Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9 நாட்கள் ரிசார்ட் வாசம் முடிந்து திரும்பும் எம்.எல்.ஏக்களுக்கு தமிழகக் குடிமகனின் 11 கேள்விகள்! #VikatanExclusive

Featured Replies

9 நாட்கள் ரிசார்ட் வாசம் முடிந்து திரும்பும் எம்.எல்.ஏக்களுக்கு தமிழகக் குடிமகனின் 11 கேள்விகள்! #VikatanExclusive

‘ஓட்டுப் போட்டாச்சுல்ல? அதோட உங்க வேலை முடிஞ்சது’ என்கிற தோரணையில்தான் இருக்கிறார்கள் எம்.எல்.ஏக்கள். 9-வது நாளாக கூவத்தூரில் குடிகொண்டிருந்தார்கள். அங்கே என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், அவர்கள் எங்கே இருந்துகொண்டு என்ன செய்துகொண்டிருக்க வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துக் கொண்டுதான் இருப்பான்.

இதோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள். ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருப்பதால், வேறு வழியில்லை. வந்துதான் ஆகவேண்டும். 

கூவத்தூர் எம் எல் ஏ

ஆனால் ஒரு குடிமகனாக, நம்மிடம்  சில கேள்விகள் இருக்கின்றன. அதற்கான பதில்களுடனும் அவர்கள் வந்தால்.. வரவேற்கலாம்.

Bullet எந்த வேலைக்குச் சேர்ந்தாலும், வேலை சார்ந்த நெறிமுறைகள் கொடுக்கப்படும். அப்படி உங்களுக்கு ஏதும் கொடுக்கப்பட்டதா? இப்படி இத்தனை நாள், பணியை விட்டு இருக்கலாம் என்று அந்த நெறிமுறைகளின் இண்டு இடுக்குகளில் எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா?

Bulletபத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் சொல்லும்போது, “எங்ககிட்ட 124 பேர் இருக்காங்க. அங்க 8 பேர்தான் இருக்காங்க. 124 பெரிசா 8 பெரிசா?” என்று கேட்கிறார் ஒரு அமைச்சர். நிச்சயம் 124 பெரிசுதான் சார். எதிரணி என்பதையெல்லாம் விடுங்கள். அடுத்த முறை ஓட்டு வேண்டும் அல்லவா? உங்கள் சொந்தத் தொகுதியில், உங்களுக்கு ஆதரவாக 8 மக்கள் இருக்கிறார்கள். எதிராக 124 மக்கள் இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள். 8 பெரிசா, 124 பெரிசா? ‘இல்லை... இந்த முறை முடிந்தவரை சம்பாதித்து விடுகிறோம். அடுத்த எலக்‌ஷனெல்லாம் அப்புறம்..” என்பீர்களானால்.. சொல்ல ஒன்றுமில்லை.

red_13173.jpg இதற்கு முன், உங்கள் முதல்வராக இருந்தவர் மக்களுக்கு எதிராக ஒரு முடிவெடுக்கும்போதோ, உங்கள் சொந்தத் தொகுதியின் முன்னேற்றத்திற்கு எதிராக ஒரு முடிவெடுக்கும்போதோ, இப்படி ஒற்றுமையாக, பலநாட்கள் நின்று போராடி அதை எதிர்த்திருக்கிறீர்களா?

Yellow_13308.jpg நாங்கள் வேலைக்குச் சென்றால்தான் சம்பளம். இல்லையென்றால் Loss Of Payதான். குறிப்பிட்ட நாட்கள் மட்டும் Work From Home என்று பணிபுரியலாம். Work From Resort எல்லாம் சாத்தியமே இல்லை. நீங்கள் விடுதியில் இருந்த இத்தனை நாட்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்வீர்களா? சம்பள ஸ்லிப்பை தொகுதி மக்களுக்குக் காட்டுவீர்களா? முழு சம்பளமும் பெறுவீர்கள் என்றால்.. அதை வாங்கும்போது கை கூசாதா உங்களுக்கு?

Blue_13471.jpg நீங்கள் ‘தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக’ உழைத்துக் கொண்டிருந்த காலங்களில் எல்லாம் உங்கள் மனைவி, மகன், மகள்கள் ‘ஒருவாரம் எங்காவது டூர் போகலாம்’பா என்று அழைத்திருப்பார்கள்தானே. இப்படி இத்தனைநாள் நீங்கள் ரிசார்ட்டில் இருந்ததைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள், என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?

green_13045.jpg எங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருவாரம் விடுமுறை கிடைத்தாலும், குடும்பத்தோடு இருந்தாலும் அவ்வப்போது செய்யும் வேலைகுறித்த சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். ‘திரும்ப அலுவலகம் செல்லும்போது இதையெல்லாம் செய்யவேண்டும்’ என்று குறிப்பெடுத்துக் கொள்வோம். அப்படி நீங்கள் இருந்த இத்தனை நாட்களில், உங்கள் தொகுதிக்கு இதை இதையெல்லாம் செய்யவேண்டும் என்று எதுவும் திட்டம் தீட்டினீர்களா? 

red_13173.jpg இன்னமும் எம்.ஜி.ஆர்.தான் உங்கள் USP. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தவறொன்றுமில்லை. அவர் பொதுச்செயலாளராக இருந்த இடத்தில் சசிகலா பெயரை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றும்போது உங்களுக்கு எப்படி இருந்தது? சரி.. அதையும் விடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என்று ஒருவர் பெயரை அறிவித்திருக்கிறாரே.. அப்போது என்ன நினைத்தீர்கள்? ‘அவர் கட்சிக்குச் செய்த தியாகங்களைச் சொல்லுங்கள்’ என்று யாரும் கேட்டால் ஒரு நாலு விஷயங்களைச் சொல்ல முடியுமா?

Yellow_13308.jpg இந்தக் கூவத்தூர் கூத்தெல்லாம் முடிந்து தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கத்தானே வேண்டும்? அதைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அப்படி செல்லும்போது மக்களை நேர்மையாக அவர்கள் இடத்தில் சென்று பார்க்கும் எண்ணம் உண்டா? பார்க்கும்போது அவர்கள் என்னென்ன கேள்வி கேட்பார்கள் என்று யூகித்து வைத்திருப்பீர்கள். அவற்றிற்கெல்லாம் பதில் இருக்கிறதா உங்களிடம்?

 Blue_13471.jpg வழக்கமாக இப்படி வேலைகள் தவிர்த்து அலுவலகம் விட்டு இத்தனைநாட்கள் இருந்தபிறகு, மீண்டும் அலுவலகம் வரும்போது இரட்டிப்பு சுறுசுறுப்புடன் இருப்போம். அதேபோல, இத்தனை நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட நீங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு தொகுதி மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுவீர்கள் என எதிர்பார்க்கலாமா?

green_13045.jpg போன பத்தியைப் படிக்கும்போதே, ‘நாங்கள் ஓய்வெடுத்தோம் என்று யார் சொன்னது? தொகுதி வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன’ என்று நீங்கள் நினைத்தீர்களா? சரி...  நீங்கள் இல்லாமலே நடக்கிறதென்றால்.. அப்புறம் நீங்கள் எதுக்கு?

Yellow_13308.jpg கடைசியாக ஒன்றே ஒன்று: ரிசார்ட்டில் வேளா வேளைக்குச் சாப்பிட்டீர்களா? 

http://www.vikatan.com/news/coverstory/81003-questions-of-a-common-man-to-mlas-who-stayed-in-koovathur-for-the-past-9-days.html

  • தொடங்கியவர்

யானை முகாம் நடத்துனா அம்மா... எம்.எல்.ஏ முகாம் நடத்துனா சின்னம்மா!

கூவத்தூரில் குத்தாட்டம்!

 

p5.jpg

மிழக அரசியல், முன்பு அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தது. இப்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கூவத்தூர் ‘கோல்டன் பே’ ரிசார்ட்ஸில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் எம்.எல்.ஏ-க்கள் இங்கேதான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

 ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தியானம், அரசியலில் சுனாமியாக எழுந்து நின்றது. அடுத்த நாள் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்துகொண்டிருக்க.. பன்னீர் தரப்பிலிருந்து ஆள் பிடிக்கும் வேலைகள் நடக்க ஆரம்பித்தன. உஷாரான சசிகலா தரப்பு அனைவரையும் சிறைபிடித்தது. மூன்று பஸ்களில் ஏற்றப்பட்ட   எம்.எல்.ஏ-க்களை டெல்லி அழைத்துச் செல்வதாக ஏர்போர்ட் பக்கம் போய், பிறகு கூவத்தூர் ரிசார்ட்ஸில் பாதுகாப்பாகச் சேர்த்தார்கள்.

p5a.jpg

கூவத்தூரைப் பார்த்ததும், சில எம்.எல்.ஏ-க்களுக்குப் பெருத்த ஏமாற்றம். ‘‘கோவளம் கூட்டிட்டுப் போறோம்னு சொல்லிட்டு... ஏதோ கூவம் பக்கமா கூட்டிட்டு வந்திருக்கீங்க? நாங்க இப்பவே இறங்கிடுவோம்’’ என்று சிலர் குமுற ஆரம்பித்தனர். அவர்களை சமாதானம் செய்த சீனியர் அமைச்சர்கள், ‘‘உங்களில் பல பேர் வருங்கால அமைச்சர்கள்... இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் கவர்னரிடமிருந்து அழைப்பு வரலாம். உடனே போய்ப் பதவி ஏற்க வேண்டும். அதனால்தான், இந்த இடத்தை சின்னம்மா தேர்வுசெய்தார்’’ என சொல்லி கூல் செய்தார்கள்.

பேருந்தில் இருந்து இறங்கியபோது, ஒவ்வொரு தலையாக எண்ணியுள்ளனர். பேருந்துகளில் ஏற்றியபோது இருந்த கணக்கில் மூன்று தலைகள் ‘எஸ்’ ஆகியிருந்தன. பொறுப்பாளர்களாகச் சென்ற ஆறு பேருக்கும் குப்பென வியர்த்துக்கொட்டியதாம். தகவல், சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. மாயமான எம்.எல்.ஏ-க்கள், பன்னீரை சந்தித்தபோதுதான், கூவத்தூர் ரிசார்ட்ஸ் விவகாரமே வெளியில் கசிந்தது.

அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 19 எம்.எல்.ஏ-க்களும், சில அமைச்சர்களும் பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள ‘வில்லேஜ் ரெட்ரீட்’ என்ற ரிசார்ட்ஸில் தங்க வைக்கப் பட்டனர். இந்த இரண்டு ரிசார்ட்களுக்கும் இடையே அமைச்சர்களின் கார்கள் பறந்தபடியே இருந்தன. கூவத்தூர் ஏரியா கன்ட்ரோல் சசிகலா ஆதரவாளர்களின் கைக்குப் போனது. வாகனங்கள் தாறுமாறாக வந்துபோக... உள்ளூர் மக்கள் பீதிக்குள்ளானார்கள். மீடியாவினர் உட்பட யாரும் உள்ளே நுழையாதபடி மன்னார்குடியில் இருந்து வாட்டசாட்டமான ஆள்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர்.

p5b.jpg

உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம். “பலரும் வெரைட்டியாகக் கேட்டு சாப்பிடுகிறார்கள். விரும்பியது இல்லையென்றால், உடனடியாக வெளியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. எல்லாமே காஸ்ட்லியான அயிட்டங்கள்தான். உற்சாகத்தில் மிதக்கும் பலர் ‘ஓ.பி.எஸ் துரோகி... ஓ.பி.எஸ் ஒழிக’ என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலான ரூம்களில் டி.வி-க்கள் இயங்கவில்லை. ஆதன்பிறகு சரிசெய்யப்பட்டது. இரவு நேரத்தில் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்கள் ஒலிக்கின்றன. ஆடல் பாடல் என களைகட்டுகிறது. யாருக்கு என்ன தேவை என்பதை லிஸ்ட் எடுப்பதற்கே ஒரு டீம் உண்டு. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் சம்பந்தமான மாத்திரைகள் உட்பட உடனுக்குடன் தரப்படுகின்றன. எமர்ஜென்சிக்காக ஒரு டாக்டரும் அங்கே இருக்கிறார். நடிகர் கருணாஸும் ரிசார்ட்டில்தான் இருக்கிறார். ‘என்னண்ணே... ஓ.பி.எஸ் இப்படிப் பண்ணிட்டார். நீங்க எல்லாம் இருந்தும் இப்படி நடந்துருச்சேண்ணே’ என அமைச்சர்களிடம் புலம்பினார்” என்றார்.

மீடியாவினர் ரிசார்ட்ஸ் பக்கம் நெருங்கக்கூட முடியவில்லை. தூரத்திலேயே முடக்கப்பட்டனர். பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகே, உள்ளூர் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் தெரு மின்விளக்குகள் எரிவதில்லை. மீடியாக்களின் கேமராக்களுக்குள் காரில் வந்துபோகிற ஆட்களின் முகம் பதிந்துவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே, இப்படி மின்விளக்குகளில் கைவைத்துள்ளனர்.

p5c.jpg

மீடியாவினர் சிலர், கூவத்தூர் பேட்டை கிராமத்தினுள் மரங்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்று... ரிசார்ட்ஸை படம்பிடிக்கத் தொடங்கினார்கள். அப்போது, அந்த மீடியாவினர் மீது, காவலுக்கு இருந்த கும்பல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. ‘‘மரியாதையா போயிடுங்க. வீணா, பிரச்னையில் மாட்டிக்காதீங்க’’ என்று மீடியாவை அந்தக் கும்பல் மிரட்டத் தொடங்கியது. கண்டுகொள்ளாமல் மீடியாக்காரர்கள் முன்னேறவே, ஆபாச வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். பின்னர், மறைத்துவைத்திருந்த உருட்டுக்கட்டைகள், அரிவாள், கத்தி, இரும்பு ராடுகள் போன்ற ஆயுதங்களைக் காண்பித்து எச்சரித்தனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து தாக்கவும் ஆரம்பித்தனர். மீடியா மீது இவர்கள் தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், மெதுவாக ஜீப்பில் வந்த போலீஸார், “இங்கே ஏதும் பிரச்னை இல்லையே? எல்லாம் ஸ்மூத்தாதானே போய்க்கிட்டு இருக்கு’’ என்று தாக்குதல் நடத்திய கும்பலிடமே கேட்டுவிட்டுக் கிளம்பினர்.

 நீதிமன்ற உத்தரவுப்படி எம்.எல்.ஏ-க்களிடம் ஆய்வு செய்ய செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி தமிழ்ச்செல்வன், டி.எஸ்.பி எட்வர்ட் ஆகியோர் வந்தனர். அதைப் படம்பிடிக்கச் சென்ற புகைப்படக்காரர்களை, கும்பல் கல்வீசித் தாக்கினார்கள். அதே நேரம் ம.நடராசன், அமைச்சர் சி.வி.சண்முகம், செங்கோட்டையன் ஆகியோர் வில்லேஜ் ரெட்ரீட் ரிசார்ட்ஸில் இருந்தவர்களிடம் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். விசாரணை நடத்திவிட்டு வந்தவர்கள், ‘சொந்த விருப்பத்தின் பேரிலேயே இங்கு தங்கியிருக்கிறார்கள்’’ என்றனர்.

p5g.jpg

p5e.jpg

ஆனாலும், கூவத்தூர் பற்றி விமர்சனங்கள் எழுந்தபடியே இருந்ததால் சசிகலாவே 11-ம் தேதி திடீர் விசிட் அடித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் பெண்களைச் சந்தித்து, ‘‘சின்னம்மா வரும்போது நீங்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும். உங்கள் கிராமத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்’’ எனச் சொன்னதோடு சில பெண்களின் கைகளில் ரூபாய் நோட்டுகளைத் திணித்தார். அதன் பிறகு, சசிகலாவை வரவேற்க சாலையில் கோலமிட்டு, பூசணிக்காய், ஆரத்திக்கு எனத் தயாரானார்கள். சசிகலா வந்தபோது உள்ளூர் மக்கள் சிலர், சசிகலாவுக்கு எதிராகவும், ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்ப... பதற்றம் அதிகரித்தது. மீடியாக்களைக் கண்டதும் சிரித்த முகத்தோடு, கைகூப்பியபடியே உள்ளே சென்றார் சசிகலா. பத்திரிகையாளர்களும் உள்ளே நுழைய முற்பட்டதால், வாக்குவாதம் ஏற்பட்டது. சில பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. அவர்கள், சாலையிலேயே உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய... செல்போன்கள் மீண்டும் கொடுக்கப்பட்டன. இந்தத் தகவல் சசிகலாவுக்கு போக.. பத்திரிகையாளர்களை உள்ளே அழைத்துப் பேட்டி கொடுத்தார். வெளியே காத்திருக்கும் மீடியாவினருக்கு ஷாமியானா பந்தலும் தயாரானது.

சசிகலா வந்ததும், ரிசார்ட்ஸில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மீட்டிங் ஹாலுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் குறைகளைக் கேட்டார். மைக்கில் முழங்கிவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் நடத்திய சமரசப் பேச்சு எடுபடவில்லை என்பதை அடுத்தடுத்த நாள்கள் கூவத்தூரை நோக்கி சசிகலா வந்தபோதே தெரிந்துவிட்டது. ‘‘சில துரோகிகளின் நன்றிகெட்ட செயலால் ஒரு சவாலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இந்த இக்கட்டான சூழலில் உங்களை நம்பி வந்திருக்கிறேன். நீங்கள், எதிர்பார்ப்பது என்னவோ... அதை நானே செய்கிறேன். திருப்தியாகச் செய்கிறேன்’’ என்று உருக்கமாக சொன்னார் சசிகலா.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.