Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவு " இது ஒரு இராணுவ பாசறை"

Featured Replies

கேப்பாப்புலவு " இது ஒரு இராணுவ பாசறை"

 

கேணி யரு­கி­னி­லே-­தென்­னை­மரம் 
கீற்று மிள­நீரும் 
பத்துப் பன்­னி­ரண்­டு-­தென்­னை­மரம் 
பக்­கத்­திலே வேணும்;-நல்ல 
முத்துச் சுடர்­போ­லே-­நி­லா­வொளி 
முன்­பு­வர வேணும்?அங்கு 
கத்துங் குயி­லோ­சை-­சற்றே வந்து 
காதிற்­பட வேணும்;-என்றன் 
சித்தம் மகிழ்ந்­தி­ட­வே-­நன்­றா­யிளந் 
தென்­றல்­வர வேணும். 

இந்த பார­தியின் வரிகள் தமது சொந்­த­நி­லங்­களை படை­யி­ன­ரிடம் தொலைத்து கேப்­பா­ப்பு­லவு மாதி­ரிக்­கி­ராமம் என்னும் போர்­வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்­பது போன்ற உணர்வில் வாழும் கேப்­பாப்­பு­லவு மக்­க­ளுக்கு வெறும் வரி­க­ளாக மட்­டுமே இன்றும் இருக்­கின்­றது.

தென்­னை­ம­ரமும் பசும் சோலை­களும் பச்­சை­வ­யல்­வெ­ளியும் வயல்­வெ­ளி­யி­டையே வீடும் அருகே நந்­திக்­க­டல்­வெ­ளியும் வற்­றாப்­பளை கண்­ணகி அரு­கி­ருந்து அருள்­பு­ரிய 2009க்கு முன் எழில்­கொஞ்சும் வளம்­பொ­ருந்­திய கிராமம் இன்று இரா­ணுவ சிறைப்­பி­டிப்­புக்குள் முடங்­கிக்­கி­டக்­கின்­றது. 2009க்கு முன் கோயில் மணி­யோசை அதி­காலை துயி­லெ­ழுப்ப நந்­தி­க­டல்­வெ­ளியே வரும் காற்று தழுவி செல்ல தென்­னை­ம­ர­சோ­லை­களும் மா,பலா தோட்­டமும் கேப்­பாப்­பு­லவு என்னும் கிரா­மமே ஒரு குடும்­ப­மாக வாழ்ந்­தது என்ன வள­மில்லை அடிப்­ப­டையில் நந்­திக்­க­டலை நம்பி கடல்­தொழில் செய்­ப­வர்­களும் விவ­சாயம் செய்­ப­வர்­களும் இங்கே ஏழை­க­ளாக இருந்­தாலும் சொந்த உழைப்பில் சோறு உண்­டார்கள். தமது மூதா­தை­யர்கள் தந்த சொத்தில் சுகமாய் வாழ்ந்­தார்கள். இன்று நில­மி­ழந்து நிலை­யி­ழந்து வாழ­வ­ழி­யற்ற ஏதி­லி­களாய் இரா­ணு­வமும் அரசும் கேப்­பாப்­பு­லவு என உல­குக்கு காட்சி பொரு­ளாய்க்­காட்டும் மாதி­ரி­கி­ராமம் என்னும் இன்­னொரு மெனிக்பாம் முகாமில் இன்னும் வாழ்­கின்­றார்கள்.

போருக்கு முன் சொந்த ஊரில் அதி­காலை கோயில்­ம­ணி­யோ­சை­யு­டனும் குயில் கூவும் ஒலி ஓசை­யு­டனும் ஆனந்­தமாய் துயில் எழுந்த மக்கள் இன்று இரா­ணுவ அணி­வ­குப்­புக்­கான ஆயத்த சமிக்ஞை ஒலி காதில் விழுந்து எரிச்­ச­லூட்ட கேப்­பா­ப்பு­லவு இரா­ணு­வப்­பா­ச­றையில் புதிதாய் முளைத்த புத்­த­பெ­ரு­மானின் கோயிலில் பிக்­குமார் ஓதும் சத்தம் காதில்­விழும் ஓசை­யு­டனும் தமது கிரா­மமே பறி­போன எரிச்­சலில் விரக்­தியில் துயில் எழு­கின்­றார்கள்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அனைத்­து­வ­ளமும் பொருந்­திய ஊர்­களில் கேப்­பா­ப் பு­லவும் அடங்கும். நந்­திக்­க­டலை எல்­லை­யா­கவும் அருகே அடர்ந்த காட்டை சோலை­யா­கவும் புதுக்­கு­டி­யி­ருப்­புக்கும் வற்­றாப்­ப­ளைக்கும் இடையில் இருக்கும் அழ­கிய கிரா­மம்தான் கேப்­பா­ப்பு­லவு. போருக்கு முன்பு இந்­துக்­களை பெரும்­பான்­மை­யா­கவும் அவர்­க­ளோடு இணைந்து கிறிஸ்­த­வர்­களும் ஒற்­று­மை­யாக வாழ்ந்த கிரா­மம்தான் கேப்­பா­ப்பு­லவு. இந்த கிரா­மத்து மக்கள் வற்­றாப்­பளை கண்­ணகி அம்­ம­னையே தமது குல­தெய்­வ­மாக எண்ணி வாழ்ந்­தார்கள். இறு­திப்போர் வன்னி மண்­ணெங்கும் சூழவே தமது கிரா­மத்தை காக்கும் பொறுப்பை வற்­றாப்­பளை தாய­வ­ளிடம் விட்­டு­விட்டு 2008ஆம் ஆண்டு இறு­திப்­ப­கு­தியில் தமது சொந்த நிலங்­களை விட்டு இடம்­பெ­யர்ந்­தார்கள்.

யுத்தம் முடிந்து மெனிக்பாம் அக­தி­வாழ்க்கை முடித்து 2011ஆம் ஆண்டு தமது சொந்­த­மண்ணில் கால்­ப­திக்கும் ஆவ­லுடன் வந்த மக்­க­ளுக்கு கிடைத்தது பெரும் ஏமாற்­றமே. சொந்த கிரா­மத்­துக்கு பதி­லாக அருகில் உள்ள சூரி­புரம் என்னும் இடத்தில் உள்ள காடு­களை அழித்து அங்கே கேப்­பாப்­பு­லவு மாதிரி கிராமம் என்னும் போர்­வையில் ஒரு திறந்­த­வெளி முகாமில் அடைக்­கப்­பட்­டார்கள். வழங்­கப்­பட்­டது 20 பேர்ச் காணியில் இரா­ணு­வத்தால் அமைக்­கப்­பட்ட வீடு என்று சொல்­லப்­படும் குடில் ஒன்று. கேப்­பாப்­பு­லவு வெறும் பேர­ளவில் உல­குக்கு காட்­டு­வ­தற்­கான ஒரு மாயை கிரா­மம்தான் இங்கே குயில் கூவு­வ­தில்லை. தென்­னை­ம­ரங்­க­ளுக்­கி­டையே காற்­று­வீ­சு­வ­தில்லை. சொந்த கிரா­மத்தின் கலை­யி­ழந்து எப்­போ­தாவது ஒருநாள் எமது கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிரா­மத்தில் குடி­ய­மர்த்­து­வார்கள் என்ற ஏக்­கத்தில் கேப்­பாப்­பு­லவு கிரா­மத்தின் ஆரம்­பத்தில் வீதியை மறித்து இந்­தி­யாவின் கத­வு­போல அமைக்­கப்­பட்­டுள்ள படைத்­த­லை­மையக வாயி­லூ­டாக தங்கள் கிரா­மத்தை இன்றும் அந்­த­வ­ழியால் போகும்­போ­தெல்லாம் பார்க்­கின்­றார்கள் இந்த கேப்­பா­ப்பு­லவு மக்கள்.

இன்றும் விரக்­தி­யுடன் தமது சொந்த கிரா­மத்­து­வா­சலில் இரா­ணு­வத்தின் குகைக்கு முன்னால் தமது சொந்­த­நி­லத்தை கேட்டு போரா­டி­வரும் மக்­களில் சிலரின் மனக்­கு­மு­றல்கள் இவை ....

கேப்­பா­ப்பு­லவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த விவே­கா­னந்தன்(வயது 60) என்­ப­வ­ரின்­ஏக்­கங்கள் "கேப்­பாப்­பு­ல­வில எங்­கட சொந்­தக்­கா­ணிக்­குள்ள நாங்கள் போகோணும் எண்டு ஆசைப்­பட்டு மாதிரிக் கிரா­மத்தில் காத்­தி­ருக்­கும்­போது நாங்கள் பல­முறை பலரால் ஆசை­வார்த்­தைகள் காட்டி நாளை உங்கள் நிலங்கள் தருவோம் அடுத்­த­மாதம் தருவோம் நீங்கள் போங்கோ என எத்­த­னையோ தரம் ஏமாற்­றப்­பட்டோம்,நாமும் அந்த அர­சாங்கம் வரும் இந்த அர­சாங்கம் வரும் வரேக்க எங்­கட காணிகள் கிடைக்கும்.என்று ஆசை­யோட வாக்­குப்­போட போனோம். ஆனால் எதுவும் இது­வரை கிடைக்­கல. நாங்கள் எங்­கட இடத்­தில எப்­புடி வாழ்ந்தம் என்று இந்த ஆமிக்­கா­ர­னு­க­ளுக்கு தெரி­யுமோ? அவங்கள் சொல்­லு­றாங்கள் நீங்கள் இப்போ இருக்­கிற இடம் நலம்­தானே அங்க இருங்க நாங்கள் உங்­க­ளுக்கு வீடு­கட்டி தந்­தி­ருக்கு எல்லாம் செய்து தந்­தி­ருக்கு நீங்க மாதிரி கிரா­மத்­தில இருங்க இது ஆமி ஆக்­க­ளுக்கு வேணும் எண்டு சொல்­லு­றாங்கள்.எங்­க­ளுக்கு எங்­கட இடம்தான் வேணும் .என்ட கா­ணில என்ன இல்லை. மா பலா தென்னை தேசி, எல்லாம் இருக்கு. எனக்கு ஒண்டும் கடைல வாங்க தேவை­யில்லை. ஆனால் இப்ப இருக்­கிற முகா­மில எல்­லாமே கடை­யில தான் வாங்கி சீவிக்­க­வேண்டி கிடக்கு "

இவரின் எண்­ணங்கள் என்றும் தனது சொந்­த­மண்ணை நோக்­கி­ய­தா­கவே இருக்­கின்­றது.தனது கிரா­மத்தில் சந்­தோ­ஷமாக வாழ்ந்த நாட்­களை எண்ணி எண்­ணியே தற்­போது போரா­ட்டம் நடை­பெற்­று­வரும் படைத்­த­லை­மை­யக வாயிலில் நின்று அடிக்­கடி தூரத்தே தெரியும் தனது வீட்­டை­யும் ­தோட்­டத்­தையும் எட்­டிப்­பார்க்­கின்றார் இவர்.

தள்­ளாத தனது 71வயதில் தனது சொந்த மண்ணில் சென்று உயி­ரை­வி­ட­வேண்டும் என்ற ஏக்­கத்­துடன் படை­முகாம் வாசலில் காத்­தி­ருக்கும் மனோன்­மணி என்ற வயது முதிர்ந்­தவர் இவர் 'கேப்­பா­ப்பு­லவு விடுறம் கேப்­பாப்­பு­லவு விடுறம் எண்டு எத்­த­னையோ தடவை சொல்­லிட்­டினம். இன்னும் எங்­கட இடம்­வி­டேல்ல. நான் என்ட சொந்த வீட்­டி­லே­போய்த்தான் சா­கோணும் எண்ட ஏக்­கத்­தில இருக்­கிறன்.எங்­களை என்­ன­வி­தம்­பண்­ணியும் எங்­கட இடத்­துக்கு விடோணும் எண்டு ஆவ­லோட கேக்­கிறம்.அது­வ­ரைக்கும் இந்த போரா­ட்­டத்தை விட்டு போக­மாட்டம் ,எங்­கட இடத்­தில இருந்து வாழ்ந்த நிம்­ம­தியும் சந்­தோ­ஷமும் எட்­டு­வ­ரு­ஷமா நாங்கள் அனு­ப­விக்­கேல்ல தண்­ணி­கூட இல்­லாமல் நாங்கள் இந்த முகா­மில படு­ற­பாடு எங்­கட இடத்­தில எத்­த­னையோ வள­மான தண்­ணியள் என்ன வரு­மா­னங்­களை என்ன, தோட்டம் துரவு என்ன எல்லாம் செய்து நாங்கள் கோழி­யளோ ஆடு­களோ மாடு­களோ வளமாய் எல்லாம் வச்சு வாழ்ந்­து­வந்­த­னாங்கள். இப்ப ஒண்டும் எங்­க­ளுக்கு உத­வாத வண்­ணத்­தில பிள்­ளை­க­ளையும் இழந்து பொருள்­பண்­டத்­தையும் இழந்து காணி பூமி­க­ளையும் இழந்து போட்டு இப்ப தவிச்­சுக்­கொண்டு இருக்­கிறம்.எங்­க­ளுக்கு எங்­கட இடத்தை தாங்கோ. எங்­க­ளுக்கு வேற ஒண்டும் வேண்டாம். அதே காணும்..

இன்னும் இன்னும் பல கேப்­பா­ப்பு­லவு மக்கள் இன்றும் இதே ஏக்­கங்­க­ளுடன் அந்த கிரா­மத்தின் படைத்­த­லை­மை­யக வாயிலில் இரவு பக­லாக காத்­துக்­கி­டக்­கின்­றார்கள்.தமது சொந்த நிலங்கள் கிடைக்குமெனவும் காத்­தி­ருக்கும் மக்கள் இந்த நாட்டில் உள்ள ஏனைய இனத்­த­வர்கள் போல் தமது சொந்த கிரா­மத்தில் சொந்த நிலத்தில் வாழத்தான் ஆசைப்­ப­டு­கின்­றார்­களே தவிர இவர்கள் கேட்­பது ஒன்றும் தனி­நாடு அல்ல. இவர்­களின் பூர்­வீக கிரா­ம­மான கேப்­பா­ப்பு­லவு ,சீனி­யா­மோட்டை,சூரி­புரம்,பிலக்­கு­டி­யி­ருப்பு ,பிரம்­படி எல்லாம் சேர்த்த பூர்­வீக நிலத்தில் இரா­ணுவ, வச­முள்ள 138 குடும்­பங்­களின் 482 ஏக்கர் நிலங்­களை மட்­டும்தான்.

இந்த 482 ஏக்கர் நிலங்­களை இந்த இரா­ணுவம் அருகில் உள்ள காடு­க­ளிலோ அரச நிலங்­க­ளிலோ பெற்­றுக்­கொள்­ள­மு­டியும் ஆனால் வேண்டும் என்றே இந்த மக்­களின் நிலங்­களில் பாரிய படைத்­த­ளங்­களை அமைத்து உல்­லாச விடு­தி­க­ளையும்,நவீன உண­வ­கங்­களை நீச்சல் தடா­கங்­க­ளையும் அமைத்­துள்­ளனர்.இந்த மக்­களின் வரு­மா­னங்­களை விற்­கின்­றனர் அனு­ப­விக்­கின்­றனர். தென்­ப­கு­தி­யி­லி­ருந்து வரும் தமது உற­வி­னர்கள் இந்த வளங்­க­ளையும் வச­தி­வாய்ப்­பு­க­ளையும் அனுபவிக்க வாய்ப்பு கொடுக்கின்றனர்.ஆனால் இந்த கிராமத்து மக்களோ தமது சொந்த நிலத்துக்கு செல்லவேண்டும் என்ற ஆசையில் படைத்தலைமையாக வாயில் கதவுக்கு அருகே போனால் மிருகங்களை விரட்டுவதுபோல் இராணுவத்தால் விரட்டப்படுகின்றனர். இதுதான் நீங்கள் கூறும் எல்லோரும் ஒன்றாக இந்த நாட்டில் வாழவேண்டும் என்ற நல்லிணக்கமா நீங்கள் நல்லிணக்கம் ஏற்படுத்துகின்றோம் என்று உலகுக்கு காட்டும் நாடகம் இதுவா. தமிழர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்று கூறுவது நீங்கள் இதைத்தானா .

இந்த மக்களின் நிலங்களை ஆக்கிர மித்துள்ள இராணுவம் அதனை ஆக்கிரமித்து அதிலே உல்லாச வாழ்க்கை வாழ இந்த மக்களோ மாதிரிக்கிராமம் என்னும் முகாமில் எப்போதுவரை வாடுகின்றார்களோ அப்போதுவரை கேப்பாப்புலவு ஒரு இராணுவ பாசறைதான்... 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-11#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.