
 
"ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகரித்தது. முதல்வர் பதவி மீது சசிகலாவுக்கு ஆசை ஏற்பட்டது. அதற்காக கட்சியின் பொதுச் செயலாளரானார். அடுத்து அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மன்னார்குடி குடும்பம் தமிழகத்தில் ஆள்வதை எனக்குப்பிடிக்கவில்லை. இதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தேன்"

பா.ஜ.வின் தலைவர்களுடன் நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமும், ரஜினியுடன் எடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதே?

 "என்னைப்பிடிக்காதவர்களின் செயல் இது. அதையெல்லாம் நான் கண்டுக்கொள்வதில்லை. எனக்கு பா.ஜ.க.வில் மட்டுமல்ல முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் நட்பு இருக்கிறது. அதோடு முன்னணி நடிகர்களுடனும் நட்பில் உள்ளேன். இதனால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். அதற்காக அவர்களது ஆதரவாளர்கள், உளவாளி என்று சொல்வது எல்லாம் தேவையற்ற செயல். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் சமயத்தில் என்னைக் குறித்த தவறான தகவலை பதிவு செய்து யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்" 

சமூக வலைத்தளத்தில் பதிவான கமென்ட்ஸ்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"அதையெல்லாம் பார்த்து வருத்தப்படும் அளவுக்கு எனக்கு நேரமில்லை. நான் பிஸியாக இருக்கிறேன்"

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமீபத்தில் எப்போது சந்தித்தீர்கள்?

 "சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் நிச்சயம் உங்களுக்கு எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு பெருகும் என்று தெரிவித்த போது ஓ.பன்னீர்செல்வம் சிரித்தார். வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு வந்து விட்டேன். அங்கு அரசியல் பேசவில்லை. பன்னீர்செல்வத்துக்கு கட்சியிலும், மக்களிடையேயும் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் சசிகலா, மன்னார்குடி குடும்பம் அ.தி.மு.க.விலிருந்து விரட்டியடிக்கப்படும்"

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் உங்களது பெயர் அடிப்பட்டதே?

 "சமூக வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக பல தகவல்களை பதிவு செய்தேன். இதனால் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் என்னை விமர்சித்தனர். எந்த விமர்சனத்தையும் கண்டுக் கொள்ளப்போவதில்லை"

பன்னீர்செல்வத்தை நீங்கள் இயக்குவதாக சொல்லப்படுகிறதே?

 "நான் சொன்னால் பன்னீர்செல்வம் கேட்பாரா... மக்களுக்கு உண்மை தெரியும்"

http://www.vikatan.com/news/

  • தொடங்கியவர்

சி.எம் ஆக துடிக்கும் எடப்பாடியாரின் சாதனைகள்! சிரிப்பதா? அழுவதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.