Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றுத் திரிப்பே மூலகாரணி - ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-3535-1171365320_thumb.jpgSource:

http://www.sooriyan.com/index.php?option=c...972&Itemid=

""வரலாற்றுச் சான்றுகளையும், ஆவணங்களையும் ஈழத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கத் தவறிய நிலையில், ஒரு தனிச் சமூகத்தில் ஆட்சி அதிகாரம் இன்று குவிக்கப்பட்டிருக்கும் வழியைப் பயன்படுத்தி, சிங்கள அதிகார வர்க்கத்தினரால், பண்டைய வரலாற்றில் தமிழர்களுக்கும் இந்து சமயத்துக்கும் இருந்த வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகின்றன. வரலாற்றுத் திரிபுகள் இடம்பெறுகின்றன. பாடநூல்களில் கூட இவ்வாறு இடம்பெறுகின்றன.''

இவ்வாறு மனம் வெதும்பி விசனம் தெரிவித் திருக்கின்றார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்.

தமது மனதில் பட்ட கருத்துக்களை உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துபவராகவும், தமிழர் தரப்பில் அரசியல் பக்கச்சார்பற்ற புத்தி ஜீவியாகவும் மதிக்கப்படுபவர் நீதியரசர் விக்னேஸ்வரன்.

சட்டத்தினதும் நீதித்துறையினதும் சம்பிரதாய கட்டுக்களிலிருந்து உத்தியோகபூர்வமாகத் தாம் விடுபட்ட சமயம் உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் வேளையில் தமக்கு அளிக்கப்பட்ட சம்பிரதாயபூர்வ பிரியாவிடை நிகழ்வில் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி குறித்து பரபரப்பான தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட்டுப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு ஆழமாகச் சிந்திக்கவும் வைத்தவர் அவர்.

""இலங்கையில் சரித்திர காலத்துக்கு முற்பட்ட பூர்வீகக் குடிகள் தமிழர்கள்'' என்று இலங்கையின் உச்ச நீதிமன்றமான, உயர்நீதிமன்றில் இருந்துகொண்டு அறிவித்தவர் அவர்.

இப்போது, தமிழினத்துக்கு எதிரான வரலாற்றுத் திரிபுகள் நடப்பதைத் துணிந்து அம்பலப்படுத்த முற்பட்டிருக்கின்றார்.

நமது அரசியல் தலைமைகள் சுட்டிக்காட்டிவந்த உண்மையை தமிழினத்தின் புத்திஜீவிகளும் இப் போது வெளிப்படுத்த முற்பட்டிருக்கின்றார்கள். புலிகளின் மறைந்த மதியுரைஞர், தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி குறித்துக் குறிப்பிடும்போது தெரிவித்த விடயங்கள் இங்கு கவனிக்கத்தக்கவை.

""இலங்கைத் தீவானது, தொன்மைவாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அவை விளங்குகின்றன. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கின்றது. சிங்கள மக்களின் மூதாதையர், கி. மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது தொன்மை வாய்ந்த திராவிட (தமிழ்) குடி யிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில், நாகர் இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்தன எனச் சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன. இந்த வரலாற்றுப் பதி வேடுகளை எழுதிய பௌத்த பிக்குகள் இலங்கை யின் பூர்வீகக் குடிகளது வரலாற்றைத் திரித்துக்கூற முற்பட்டனர். புராதனத் தமிழர்களை மானிடரல்லா தோர் என்றும் அமானுஷ்ய சக்தி வாய்ந்த அரக்கர் கள் என்றும் வர்ணித்திருக்கின்றார்கள். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளது உண்மை வரலாறானது புராணங்கள், கட்டுக்கதைகளால் மூடி மறைக்கப் பட்டன. .....'' என்கிறார் பாலசிங்கம்.

இதனையே புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமது மாவீரர் தின உரைகளில் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகின்றார். 2005இல் அவர் ஆற்றிய உரையில்

""சிங்கள தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராதன கருத்துலகில் புதைந்துபோய்க் கிடக்கின்றது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத் தத்தின் தெய்வீகக் கொடை என்றும் சிங்கள இனத் திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையில் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கின்றார்கள். அவர் களின் அடிமனதில் ஆழமாக உறைந்து அசைவற்ற தாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலை யிலிருந்து சிங்கள தேசம் விடுபடப் போவதில்லை. இந்தக் கருத்தியல் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளி வாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலத்தைத் தாயகமாகக் கொண்டு, தமிழ் மக்கள் என்ற வரலாற் றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர் கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதை யும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமை கள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவர் களால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. தமிழரின் இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து,

அவர்களது அரசியல் அபிலாஷை களைப் புரிந்துகொள்ளச் சிங்கள தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழு பட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரஞையில், அவர்களது அரசியல் கருத்துலகில், அடிப்படையான மாற்றம் நிகழும் என நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக அது புதிய, புதிய வடிவங்களை எடுத்து, புத்துயிர்ப்புப் பெற்று வருகின்றது........'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த மாவீரர் தின உரையிலும் இதையே அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

""பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந் தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்கிறது. இதனால், சிங்கள, பௌத்த பேரினவாதம் இன்றொரு தேசியச் சித்தாந்தமாகச் சிங்கள தேசத்தில் மேலாதிக் கம் செலுத்தி வருகின்றது. இந்தக் கருத்தாதிக்கம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களிலிருந்து பத் திரிகைகள் வரை ஊடுருவி நிற்கின்றது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ, அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு சிங்கள மூளையத்தை இந்தக் கருத்தாதிக்கம் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது. பௌத்த பேரின வாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மனவமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாகப் பொறித்து விடப்பட்டிருக்கின்றன. இதனால், சிங்களத் தேசம் போர்வெறிபிடித்துச் சன்னதமாடுகின்றது; போர்முரசு கொட்டுகின்றது.'' என்று அவர் தெரிவித்திருக் கிறார்.

ஆக மொத்தத்தில், உண்மையை சரித்திர மெய்மை நிலையை மூடி மறைக்கும் வரலாற்றுத் திரிபுகளே இலங்கையின் இன்றைய தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையாக மூலவேராக அமைந்து நிற்கின்றன என்பது தெளிவாகின்றது.

Jaffna Uthayan Editorial

Related News:

http://www.tamilsydney.com/content/view/365/37/

Australia in a politically incorrect statement says Tamils came "as invaders" to Sri Lanka

Official website of Australian "Department of Foreign Affairs and Trade" in its country brief about Sri Lanka,

carries a politically incorrect statement of Tamils History in Sri Lanka. The following is an extract of the exact statement published in DFAT Website,

"History: The Sinhalese are people of Indo-Aryan origin who first came to the island from north India about 500 BC. The Tamils, Sri Lanka's most significant minority, are of Dravidian origin. Mercantile patterns indicate that they came to the island first as traders about 300 BC and later, in a second wave, as invaders. Buddhism was brought to the island from the subcontinent in the third century BC and became the bedrock of the culture and civilisation of the Sinhalese. The Tamils largely remained loyal to Hinduism."

http://www.dfat.gov.au/geo/sri_lanka/sri_l...ntry_brief.html

Histoirans says that the above statement is historically incorrect and there are lot of evidences to support tamils were infact the first inhabitants of Sri Lanka. Anthropologists believe that some discovered burial rites and certain decorative artifacts exhibit similarities between the first inhabitants of the island and the early inhabitants of southern India. One of the first written references to the island is found in the Indian epic Ramayana, which described the emperor Ravana as monarch of the powerful kingdom of Lanka. The main written accounts of the country's history are the Buddhist chronicles of Mahavansa and Dipavamsa.

Political Analysts says this type of distortion related to tamils history, in australian policy documents, could be due the hidden work of some former DFAT workers, who work with hidden agenda, like Dr.Palitha kohana, who is the current advisor to war savy Sri Lankan President Or could be a careless cut and paste work of research officers at DFAT.

So far non of the Australian Tamils Organisations, those are said to be representing tamils, have the courage and will to raise the above matter with the Australian Government and correct it, an angry tamil australian young student said.

Those who wish to lodge their strong protest against the above politically incorrect statement published in Department of Foreign Affairs and Trade Official Website could, contact DFAT Secretary Mr Michael L'Estrange on Tel: +61 2 6261 1111.

-Keeran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.