Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள்

Featured Replies

வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள்

 

 

காணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று  வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை  கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராடடத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு  பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_2639.JPG

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக  கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும்  பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என  அனைவரும்  கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.  

IMG_2758.JPG

இந்நிலையில் நேற்றைய தினம் எமது காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற செய்திகிடைத்தது. அந்த செய்தியால் மகிழ்ச்சி அடைகின்றோம்.எமது காணிகளில் எம்மை குடியமர்த்தும் நாளுக்காக காத்திருக்கின்றோம்.ஆனால் கிடைத்த செய்தி வாக்குறுதியாக மட்டும் எமக்கு வழங்கப்பட்டு எமது போராடடத்தை முடிவுறுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமேயானால் எமது போராடடம் இன்னும் தீவிரமடையும் என தெரிவித்துள்ளனர்.

IMG_2730.JPG

இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இந்த மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் இதுவரையில் இந்த மக்களின் காணிவிடுவிப்பு தொடர்பில் அரச அதிபரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஆராயும் பொருட்டும் அத்தோடு காணி விடுவிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பிலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், சிவநேசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

IMG_2722.JPG

அத்தோடு இன்றையதினம்  முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்  இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடற்தொழிலுக்கு செல்லாது தொழில் நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டக்களத்திற்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிடடனர்.

IMG_2727.JPG

இன்றைய தினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்தனர்.

IMG_2721.JPG

அத்தோடு இன்றைய தினம் போராட்டக்களத்தை  விசேட விமானம் ஒன்று அடிக்கடி வருகைதந்து தாழ்வாக பறந்து   பலதடவை சுற்றிவந்து சென்றதால் மக்கள் அனைவரும் பரபரப்பாக காணப்பட்டதோடு விமானப்படையினர் தமது போராட்ட நடவடிக்கையை படம்பிடிப்பதாக தெரிவித்தனர்.

IMG_2699.JPG

ஏனெனில் போராட்டக்களத்துக்கு எதிரே உள்ள விமானப்படைத்தளத்திலிருந்து மக்களின் போராட்டத்தை அதிநவீன கருவிமூலம் விமானப்படையினர் கண்காணித்துவருவதாகவும் இன்றும் விமானம் மூலம் படம் பிடிப்பதாகவும் தெரிவித்தனர். 

IMG_2664.JPG

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84குடும்பங்களுக்கு சொந்தமான 50ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். 

IMG_2653.JPG

இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்புலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்த மக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை . இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து  வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

IMG_2627.JPG

அத்தோடு இன்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும் சிவில் அமைப்புகளும் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றதோடு  மக்களுக்கான ஆதரவும் பல்வேறு வழிகளில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது. 

IMG_2609.JPG

இந்த போராட்டக் களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது கல்விநடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் இன்றும்  ஆசிரியர்கள் இணைந்து போராட்ட களத்திலே உள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளையும் உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும்  மேற்கொண்டனர்.

IMG_2559.JPG

போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_2549.JPG

IMG_2528.JPG

IMG_2516.JPG

IMG_2502.JPG

http://www.virakesari.lk/article/16664

  • தொடங்கியவர்

பரவுகிறது மண் மீட்புப் போராட்டம் – கேப்பாபுலவு மக்களுக்காக வட மாகாணம் தழுவிய போராட்டம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமது பூர்வீக வாழிடத்தை மீட்பற்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இரவு பகலாக பனியிலும் குளிரும் இந்த மக்கள் போராடுகின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியாக இந்தப் போராட்டம் விஸ்தரிக்கப்படுகிறது.

இதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பிலும் இந்த மக்களுக்கு ஆதரவாக போராட்டம் இடம்பெற்றதுடன் யாழ்ப்பாணம் வவுனியாவிலும் கவனயீர்ப்புக்கள் இடம்பெற்றன.

காணிகயை விடுவிக்க அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தளபதி காணியை விடுவிக்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டபோதும், தமது காணிகளை விடுவிகக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இராணுவத்தினர் காணிகளை கையளித்த பின்னரே போராட்டம் முடிவு பெறும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/archives/17803

  • தொடங்கியவர்

போரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
16735864_1603543182994366_89009534_n.jpg
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் 15ஆவது நாட்களை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிலக்குடியிருப்பு மக்களின் ஆரம்ப சுகாதார நிலையமும் முன்பள்ளியும் இன்று இலங்கை அரசின் விமானப் படைமுகாம் வாயிலாக மாறியுள்ளது. அதற்கு எதிரிலே தரகங்களால் கூடாரங்களை அமைத்துக் கொண்டு, அதில் இருந்தும், அருகில் உள்ள வயல்களில் சமைத்து, உண்டு, உறங்கி எழுந்து கொண்டு கடந்த 15 நாட்களாக வீடு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் மக்கள்.
 

அந்த மக்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்தும் தகரக் கூடாரங்களில் ஒரு பத்து நிமிடம்கூட இருக்க முடியாது. பகல் முழுவதும் கடுமையான வெய்யில். பெண் குழந்தைகளும், சிறுவர்களும் வெயிலில் வாடிக் கறுத்துப் போயிருந்தார்கள். இரவு வந்ததும் கடும் பனி. இப்படித்தான் அந்த மக்கள் ஒவ்வொரு கணங்களையும் கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் ஏன் இப்படி தெருவில் வந்து போராடுகிறார்கள்? பல்வேறு போராட்டங்களைச் செய்து, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் மிகவும் பாதிப்பை தரும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் உக்கிரமான வார்த்தைகள் இந்த நிலத்தில் மண் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இன ஒடுக்குதலுக்கு எதிராக வெகுண்டெழுந்த குரல்கள் அவை. நாங்கள் 84 பெண்களை இந்த நிலத்திற்காக கொன்றால், 84 ஆண்கள் வருவார்கள். நாளை எங்கள் வீடுகளிலிருந்து பிள்ளைகள் வளர்ந்து எங்கள் நிலத்திற்காக வருவார்கள். நிலத்தை மீட்காமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று உக்கிரமாக பேசுகின்றனர் இப் பெண்கள். இராணுவமுகாங்களை தகர்க்கும் அனல் கொண்ட சொற்கள் அவை.
 
அவர்கள் கேட்கிறார்கள். சிங்கள மக்களுக்கு ஒன்று என்றால் இந்த அரசாங்கம் இத்தனை நாட்கள் பனியிலும் வெயிலிலும் இப்படி அலைய விடுமா? நாங்கள் தமிழ் மக்கள் என்பதால்தானே இப்படி ஓர வஞ்சனை? அந்த மக்களே இலங்கை அரசின் இனப் பாரபட்சம் குறித்தும் இன ஒடுக்குமுறை குறித்தும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் கேட்கிறார்கள். அந்தப் பச்சிழங் குழந்தைகளின் முகங்களை, பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களின் முகங்களைப் பார்த்தால் மனசாட்சி உள்ளவர்களுக்கு இரக்கம் வரும். இறங்கி வருவார்கள்.
 
இலங்கை அரசாங்கத்திற்கு எப்போது மனசாட்சி இருந்தது? எங்கள் சிறுவர்கள் கொன்று வீசப்படுவதுதானே மனிதாபிமானம். உண்மையில் அன்று போரில் எம் சிறுவர்கள்மீது கொன்றெறியப்பட்டதற்கும் இன்று பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அன்றைக்கு அவர்கள் வாழ்ந்த மண்ணாக, அவர்களை மண்ணைவிட்டு அவர்களை துரத்தாமல், அதற்காக யுத்தம் செய்யாமல், சிறுவர்களை, குழந்தைகளை அவர்களின் உரிமையுடன் அணுகாமல் அழித்து ஒழித்ததுபோலவே இன்றைக்கும் அவர்கள் இனப் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
 
குழந்தைகளும் முன்னெடுக்கும் போராட்டம் இது. ஒழுங்கான உணவின்றி, ஒழுங்கான உறக்கமின்றி, நிலம் இழந்த துயரம் படிந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தனர்? தம் தாய் நிலத்திற்காக இப்படி பனியிலும் குளிரிலும் வெயியிலும் போராட வேண்டிய நிலையிலுள்ளனர். கேப்பாப்புலவு பற்றிய பாடல்களை இயற்றி பாடிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். தம் தாய் நிலம் குறித்தும் அதில் வாழ வேண்டிய வாழ்வு குறித்தும் அந்தப் பிஞ்சுகளிடம் இருக்கும் கனவை, ஆசையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லையே. விமானப் படைவாசலாக்கப்பட்ட அப் பகுதியில் எந்த அச்சமுமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விமானப் படையை நோக்கி அம்புவிட்டு விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்
 
அப் பகுதி சிறுவர்கள் எவரும் பாடசாலை போகவில்லை என்று தாய் ஒருவர் குறிப்பிட்டார். அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் கல்விப் பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மரங்களின் கீழே பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடல்களைப் பாடி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். ஆனால் எம் நிலத்திற்காக எப்படியெல்லாம் போராட வேண்டும் என்ற வரலாற்றுப் பாடத்தை கேப்பாபுலவுச் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். எந்தப் பாடசாலையிலும் அவர்கள் கற்க முடியாதொரு பாடத்தை அச் சிறுவர்கள் கற்கின்றனர்.
 
எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தது யார்? யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்? இப்படி எல்லாம் போராடும் எங்களை குரலை ஏன் அரசு செவிசாய்க்கவில்லை? நாங்கள் யார்? ஏன் இப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? இவைகளை கேப்பாபுலவு சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஈழச் சிறுவர்களுக்கும் செய்திகள் வழியும் புகைப்படங்கள் வழியும் ஊடகங்கள் வழியும் எடுத்து உணர்த்திக் கொண்டிருக்கிறது கேப்பாபுலவு மண்மீட்புப் போராட்டம்.
 
காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக சில செய்திகள் வந்தன. ஜனாதிபதி இணங்கினார் என்றும் இராணுவத்தளபதி இணங்கினார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த மக்களின் காணிகளை இலங்கை அரச படைகள் அபகரித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, போராட்டத்திற்கு வருபவர்களை புகைப்படம் பிடித்து பதிவு செய்கிறது விமானப்படை. அதனால் தமது நிலத்தை கையளித்து இராணுவம் வெளியே சென்ற பின்னர்தான் போராட்டம் நிறைவுபெறும் என மக்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.
 
கேப்பாபுலவு அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அவர்கள் தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கியது அந்த நிலம். சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் கேப்பாபுலவு மக்கள். அங்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது. ஓர்மத்தை உறுதியை கேப்பாபுலவு மக்களிடமிருந்து ஈழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய போராட்ட வடிவத்தை கையில் எடுக்க வேண்டும்? ஈழமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கு இந்த மக்களின் உன்னதமான போராட்டம் ஒரு முன்னுதாரணமாய் அமையும்.

http://globaltamilnews.net/archives/17814

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.