Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு தி.மு.க உதவுகின்றது: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு.

Featured Replies

தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு தி.மு.க உதவுகின்றது: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவை நேரடியாக உதவி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ள ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இதற்காக தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகக் கலைக்கவேண்டும் எனக் கோரியிருக்கின்றார்.

இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு, தமிழகத்தைப் பாதுகாப்பான சொர்க்கமாக மாற்றியிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு கரையோரப் பகுதியில் புலிகளின் பெருமளவு ஆயுதங்கள், வெடி பொருள்கள் மற்றும் உபகரணங்கள் அண்மைய சில நாள்களில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றமை உண்மையை வெளிப்படுத்தி, கண்களைத் திறக்க வைத்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

புலிகள் தமது நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டுக்கு விரிவு படுத்தியிருக்கிறார்கள். தங்களது பயங்கரவாதச் செயல்களுக்கான மறைவிடமாகத் தமிழகத்தை மாற்றியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

-Uthayan-

Edited by யாழ்வினோ

எந்தக்காலத்திலும் தமிழ்நாட்டின் குரல்கள் சிறிதளவு ஓங்கி ஒலிக்கும்

போது இவ்வாறானவர்கள் அந்தக் குரல்களை அடக்குவதற்கு திட்ட

மிட்ட முறையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுவார்கள்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் சுப்பிரமணிய சுவாமி. இதற்காகத்தான் இந்தியப்

புலனாய்வுத்துறை சுப்பிரமணிய சுவாமியைப் பயன்படுத்துகிறது.

யாரை யார் பயன் படுத்தினால்தான் என்ன? ஈழத்தமிழர்கள் செய்ய

வேண்டியதைச் செய்ய வது கடமையாக இன்று எம் முன்னுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக பாராமுகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை இனி யாராலும் எழுப்ப முடியாது!

அப்படிப் போடுங்கோ!!

முதலில் சுப்பிரமணிய சாமி ஒரு தமிழனே கிடையாது. இந்த ஆளுக்கு ஒழுங்காக தமிழ் பேசத் தெரியாது.

முதலில் சுப்பிரமணிய சாமி ஒரு தமிழனே கிடையாது. இந்த ஆளுக்கு ஒழுங்காக தமிழ் பேசத் தெரியாது.

இவனுக்குத் தமிழ் தெரியாது என்பது ஒரு புறம். இந்திய தற்போதைய அரசியலில்

யார் யாரைக் கலைக்கலாம் என்று கூடத்தெரியாத மடையன். அதனால்தான்

சுப்பிரமணிய சுவாமியை இந்தியா தன்னுடைய ஆஸ்தான அரசியல் கோமாளியாக

வைத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமயத்தில் நாங்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக்க குரல் கொடுக்கின்றபோது, தமிழ்நாட்டில் இருந்து புலிகள் ஆயுதங்களைக் கடத்துகின்றார்கள் என்ற செய்தியைப் பரப்ப, மந்திய அரசும், சிறிலங்கா அரசும் கூட்டாக முனைகின்றன என்பதைச் சமீபநாட்களாக நடத்தும் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டில் ஆயுதங்கள் பிடிபடுவது போலக் காட்டுவதும், சிறிலங்கா அரசு கடற்பகுதியில் ஆயுதங்களைப் பிடிப்பது போலக் காட்டுவதும் ஒரு வகையில் இவ்வாறன பிரச்சாரத்தைத் தமிழ்நாட்டு மக்களிடையே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவளித்தால், அவர்கள் ஆயுதம் கடத்துவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி, மீண்டும் ஒரு பிரிவினையத் தூண்டச் செய்வதற்கே!

சிறிலங்கா அரசு, 20ற்கு மேற்பட்ட தடவை மன்னார் கடற்பரப்பில் ஆயதப் படகுகளைப் பிடித்தாகவும், அதைத் தாக்கியளித்ததாகவும் சொல்லிக் கொள்கின்றது. ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் ஓரளவு ஏற்கலாம். ஆனால் இவ்வாறு பல தடவை தாக்கியளிக்கும்போது, தங்களின் பாதுகாப்பிற்கு ஒரு வழியும் செய்யாமல் கடத்துகின்றார்கள் என்ற சிங்கள அரசின் பிரச்சாரம் எடுபடக் கூடியதாக இல்லை. அது ஒரு திட்டமிட்ட செய்கை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறே தமிழ்நாட்டில் ஆயுதங்கள் பிடிபடுவதாகச் சொல்வதும் ஒரு வகை நாடகமே. அதற்கு இலங்கையரசின் பங்களிப்பு உண்டு. மத்திய அரசு உடன்பாடா என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒரு தடவை, ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்ட நபர், இலங்கையரசுக்குத் தான் என்று சொன்னது நினைவிருக்கலாம்.

உண்மையில் அந்தச் செய்தி இப்போது மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த நபர் வாய்தவறி உண்மையை ஒத்துக் கொண்டு விட்டார் என்றே கருத இடமுண்டு. சட்டபூர்வாக ஆயுதம் வாங்கும் வசதியுடைய இலங்கையரசு இவ்வாறு ஆயுதங்களைக் கடத்த வேண்டிய தேவை இல்லை. ஏன் என்றால் திறைசேரிக்கு தெரியாமல் இவ்வாறன கறுப்பு பண வேலைகளை செய்ய இலங்கையரசால் முடியாது.

ஆனால் அப்படிச் சில கடத்தல்களைச் செய்ய வைத்து, பிடிபட வைப்பதன் மூலம் சிறிலங்கா அரசு, புலிகள் மீது அவகீர்த்தியை ஏற்படுத்த வேணடும் என்பதைத் திறம்படச் செய்கின்றது. அந்தச் சதி பற்றி நாம் சிந்திக்காமல் இருப்பது வேதனைக்குரியதே!

மீண்டும் கைகூடிய உறவு, இப்படி சிறிலங்கா அரசு நடத்தும் சதிகளால், தூரத்தில் விலகிச் செல்லவும் இடமுண்டு. அதை ஆரம்பத்திலேயே தடுக்க ணே்டியது தான் முதற்பணி.

----------------------------------------------------

சென்ற வருடமே யுத்தத்திற்கு தயார் என்று சொன்ன பிற்பாடு தான், ஆயுதங்களை உள்வாங்குகின்றார்கள் என்று சொல்கின்ற சிங்கள அரசினதும், இந்திய உளவுத் துறையினதும் பிரச்சாரம் எடுபடக் மூடியதாக இல்லை.

Edited by தூயவன்

தமிழக அரசை மத்தியரசு கலைத்தால் மத்தியரசு தானாகவே கலைந்து விடும் என்பது மன்மோகன் சிங்குக்கு நன்கு தெரியும் அந்த அரசியல் தற்கொலையை செய்யாமல் இருக்க வேண்டும்.ஆனால் திமுகா வின் ஈழ ஆதரவினை கொஞ்சம் கொஞ்சமாக தணிக்கதான் மத்தியரசு ஆய்தல் கடத்தல் நாடகங்களை அரங்கெற்றுகின்றது இது திமுகா அரசியல் சாணக்கியர்களுக்கு நன்கு தெரியும் அதனால்தான் கருநாநிதி அவர்களும் நேரடியாக கருத்துகளைகூறாமல் அவரின் மகள் கனிமொழியை அவர் பயன் படுத்துகிறார் என நான் நினைகின்றேன்.எம்மவருக்கு உதவிய எம்ஜிஅரின் கட்சிதலைவியே இன்று குத்துகரணம் அடிச்சு தமிழிழத்தவருக்கு எதிரான மலின கருத்துக்களை வெளியிடுகின்றார் ஆனால் எம் சகோதர சகோதரிகள் இவ் வலையில் விழாமல் தம்மையும் காத்து எம்மக்கும் ஆக்கபுர்வமான ஆதரவை நல்குவார்கள்

ஆனால் எம் சகோதர சகோதரிகள் இவ் வலையில் விழாமல் தம்மையும் காத்து எம்மக்கும் ஆக்கபுர்வமான ஆதரவை நல்குவார்கள்

சரியாக சொன்னீர்கள்.

உந்த மனுசன் ஒரு கரே கிருஸ்ன இயக்கத்தில அமெரிக்காவில இருக்கேக்க ஒரு குளிர் தடாகத்தில நிர்வாணமாக அடவர், வெள்ளைக்கார பெண்களுடன் கைகோர்த்தபடி நின்று ஒரு பெரிய புயலை கிளப்பிய மனிதன் என்று கண்ணதாசன் தன் அர்த்த முள்ள இந்து மதம் என்ற நூலிலே எழுதிதாக ஒரு நினைப்பு. உவர் ஜெயலைதா இருந்தா அம்மாவை பார்த்து குரைப்பார். இப்ப நம்ம தலைவர் கருனாநிதியினை பார்த்து குரக்கிரார். இப்ப பின்னால சொன்னனே ஒரு பெயரு அமா மரியாதை நிமித்தம் சொலலமாட்டன் பெயரை...ஒரு நாள் கண்ணதாசனோடு ஒரு கஸ்டப்பட்டு பிள்ளைகளை படிப்பிக்க பாடுபடும் ஒரு விலைமாது விலைமாது வீட்டுக்கு போயிருக்கிறார்கள். கண்ணதாசன் எங்களைப்போல குடித்தாலும் நல்ல நாணயமான் மணுசன் அனா அந்த அடுத்த ஆளு கொடுக்க வேண்டிய காச கொடுக்காம் ஓடி வந்துட்டாரு எண்டது தான் என்னால் இன்று வரை ஏற்கமுடியாது இருக்குங்கோ. ஒருவன் யாருக்கும் துரோகம் பண்ணலாம் தமிழனுக்கே துரோகம் அதுவும் ஏழை என்று தெரிந்துகொண்டு. இவர் எல்லாம் எங்கட பிரச்சனையை தீர்த்து அப்படி கண்ணதாசன் எழுதியது பிழை எண்டு காட்டினா தானே நான் இதுகளை மறக்கலாம். இல்லாட்டி இந்த சுப்பிரமணிக்கும் நம்ம ஐய்யாவுக்கும் என்ன வித்தியாசமுங்கோ. அவர் வெள்ளைகு செய்தாரெண்டால் இவர் தமிழி.....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்த சுப்பரமணியத்தாண்ட லொள்ளு தாங்கமுடியல்லடா சாமி, இலங்கைக்கு ஒரு கெகலிய ரம்புக்வெல மாதிரி இந்தியாவுக்கு இந்த சுப்ரமணியசுவாமி.

இந்த சுப்பிரமணிய சுவாமி எதற்கு தமிழ் நாட்டுக்கை எலி உள்ளுடுது புலி படுத்து இருக்கு எண்டு கெருடி விடுறாரோ தெரியல்லை? அவன் அவன் டெல்லி மும்பையில தொழிலதிபர் வேசம் போட்டுக்கொண்டு நிஜ பயங்கரவாதியிலும் பார்க்க மனித இனமே செய்ய துணியாத கேவலமான கெட்ட காரியங்களை செய்துகொண்டு இருக்கிறாங்க, பச்ச பாலகர் எண்டும் பார்க்காமல் காமவெறியை தீர்த்ததுக்கப்புறமா அந்த பிஞ்சுகளை வெட்டி கறீயாக்கி தின்னுற கொடுமை இந்தியாவிலதான் நடந்துகொண்டு இருக்கு, இதுகளை தடுத்து நிறுத்த துப்பில்லாத சுப்பிரமணியம் எதுக்கு இப்படிப்பட்ட அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கு! சிலது சுப்பிரமணிய சுவாமியிண்ட வழி நடத்தலிலதான் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்குதோ என்னமோ?? :icon_idea:

நாய் வாலை நிமிர்தமுடியாதடோய்.. :angry:

தமிழ்நாட்டில் ஊடுருவியிருப்பது புலிகளில்லை.சிங்கள புலனாய்வுப்படை.சென்னையில் உள்ள இலங்கைத்தூதரகம் திறைமையாக புலனாய்வு வேலைகளை செய்கிறது.நான் தமிழ்நாட்டுபொலிஸிடம் கேட்பது எக்காரணம் கொண்டும் கைது செய்யபட்டவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தபடகூடாது. தமிழ்நாட்டில் தான் விசாரணை நடக்கவேண்டும்.இலங்கை தூதரகத்தில் உதவித்தூதுவர் பெரும் பகீரத்தனங்கள் செய்து கைதுசெய்யபட்டவர்களை நாடு கடத்தமுயற்சிக்ககூடும் அப்படியொன்று நடந்தால் உண்மைகள் மறைக்க படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.