Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி: 19 பேர் மாயம்

Featured Replies

படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி: 19 பேர் மாயம்
 
 

article_1487491595-image_1487489572-0078பேருவளை பயாகல கடலில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பலியானதுடன், இன்னும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/191778/படக-கவ-ழ-ந-தத-ல-ப-ர-பல-ப-ர-ம-யம-#sthash.4khPFbz4.dpuf
  • தொடங்கியவர்

படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலி

p19-da2722ad8a608372c7010ceef3b24497f5f75a65.jpg

 

தேவாலய நிகழ்வொன்றில் ஊர்வலமாக சென்றவேளையில் களுத்துறை கட்டுக்குருந்தை கடலில் விபரீதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தேவாலய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பக்தர்கள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11பேர் நீரில் மூழ்கி பலயான துயர சம்பவம் நேற்று களுத்துறை கட்டுக் குருந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்தப் படகில் பயணித்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் படகில் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளவர்களை தேடும் முயற்சியில் கடற்­படை

மற்றும் விமா­னப்­ப­டை­யினர் நேற்று இரவுவரை ஈடு­பட்டனர்.

பேரு­வளை ஹெல்கொட்டுவ சென்லாசரஸ் தேவா­ல­யத்தின் வரு­டாந்த திருவி­ழாவை முன்­

னிட்டு, திருச்­செ­ாரூபத்தினை ஏந்தி செல்லும் படகு ஊர்­வ­ல­மா­னது நேற்றுக்காலை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.19 பட­குகள் இந்த ஊர்­வ­லத்தில் பங்­கேற்­றுள்­ள­துடன் அத்­தனை பட­கு­க­ளிலும் திரு­வி­ழா­வுக்கு வருகை தந்த பக்தர்கள் சென்­றுள்­ளனர். ஒவ்­வொரு பட­கிலும் பெருந்­தொ­கை­யான மக்கள் இவ்­வாறு பயணித்துள்ளனர். அவர்கள் பேரு­வ­ளையில் இருந்து களுத்­து­றை தேவா­லயத்தை நோக்­கியே இந்த படகு ஊர்­வ­லத்தில் சென்­றுள்­ளனர்.

திருச்சொரூபம் ஏந்திச் செல்லும் மேற்­படி ஊர்­வ­ல­மா­னது களுத்­து­றையில் உள்ள மற்­றைய தேவா­ல­யத்தை அடைந்த பின்னர் மீளவும் பேரு­வளை நோக்கி படகுகளில் பக்தர்கள் திரும்பி வரும் போது கட்­டு­குருந்ததை கடலில் ஊர்­வ­லத்தில் வந்த ஒரு பட­கா­னது கவிழ்ந்­துள்­ளது.

இந்தப் படகில் சிறுவர், பெண்கள் உட்­பட சுமார்

35 இற்கும் அதிகமானவர்கள் இருந்ததாக கூறப்­ப­டு­கின்றது. சிறிய ரக மீன்­பிடி பட­கொன்றே இவ்­வாறு கவிழ்ந்­துள்­ள­துடன் அதில்

 இருந்த எவரும் உயிர் காப்பு

 அங்­கி­களை அணிந்­தி­ருக்க வில்லை என்று ஆரம்ப கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நிலையில் படகு கவிழ்ந்­த­தை­ய­டுத்து விடயம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­ப­டவே கடற்­படை, கட­லோர பாதுகாப்பு படை மற்றும் மீன­வர்­களின் உத­வி­யுடன் படகில் இருந்­து நீரில் மூழ்கியோரை காப்­பாற்றும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் 7 பேரை மட்டுமே காயங்­க­ளுடன் அவர்­களால் மீட்க முடிந்­துள்­ளது. குறித்த 7 பேரும் நாகொடை மற்றும் பேரு­வளை வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நேற்று மாலைவரை 11 பேரின் சட­லங்கள் மீட்­கப்பட்­டி­ருந்­தன. இதில் 12 வய­து­டைய சிறுவன் ஒரு­வ­னு­டைய சட­லமும் அடங்­கு­வ­தாக மீட்புப் படை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

நீரில் மூழ்கி காணாமல்போன­வர்­களை தேடும் பணி­களில் கடற்­ப­டையின் 15 சுழி­யோ­டிகள் ஈடு­பட்­டுள்ள நிலையில், கடற்­ப­டையின் 6 டிங்கி பட­கு­களும் 4 டோரா பட­கு­களும் களுத்­துறை - கட்­டு­கு­ருந்த கடலில் தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளன. இதனை விட விமா­னப்­ப­டை­யி­னரின் பெல் 212 ரக ஹெலி­கப்டர் ஒன்றும் தேடு­தலில் ஈடு­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் சமிந்த வலா­கு­லகே கேச­ரிக்கு தெரி­வித்­த­தா­வது,

 இந்த படகு கவிழ்ந்­தமை தொடர்பில் கடற்­படை தலை­மை­ய­கத்­துக்கு முற்­பகல் 11.20 மணி­ய­ள­வி­லேயே தகவல் கிடைத்­தது. உட­ன­டி­யா­கவே நாம் களுத்­து­றையில் உள்ள எமது உடன்நட­வ­டிக்கை பிரிவை நாம் அனுப்பி வைத்தோம். உண்­மையில் மூழ்கியது ஒரு சிறிய மீன்­பிடி படகாகும். அதில் பொது மக்­களை அழைத்து செல்­வது என்­பது சாத்­தி­ய­மற்­றது. அத்­த­கைய பட­கொன்றில் 20 இற்கும் அதி­க­மானோர் பயணித்துள்ளதாகேவ நாம் அறி­கின்றோம். எனினும் உண்­மையில் அந்த படகில் எத்­தனை பேர் இருந்­தனர் என்­பது உறு­தி­யாக தெரி­யாதுள்ளது.

 அந்த படகில் பய­ணித்த எவரும் உயிர் காப்பு அங்கி அணி­யா­மையும் அதிகமானோர் படகில் ஏற்­றப்­பட்­ட­மையுமே விபத்து மற்றும் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ண­மாகும்.

 உண்­மையில் கடலில் இத்தகைய ஊர்வலம் செல்வதாயின் கடற்படைக்கும் கடலோர பாதுகாப்பு படைக்கும் அறிவிக்க வேண்டும். அதன்போது நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அவ்வாறு இல்லாமல் தாமாக செல்லும் போது படகுகளின் தரம், உயிர்காப்பு அங்கிகள் தொடர்பில் நாம் தலையீடு செய்ய முடியாது.

எனினும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை தொடர்ந்து நாம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.