Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன அமைச்சர் ராஜித நிலைப்பாட்டை மாற்றுகிறார்

Featured Replies

யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன

 

அமைச்சர் ராஜித நிலைப்பாட்டை மாற்றுகிறார்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கை இடப்பட்டிருக்கின்றன. ஊடக செய்தி அறிக்கைகளில் உள்ளவாறு நான் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள் ளிக்கிழமை மதுவரிக் கட்டளை சட்டத்தின் கீழான அறிவித்தல், புகை  யிலை மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகிய சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  

காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்த போது அண்மையில் வடக்கிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த நாட்டில் நடைபெற்று நிவைடைந்த யுத்தம் சம்பந்தமாகவும் அங்கு குற்றங்களே இழைக்கப்படவில்லை. மனித உரிமைகள் மீறப்படவில்லை என பாரிய குண்டொன்றை யாழில் போட்டுச்சென்றுவிட்டார். இது எமக்கு கவலையளிப்பதோடு அரசாங்கத்தின் மீதும் உங்கள் மீதும் வைத்திருந்த அபிமானமும் நம்பிக்கையும் முழுமையாக இழப்பதற்கும் காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இச்சமயத்தில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஊடகங்கள் தவறான அறிக்கையிட்டு விட்டன. நான் அவ்வாறு கூறவில்லை என்றார்.

அதனைத்தொடர்ந்து சிவசக்தி ஆனந்தன் மீண்டும், நீங்கள் ஒரு இடதுசாரி அரசியல்வாதி. ஊங்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கடந்த ஆட்சியிலிருந்து பிரிவடைந்து வந்து ஆட்சிமாற்றத்திற்காக துணிச்சலாக செயற்பட்டீர்கள். அதனையும் கருத்திற்கொண்டு தான் எமது மக்கள் ஆதரவளித்தார்கள்.

இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். எவ்வளவு தூரம் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. என்பதையும் அறிவீர்கள். அவ்வாறான நிலையில் யாழில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் நம்பிக்கையை முழுமையாக இழக்கச்செய்வதாக உள்ளன. அவ்வாறு கூறவில்லையென்றால் இத்தனை நாட்கள் கடந்தும் ஏன் நீங்கள் மறுப்பை வௌிப்படுத்தவில்லை என்றார்.

அச்சமயத்தில் மீண்டும் ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பியவாறு எழுந்த அமைச்சர் ராஜித, நான் இரண்டு நாட்கள் வடக்கில் தங்கியிருந்தேன். அங்கு ஊடகவியலாளர்கள் என்னிடத்தில் கேள்வி எழுப்பினார்கள். நான் என்ன கூறினேன். அவர்களுக்கு என்ன புரிந்தது என்பது எனக்கு தெரியாது. நான் அவ்வாறு கூறவில்லை. அவர்களின் அறிக்கையிடல் முழுமையாக தவறாக உள்ளது.

இன்று (நேற்று) இந்த சபைக்குள் வருவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் தான் அவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா என்னிடத்தில் கேள்வியெழுப்பி குறிப்பிட்டார் என்றார்.

அதனைத்தொடர்ந்து ஆனந்தன் எம்.பி எவ்வாறாயினும் உங்களின் கருத்துக்கள் நம்பிக்கையை இழக் கச்செய்து விட்டதே என்று கூறி தனது உரையை தொடர்ந்திருந்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-08#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.