Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புகையிலை செய்கைக்குத் தடை விதிக்க திட்டம்!

Featured Replies

பாபுல், பீடா விற்றால் ஒரு வருட சிறையாம்

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகை­யிலை தூள், இலத்­தி­ர­னியல் சிகரெட், பேன் மசாலா, குட்கா பாக்கு வகை­போன்­ற­வை­களை விற்­ப­தற்கும் இறக்­கு­மதி செய்­வ­தற்­கு­மான தடைக்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யது.

மேலும் மேற்­கு­றித்­த­வற்றை விற்­பனை செய்தால் 2000 ரூபா தண்­ட­ப்பணம் அல்­லது ஒரு வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை புகை­யிலை மற்றும் மது­சார மீதான தேசிய அதி­கார சபையின் ஒழுங்கு விதி சட்­ட­மூலம் நேற்று விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. இது தொடர்­பாக சுகா­தார, போசனை, மற்றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­த­ரத்ன உரை­யாற்­று­கையில், 

நான் கடந்த அமைச்­ச­ர­வையின் போது தனி சிகரெட் கொள்­வ­னவு செய்­வ­தற்கு தடை விதிக்கும் பத்­தி­ரத்தை சமர்ப்­பித்தேன். மேலும் பாட­சா­லைகள் உள்ள பகு­தியின் 500 மீற்றர் வரை­யான தூரத்தில் சிகரெட் விற்­பனை செய்­வ­தற்கும் மது­பானம் விற்­ப­தற்கும் தடை செய்யும் வகையில் எதிர்­வரும் அமைச்­ச­ர­வையில் பத்­திரம் கொண்டு வர­வுள்ளோம். தற்­போது இதனை ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் பாபுல், புகை­யிலை, பீடா, மாவா , குட்கா போன்ற போதை வஸ்­து­க­ளையும் தடை செய்­வ­தற்கும் இறக்­கு­மதி செய்­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளேன். இவற்றை விற்­ப­தனை செய்தால் 2000 ரூபா தண்­ட­பணம் அல்­லது ஒரு சிறை தண்­ட­னையை வழங்­க­வுள்ளோம். இதன் கார­ண­மாக அதி­க­ளவில் புற்று நோய் ஏற்­ப­டு­கின்­றன. மேலும் இலத்­தி­ர­னியல் சிக­ரெட்­டையும் தடை செய்­ய­வுள்ளோம். குறித்த சிக­ரெட்டில் நிகடின் பதார்த்தம் உள்­ளது. நிகடின் பதார்த்தம் பாதிப்­பா­னவை .ஆகவே இத­னையும் தடை செய்­ய­வுள்ளோம்.

இதன் தாக்­கத்­திற்கு இளை­ஞர்கள் பெரு­ம­ளவில் உள்­ளா­கி­யுள்­ளனர். அத்­துடன் வாய் புற்­று­நோ­யினால் ஆண்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

மேலும் தனி சிகரெட் கொள்­வ­ன­வுக்கு தடை செய்ய திட்­ட­மிட்­ட­மையை அடுத்து புகை­யிலை நிறு­வனம் 5 சிகரெட் அடங்கிய பெட்டியை விற்பதற்கு திட்டமிட்டுள்ளனர். தற்போது எமது நடவடிக்கைகளை தடை செய்வதற்கு பலர் திட்டமிட்டு வருகின்றனர். எனினும் எமது பயணத்தை தடுக்க முடியாது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-08#page-1

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய  அவர் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலை உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். புகையிலைச் செய்கைக்கு பதிலீடாக வேறு பயிர்கள் அறிமுகம் செய்யப்படும். புகையிலை உற்பத்திப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய புற்று நோய்களுக்கான சிகிச்சைக்காக வருடாந்தம் ஐந்து பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிடுகின்றது.

எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலை உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். புகையிலைச் செய்கைக்கு பதிலீடாக வேறு பயிர்கள் அறிமுகம் செய்யப்படும். புகையிலை உற்பத்திப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய புற்று நோய்களுக்கான சிகிச்சைக்காக வருடாந்தம் ஐந்து பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிடுகின்றது.

   

புற்று நோய்க்கு பாக்கு பயன்பாடும் ஓர் காரணம் என்பதனால் எதிர்காலத்தில் பாக்கு பயன்பாடு குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். வாய்ப் புற்று நோயினால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=179967&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.