Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’ஈஸ்வரியைத் தாக்கிய போலீஸ் என்ன சொல்கிறார்?’ - வைரலாகும் குரல்பதிவு!

Featured Replies

’ஈஸ்வரியைத் தாக்கிய போலீஸ் என்ன சொல்கிறார்?’ - வைரலாகும் குரல்பதிவு!

 
 

பாண்டியராஜன்

திருப்பூர் மாவட்டத்தில், மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு, போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதை எதிர்த்து, அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தினர். இதில், போராட்டத்தில் பங்கேற்ற ஈஸ்வரி என்ற பெண்ணை, போலீஸ் அதிகாரி பாண்டியராஜன், சரமாரியாகத் தாக்கிய வீடியோவைப் பார்த்து பொதுமக்கள் கொந்தளித்தனர். குறிப்பாக, மகளிர் அமைப்புகள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், மனித உரிமை ஆணையம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   

அறப்போர் இயக்கம் சார்பில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டு, போலீஸ் அதிகாரி பாண்டியராஜனிடம் போனில் கடும்வாக்குவாதம் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியராஜனும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த பாஷித் என்பவரும் பேசிய செல்போன் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகிவருகிறது. அந்த ஆடியோ, வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அந்த ஆடியோவில், 'போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை  நீங்கள் எப்படி அடிக்கலாம்?' என்று பாண்டியராஜனிடம், பாஷித் கேட்கிறார். அதற்கு நான் அடிக்கவில்லை, என்னுடைய கைகூட  அந்தப் பெண் மீது படவே இல்லை என்று சொல்கிறார் பாண்டியராஜன். ஆனால், பாஷித் விடாமல் நீங்கள் அடிக்கும் வீடியோ ஆதாரம் உள்ளதே என்று கேட்டதற்கு, பாண்டியராஜன் மழுப்பலான பதிலைச் சொல்கிறார். கடைசியாக பாண்டியராஜனிடம், 'மதுக்கடை நடத்துபவர்களை நீங்கள் அடியுங்கள். கடை திறக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அடித்தது தவறு. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ்தான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்' என்று சொல்வதோடு முடிகிறது. 

பாசித்இதுகுறித்து, அறப்போர் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் பாசித்திடம் பேசினோம். "மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம், கண்டனத்துக்குரியது. அதிலும், பெண்ணை ஆண் போலீஸ் அதிகாரி பாண்டியராஜன், கையால் சரமாரியாகத் தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீஸ் அதிகாரி, பெண்ணை அடிக்கும் வீடியோ காட்சியைப் பார்த்ததும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக பாண்டியராஜனின் செல்போன் நம்பரைக் கண்டுப்பிடித்து, அவருக்கு போன் செய்தேன். என்னுடைய போன் அழைப்பை அவர் முதலில் கட் பண்ணிவிட்டார். பிறகு, அவரே இன்னொரு நம்பரிலிருந்து என்னை தொடர்புகொண்டார். அப்போது அவர், நான் அந்தப் பெண்ணை அடிக்கவில்லை என்று சொன்னார். வீடியோ ஆதாரம் இருப்பதாகச் சொன்னதும், நிருபர் நண்பர் ஒருவரால், இது பெரிதாகிவிட்டது. நான் அந்தளவுக்கு அடிக்கவில்லை. என் கை அந்தப் பெண் மீது படவே இல்லை. எம்எல்ஏ-வைப் பிடித்து மக்கள் ரகளைப்படுத்திக்கொண்டு இருந்தனர். எம்எல்ஏ-வை விடமாட்டேன் என்று சொன்னதும் அங்கு நான் சென்றேன். அப்போது நான் அடிக்கவில்லை என்றே, போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் மறுபடியும் தெரிவித்தார். இந்த மாதிரியான செயலை போலீஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், போலீஸாரின் மரியாதை குறைந்துவிடும். பெண்களையும், போராட்டக்காரர்களையும் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி பாண்டியராஜனிடம் கருத்துக் கேட்க, அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரது இரண்டு எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. அவரது விளக்கத்தையும் பதிவுசெய்ய தயாராக உள்ளோம். 

http://www.vikatan.com/news/tamilnadu/86232-whatsapp-audio-about-adsp-pandiyarajan-goes-viral.html

 

 

 

"ஓ... தடுக்குறியா'னு சொல்லி அடிச்சாங்க..!" போலீஸ் தாக்குதலுக்குள்ளான ஈஸ்வரி

 

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் நேற்று (11-04-17) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில், திருப்பூர் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், பெண்களைக் கைகளால் தாக்கியதோடு, ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்திலும் அறைந்தார். இதில், அவர் நிலைகுலைந்துபோனார். காவல் துறையினர் நடத்திய இந்தத் தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவலர்கள்Eshwari_16388.jpg

 

 

 

 

 

 

 

 

 

ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனால் தாக்குதலுக்கு உள்ளான விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரியைச் சந்தித்தோம். இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவர், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ''அந்த டாஸ்மாக் கடை அமைக்கப்பட்ட இடம் அதிகமாக விபத்து நடக்கும் பகுதி. மாணவர்கள் பெரும்பாலும் அந்தப் பகுதியைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்வார்கள். எனவே, அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என ஊர்மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த வழியாக எம்.எல்.ஏ கனகராஜின் கார் வந்தது. உண்மையைச் சொல்லப்போனால், தொகுதிக்குள் அன்றுதான் முதல்முறையாக நான் அவரை நேரில் பார்த்தேன். அவர் காரை வழிமறித்து, 'இதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்' என்று கெஞ்சினோம். 'அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். மேலிடத்தில் இது சம்பந்தமாகப் பேசி நல்ல முடிவை எடுக்கிறேன்' என எங்களுக்கு ஆதரவாக அவர் பேசிவிட்டு, ஓர் ஒரமாகச் சென்று அமர்ந்தார்.

சிறிதுநேரம் கழித்து அவர் காரில் ஏறப் போனார். அதைப் பார்த்த நாங்கள், 'எங்கள்கூடவே இருந்து போராடுவேன் என்று சொன்னீர்கள். ஆனால், தற்போது புறப்படுகிறீர்களே' எனக் கேட்டு அவரை காரில் ஏறவிடாமல் தடுத்தோம். அதற்கு அவர், 'அட போம்மா.. அந்தப் பக்கம்' என்று சொன்னப்படியே என்னைப் பிடித்துத் தள்ளினார். பிறகு, காவல் துறையினர் அவரை மிகவும் பாதுகாப்பாகவும் அவசரஅவசரமாகவும் வழியனுப்பிவைத்தனர். பின்னர் அடுத்த சில நிமிடங்களில், எங்கள் கூட்டத்துக்குள் புகுந்த காவல் துறையினர் எங்கள் எல்லோரையும் அடிக்க ஆரம்பித்தனர். எங்கள் பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ஓரமாக நடக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில்தான், என்னைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டவராக நேராக, வேகமாக ஓடிவந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் லத்தியால் என் இடதுகால் தொடையிலேயே அடித்தார்.

காவலர்கள்

மறுபடியும், அவர் என்னை அடிக்க லத்தியை ஓங்கியபோது... 'ஏன் சார் அடிக்கிறீங்க' என்று கேட்டு அவர் லத்தியைப் பிடித்தேன். அதற்கு அவர், 'ஓ தடுக்குறியா..' எனச் சொல்லி என் இடது கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். அவ்வளவுதான். அதில், நிலைதடுமாறிய நான் அங்கிருந்த கடைக்குப் பக்கத்தில் போய் அமர்ந்துவிட்டேன். இதைப் பார்த்து பரிதாபப்பட்டவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்குப் பிறகு என்னால் வீட்டைவிட்டுச் சுதந்திரமாக வெளியே போகவே முடியவில்லை. அதிக பயமாக இருக்கிறது'' என்று அதிர்ச்சி குறையாமால் பேசும் அவர், கடைசியாக... ''என்னை அறைந்த அந்தப் போலீஸ்காரரை வேலையைவிட்டே நீக்கவேண்டும். அத்துடன், இனி, எங்கள் ஊரில் மதுக்கடையே திறக்கக்கூடாது'' என்ற கோரிக்கைகளை மீண்டும்மீண்டும் முன்வைத்தார் ஈஸ்வரி.

ஈஸ்வரிக்கு இடது காதில் ஏற்கெனவே ஜவ்வு பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் அதற்கான அறுவைச்சிகிச்சையும் எடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனும் அவருடைய இடது காதின் மீதே அறைந்திருக்கிறார். இதனால் தனது இடது காது சரியாகக் கேட்கவில்லை என்று வேதனைப்படுகிறார் ஈஸ்வரி. 

http://www.vikatan.com/news/coverstory/86239-interview-of-eshwari-who-was-hit-badly-by-police-in-tirupur.html

  • தொடங்கியவர்

 

அப்பாவி மக்களை வெறித்தனமாக தாக்கிய போலீஸ்!

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பெண்கள், பொதுமக்களை வெறித்தனமாக தாக்கிய போலீஸ்.

  • தொடங்கியவர்
பெண் கன்னத்தில் 'பளார்' விட்ட
போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை
 
 
 

சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், மதுக் கடை அமைவதை எதிர்த்து போராடிய பெண்களை தாக்கிய, போலீஸ் அதிகாரியிடம் விசாரணை மற்றும் நடவடிக்கை துவங்கி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tamil_News_large_175023320170413002740_318_219.jpg

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனுார் காரணம்பேட்டை சாலையில் இருந்த, மதுக் கடையை மூடிவிட்டு, அய்யன்கோவில் சாலையில் திறக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாமளாபுரம் சாலையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
 

தடியடி


போராட்டம் தொடரும் போதே, திட்டமிட்டப்படி மதுக்கடை திறக்கப்பட்டதால், பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். திருப்பூர்

போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் தலைமை யில், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, ஒரு பெண்ணின் கன்னத்தில், பாண்டிய ராஜன், ஓங்கி அறைந்தார்; மற்ற பெண்கள் மீதும், தடியடி நடத்தப் பட்டது.இதில், காயமடைந்த ஈஸ்வரி மற்றும் சிவகணேஷுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், மதுக்கடையை திறக்க தடை கோரி யும், சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக நீதிக்கான வழக்கறி ஞர்கள் அமைப்பின் தலைவர், கே.பாலு மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறி ஞர், கே.பாலு ஆஜராகி மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார். பெண்கள் மீதான தாக்கு தலுக்கு நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையிட்டார்.
 

சிகிச்சை


இதையடுத்து, பிற்பகலில் விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர், என்.எல். ராஜா; அரசுதரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகினர். முதல் பெஞ்ச்
பிறப்பித்த உத்தரவு:

மதுக்கடையை வேறு இடத்தில் மாற்றி அமைத்த தால், திருப்பூர் பகுதியில் போராட்டம் நடந்துள்ளது. போலீஸ் அத்துமீறலால், அய்யம் பாளையத்தைச்

 

சேர்ந்த ஈஸ்வரி, சாமளாபுரத்தை சேர்ந்த சிவகணேஷ் காய மடைந்ததாககூறப்பட்டு உள்ளது. கடையை இடமாற்றி அமைத்த உத்தரவு, ரத்து செய்யப் பட்டு விட்டதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.

காயமடைந்தோர், அவர்கள் விருப்பப்படி, எந்த அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். தவறு செய்த போலீஸ் அதிகாரி மீதான விசாரணையும், நடவடிக்கையும் துவங்கியிருப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறிஉள்ளார்.

நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு, மதுக் கடையை வேறு இடத்தில், சட்டப்படி அமைத்து கொள்ளலாம்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1750233

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, நவீனன் said:
பெண் கன்னத்தில் 'பளார்' விட்ட
போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை

இந்தியாவிலை நடவடிக்கை எண்டால் ப்ரோமோசன் எண்டு அர்த்தமாம்.tw_blush:

  • தொடங்கியவர்

கன்னத்தில் அடி வாங்கியது ஈஸ்வரி மட்டும்தானா?

 

மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கும் காவல் அதிகாரி | உள்படம்: ஈஸ்வரி | படம்: இரா.கார்த்திகேயன்
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கும் காவல் அதிகாரி | உள்படம்: ஈஸ்வரி | படம்: இரா.கார்த்திகேயன்
 
 

பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியுமா? பாண்டிய நாட்டில் ஒருமுறை பெரு மழை பெய்தது. கரை புரண்டோடியது வைகை. கரைகள் பலம் இழந்தன. கரைகளைப் பலப்படுத்த மன்னன் உத்தரவிட்டான். அப்போது, பிட்டு விற்கும் மூதாட்டியான வந்தி என்பவர் முதுமை காரணமாக தன்னால் மண் சுமக்க முடியாது என்று கவலையுடன் ஈசனிடம் வேண்டினார். கூலியாள் வேடத்தில் வந்தார் ஈசன். ’கூலி என்ன கொடுப்பாய்?’ என்றார். பிட்டு கொடுத்தார் மூதாட்டி. உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டார் ஈசன். வேலை செய்யாமல் தூங்குவதைக் கண்ட மன்னனின் பணியாள் கூலியாளின் முதுகில் பிரம்பால் விளாசினார். உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் மீது விழுந்த அடி அது. அத்தனை உயிர்களும் வலியை உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான்.

மேற்கண்ட சம்பவம் புராணக் கதையாக இருக்கலாம். ஆனால், அன்று ஈசனின் மீது விழுந்த அடி, இன்று ஈஸ்வரி மீது விழுந்துள்ளது. அன்று ஈசனின் மீது விழுந்த அடியால் மன்னன் தனது தவறை உணர்ந்தான். இன்றைய ஆட்சியாளர்களோ தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்கிறார்கள். இன்று ஈஸ்வரி மீது விழுந்த அடி அவர் வாங்கிய அடி மட்டும் அல்ல; மக்கள் ஒவ்வொருவர் மீதும் விழுந்த அடி. ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி. இந்திய இறையாண்மை மீது விழுந்த அடி. மக்களுக்கு போராடும் உரிமைகளை வழங்கிய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மீது விழுந்த அடி!

இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் சட்ட விதி 12 தொடங்கி 35 வரை குடிமக்களுக்கு ஆறு வகையான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று, சமூக நீதி கோரும் உரிமை அல்லது சுரண்டலை எதிர்க்கும் உரிமை. சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது மது. அதன் அடிப் படையில் தமிழக மக்கள் மதுக்கடை களுக்கு எதிராக போராடுகிறார்கள். சமூக நீதிப் போராட்டம் இது. மக்களின் வருவாயை, உடல் மற்றும் மன ஆரோக் கியத்தை சுரண்டுகிறது மது. சுரண்டலுக்கு எதிராகப் போராடுகிறார்கள் மக்கள்.

இவ்வாறு போராடிய பெண்ணை காவல் துறை அதிகாரி தாக்கியதை அவரது தனிப்பட்ட ஆவேசமாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது. நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலை யில், மாற்று இடங்களில் மதுக்கடைகளை நிறுவுவதில் தீவிரமாக இருக்கிறது தமிழக அரசு. ஒருபக்கம் மது விற்பனை சரிந்துவிட்டது. இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் மது ஆலைகளில் கொள்முதலும் உற்பத்தியும் குறைந்துவிட்டது. இவை எல்லாம் ஆட்சியாளர்களை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது. காவல் துறையினர், வருவாய் துறையினர், டாஸ்மாக் பணியாளர்கள் என பல தரப்புக்கும் கடுமையான அழுத்தங்கள் தருகிறார்கள் அவர்கள்.

அதேசமயம் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே அணி திரள்கிறார்கள். பல்வேறு ஊர்களில் சிறு சிறு போராட்டங்களை நடத்துகிறார்கள். நாளுக்கு நாள் மக்களின் திரட்சியும் உணர்வுகளின் வேகமும் அதிகரித்து வருகிறது. மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்சினை என்று சிறு தீப்பொறிகளைப் போல எழும்பும் இந்தப் போராட்டங்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களை ஒன்று திரட்டிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் ஆட்சியாளர்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் மற்றும் நிலையற்ற ஆட்சி தன்மையும் கூடுதலாக அவர்களை அஞ்ச வைக்கிறது.

எனவே, மக்களின் போராட்டங்களைத் தொடக்க நிலையிலேயே நசுக்கிவிட துடிக்கும் தமிழக அரசின் நிலைப் பாட்டையே காவல் துறை வெளிப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, மதுக்கடைகளுக்கு எதிராக திரளும் பெண்களின் உளவியல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இதைப் பார்க்க வேண்டும். ’போராட்டத்தில் இறங்கினால் பெண்கள் என்றும் பார்க்க மாட்டோம்; கடுமையாக தாக்குவோம்’ என்று தமிழக அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டும். தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டைதான் காவல் துறை அதிகாரி வெளிப்படுத்தி இருக்கிறார். கடுமையான மன அழுத்தத்தின் வெளிப்பாடு இது. அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்க முடியாது. அவருக்கு மன நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பொறுப்பும் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்று போராட்டங்களில் ஈடுபடும் பலரும் அரசின் கொள்கை முடிவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். பண மதிப்பு நீக்கம், விவசாயப் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், அணு உலை திட்டம், அதிகாரிகள் அலட்சியம் என்று ஏதோ ஒன்று அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. திருப்பூரில் தாக்கப்பட்ட ஈஸ்வரியும் தமிழக அரசின் மதுக்கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்தான். “என் புருஷன் சம்பாதிக்கிற காசு பூராவும் சாராயக் கடைக்கே போவுது. ரெண்டு புள்ளைங்களை வெச்சிட்டு நான் படுற கஷ்டம் அந்தக் கடவுளுக்கே அடுக்காது...” என்று அழுகிறார்.

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் 2014, ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து மதுக்கடையை மூடச் சொல்லி வழங்கிய தீர்ப்பின் வரிகள் கவனிக்கத் தக்கவை. “இந்த வழக்கில் தொடர்புடைய மதுக்கடை அரசு விதி முறைகளை மீறாமல் அமைக்கப்பட் டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக் கிறது. ஆனால், அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் குடிமக்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ அளிக்கப்பட் டிருக்கும் அடிப்படை உரிமையை அது பறித்திருக்கிறது” என்றார்.

ஆம்! இன்று தமிழக மக்கள் அமைதி யாகவும், கண்ணியமாகவும் வாழும் உரி மையை பறித்திருக்கிறது தமிழக அரசு!

http://tamil.thehindu.com/tamilnadu/கன்னத்தில்-அடி-வாங்கியது-ஈஸ்வரி-மட்டும்தானா/article9634796.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.