Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம்:‘காலம் குறையும் சாத்தியம்’

Featured Replies

ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம்:‘காலம் குறையும் சாத்தியம்’
 
 

article_1491919831-1.jpgடோக்கியோவிலிருந்து மேனகா மூக்காண்டி

“ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும்” என்று, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.   

“அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வருட குத்தகைக் காலத்தைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று

 அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும்’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஜப்பானுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள, ‘ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் வர்த்தக அமைப்பு’இனால் நேற்று (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்துகொண்டார். டோக்கியோவிலுள்ள குறித்த அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது, 

“இலங்கையில், ஜப்பான் முதலீடுகள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. ஜப்பானின் இலங்கைக்கான ஏற்றுமதிகள், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையில் ஜப்பானுக்கான ஏற்றுமதிகள் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஏற்றுமதி வர்த்தகத்திலேயே, இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. இதுவே, தாய்லாந்துக்கான ஜப்பானின் ஏற்றுமதி, வருடமொன்றுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது. 

இலங்கையில் முதலிடுவதற்கான அனைத்து வாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களைக் கவரும் வகையில், எந்தவோர் அரசாங்கமும் வழங்காத சலுகைகளை வழங்கவும் தற்போதைய அரசாங்கம் தயாராக இருக்கின்றது. முதலீட்டாளர்களுக்கு இலகுவான சூழலும் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகின்றது.  

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமான வர்த்தக ஒப்பந்தம், மேலும் நீடிக்கப்படவுள்ளது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். வர்த்தக ஒப்பந்தங்களை நீடித்தால், சுமார் 500 மில்லியன் பேருக்கான தீர்வையின்மை (Duty Free) வழங்க முடியும். இதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக்கொள்ளலாம்.  

அதனால், இலங்கையின் தேவையைக் கருத்திற்கொண்டு, எமது நாட்டிலும் முதலிட முன்வாருங்கள் என்று, இங்கு கூடியிருக்கும் ஜப்பானிய முதலீட்டாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.  

- See more at: http://www.tamilmirror.lk/194721/ஹம-ப-ந-த-ட-ட-த-த-ற-ம-க-ஒப-பந-தம-க-லம-க-ற-ய-ம-ச-த-த-யம-#sthash.WnOTNqgj.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.