Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு

Featured Replies

கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு

 

உயிர் கொல்லி டெங்கு கிழக்கில் அச்­சு­றுத்­தலை  ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. இருந்­தா­லும் ­தி­ரு­கோ­ண­மலை மாவட்டம் முழு­வ­திலும் டெங்கு நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக கிண்­ணியா பிர­தே­சமே நோயின் தாக்கம் மிகவும் அதி­க­ரித்­துள்­ள­மை­யுடன், டெங்கு தாக்­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.

டெங்கு நொய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கையை சுகா­தார திணைக்­களம் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் பாட­சா­லைகள் ஏனைய பல திணைக்­க­ளங்கள் அவ­சர கால நட­வ­டிக்­கை­யாக முடுக்கி விடப்­பட்­டுள்­ளது.எனினும் இது­வரை கட்­டுப்­பாட்­டுக்குள் வர­வில்லை இன்றும் நிலைமை கவ­லைக்கு இட­மா­க­வுள்­ளது.

இதனால் மக்­க­ளுக்கு மர­ண­பீ­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.தற்­போது தான் தமது சுற்­றுப்­பு­றத்தை சுத்­த­மாக வைக்க வேண்டும் என்ற உண்­மையை மக்கள் உணர்ந்து வரு­கின்ற போதும் இதற்கு அவர்கள் கொடுத்த விலை அதிகம் 12 பேரின் உயிர்கள் அல்­லவா??? எனினும் இது வரை இந் நோய் கட்­டுப்­பாட்­டுக்குள் வர­வில்லை. மாறாக நாளுக்கு நாள் நோயா­ளி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தோடு மரணம் அடை­வோரின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கின்­றது.

கிண்­ணியா பிர­தே­சத்தில் டெங்குக் காய்ச்­ச­லினால் உயி­ரி­ழந்தோர்  பெயர்­வி­ப­ரங்கள் சில­வற்றை இங்கு பார்ப்­போ­மானால் காக்­கா­மு­னையைச் சேர்ந்த ஏ.ஆர்.மர்சூக் (வயது -32) பெரிய கிண்­ணி­யாவைச் சேர்ந்த எம்.ஜே.இப்­திசாம் (வயது- 20) மாஞ்­சோ­லையைச் சேர்ந்த ஜே.ஜே.ஹாதீக் (வயது 07) மற்றும் குறிஞ்­சாக்­கேணி  எம்.ஹாலித் (வயது 43)  கிண்­ணியா 4ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த பாத்­திமா சனா (வயது 6) என்ற சிறு­மியும் கிண்­ணியா மாஞ்­சோ­லைச்­சே­னையைச் சேர்ந்த பாத்­திமா றிஸ்­வானா (வயது 38) என்ற நான்கு பிள்­ளை­களின் தாயும்  கிண்­ணி­யாவைச் சேர்ந்த  4 பிள்­ளை­களின் தாயான பாறூக் கனீஷா (வயது 58) ரஸீன் சாஹீரா (வயது 26) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ளனர் மார்ச் 15ஆம் திகதி வரை12 பேர் மாவட்டம் தழு­வி­ய­தாக உயி­ரி­ழந்­துள்­ளனர். கிழக்கு மாகா­ணத்தில் கடந்த இரண்டு மாதங்­களில்  சுமார் 3000 பேர் டெங்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தக­வல்கள் மூலம் அறிய முடி­கி­றது.  திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில்  சுமார் 2000 பேரும் பெப்­ர­வரி மாதம்வரை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 510 பேரும் அம்­பாறை மாவட்­டத்தில் 87 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தக­வல்கள் மேலும் தெரி­விக்­கின்­றன.

கிண்­ணியா பிர­தே­சத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள டெங்கு அபா­யத்­தினை கவ­னத்தில் கொண்டு கடந்த சில தினங்­க­ளக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்­ணாண்டோ மற்றும் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர்  விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு கிண்­ணியா தள வைத்­தி­ய­சா­லையில் அவ­சர கூட்­ட­மொன்­றினை கூட்­டி­யுள்­ளனர். கிண்­ணியா பிர­தே­சத்தில் அதி­க­மா­ன­வர்கள் டெங்கு நோய்க்கு பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­தோடு பலர்  மர­ணித்தும் உள்­ளனர். 

இந்தச் சந்­தர்ப்­பத்தில் மத்­திய சுகா­தார அமைச்­சு­க­ளி­ட­மி­ருந்தும் மாகாண சுகா­தார அமைச்­சு­க­ளி­லி­ருந்தும் ஆலோ­ச­னை­களும் உத­வி­களும் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. இதே­வேளை பிற மாவட்­டங்­க­ளான பொலன்­ன­றுவை, மட்­டக்­க­ளப்பு, கல்­முனை,  அம்­பாறை ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களைத் தந்து டெங்கு நுளம்பை கட்­டுப்­ப­டுத்த மேலும் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பாட்டில் சிறந்த வழி­காட்­டி­யாக இருந்து உதவி வரு­கின்­றனர். இது தொடர்­பாக இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பல வழி­க­ளிலும் விழிப்­பு­ணர்வை தொடர்ந்தும் ஏற்­ப­டுத்தி வரு­கின்றோம். ஆனால் டெங்கு பரவக் கூடிய இடங்கள் உள்­ள­வர்கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய நிலைக்கும் ஆளா­கி­யுள்ளோம். எனவே இப்­பி­ர­தேச மக்கள் இதில் பூரண ஒத்­து­ழைப்பை வழங்கும் பட்­சத்தில் வெகு விரைவில் இப் பிர­தே­சத்தில் டெங்கு தாக்­கத்தை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்­பிக்கை உள்­ளது. 

திரு­கோ­ண­ம­லையில் டெங்கு நோயால் நாள் ஒன்­றுக்கு 100 பேர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றனர். ஆயினும் வைத்­தி­ய­சா­லையில் போது­மான இட­வ­சதி ஆளணி மற்றும் படுக்­கைகள் இல்­லா­துள்­ள­தாக திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் திரு­மதி அனு­சியா ராஜ்­மோகன் தெரி­வித்தார். டெங்கு நோய் பர­வக்­கூ­டிய இடங்­களில் பொது அமைப்­புக்­களின் உத­வி­யுடன் சேவை அடிப்­ப­டை­யி­லான சிர­ம­தான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு டெங்கு நோய் பர­வக்­கூ­டிய இடங்­களை இனங்­கண்டு கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்றும் இதற்­காக விசேட குழு­வொன்று அமைக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அக்­கு­ழு­வுக்­கானத் தேவை­களை மாவட்­ட­தொண்டர் அமைப்­புக்கள் மற்றும் ஆல­யங்­களின் நிதி அனு­ச­ர­ணை­யுடன் பூர்த்தி செய்­வ­தெ­னவும் பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தும் விதத்தில் வீதி நாட­கங்­களை ஏற்­பாடு செய்யும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தென அவர் மேலும் கூறினார்.

 மேலும் டெங்கு நோய் அபாயம் காணப்­ப­டு­வதால் தனியார் கல்வி நிலை­யங்­களை தற்­கா­லி­க­மாக 2 வாரங்­க­ளுக்கு மூடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்­டா­யு­த­பாணி சுகா­தார வைத்­திய அதி­காரி என்.விஜ­ய­குமார் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ஜெ.ஜெனார்த்­தனன் ஆகி­யோ­ருக்கும் தனியார் கல்வி நிலைய உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு சுகா­தார வைத்­திய அதி­காரி பணி­ம­னையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  மாலை நடை­பெற்­றது. திரு­கோ­ண­ம­லையில் டெங்குக் காய்ச்சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரில் 2 மாண­வர்கள் அடங்­கு­வ­துடன் மாண­வர்­களே டெங்குக் காய்ச்­சலால் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரி­வித்தார். எனவே தனியார் கல்வி நிலை­யங்­களை  தற்­கா­லி­க­மாக மூடு­மாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்­நி­லையில் தனியார் கல்வி நிலை­யங்­களை மூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்டு அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

டெங்கு நோய் தொடர்பில் மிகவும் கூடிய அக்­கரை தேவை­யா­க­வுள்ள இந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டின் பல பாகங்­களில் மாலை வேளை­களில் மழையும் பெய்து வரு­கி­றது இது டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்தும் குழு­விற்கு ஒரு சவா­லாக காணப்­ப­டு­கி­றது. எனவே வீடு­வீ­டாக சென்று அறி­வு­ருத்தல் தரு­கின்ற தொண்­டர்­களின் சிர­ம­தானப் பணிக்கு அதி­க­மான தொண்­டர்கள் தேவை­யா­க­வுள்­ளது.காரணம் சென்ற கிரா­மங்­க­ளுக்கு திரும்ப திரும்ப செல்ல வேண்­டி­யுள்­ளது.

இந்த நுளம்­புக்கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கைக்கு கிழக்குப் பல்­க­லைக்­க­ழக திரு­கோ­ண­மலை வளாக மாண­வர்கள் தொழி­ல் நுட்பக் கல்­லூரி மாண­வர்கள் கல்வித் திணைக்­கள ஊழி­யர்கள் நக­ர­சபை,  பிர­தேச சபை  ஊழி­யர்கள் ஆகியோர் பிர­தேச சுகா­தார அதி­கா­ரியின் வழி­ந­டத்­த­லுடன் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­துடன் கிரா­மிய சங்­கங்­களின் பிர­தி­நி­தி­களும் தமது கிரா­மங்­களின் சுகா­தா­ரத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு சுகா­தார அதி­கா­ரிகள் கோரிக்கை விடு­கி­றனர்.

மனித இரத்தை குடித்து 48  மணித்­தி­ய­ாலத்தில்  சுத்­த­மான நீர் உள்ள இடங்­களில் 200க்கும் அதி­க­மான முட்­டை­களை இட்டு அதில் இருந்து சில மணித்­தி­யா­லத்தில் நிறை உட­லி­யாக வெளி­யேறும் இந்த  நூளம்பால்  200 மீற்றர் தூரம் வரை பறந்து சென்று பல­ருக்கு டெங்கு நோயை ஏற்­ப­டுத்த முடியும். எனவே நமது வீடுகள் மட்டும் சுத்­த­மாக இருப்­பதை தாண்டி அயல் வீட்­டையும் கவ­னிக்க வேண்­டிய நிலைக்கு மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். உயி­ரி­ழப்­புக்­களும் இன்னும் பலர் அதி தீவிர சகிச்சைக் பிரி­வு­க­ளிலும் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­வது  ஒரு வித பயத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

டெங்கு நுளம்பை வீடு­களில் தேடி அழித்­தாலும் பொது இடங்­க­ளிலும் அர­சாங்க திணைக்­க­ளத்­திலும் இருந்து அழிப்­பது சவா­லாக உள்­ளது. அது விட­ய­மாக திணைக்­க­ளங்கள் துரித நட­வ­டிக்­கையை மேற் கொள்ள வேண்டும் மேலும் மூடிய வீடுகள் கட்­டு­மானம் நடந்து இடை நடுவில் காணப்­படும்  கட்­ட­டங்கள் என்­பன நுளம்பு பெருக்­கத்­திற்கு அதிமான செல்வாக்கு செலுத்துகிறது.

எனவே உயர் காய்ச்சல் தலைவலி மற்றும் கண்கலுக்கு பின்னால் வலி தசைகள் மூட்டுகள் வலி குமட்டல் மற்றும் வாந்தி தோல் தடித்தல் அல்லது சிவப்பு நிறமாகி இரத்தம் கசிதல் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடவும்.இது டெங்கு நோய்க்குறிய அறிகுறியாகும்.

எனவே இந்த நோய்த் தாக்­கத்தில் இருந்து சகல மக்­களும் பாது­காக்­கப்­பட வேண்­டு­மானால் சக­லரும் ஒற்­று­மை­யுடன் இந்த நோயை கட்­டுப்­ப­டுத்த உழைக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. எனவே, டெங்கு நோய்த்­தாக்­கத்­தி­லி­ருந்து எம்­மையும் எமது மக்­க­ளையும் காப்­பாற்ற வேண்­டிய பாரிய பொறுப்பு சுகா­தாரத் துறை­யி­னரின்  பக்கம் இருந்­தாலும் பொது மக்­க­ளி­டமும் அதற்­கான பங்­க­ளிப்பு காணப்­ப­டு­கின்­றது.

எனவே அதனை முன்­னி­லைப்­ப­டுத்தி ''சுத்­தமே சுகா­தாரம் சுகா­தா­ரமே ஆதாரம்'' என்று வாழ்­வ­தற்கு எம்மை நாம் வழிப்­ப­டுத்திக் கொள்வோம். உயிர் கொல்லி டெங்­கி­லி­ருந்து  வீட்டையும் திருகோணமலை மாவட்டத்தையும் காப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-6

  • தொடங்கியவர்

திருமலையை அச்சுறுத்தும் டெங்கு

 

திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் எங்கு கேட்­டாலும் பயம், பீதி, மரணம் பற்­றிய திடீர் திடீ­ரான வதந்­திகள். சிறு­பிள்­ளைகள் இருக்கும் வீடுகள் தோறும் பத­க­ளிப்பும் பதற்­றமும். இவை­யெல்லாம் ஏன் நடக்­கி­ன்றன என்று கேட்டால் டெங்கு எனும் ஆட்­கொல்லி நோய் பற்­றிய பயமும் பீதி­யுமே பர­விப்­போய்க்­கி­டக்­கி­ன்றன.

சில கிரா­மங்­களைப் பொறுத்­த­வரை தமது கிரா­மத்தை விட்டு வெளி­யே­வரப் பயப்­ப­டு­கி­றார்கள். பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட பல பிர­தே­சங்கள் டெங்குப் பிர­தே­ச­மென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு தீவிர தடுப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

பிரத்­தி­யேக, மற்றும் தனியார் வகுப்­பு­களை நடத்தும் கல்வி நிலை­யங்கள் இரு­வார காலத்­துக்கு மூடும்­படி கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நக­ரத்­தி­லுள்ள சுமார், 25 க்கு மேற்­பட்ட முன்­பள்­ளி­க­ளுக்கு சிறார்கள் செல்­வ­தில்லை. நாளாந்தம் 100 க்கு குறை­யாத டெங்கு நோயா­ளிகள் திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்று உத்­தி­யோ­கப்­பற்­றற்ற தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடு­மை­யான நோயா­ளிகள் குறிப்­பாக சிறிய பரா­யத்தை உடை­ய­வர்கள் மேல­திக வைத்­தி­யத்­துக்­காக அநு­ரா­த­புரம், நீர்­கொ­ழும்பு போன்ற இடங்களில் உள்ள வைத்­தி­ய­சா­லைகளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கி­றார்கள் என்று தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் குறிப்­பாக கிண்­ணியா, மூதூர் குச்­ச­வெ­ளிப்­பி­ர­தே­சத்தில் இந்த நோயின் கட்­டுக்கு அடங்­காத தன்­மை­யினால் கொழும்­பி­லி­ருந்து விசேட வைத்­தியர் குழு வர­வ­ழைக்­கப்­பட்டு வைத்­தி­யங்­களும் விசேட பரி­சோ­த­னை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக, ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

இவை­யெல்­லா­வற்­றையும் பார்க்­கின்­ற­போது, திரு­கோ­ண­மலைப் பிர­தேசம் டெங்கு நோயினால் கதி­க­லங்கிக் காணப்­ப­டு­கி­ற­தென்றே கூற வேண்டும்.

திரு­கோ­ண­மலை மாவட்ட செய­ல­கத்தின் புள்­ளி­வி­ப­ரப்­படி இவ்­வாரம் வரை மாவட்­டத்தில் 1966 நபர்கள் டெங்கு நோயா­ளி­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருப்­ப­துடன் கிண்­ணியாப் பிர­தே­சத்தில் மாத்­திரம் 855, டெங்கு நோயா­ளிகள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர் என அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையின் தக­வலின் படி மாவட்­டத்தில் 1100 க்கும் மேற்­பட்­ட­வர்கள் இந்­நோ­யினால் பீடிக்­கப்­பட்டு கடந்த மூன்று வார­கா­லத்­துக்குள் சிகிச்சை பெற்­றி­ருக்­கி­றார்கள். சுமார் 12 பேர் உயிரிழந்­துள்­ள­துடன் கிண்­ணியாப் பிர­தே­சத்தில் மாத்­திரம் 12 பேர் உயிரிழந்­துள்­ளனர் என உயர் வைத்­திய அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

அவர் தந்த விப­ரத்­தின்­படி கிண்­ணி­யாவில் உள்ள காக்­கா­மு­னைக்­கி­ரா­மத்தில்(1) அண்ணல் நகர் (1)குறிஞ்­சாக்­கேணி (1)கிண்­ணியா நகர சபை வீதி(2) மாஞ்­சோ­லைச்­சேனை (1) குச்­ச­வெளி ஐயா நகர் (1) பேர் மர­ணித்­துள்­ள­தாக தகவல் தெரி­விக்­கப்­பட்­டது. இதில் கவ­லை­த­ரு­கின்ற விட­ய­மாக, கிண்­ணியாப் பிர­தே­சத்தில் பாட­சா­லைப்­பிள்­ளைகள் இருவரும் உவர் மலைப்­பி­ர­தே­சத்தில் ஒரு குழந்தையும் மர­ணித்­துள்­ள­தாக அந்த வைத்­திய அதி­காரி தெரி­வித்தார்.

டெங்கு என்னும் ஆட்­கொல்லி நோயின் தாக்கம் அல்­லது பெரி­ய­ளவு நோயா­ளர்கள் உள்ள இட­மா­கவும் அதே­வேளை டெங்கு நுளம்பின் உற்­பத்தி அதிகம் உள்ள இட­மா­கவும் திரு­கோ­ண­மலை நக­ரத்தை உள்­ள­டக்கிக் காணப்­படும் உவர்­மலை, மனை­யா­வெளி, சோன­க­வாடி, வில்­லூன்றி அன்­பு­வ­ழி­புரம், அரு­ண­கிரி வீதி, சுமே­த­கம, திருக்­க­டலூர், ஜின்னா நகர் மற்றும் குச்­ச­வெளி, உப்­பு­வெளி இதே­போன்று கிண்­ணியாப் பிர­தே­சத்தில் பைசல் நகர், அண்ணல் நகர், காக்­கா­முனை, மாஞ்­சோ­லைச்­சேனை, கிண்­ணியா நகர்­ப­குதி, ஹிஜ்ரா வீதி போன்ற பல பிர­தே­சங்­களில் இந்­நு­ளம்பின் பெருக்­கமும் தாக்­கமும் வேறு எப்­பி­ர­தே­சத்­திலும் இல்­லாத அள­வுக்கு கடு­மை­யாக காணப்­ப­டு­வ­துடன் அதிக மர­ணங்கள் சம்­ப­வித்த இட­மாக கிண்­ணியாப் பிர­தே­சமும் காணப்­ப­டு­கி­றது என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

கிண்­ணியாப் பிர­தே­சத்­தி­லுள்ள குறிஞ்­சாக்­கேணி எனும் கிரா­மத்தில் 28.12.2016 அன்று 32 வய­து­டைய ஒருவர் டெங்கு நோயினால் மர­ணித்த நிலை­யி­னா­லேயே இந்­நோயின் மரண பயம் அறி­யப்­பட்­ட­துடன் அதனைத் தொடர்ந்து வந்த நாட்­களில் இந்­நோயின் தாக்கம் உச்­ச­ம­டைந்த நிலையில் 12.03.2017 அன்று கிண்­ணியா மகளிர் கல்­லூ­ரியில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வந்த மாண­வி­யொ­ருத்தி மற்றும் 26 வயது கர்ப்­பிணித் தாயின் தொடர் மர­ணங்கள் கிண்­ணியாப் பிர­தே­சத்தை உலுக்கி­விட்ட நிலையில் இந்நோய் பற்­றிய பயமும் பீதியும் தீவிரம் கொண்டு காணப்­பட்­ட­தாக, கிண்­ணியாப் பிர­தே­சத்­துக்குப் பொறுப்­பான வைத்­திய அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

அந்த அதி­காரி இந்­நோயின் தோற்ற நிலை­பற்றி குறிப்­பி­டு­கையில், கடந்த டிசம்பர் மாதம் டொக்­கியாட் கடற்­ப­டைத்­த­ளத்தைச் சேர்ந்த 40 நபர்கள் இந்­நோய்க்கு ஆளாக்­கப்­பட்ட நிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்தே கிண்­ணியா மர­ணங்கள் எமக்கு அதிர்ச்­சியைத் தந்­தன என அந்த அதி­காரி குறிப்­பிட்டார்.

இப்­பி­ரி­வுக்குப் பொறுப்­பான அவ்­வ­தி­காரி மேலும் தெரி­விக்­கையில்; மார்ச் மாத நடுப்­ப­கு­தி­வரை திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் 2100 பேர் இந்­நோயின் தாக்­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ளார்கள் என புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. பொதுமக்கள் மற்றும் வியா­பார நிலையங்கள், தொழிற்­சா­லைகள், கழி­வ­கற்றா இடங்கள் கார­ண­மா­கவே டெங்கு நுளம்பின் பெருக்கம் அதி­க­மாகி அவ­ல­மான இந்த மர­ணங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கூடி­ய­வரை அழுக்கு நீர் தவிர்ந்த சுத்த நீரில் உற்­பத்­தி­யாகும் நுளம்பே டெங்கு நுளம்­பாகும் என அவர் விளக்கம் அளித்தார்.

இந் நுளம்பு பற்­றியும் இதன் பெருக்கம் பற்­றியும் நோயின் குணம் குறிகள் பற்­றியும் திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சாலை பணிப்­பாளருடன் தொடர்பு கொண்டு வின­விய போது அவர் இந் நுளம்பு பற்­றியும் ஏனைய விப­ரங்கள் பற்­றியும் பின்­வ­ரு­மாறு விளக்கம் அளித்தார்.

டெங்கு நுளம்­புகள் சாதா­ரண நுளம்­பு­களை விட வேறு­பட்­டவை. சாதா­ரண நுளம்­புகள் குப்பை கூளங்கள், கான்கள், கழி­வுப்­பொ­ருட்கள், மரங்கள் என்­ப­வற்றில் உற்­பத்­தி­யா­கின்­றது. ஆனால் டெங்கு நுளம்பு என்­பது சுத்­த­மான தண்ணீர் தேங்கி நிற்கும் தெளிந்த நீர் மண்­டிக்­கி­டக்கும் இடங்­க­ளி­லி­ருந்து உற்­பத்­தி­யா­கி­றது.

டெங்கு நுளம்­புகளில் ஈடிஸ் ஏஜிப்ரை என்ற இனம் நகரப் பகு­தியில் உற்­பத்­தி­யாகின்றது. ஈடிஸ் அல்­போ­பிக்ரஸ் என்ற இன நுளம்பு கிரா­மங்­களில் உற்­பத்­தி­யா­கி­றது. ஆனால் இன்­றைய வாழ்க்கை சூழலில் கிராமம், நகரம் என்ற வேறு­பா­டின்றி உற்­பத்­தி­யா­கி­றது. இந்­நு­ளம்­பு­கள் ஆண் பெண் என்ற இரு பாலியல் தன்மை கொண்­டவை. ஆண் நுளம்பு, மரம், பூ, இலை ஆகி­ய­வற்­றி­லுள்ள சாறு, தேன், பழங்கள் ஆகி­ய­வற்றை உறிஞ்சி வாழ்­கி­றது. ஆனால் பெண் நுளம்­புக்கு இரத்­தமே வேண்டும். மனித இரத்­தத்தை உறிஞ்­சியே வாழ்­கி­றது, பெரு­கி­றது. மனி­தர்கள் இல்­லாத இடங்­களில் இதன் இனப்­பெ­ருக்­கத்தை காண­மு­டி­யாது.

இது வெள்ளை நிறப் புள்­ளி­களைக் கொண்­டது. சிறிய அளவு தோற்­ற­மு­டை­யது. இதற்கு ரைகர் நுளம்பு என்ற பட்­டப்­பெ­ய­ரு­முண்டு. இதன் இனப்­பெ­ருக்கம் முட்டை குடம்பி ஆகு­வ­தற்கு 7 நாட்கள் தொடக்கம் 14 நாட்கள் வரை தேவை­யாக இருக்­கின்­ற­போதும் உஷ்ணம் அதி­க­மாக இருக்­கின்ற கார­ணத்­தினால் குறைந்த நாட்­களில் உற்­பத்­தி­யாகி விடு­கி­றது. குறித்த காலங்­களில் மழை பெய்யும் போது இதன்­பெ­ருக்கம் அதி­க­மா­கி­வி­டு­கி­றது.

டெங்கு நுளம்பு, டெங்கு உள்ள மனி­தர்­களின் இரத்­தத்தை உறுஞ்­சு­கின்­ற­போது உமிழ்நீருடன் டெங்கு வைரஸ் உண­வுக்­குழாய் வழி­யாக சாப்­பாட்­டுடன் கலக்­கி­றது. அதன் உடல் முழு­வதும் வைரஸ் பரவி விடு­கி­றது. மனி­தர்­களைக் கடிக்­கும்­போது மேற்­படி நோய் வேக­மாகப் பர­வு­கி­றது. மனித இரத்தம் இல்­லாமல் இதனால் உயிர் வாழ­மு­டி­யாது என்­பது கவ­ன­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் என எமக்கு விளக்கம் அளிக்­கப்­பட்­டது.

டெங்கு நுளம்­புகள் பெருகும் இடங்­களைப் பற்­றியும் அதன் ஆதிக்கம் பற்­றியும் விளக்­கும்­போது இது தெளிந்த நீரில் மட்­டுமே உரு­வா­கி­றது. சிறிது நீர் இருந்­தாலும் அந்த தேக்­க­மான இடங்­களில் உற்­பத்­தி­யா­கி­வி­டு­கி­றது. இது உற்­பத்­தி­யாகும் இடங்­களை அழிக்க அழிக்க புதிய புதிய இடங்­களைத் தேடிப் போய் தனது தங்­கு­மிட இருப்பை தக்க வைத்துக் கொள்­கி­றது.

இன்­றைய காலத்தில் கிணறு, குழாய்க் கிணறு போன்ற இடங்­களில் உற்­பத்­தி­யா­கி­றது. சில இடங்­களில் உப்பு நீரும் நன்னீரும் கலந்­தி­ருக்கும் இடங்­க­ளிலும் பெருகும் வாய்ப்­புகள் உரு­வா­கி­வ­ரு­கி­றது.

டெங்கு நுளம்பின் பெருக்­கத்­துக்கும் உற்­பத்­திக்கும் இயற்கை காரணம் என்­ப­தை­விட மனி­தனால் உரு­வாக்­கப்­படும் கழிவுப் பொருட்கள், வீசப்­படும் பொருட்கள் பரா­ம­ரிப்­பற்ற பொருட்களே கார­ண­மா­கின்­றன. அவ்­வாறு பார்க்­கின்­ற­போது மல­சலகூட பிற், நீர்த்­தாங்­கிகள், ஐஸ்­கிறீம் கப், ஐஸ்சொக் சுற்­றுப்­பேப்பர், சிரட்டை, பாவிக்­கப்­பட்­டபின் அழிக்­கப்­ப­டாமல் வீசப்­படும் பொலித்தீன், சொப்பிங் பேக், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பூச்­சா­டிகள் போன்ற ஏரா­ள­மான மனி­தனால் உரு­வாக்­கப்­படும் பொருட்கள் இதன் பெருக்­கத்­துக்கு கார­ணங்­க­ளாக காணப்­ப­டு­கி­றன.

குறிப்­பாக சொல்­லப்­போனால் வீட்­டுக்கு வெளியே உற்­பத்­தி­யாகும் இவ்­வகை நுளம்­புகளை வீட்­டுக்­குள்­ளேயே பெருகும் நிலை­மையை மனி­தர்­களே உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கிறோம். குளி­ரான, பொருட்கள் வைக்கும் இடங்­களில் இது இல­கு­வா­கவே பெரு­கி­வி­டு­கி­றது. உதா­ர­ண­மாக குளிர்­சா­த­னப்­பெட்­டியின் ஏதா­வ­தொரு பாகத்தில் நீர் தேங்­கி­யி­ருக்­கு­மாயின் அதே­போன்று வீட்­டுக்குள் குன்று, குழி, வெடிப்­புகள் இருக்­கு­மாயின் அதன் வசிப்­புக்கு இவ்­வி­டங்கள் வச­தி­யாகப் போய் விடு­கி­றது என வைத்­திய அதி­காரி விளக்­க­ம­ளித்தார்.

திரு­கோ­ண­மலை நக­ரப்­ப­கு­தி­யிலும் கிண்­ணியாப் பிர­தே­சங்­க­ளிலும் இந்­நு­ளம்பின் பெருக்­கத்­துக்கும் நோயின் தாக்­கத்­துக்­கு­மு­ரிய கார­ணங்கள் என்­ன­வென பொறுப்­பான வைத்­திய அதி­கா­ரி­யிடம் வின­வி­ய­போது அவர் அளித்த விளக்கம் ஆச்­ச­ரி­யத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்­தது.

திரு­கோ­ண­மலை நக­ரத்­திலும் அதை­அண்­டிய பகு­தி­க­ளிலும் ஏரா­ள­மான தரிசு நிலங்கள் சுமார் 1000 க்கும் மேற்­பட்ட நிலங்­களும் காணி­களும் பரா­ம­ரிப்­பற்­ற­வை­யாக, காடு மண்­டி­ய­வை­யாக காணப்­ப­டு­கின்­றன. சில வீடுகள், அரச விடு­திகள், பிரத்தியேக கல்வி நிலையங்கள் குழந்­தைகள் கல்வி கற்கும், விளை­யாடும் இடங்கள், துப்­பு­ரவு அற்­ற­வை­யாக, பரா­ம­ரிக்­கப்­ப­டா­த­வை­யாக காணப்­ப­டு­கி­ன்றன. சில தனியார் வீடு­களை நாம் பரி­சோ­தித்­த­போது சுத்தம், பரா­ம­ரிப்பு மோச­மா­கவே காணப்­பட்­டன. மல­சலகூடங்­களில் பரா­ம­ரிப்பு மிக மிக மோச­மா­க­வுள்­ளன. உப்­பு­வெளி, மற்றும் வரோ­த­ய­நகர் பிர­தே­சங்களில் இந்த நுளம்பு சொல்­ல­மு­டி­யாத அள­வுக்கு பெருக்கம் பெற்­றுக்­கா­ணப்­ப­டு­வ­தற்கு நக­ரத்தில் சேக­ரிக்­கப்­படும் குப்பை கூளங்கள் இவ்­வி­டங்­க­ளி­லேயே கொட்­டப்­ப­டு­கி­றது. இதற்குள் ஏரா­ள­மான பொலித்தீன், சொப்­பிங்பேக், பிளாஸ்டிக் பொருட்கள் காணப்­ப­டு­கின்­றன.

நக­ராண்­மைக்­க­ழகம் மற்றும் பிர­தேச சபை­களின் கழி­வுப்­பொருள் முகா­மைத்­துவம் மிக மோச­மாக காணப்­ப­டு­வ­துடன் நீர்­வடி வாய்க்­கால்கள் பரா­ம­ரிப்பின் மோசம் சொல்­ல­மு­டி­யா­தவை. இதற்கு நாம் நக­ராண்மைக் கழ­கத்­தையோ பிர­தேச சபை­க­ளையோ குற்றம் சொல்லி தப்­பி­வி­ட­மு­டி­யாது. பொது­மக்கள் தாமாக உணர்ந்து செயல்­பட வேண்டும். தங்­க­ளுக்­கு­ரிய சமூ­கக்­க­ட­மை­களை உணர்ந்து செயற்­பட வேண்டும். இதே­வேளை குப்பை கூளங்கள் சேக­ரிக்­கப்­படும் போது தரம்­பி­ரித்து சேக­ரிப்­ப­துடன் அழிக்க வேண்­டி­ய­வற்றை உடன் அழிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

இதே­போன்­றுதான் கிண்­ணியாப் பிர­தே­சத்தில் இந்த நோயின் தாக்கம் அதி­க­மாகி மர­ண­வீதம் அதி­க­ரித்­த­மைக்­கான கார­ணங்­களை ஆராய்ந்­த­போது பல உண்­மை­களை அறிந்து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இப்­பி­ர­தே­சத்தில் உள்ள கிண­றுகள், குழாய்க்­கி­ண­றுகள் ஆகி­ய­வற்றில் இந்­நு­ளம்பின் பெருக்கம் அதி­க­மாக காணப்­ப­டு­வ­துடன் நீர்­வ­டிகால் அமைப்பின் சீரின்மை, பாவிக்­கப்­ப­டாத கிண­றுகள், சில வீடு­களில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குழாய்க்­கி­ண­றுகள் மற்றும் பயன்­ப­டுத்­தப்­ப­டாத, பரா­ம­ரிக்­காத அரச காணிகள், கட்­டடங்கள், மல­சலகூட பிற்கள், இதன் உற்­பத்­திக்கு முக்­கிய கார­ண­மென கண்­டு­கொள்­ளப்­பட்­டுள்­ளது என அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்­நோயின் குணங்­கு­றிகள் பற்றி சுகா­தார அமைச்சின் டெங்கு கட்­டுப்­பாட்டுப் பிரி­வினால் அவ­ச­ர­மாக வெளி­யி­டப்­பட்­டுள்ள துண்டுப் பிர­சு­ரங்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தா­வது; உயர் காய்ச்­ச­லுடன் தலை­வலி மற்றும் கண்­க­ளுக்குப் பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் வாந்தி, தோல் தடித்தல், சிவப்பு நிறம் மற்றும் இரத்தக்கசிவு, அதி­க­மான வயிற்று வலி, சோர்வு, அதிக தூக்கம், பதற்றம், தலை சுற்றல், சிறு­நீரின் அளவு குறைதல் குரு­திப்­போக்கு என பல்­வேறு குணம் குறிகள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.  

இந்­நோயின் தாக்­கத்­துக்கு அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக காணப்­படும் கிண்­ணியாப் பிர­தே­சத்தில் 14 க்கும் மேற்­பட்ட உயிர்கள் பலி­யா­கி­யுள்ள நிலையில் கிண்­ணியா பிர­தேச பாட­சாலை மாண­வர்­களின் வரவு குறை­வாக காணப்­பட்டதுடன் கடந்த 15,16,17 ஆகிய மூன்று தினங்கள் பாட­சா­லைகள் மூடப்­பட்­டன. பயம், பீதி கார­ண­மா­கவும் உற­வி­னர்கள் நோய்க்கு ஆளா­கிய நிலை­யிலும் மாண­வர்­களின் வரவு குறைந்­துள்­ள­தாக வலய அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்­நோயின் தாக்­க­நிலை கண்டு அரச அதி­கா­ரிகள், வைத்­தி­யர்கள், அர­சி­யல்­வா­திகள் அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் பல பரி­கார நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதி­கா­ரிகள் சகிதம் கிண்­ணியாப் பிர­தே­சத்­துக்கு சென்று நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளும்­படி கட்­டளை பிறப்­பித்தார். இதே­போன்றே கடந்த 15.03.2017 அன்று கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர் அபய குண­வர்­தன தலை­மையில் சகல திணைக்­களத் தலை­வர்­களும் ஒன்­று­கூடி எதிர்­கா­லத்தில் நோயைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி ஆராய்ந்து திணைக்­கள தலை­வர்­க­ளுக்கு உரிய கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளன.

இதே­வேளை திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் புஷ்­ப­கு­மார இந்­நோ­யினை மாவட்டம் முழு­வதும் பூரண கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வரும் நோக்கில் கடற்­படை, விமா­னப்­படை, இரா­ணுவம், சுகா­தார அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர், வைத்திய அதிகாரி உட்பட்ட 10 பேர் கொண்ட விசேட படையணியொன்றை உருவாக்கியிருப்பதன் மூலம் இந்நோயின் பாதிப்புப் பற்றி புரிந்துகொள்ள முடியும்.

இப்படையணியினர் ஒவ்வொரு பிரதே சங்களுக்கும் சென்று நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற் கொண்டுவருவது மட்டுமன்றி புல்மோட் டையிலிருந்து வெருகல் பகுதி வரையில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தை துப்புரவு செய்ய கடற்படையினருக்கும் கிண்ணியாப் பிரதேசத்தின் மீது கவனம் செலுத்த விமானப் படையினரும் திருகோணமலை நகரமும் சூழலும் இராணுவமும் மூதூர் பகுதி விசேட அதிரடிப் படையினரும் பொறுப்பாக்கப்பட்டு ள்ளனர்.

இந்த சமூகத்தாக்கத்தில் பொது மக்களின் பொறுப்புகளும் கடமைகளும் என்ன என்பத ற்கான விழிப்பூட்டலை செய்ய வேண்டிய பொறுப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சார்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள வேண் டும்.

மக்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல் லாமல் இத்தகைய ஆட்கொல்லி நோய்களை இல்லாமல் செய்வது முடியாத காரியமென்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தாகும். வீட்டிலுள்ள, அயலிலுள்ள ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சுத்தம், பராமரிப்பு என்பவற்றில் ஒவ்வொரு நபரும் கவனம் செலுத்த வேண்டும். கிணறுகளில் பரவா வண்ணம் வலையிடலையோ அல்லது கப்பீஸ் மீன்களை விடவேண்டும். பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காடு, பற்றை என் பவற்றுக்கு குழந்தைகள் செல்லாமல் தடுக்க வேண்டும். நீர்மயமாகவுள்ள இடங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலமே இந்த ஆட்கொல்லி நோயை இல்லாமல் செய்ய முடி யுமென அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-2

  • கருத்துக்கள உறவுகள்

திருமலைக்கு தொலைபேசி எடுத்தால் எல்லா வீட்டிலும் காய்ச்சல்.

  • தொடங்கியவர்

அவதானம்..! : அஞ்சனாவின் உயிரைப் பறித்த டெங்கு : திருகோணமலையில் சோகம்

 

 

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.D005fffffsff.jpg

தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பயிலும் உதயராஜன் அஞ்சனா வயது - 6 என்ற சிறுமியே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி அன்று காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து 23 மணிநேரத்தில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17914

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.