Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா ? இல்லையா ? உறுப்பு நாடுகளின் முதலாவது முறைசாராக் கூட்டம் செவ்வாய்க்கிழமை

Featured Replies

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா ? இல்லையா ?

 

உறுப்பு நாடுகளின் முதலாவது முறைசாராக் கூட்டம் செவ்வாய்க்கிழமை 

லியோ நிரோஷ தர்ஷன்

இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கு­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பி­லான முத­லா­வது முறை­சாராக் கூட்டம் நாளை மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்கு அமை­வான புதிய தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா ஆகிய நாடுகள் இணைந்து முன் வைக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்ற நிலையில் வாக்­கெ­டுப்­பின்றி தீர்­மா­னத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக இலங்கை மீண்டும் இணை அனு­ச­ரணை  வழங்க உள்­ளது. 

இந்தக் கூட்­டத்தில் இணை அனு­ச­ரணை நாடுகள், பேர­வையின் உறுப்பு நாடுகள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், மற்றும் இலங்­கையின் ஜெனீ­வா­விற்­கான நிரந்­தர பிர­தி­நிதி உள்­ளிட்ட தூத­ரக அதி­கா­ரிகள் கலந்து கொள்ள உள்­ளனர். இதன் போது இலங்கை தொடர்பில் அடுத்த கட்ட நகர்­வுகள் மற்றும் புதிய தீர்­மான வரைபு உள்­ளிட்ட விட­யங்கள் ஆரா­யப்­பட உள்­ளன.

அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா தலை­மையில் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கு­வது தொடர்­பி­லான முன்­வைக்­கக்­கூ­டிய தீர்­மா­னத்­துக்கு அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­க­வுள்­ள­தாக தக­வல்கள் கசிந்­துள்­ளன. ஐ.நா .மனித உரி­மைகள் பேர­வையின் இந்த அமர்வில், சமர்ப்­பிக்­கப்­படும் தீர்­மா­னங்­களின் யோச­னை­களை இணை அனு­ச­ரணை நாடுகள் சமர்ப்­பிப்­ப­தற்­கான இறுதித் திகதி எதிர்­வரும் 16ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்­றது.

போருக்குப் பிந்­திய நல்­லி­ணக்கம் மற்றும் பார­தூ­ர­மான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பொறுப்­புக்­கூ­றுதல் உள்­ளிட்ட ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், 2015 ஆண்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை கால அவ­காசம் கோரி­யுள்­ளது.

இதற்கு அமை­வாக இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் அளிப்­ப­தற்­கான சாத்­தியக் கூறுகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கால அவ­கா­சத்தை பெற்றுக் கொள்­வ­தற்­கான இலங்­கையின் விடா முயற்சி மற்றும் இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­களே இதற்கு கார­ண­மா­கி­யுள்­ளன.

எவ்­வா­றா­யினும் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கு­வதா ? இல்­லையா ? என்­பது குறித்த தீர்­மானம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யிட வில்லை. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள விட­யங்கள் தொடர்பில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்­தி­யுள்­ளன.

இலங்­கையின் கால அவ­காச கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்டால் 2015 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்­மா­னத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பான விரி­வான அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெறும், பேர­வையின் கூட்டத் தொட­ரி­லேயே சமர்ப்­பிப்பார்.

தற்­போது கசிந்­துள்ள தக­வல்­களின் படி இரண்டு வருட கால அவ­காசம் தொடர்­பான புதிய தீர்­மா­னத்தின் வரைபு உறுப்பு நாடு­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் 2015 ஐ.நா. தீர்­மா­னத்தில், நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்­பான அனைத்துப் பரிந்­து­ரை­க­ளையும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் . இதனை ஐ நா. அலு­வ­லகம் மற்றும் உறுப்பு நாடுகள் தீவி­ர­மாக கண்­கா­ணிக்கும் என்று அந்த வரைவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உண்மை கண்­ட­றிதல் மற்றும் இழப்­பீ­டுகள் வழங்கும் பொறி­மு­றை­களை அமைத்மல் , போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்பீடுகளை வழங்குதல் , பாரது}ரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆபார் குற்றங்களுக்கு நீதியை வழங்குதல் , போர்க் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட பல முக்கிய பரிந்துரைகள் 30/1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.