Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித புதைகுழி விவகாரம்: றேடியோ காபன் பரிசோதனைக்கு பரிந்துரை

Featured Replies

மனித புதைகுழி விவகாரம்: றேடியோ காபன் பரிசோதனைக்கு பரிந்துரை
 

article_1487177212-Mannar.jpg

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி தொடர்பில்,  எதிர்வரும் மார்ச் மாதமளவில் உதவி செய்வதாக, வெளிநாட்டு தடயவியல் நிபுணர் குழுவினர், மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன், இம்மனித புதைகுழி தொடர்பிலான “றேடியோ காபன்” பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த புதைகுழியின் வயது, மரணம் மற்றும் சம்பவத்தை அளவிடுவதற்கு, குறித்த பரிசோதனை உடனடித் தேவையாக அமையாதென்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் முன்னிலையாகியிருந்த காணாமற்போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள், மேற்கண்ட விடயங்களை, மன்றில் அறிவித்தனர்.

அத்துடன், இந்த புதைகுழி தொடர்பான ஆராய்ச்சிக்கு, தங்களாலாள பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பரிசோதனைகளுக்குத் தேவையான நிதி வசதிகளை தாமே மேற்கொள்ளுவதாகவும், அந்த தடயவியல் நிபுணர் குழுவினர் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், இவ்விடயம் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை, அன்றைய தினத்தில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தரவிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/191630/மன-த-ப-த-க-ழ-வ-வக-ரம-ற-ட-ய-க-பன-பர-ச-தன-க-க-பர-ந-த-ர-#sthash.SlPgK76p.dpuf
  • தொடங்கியவர்
மன்னார் மாந்தை மனித புதைகுழி விவ­காரம் தொடர்பில் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கவும் பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்­கவும் வெளி­நாட்டு தடய­வியல் நிபுணர் இணக்கம்
2017-02-16 11:15:18

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்)

 

22352Niranjan.jpgமன்னார் திருக்­கே­தீஸ்­வரம் மாந்தை மனித புதை­குழி தொடர்பில் விசேட குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு மன்னார் நீதி­மன்றம் பிறப்­பித்­துள்ள உத்­த­ரவுக்கு அமை­வாக மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் மாந்தை மனித புதை­குழி தொடர்­பான வழக்கு விசா­ர­ணையை எதிர்­வரும் 27 ஆம் திகதி வரை மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்­ராஜா நேற்று  ஒத்தி வைத்­துள்­ள­தாக காணாமல் போன குடும்­பங்­களின் உற­வி­னர்கள் சார்­பாக மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரி­வித்தார்.

 

குறித்த வழக்கு விசா­ரணை குறித்து அவர் மேலும் தெரி­விக்­கை­யில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி குறித்த மனித புதைகுழி தொடர்­பான விசா­ரணை மன்னார் நீதி­மன்­றத்தில் இடம் பெற்­றது.

 

இதன்போது விசா­ர­ணை­களை மேற்­கொண்ட மன்னார் நீதிவான் குறித்த வழக்கு விசா­ர­ணை­களை நேற்று 15 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

 

இந்த நிலையில் விசா­ரணை மீண்டும்  நேற்று புதன்­கி­ழமை  மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலக்ஸ்­ராஜா முன்­னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

 

இதன்­போது,­ காணாமல் போன குடும்­பங்­களின் உற­வி­னர்கள் சார்­பாக தானும் மன்னார் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் சார்­பாக சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.சபூர்­தின், பிரிமூஸ் சிறாய்­வா, ஜெப­னேசன் லோகு ஆகி­யோரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

 

ஏற்­க­­னவே குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மன்னார் நீதி­மன்றம் பிறப்­பித்த உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் வெளி­நாட்டைச் சேர்ந்த சிறந்த தட­யவியல் நிபுணர் குழு­வுக்கு  மின்­னஞ்சல் ஒன்றை அனுப்­பி­யி­ருந்­தனர்.

2235211.jpg

 

குறித்த மின்­னஞ்­சலில், மாந்தை மனித புதை­குழி வழக்கு தொடர்பில் ஏதா­வது உத­வியை வழங்­கு­மாறு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கோரி­யி­ருந்­தனர்.

 

இந்த நிலையில் தாம் அனுப்­பிய மின்­னஞ்­ச­லுக்கு எவ்­வித பதிலும் கிடைக்­க­வில்லை என நீதி­மன்றில் முன்­னி­லை­யான  குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­வித்­தனர்.

 

இதன்போது பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பாக ஆஜ­ரா­கி இருந்த சட்­டத்­த­ர­ணிகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குறித்த வெளி­நாட்டு தட­யவியல் நிபுணர் குழு­வினர் பதில் வழங்­கி­யுள்­ளமை  தொடர்பில் மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

 

223521.jpg

 

தாங்கள் மார்ச் மாதம்  இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் தேவை­யான உத­வி­களை செய்­வ­தா­கவும் தாம் எவ்­வா­றான பரி­சோ­த­னை­களை செய்ய வேண்டும் என்றும் 'றேடியோ காபன்' பரி­சோ­தனை இறு­திக்­கட்­டத்தில் செய்­யப்­பட வேண்டும் என்றும் குறித்த மனித புதைகுழியின் வய­தையும் மரண சம்­ப­வத்தை அள­வி­டு­வ­தற்கு குறித்த பரி­சோ­தனை உட­ன­டி­யாக தேவை இல்லை என்றும் அது  தொடர்பில் பூரண ஒத்­து­ழைப்பை தாம் வழங்க தயா­ராக இருப்­ப­தா­கவும் குறித்த பரி­சோ­த­னை­க­ளுக்கு தேவை­யான நிதி வச­தி­களை தாமே மேற்­கொள்­­வ­தா­கவும் வெளி­நாட்­டி­லுள்ள குறித்த தட­வியல் நிபுணர் குழு­வினர் அனுப்பி வைத்­துள்ள மின்­னஞ்­சலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக காணாமல் போன குடும்­பங்­களின் உற­வி­னர்கள் சார்­பாக மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்­தனர்.

 

இந்த நிலை­யி­லுயே நீதி­மன்றம் கட்­டளை ஒன்றை பிறப்­பித்­தது. இம்­மாதம் 27 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  இது தொடர்­பி­லான முழு­மை­யான அறிக்­கையைச்  சமர்ப்­பித்து  சம்­பவம் தொடர்­பாக மேல­திக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­­வ­தற்­கான படி முறை­களை முன்­னெ­டுக்­கு­மாறு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. 

 

அதனடிப்படையில் குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=22352#sthash.VW8xq4u7.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.