Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன?

Featured Replies

நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன?

 

ரொபட் அன்­டனி

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மாகி அமர்­வுகள் பர­ப­ரப்­பாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. குறிப்­பாக ஆரம்ப உயர்­மட்ட அமர்­வு­களில் சர்­வ­தேச அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் உறுப்பு நாடு­களின் அமைச்­சர்­களும் உரை­யாற்­றி­யி­ருந்­தனர்.

தற்­போ­தைய நிலை­மையில் இலங்­கையின் சார்பில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆற்­றிய உரையும் பிரித்தானியா மற்றும் அமெ­ரிக்க பிர­தி­நி­திகள் ஆற்­றிய உரை­க­ளுமே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை ஜெனி­வாவில் அமெ­ரிக்கா கொண்­டு­வந்­தி­ருந்­தது.

எனவே அமெ­ரிக்கா இம்­முறை ஜெனி­வாவில் கூறிய விட­யங்கள் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாகும். அதே­போன்று இம்­முறை இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­வுள்ள நாடு என்ற வகையில் பிரித்தானிய பிர­தி­நிதி ஜெனி­வாவில் ஆற்­றிய உரையும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

நேர­டி­யாக கால அவ­கா­சத்தை கோரா­வி­டினும் கால அவ­கா­சத்தை கோரும் வகை­யி­லான அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் உரையும் கால அவ­காசம் வழங்­க­வேண்டும் என்ற பிரிட்டன் பிர­தி­நி­தியின் உரையும் மனித உரிமை பேர­வையை சாடிய அமெ­ரிக்­காவின் உரையும் இங்கு கவ­னிக்­கத்­தக்க வேண்­டிய விட­யங்­க­ளாக உள்­ளன.

அந்­த­வ­கையில் மிகவும் பர­ப­ரப்­பாக எதிர்­பார்க்­கப்­பட்ட அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் ஜெனிவா உரையின் முக்­கிய பகு­தி­களை இங்கு தரு­கின்றோம்.

நிலை­மா­று­கால நீதியை அடைந்­து­கொள்­வ­தற்­கான எமது அர்ப்­ப­ணிப்பு எந்­த­வ­கை­யிலும் குறைந்­து­வி­டாது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான எமது அர்ப்­ப­ணிப்பு மிகவும் திட­மாக தொடர்­கி­றது. எமது நல்­லி­ணக்கப் பய­ண­மா­னது வெற்­றி­ய­டை­யலாம், அதே­நேரம் சில பின்­ன­டை­வு­க­ளையும் சந்­திக்­கலாம். சில தடைகள், சவால்கள், முட்­டுக்­கட்­டைகள் என்­ப­வற்­றின் ­கா­ர­ண­மாக பய­ண­மா­னது அவ்­வப்­போது தாம­தப்­ப­டலாம், தடைப்­ப­டலாம்.

ஆனால் எமது பயணம் உரிய இடத்தை சென்­ற­டையும் என்­ப­துடன் எமது நோக்கம் மாறாமல் இருக்கும். உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்­கான வரைபு அடுத்த இரண்டு மாதங்­களில் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­படும். நாம் எமது நல்­லி­ணக்கப் பய­ணத்தை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நேரத்தில் இரண்­டு­த­ரப்­பி­னதும் இன­வாத சக்­திகள் பாரிய தடை­களை சுய­நல குறு­கிய அர­சி­ய­லுக்­காக ஏற்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றன .

எமது அர்ப்­ப­ணிப்­புக்கள் மற்றும் தேர்­தல்­களில் நாங்கள் பெற்­றுக்­கொண்ட ஆணை என்­ப­வற்­றுடன் பார்க்கும் போது நாம் மேற்­கொண்­டுள்ள பய­ண­மா­னது சவா­லுக்­குட்­பட்­ட­தாகும். இலங்­கையின் அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் ஆத­ரவு சர்­வ­தேச சமூகம் மற்றும் , வெளி­நா­டு­களில் உள்ள இலங்­கையின் ஆத­ர­வுடன் பொறுமை, புரிந்­து­கொள்­ளுதல், என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் நாம் நல்­லி­ணக்கப் பய­ணத்தை முன்­னெ­டுக்க முடியும். மக்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முதல் எமக்கு வாக்­க­ளித்­ததை நாங்கள் மதிப்­ப­துடன் அவர்கள் எம்­மீது வைத்த நம்­பிக்­கையை கடைப்­பி­டிப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் இருப்போம். .

எமது நல்­லி­ணக்கப் பய­ணத்தை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நேரத்தில் இரண்­டு­த­ரப்­பி­னதும் இன­வாத சக்­திகள் பாரிய தடை­களை சுய­நல குறு­கிய அர­சி­ய­லுக்­காக ஏற்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பாட்டில் பாரா­ளு­மன்றப் பணி­களும் சர்­வ­ஜன வாக்கெடுப்பும் கட்­டா­ய­மா­ன­வை­யாகும்.

முன்­னேற்­ற­க­ர­மான ஐக்­கிய சமூ­கத்தை உரு­வாக்க முடியும் என நம்­பு­கிறோம். பன்­மு­கத்­தன்­மையை கொண்ட ஐக்­கிய மற்றும் மனித உரிமை நீதி சட்­டத்தின் ஆட்­சி­ப்ப­டுத்தல் ஆகி­ய­வற்றை கடை­ப்பி­டிக்­கின்ற இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பலாம் என்று நாங்கள் நம்­பு­கின்றோம்.

இவ்­வாறு சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை தொடர்­பாக நம்­பிக்கை மற்றும் அனு­தாபம் ஏற்­படும் வகையில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஜெனி­வாவில் உரை­யாற்­றி­யுள்ளார். அது மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னையும் சந்­தித்த அமைச்சர் பல்­வேறு விட­யங்­களை எடுத்­து­ரைத்­துள்ளார்.

குறிப்­பாக தமது அர்ப்­ப­ணிப்பை மறந்­து­வி­ட­வில்லை என்றும் இலக்கை நோக்கி பய­ணிப்போம் என்றும் ஜெனி­வாவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அமைச்சர் சம­ர­வீர நல்­லி­ணக்கப் பய­ணத்­துக்கு இரண்டு தரப்­புக்­க­ளி­லி­ருந்தும் தடை­களும் முட்­டுக்­கட்­டை­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் சர்­வ­தே­சத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்ளார்.

மேலும் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் பய­ணத்தில் வெற்­றியும் ஏற்­ப­டலாம். அதே­நேரம் தோல்­வியும் ஏற்­ப­டலாம். இடை­ந­டுவில் முட்­டுக்­கட்­டை­களும் ஏற்­ப­டலாம். ஆனால் சேர­வேண்­டிய இடத்தை சென்­ற­டைவோம் என்றும் மங்­கள சம­ர­வீர குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வா­றான கூற்­றுக்கள் மூலம் அமைச்சர் மங்­கள சம­ர­வீர முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு கால அவ­காசம் அவ­சியம் என்­ப­தனை குறிப்­பிட்­டுக்­கூ­றி­யுள்ளார். இதனை சர்­வ­தே­சமும் புரிந்­து­கொண்­ட­தா­கவே உணர முடி­கின்­றது.

இதே­வேளை இலங்­கைக்குப் பின்னர் உரை­யாற்­றிய பிரித்தானிய வெளிவி­வ­கார பொது­ந­ல­வாய பாரா­ளு­மன்ற செயலர் ஆலோக் சர்மா ஜெனிவா மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நாம் இலங்­கைக்கு கால அவ­கா­சத்தை வழங்­க­வேண்டும் என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்­தவும் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்­கவும் நீதியை நிலை­நாட்­டவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­க­வேண்டும் எனவும் பிரித்தானிய பிர­தி­நிதி இலங்கை விட­யத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை இலங்­கையே இம்­முறை ஜெனி­வாவில் முன்­வைக்­க­வுள்­ள­தாக கரு­தப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் பிரித்தானியாவில் ஜெனிவா உரை முக்­கி­யத்­து­வமிக்­க­தா­கின்­றது. அதா­வது இலங்கை விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த கால அவ­காசம் வேண்டும் என்று இலங்­கையின் தரப்பில் கோரப்­பட்­டுள்ள நிலையில் அந்த கோரிக்­கைக்கு இசைந்­த­வாறு பிரித்தானிய பிர­தி­நிதி உரை­யாற்­றி­யுள்ளார்.

அந்­த­வ­கையில் பிரித்தானியாவா் இலங்கை தொடர்­பாக சில தினங்­களில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக கரு­தப்­படும் பிரே­ர­ணையில் என்ன விட­யங்கள் இருக்­கப்­போ­கின்­றன என்­ப­தனை தற்­போது ஊகிக்க முடி­கின்­றது.

ஆனால் இம்­முறை அமெ­ரிக்க பிர­தி­நிதி ஜெனிவா கூட்டத் தொடரில் ஆற்­றி­யுள்ள உரை பலரின் புரு­வங்­களை மேலோங்கச் செய்­துள்­ளது. உயர்­மட்ட அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமெ­ரிக்­காவின் பிரதி உதவி இரா­ஜாங்க செயலர் எரின் பார்க்லே ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யா­னது தனது சமத்­தன்­மை­யற்ற பய­னற்ற நிலைப்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­க­வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் மனித உரிமை பேரவை செயற்­ப­டும்­போது மனித உரிமை வெற்­றி­ய­ளிப்­ப­தாக இருக்­க­வேண்டும். இந்த பேரவை நம்­ப­க­ர­மாக செயற்­பட வேண்­டு­மாயின் தனித்து செயற்­ப­ட­வேண்டும். ஐ.நா. மனித உரிமை பேர­வை­யா­னது தனது சமத்­தன்­மை­யற்ற பய­னற்ற நிலைப்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­க­வேண்டும் எனவும் அமெ­ரிக்க பிர­தி­நிதி குறிப்­பிட்­டுள்ளார்.

மனித உரிமை பேர­வை­யு­ட­னான எனது அர­சாங்­கத்தின் எதிர்­கால செயற்­பா­டுகள் விட­யத்தில் பேர­வையின் நோக்­கத்தை அடைந்­து­கொள்­வ­தற்­கான மறு­சீ­ர­மைப்பில் எமது அவ­தா­னத்தை செலுத்­துவோம். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் பெரு­ம­திப்­பான நம்­ப­கத்­தன்­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தி­லேயே சிறந்த உல­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான எமது உத­வியை அதி­க­ரிக்கும். இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை செயற்­பட்ட விதம் தொடர்­பாக ஆராய்­கின்றோம் என்றும் அமெ­ரிக்­காவின் பிரதி உதவி இரா­ஜாங்க செயலர் எரின் பார்க்லே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அமெ­ரிக்­காவில் ஆட்­சி­மாற்றம் நிகழ்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் முதற் தட­வை­யாக அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இம்­முறை உரை­யாற்­றிய நிலையில் வழ­மைக்கு மாறான விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு இம்­முறை பூகோள அர­சியல் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப ஜெனி­வாவில் நாடு­களின் பிர­சன்­னமும் முன்­வைக்கும் நிலைப்­பா­டுகளும் வித்­தி­யா­ச­மாக உள்­ளன.

அமெ­ரிக்கா கடந்த 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் ஜெனி­வாவில் இலங்கை தொடர்­பாக பிரே­ர­ணை­களை கொண்­டு­வந்­த­துடன் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­ப­க­ர­மான பொறி­மு­றையின் கீழ் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை சுட்­டிக்­காட்டி வந்­தது. ஆனால் இம்­முறை மனித உரிமை பேரவை தனது சமத்­து­வ­மற்ற நிலை­யி­லி­ருந்து வில­கி­வ­ர­வேண்டும் என்று அமெ­ரிக்கா குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அமெ­ரிக்­காவின் இம்­முறை ஜெனிவா பிர­சன்னம் மற்றும் இலங்­கைக்கு மீண்டும் கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வுள்­ளமை போன்ற விட­யங்­க­ளினால் எங்கே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் தாமதம் அல்­லது புறக்­க­ணிப்­புகள் ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற எண்­ணங்­களும் ஏற்­ப­டு­கின்­றன.

ஆனால் அனைத்து தரப்­பி­னரும் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். பூகோள அர­சியல் கள நிலை­மை­களில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். உலக நாடு­களில் ஆட்­சிகள் மாறலாம். ஆனால் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் செயற்­பாட்­டுடன் யாரும் அர­சியல் செய்ய முன்­வ­ரக்­கூ­டாது. தற்­போ­தைய நிலை­மையில் கூட வடக்கு மாகா­ணத்தில் மக்கள் தமக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­ப­தனை வெளிப்­ப­டுத்­தக்­கோ­ரியும் அப­க­ரிக்­கப்­பட்ட தமது காணி­களை விடு­விக்க வலி­யு­றுத்­தியும் போராட்­டங்கள் தொடர்ந்த வண்­ண­முள்­ளன. இவை தொடர்பில் தீவிர கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

யுத்­தத்­துக்குப் பின்னர் அப்­போ­தைய அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் செயற்­பா­டு­களில் அக்­கறை காட்­டா­ததன் கார­ண­மா­கவே ஐக்­கிய நாடுகள் சபையில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. அத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் தற்­போது ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவை மீண்டும் இலங்­கைக்கு 2 வருட கால அவ­கா­சத்தை வழங்­கும்­போது என்ன நடக்கும் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கின்­றது. இன்னும் இரண்டு வரு­டங்­களில் பிர­தான அர­சியல் கட்­சிகள் அடுத்த தேர்­த­லுக்கு தயா­ரா­கி­விடும். இந்த நிலையில் இக்­கா­லப்­ப­கு­திக்குள் பாதிக்­கப்­பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்தப்படுமா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு பல விடயங்களில் நீதி நிலைநாட்டப்படவேண்டியுள்ளது. காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். யுத்த காலத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டும். தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படுவது அவசியம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கட்டியெழுப்பப்படவேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பட்டியலிட்டுச் செல்லலாம்.

அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு தொடர்ந்து தாமதிக்கப்படக்கூடியதல்ல. இது தொடர்பில் உரிய தீர்வு அவசியமாகும். இதற்கு சர்வதேசமும் ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தவேண்டும். ஆனால் பூகோள அரசியல் கள நிலை மாற்றங்கள் நாட்டு மக்களுக்கான நீதி வழங்கும் செயற்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக அமைவதை காண முடிகின்றது. இது தொடர்பில் அனைத்து தரப்பினரும் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியமாகும். சர்வதேசம் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குமா? 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-04#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.