உலகில் பதினொரு புதிய வகை மேகங்களை (மேக அமைப்புகளை) தாம் கண்டறிந்துள்ளதாக பிரித்தானிய மற்றும் உலக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், மேகக் கூட்டங்களைப் படம் பிடிக்கும் கலைஞர்கள் அனுப்பிய புகைப்படங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த பதினொரு புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

2_V_Cloud5.jpg

இதுபோன்ற மேகக் கூட்டங்கள் வானிலை மாற்றங்களால் அவ்வப்போது தோன்றி வருவதையடுத்தே இவற்றையும் தாம் வகைப்படுத்தியிருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

2_V_Cloud2.jpg

மேகக் கூட்டங்களின் அடர்த்தி மற்றும் தோற்றங்களை வைத்தே அவை வகைப்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பதினொரு மேகக் கூட்டங்களுக்கும் பெயரிடுவதுதான் சற்றுச் சிரமமான பணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2_V_Cloud3.jpg

மெலிந்த கீற்றுப் போன்ற மேகங்கள், அடர்த்தியான திரள் மேகங்கள், பயமுறுத்தும் விதத்தில் உள்ள கருமேகங்கள், வில்லைகள் போன்ற மேகங்கள் எனப் பல வகையான மேகக் கூட்டங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2_V_Cloud7.jpg

இதற்கு முன் 1987ஆம் ஆண்டிலேயே புதிய வகை மேகங்கள் இனங்காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. அதன் பின் சரியாக முப்பது ஆண்டுகளின் பின் தற்போது மீண்டும் புதிய மேகக் கூட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2_V_Cloud4.jpg

உலகெங்கும் உள்ள சுமார் 43 ஆயிரம் புகைப்படக் கலைஞர்கள் அனுப்பியிருந்த சுமார் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் படங்களின் அடிப்படையிலேயே பதினொரு வகை மேகக் கூட்டங்கள் வகுக்கப்பட்டதாக உலக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.