Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர்

 

ranil-chinaதேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாவத்துறையில் உள்ள கடற்படை முகாமை அகற்றி அங்கு மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மானும், முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றி அங்கு மக்களைக் குடியமர்த்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“ சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் அகற்றாது.  ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தலையும், ஆட்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கான கேந்திரமாக இந்தப் பகுதி உள்ளது. தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து கடற்படையினரை விலக்க முடியாது.

சிலாவத்துறையில் கடற்படையினரின் பயன்பாட்டில் தற்போது, சுமார் 34 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 6 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முள்ளிக்குளம் கடற்படை முகாமைப் பொறுத்தவரையில், அது அரசாங்க காணியிலேயே அமைந்துள்ளது. வட மேற்கு கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்த முகாம் முக்கியமானது.

2012ஆம் ஆண்டு கடற்படை  500 ஏக்கர் காணிகளையும் அதற்குப் பின்னர் 252 ஏக்கர் காணிகளையும் மீள்குடியமர்வுக்காக விடுவித்துள்ளது.

பாடசாலை, தேவாலயம் என்பனவும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வழியாக போக்குவரத்துச் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் கடற்படை முகாம் அரச காணியிலேயே அமைந்திருப்பதால் அதனை அகற்ற வேண்டிய தேவை இல்லை” என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்தார்.

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்றி தம்மை மீளக்குடியமர அனுமதிக்குமாறு கோரி, முள்ளிக்குளம் மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையிலேயே சிறிலங்கா பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/04/06/news/22394

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.