Jump to content

போராட்டகாரர்களுக்கான கட்டு சோறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

போராட்டகாரர்களுக்கான கட்டு சோறு

 

pulli.jpg

 

தேவையான பொருட்கள் :

அரிசி_2 கப்
புளி_எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

கடலை எண்ணை - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து-- ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு (அல்லது) தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு கைப்பிடி(ஆற்றுமணலில் வறுத்தது)
காய்ந்தமிளகாய்_2(காரம் கூடுதலாக தேவைபட்டால் இன்னும் சேர்க்கலாம்)
பெருங்காயம் ( தேவை இருந்தால் )
கறிவேப்பிலை


செய்முறை :

முதலில் ஒரு டம்ளர் அளவு உள்ள சுடு நீரில் புளியை போட்டு ஊறவைத்து பிழிந்து புளிகரைசலை தயார் செய்யவும் பின்னர் தேவையான அளவு உப்பை அதில் சேர்க்கவும் அதற்கு பின் மஞ்சள் பொடியை அதில் சேர்த்து கரைக்கவும் (அதிகம் சேர்த்தால் கசக்கும்) பெருங்காயம் தேவைபடுபவர்கள் சிறிதளவு சேர்க்கவும் இப்போது புளிகரைசல் தயார்..

வழக்கமாக நீங்கள் வேகவைக்கும் பக்குவத்தில் அரிசியை வேகவைத்தால் .. கட்டுசோறுக்கு சரிவராது!! முக்கால் பக்குவத்திற்கு வேகவைத்து நன்றாக ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்பு அதில் தயாராக உள்ள புளிகரைசலை அதன் மேல் ஊற்றி நன்றாக கிளறவும் அனைத்து சோற்று பருக்கைகளின் நிறம் மாறும் வரை கிளறி இரவு தூங்கசெல்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில் நன்றாக அழுத்தி வைக்கவும் . மறுநாள் காலை எழுந்தவுடன் ஒரு வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் முதலில் எண்ணை விட்டு ( ஒவ்வொரு சோற்று பருக்கையும் எண்ணையில் நன்றாக படும் அளவுக்கு எண்ணை  வேண்டும் ) எண்ணை நன்றாக காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொறிக்கவும் நன்றாக பொறிந்தவுடன் அடுத்து உளுந்து அதற்கு அடுத்து வேர்கடலை (அல்லது)  கடலை பருப்பு போட்டு முடித்தபின் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை கிள்ளிபோட்டு பிரட்டவும்.

தயாராக உள்ள சோற்றை அதில் கொட்டி முழுமையாக எண்ணைபடும் அளவுக்கு பிரட்டி மீண்டும் அதை நன்றாக ஆறவைக்கவும் பின்னர் பழைய செய்திதாளையும்  கூடவே ஏற்கனவே கழுவி காயவைத்த வாழை இலையும் கத்தரித்து செய்திதாளுக்கு மேல் வழைஇலையை பரப்பி அதில் காலை மாலை இரவு என தேவைபடும் அளவுக்கு தனிதனியாக பார்சல் செய்து கொள்ளவும்.. ஆல் ரைட் இப்போ போராட்டத்திற்கு கிளம்பலாம் ..! பயணநேரத்தில் இடையில் கிடைக்கும் வெங்காய பக்கோடா .. உருளைகிழங்கு சிப்சு. மற்றும் கடலை பருப்பு வடை ஆகியவை அருமையான சைடிஸ்!! இது கொஞ்சம் உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. எனவெ சாப்பிட்ட பின் இளநீர். மோர் . போன்றவற்றை குடிப்பது நல்லது .

prot1.jpg

சிலருக்கு குழம்பு போல எதையாவது பிசைந்து சாப்பிட்டால்தான் உள்ளே இறங்கும் .. அதற்கு உருளைகிழங்கு தக்காளி சேர்த்த மசியலை இதே போல பார்சல் கட்டி எடுத்து செல்லலாம் ..

லெமன் ரைஸ் கூட சில நாட்கள் தாங்கும் என்றாலும் உப்பு.. சப்பு ..காரம்..இல்லை அது போராட்டத்திற்கு சரிபடாது!!  போக.. உண்டது போக மீதமுள்ள சோற்றை வீணாக்க விரும்பாதவர்களும் இந்த செய்முறையை பயன்படுத்தலாம் ...!!

டிஸ்கி :

இது செஞ்சி செய்முறை ... !!  வழக்கமாக வருடத்தில் நான்கு ஐந்து நாட்கள் வெளி இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் செய்வது .!! இப்போ வருடம் முழுதும் போராட்டதிற்காக வெளியூர் பயணம் செய்யும் நிலைக்கு ஆகிவிட்டபடியால் கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று இந்த பதிவு அட போங்கப்பா !! வயித்தெரிச்சல் பதிவு ..! :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூரப் பயணங்களுக்கு நல்லதொரு அயிட்டம் புரட்சி....!  பேப்பரின்மேல் பொலித்தீன் அதன் மேல் அழகாய் நறுக்கிய வாழைஇலை சூப்பர்...! பகிர்வுக்கு நன்றி ....!  tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.