Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஏமாற்றமா?

Featured Replies

மீண்டும் ஏமாற்றமா?

 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பொறுத்­த­வரை புதிய அர­சியல் சாச­ன­மொன்றின் மூலம் அர­சியல் தீர்வினை கொண்டு வரு­வதை அவர்கள் அங்­கீ­க­ரிக்­கவோ ஏற்றுக் கொள்­ளவோ போவ­தில்லை. ஜனா­தி­ப­தியின் அதி­கார ஆளு­மைகள் எவ்­வ­ளவு செலுத்­தப்­பட்டாலும் அவை பய­ன­ளிக்கப் போவ­தில்­லை­யென்ற  முடி­வுக்கே வர ­வேண்­டி­யுள்­ளது

 

தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை வழங்­கு­வ­திலும் அதைப் பெறு­வ­திலும் ஆபத்­தான நிலை­யொன்று உரு­வாகி வரு­வதை அண்மைக் கால­மாக இடம்­பெற்­று­வரும் இழு­பறி நிலை­யி­லி­ருந்து ஓர­ள­வுக்கு புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைக் கொண்டு வரு­வதில் அர­சாங்கம் எதிர்­கொள்ளும் சவால்கள் ஆளும் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு இடையே நீறு­பூத்த நெருப்­பாக தக­த­கத்து வரும் முரண்­பா­டு­க­ளா­கவும் இருக்­கி­றது. மறு­புறம் அர­சியல் தீர்­வொன்று விரைவில் கிடைத்து விடு­மென்ற அதீத நம்­பிக்­கை­யோடு காத்­தி­ருக்கும் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்­றங்­களைச் சந்­திக்கப் போகி­றார்­களோ என்ற கலக்கம் நிறைந்த நிலை­யில்தான் அர­சாங்­கத்தின் இழு­பறி நிலை காணப்­ப­டு­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை கொண்டு வரு­வதில் தேசிய அர­சாங்கம் பல்­வேறு சங்­க­டங்­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டிய நிலையில் காணப்­ப­டு­கி­ற­தென்­பதை அண்­மைக்­கால நிகழ்­வு­களும் வாதப் பிர­தி­வா­தங்­களும் எமக்கு எடுத்துக் காட்­டு­கின்­றன.

புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்கு மக்கள் அங்­கீ­காரம் வழங்­க­வில்லை. திருத்தம் மட்­டுமே முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யு­மென்ற முரண்­பட்ட கருத்தை ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமுக்கக் குழுக்கள் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இதே­வேளை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்குச் செல்­வது தவிர்க்­கப்­பட வேண்டும் என்ற தடைகளும் உப குழுக்கள் தமது அறிக்­கை­களை ஏலவே சமர்ப்­பித்­தி­ருக்­கின்ற நிலையில் வழிப்­ப­டுத்தல் குழு­வா­னது தனக்­கு­ரிய காரி­யங்கள் மீதும் செயற்­பாட்டின் மீதும் கவனம் செலுத்­தாமல் காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருப்­பது அல்­லது இவ்­வி­வ­காரம் இழு­பறி நிலை கொண்­ட­தாக காணப்­ப­டு­வது போன்ற பல்­வேறு நெருக்­கடி நிலை­களில் தற்­போ­தைய அர­சாங்கம் சிக்கிக் கொண்­டி­ருப்­பதை சாதா­ரண அர­சியல் அறிவு கொண்ட ஒரு பாம­ரனால் கூட இல­கு­வாக அனு­ம­ானிக்க முடியும்.

2015 ஆம் ஆண்டு இலங்­கையில் இரு பிர­தான கட்­சி­க­ளுடன் ஏனைய சிறு­பான்மைக் கட்­சிகள் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யமைக்கு புதிய அரசியல் சாசனம், தேர்தல் முறை மாற்றம், நிறை­வேற்று அதி­கார முறை கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறைக்கு முடிவு காணுதல், அரசியல் தீர்வு என்ற பிர­தான நோக்­கங்­க­ளே காரணமாக அமைந்தன.

என்­னதான் ஏனைய விட­யங்கள் உள்­ள­டங்கிக் காணப்­பட்­ட­போதும் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வொன்று காணப்­பட வேண்டும் என்ற விடயம் பிர­தான இடத்தைப் பெற்­றி­ருந்­தமை யாவரும் அறிந்த விடயம்.

தமிழ் மக்­களின் 60 வருட கால போராட்­டத்­துக்கு அர­சியல் தீர்­வொன்று காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்­கு­வதன் மூலமே இனப் பிரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வொன்றைக் காண முடி­யு­மென்ற ஏகோ­பித்த தீர்­மானம் கொண்­ட­வர்­க­ளா­கவே பிர­தான கட்­சி­க­ளான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் காணப்­பட்­டன. அந்த நோக்­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது.

இதன் பிறப்பின் பின்­ன­ணியில் தொட்டப்பாக்­க­ளாக த.தே.கூ. அமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் இருந்­த­போ­திலும் மஹிந்­தவின் ஆட்சி வீழ்ச்­சி­ய­டைய வேண்­டு­மாயின் இக்­கூட்டு நிலைமை அவ­சி­ய­மா­னது என உண­ரப்­பட்­ட­த­ா­லேயே துரு­வங்­க­ளாக இருந்­த­வை இணைந்து கொண்­டன. 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் இரா­ணுவத் தள­ப­தியை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்தி தோல்வி கண்ட பட்­ட­றிவு கார­ண­மா­கவே மித­வாதப் போக்கு கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக சாணக்­கி­ய­வா­தி­களால் நிறுத்­தப்­பட்டார்.

இவ­ருக்குப் பதி­லாக பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது வேறு ஒரு­வரோ நிறுத்­தப்­பட்­டி­ருந்தால் மஹிந்­த­வென்னும் சூறா­வளிக் காற்றில் அடி­பட்டுப் போயி­ருப்­பார்கள் என்ற நிலை­மையை மிக சாது­ரியமா­கவும் நுட்­ப­மா­கவும் புரிந்து கொண்­ட­த­ா­லேயே மைத்­திரி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

இவ­ரு­டைய வெற்­றியை, தென்­னி­லங்கை மக்கள் கொண்­டா­டி­யதை விட சிறு­பான்மை மக்­க­ளான தமிழ், முஸ்லிம் மக்கள் கொண்­டா­டி­யது அதி­க­மென்றே கூற வேண்டும். தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக இவர் விளங்­கினார் என்­பதும் ஒத்துக் கொள்­ளப்­பட வேண்­டிய உண்மை.

நூறு நாள் வேலைத் திட்டம், அர­சியல் அமைப்பு நிர்­ணய சபை, காணி விடு­விப்­புகள், மீள் குடி­யேற்றம் என்ற முன்­னெ­டுப்­புகள் இவர் மீது அதீ­த­மான நம்­பிக்­கை­க­ளையும் கொண்டு வந்­தது என்­பதும் எண்ணிப் பார்க்­கப்­பட வேண்­டிய விடயம்.

பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்றி உப குழுக்கள், வழிப்­ப­டுத்தல் குழு என்­பவை அமைக்­கப்­பட்­ட­போது இருந்த வேகம் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான இணக்­கப்­பா­டுகள் அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் முரண்­பட்ட கருத்­துக்­க­ளையும் மோதல்­க­ளையும் தற்­பொ­ழுது உரு­வாக்­கி­யுள்­ளது என்­பதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் தெளி­வா­கவே எடுத்துக் காட்­டு­கின்­றன.

புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட குழுக்­களும் கட்­சி­களும் தமக்குள் மாறு­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றன.

தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒரு சிலர் இன்னும் தெளி­வாக கூறு­வ­தாயின் அமுக்கக் குழுக்­களைச் சேர்ந்­த­வர்கள் இவ்வாறு கூறி வரு­கி­றார்கள். புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கு மக்­களின் ஆத­ரவு இல்லை. அர­சியல் சாச­னத்தை திருத்­து­வ­தற்கு மாத்­தி­ரமே மக்கள் ஆணையைப் பெற்றோம். அவ்­வாறு அர­சியல் சாச­னத்தை திருத்­து­வ­தற்கு மாத்­தி­ரமே ஆத­ரவை நல்­குவோம். புதிய அர­சியல் சாச­னத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போவ­தில்­லை­யென சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒரு சிலர் கூறி வரு­கி­றார்கள். இது தொடர்பில் அர­சாங்­கத்­துக்குள் முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன என்­பது வெளிப்­ப­டை­யா­கவே தெரி­கின்ற விட­ய­மாகும். குறிப்­பாக கூறப் போனால் அர­சியல் சாசனம் ஆக்­கப்­ப­டு­வது தொடர்பில் இரு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் முறுகல் நிலை காணப்­ப­டு­கி­றது.

இதனைத் தெரிந்து கொண்­ட­தால் தான் என்­னவோ பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டைப் பிரிக்­காமல் அதி­கா­ரத்தைப் பகிர்­வதும் ஒற்­றை­யாட்­சிக்குள் ஒவ்­வொரு பிரதே­சங்­களும் தமது செயற்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கும் மத மற்றும் கலா­சார விட­யங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­மென கூறி வரு­கிறார்.

இவ்விரு கட்­சி­களின் உள்­நோக்­கங்­களைப் பதம் பிரித்துப் பார்க்­கி­ற­போது ஒரு உண்­மையைப் புரிந்து கொள்ள முடி­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பொறுத்­த­வரை புதிய அர­சியல் சாச­ன­மொன்றின் மூலம் அர­சியல் தீர்வினை கொண்டு வரு­வதை அவர்கள் அங்­கீ­க­ரிக்­கவோ ஏற்றுக் கொள்­ளவோ போவ­தில்லை. ஜனா­தி­ப­தியின் அதி­கார ஆளு­மைகள் எவ்­வ­ளவு செலுத்­தப்­பட்டாலும் அவை பய­ன­ளிக்கப் போவ­தில்­லை­யென்ற முடி­வுக்கே வர­வேண்­டி­யுள்­ளது.

இதே கட்­சியைச் சேர்ந்த இன்னும் சில அமைச்­சர்கள் ஆறு மாதங்­களில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் தேர்தல் முறை மாற்­றத்­தையும் அடைந்து கொள்ள முடி­யா­விடின் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதில் அர்த்­த­மில்லை. இவ்­விரு விட­யங்­க­ளையும் அடைந்து கொள்ள முடி­யா­விடின் தேசிய அர­சாங்­கத்தை முறித்துக் கொள்­வதே நன்று என வெளிப்­ப­டை­யாகவே கூறி வரு­கி­றார்கள்.

இவர்கள் கூறு­வதை வைத்துக் கொண்டு புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி சமஷ்டி முறை­மை­யி­லான இணைந்த வடக்கு, கிழக்கில் அதி­காரம் பகி­ரப்­பட வேண்­டு­மென்ற கருத்தைக் கொண்­ட­வர்கள் இவர்கள் என எண்­ணி­விட முடி­யாது. இவர்­களைப் பொறுத்­த­வ­ரையும் ஒரே குட்­டையில் ஊறிய மட்­டையைப் போன்­ற­வர்கள் என்ற வகையில் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கி­விட்டோம் என்று ஒப்புக்கு கொடுக்கும் வகையில் எதை­யா­வது கொடுங்கள் என்ற போக்குக் கொண்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள் என்ற உண்­மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்­சியைப் பொறுத்­த­வரை புதிய அர­சியல் சாசனம் அவ­சி­ய­மற்­றது என்று கூறு­வதும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­காரப் பகிர்வு என அடித்துக் கூறு­வதும் முரண்­பட்ட போக்கு கொண்­ட­வை­யாக காணப்­ப­டு­கின்­ற­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அர­சியல் தீர்வை அடைந்து விட­லா­மென்று எதிர்­பார்ப்­பதும் காத்­தி­ருப்­பதும் நம்­பு­வதும் எந்­த­ள­வுக்கு பொருத்­தப்­பா­டா­னது என்­பது புரி­ய­வில்லை.

தேசிய அர­சாங்­கத்தில் இடம்­பெறும் இரு கட்­சி­களைப் பொறுத்­த­வரை குறித்த இரண்டு விட­யங்களில் ஒத்த போக்கு கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள். சமஷ்டி முறை­மை­யி­லான அர­சியல் தீர்வை வழங்க முடி­யாது, இரண்­டா­வது விடயம் வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு நாம் ஒரு­போதும் ஒத்­து­வரப் போவ­தில்லை என்­பதில் இவ்­விரு கட்­சி­களும் கை கோர்த்துக் கொண்டே நிற்­கின்­றன. ஆக இவை­யி­ரண்டும் முரண்­பட்டு நிற்­பது புதிய அர­சியல் சாசனம், பழைய அர­சி­யல் சாச­னத்­தி­ருத்தம் என்ற விவ­கா­ரங்­களில் மட்­டுமேயாகும்.

தமிழ் மக்­க­ளாக இருக்­கலாம், அவர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சி­க­ளாக இருக்­கலாம். சமஷ்டி வடி­வி­லான ஆட்சி முறைத் தீர்வு, வடக்கு, கிழக்கு இணைந்த முறை­யி­லான அதி­காரப் பகிர்வு என்பன வழங்­கப்­ப­டாத பட்­சத்தில் வேறு எந்­த­வொரு தீர்­வையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவ­தில்­லை­யென்­பதை தெளி­வாக உரைத்­து­வ­ரு­வ­துடன் அதில் உறு­தி­யு­டை­ய­வர்­க­ளா­கவும் இது­வரை காணப்­ப­டு­கி­றார்கள்.

இந்­நி­லைப்­பாட்டில் ஒரு திரிபு நிலை அல்­லது சின்ன தளம்பல் ஏற்­ப­டு­மாயின் அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தையும் அவர்கள் உணர்ந்து வைத்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை சாதா­ர­ண­மாக எல்­லோ­ருமே அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். அர­சியல் சாசனத் தயா­ரிப்புத் தொடர்பில் நாளுக்கு நாள் ஏற்­பட்டு வரும் எதிர்ப்­ப­லைகள் வேகம் கொண்டு காணப்­ப­டு­வதற்கு ஆதா­ர­மாக புதிய அர­சியல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்ப­டு­மென ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறி­வரும் நிலையில் அதற்கு அரசின் மற்­று­மொரு பங்­காளிக் கட்­சி­யான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி அர­சியல் அமைப்பு வழி நடத்தல் குழுக்­கூட்­டத்தில் புதிய அர­சியலமைப்­புக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளதை அவதானிக்க முடிகின்றது.

இவர்­களின் கருத்­துப்­படி புதிய அர­சியல் அமைப்பை நாம் ஏற்கப் போவ­தில்லை. நடை­மு­றை­யி­லுள்ள அர­சியலமைப்பில் திருத்­தங்­களே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அவ்­வாறு செய்தால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டாது என அவர்கள் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்துள்ளனர்.

அர­சியல் நிர்­ணய சபைக்கு குறிப்­பாக வழி­ந­டத்தல் குழு­வுக்கு சிபா­ரி­சுகள் செய்­ய­வென அமைக்­கப்­பட்ட உப குழுக்­களின் அறிக்­கைகள், அவற்­றுக்­கென அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்ட விப­ரங்கள் தொடர்பில் அவர்கள் அறிக்­கை­களை சமர்ப்­பித்து நீண்ட நாட்­க­ளா­கியும் வழி­ந­டத்தல் குழுவைக் கூட்­டு­வதில் இழு­பறி நிலைகள் காணப்­ப­டு­வ­தாக அண்­மையில் குற்­றங்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

வழி நடத்தல் குழுவில் கொள்­கை­ய­ளவில் இணக்கம் ஏற்­பட்டு விட­யங்­களை உள்­ள­டக்­கிய இடைக்­கால அறிக்­கையை வெளி­யி­டு­வதில் ஏன் காலதாமதம் ஏற்­பட வேண்டும்? இவ்­வி­ட­யத்தில் அனைத்துக் கட்­சி­களும் ஒன்­று­பட வேண்­டு­மென அண்­மையில் த.தே. கூ. அமைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரால் ஒரு அவ­சர கோரிக்கை விடுக்கப்­பட்­டி­ருந்­தமை பத்­தி­ரி­கைகளில் வெளி­வந்த செய்­தி­யாகும்.

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவை தலை­வ­ராகக் கொண்ட 21 அங்­கத்­த­வர்களும் அனைத்துக் கட்­சி­க­ளையும் சேர்ந்­த­வர்களும் உள்­வாங்­கப்­பட்டு அமைக்­கப்­பட்ட இவ்­வழி நடத்தல் குழுவின் செயற்­பா­டாக தற்­போ­தைய அர­சியல் யாப்பின் முதலாம், இரண்டாம் அத்­தி­யாயங்கள் பற்றி ஆராய்தல், அதி­காரப் பகிர்வு தேர்தல் முறை மற்றும் நாட்டின் தன்மை, இறை­யாண்மை, மதம் அர­சியல் கட்­ட­மைப்பு, காணி அதி­காரம் போன்ற முக்­கி­ய­மான விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்­து­ மு­டிவெடுத்தல் என்­பன இதன் பிர­தான கட­மை­க­ளாக நிர்ணயிக்­கப்­பட்­டி­ருந்­தன. இவற்­றுக்­கென ஒதுக்­கப்­பட்ட கட­மை­களில் மிக பிர­தா­ன­மா­ன­தா­கவும் சர்ச்சை கொண்­ட­தா­கவும் இருக்கும் விடயம் அதி­காரப் பகிர்வு சார்ந்த அர­சியல் தீர்வு விவ­கா­ர­மா­கவும் இவ்­வ­ழிப்­ப­டுத்தல் குழு­வுக்கு உப­கு­ழுக்­களின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலை­யிலும், மிக நீண்­ட­கா­ல­மாக வழிப்­ப­டுத்தல் குழு கூடாத நிலையில் அது பற்­றிய இழு­பறி நிலை­சார்ந்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் தான் இக்­கு­ழுக்­கூட்டம் கடந்த நான்காம் திகதி மீண்டும் கூட்­டப்­பட்­டது.

(04.04.2017) அன்­றைய முதல் தினமே, சர்ச்­சை­களும் முரண்­பா­டு­களும் வலுத்துக் கொண்­ட­தாக செய்­திகள் வெளி­வந்­தி­ருந்­தன.

கழு­தை­தேய்ந்து கட்­டெ­றும்­பான கதைபோல் அர­சியல் நிர்ணய சபை மற்றும் குழுக்கள் அமைக்கப்பட்ட போது புதிய அரசியல் சாசனமொன்றுக்காக நாம் ஒன்று கூடுகின்றோம் என்று கூறிக்கொண்டவர்கள் இன்று புதிய அரசியல் சாசனம் வேண்டாம். அதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. பழைய அரசியல் சாசனத்தில் அதாவது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதையே, மக்கள் அங்கீகரிப்பார்கள். சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்றது என தமக்குள் தாமே அடிபட்டுக் கொள்வதை இன்றைய அரசியல் நிலவரங்கள் எமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அது தவறான அர்த்தம் கொள்ளப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படும். அரசியல் சாசன திருத்தமாயின் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது. எனவே பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலான திருத்தத்தையே நாம் எதிர்பார்க்கிறோமென சுதந்திரக் கட்சியினர் அடம்பிடித்து வருகின்ற நிலையில் இதற்கு ஆதரவாக ஜாதிக ஹெல உறுமய முண்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

பண்டா – செல்வா ஒப்பந்தம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வுப்பொதி, அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு என்ன நடந்ததோ அதே கதை மீண்டும் எழுதப்பட போகிறதா? இன்றைய போக்கு எதை சொல்கிறதென்றால் எல்லை தாண்டிய வெள்ளாடுகளும் ஏப்பம் விட துடிக்கும் ஓநாய்களின் கதைகளுமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-08#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.