Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறும் அரசாங்கங்களும் என்றும் மாறாத அதன் பண்புகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறும் அரசாங்கங்களும் என்றும் மாறாத அதன் பண்புகளும்

 

இலங்கைத் திருநாட்டின் மகிமை மக்கள் மத்தியில் ஆழ் மனதில் ஏற்பட வேண்டும். இந்தியர்களிடத்தில் உள்ள அந்த தேசப் பற்று இலங்கையர்களிடமும் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள சகல சமூகத்தவரும், அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் தேசிய இனம் என்ற சிந்தனை உருவாக்கப்பட வேண்டும் என்பது இன்றுள்ள புத்திஜீவிகளிடத்தில் புதிதாக எழுந்துள்ள பழைய சிந்தனையாகும்.

இந்த சிந்தனையை புத்திஜீவிகளிடத்தில் உருவாக்கி, அதனை புத்திஜீவிகள் ஊடாக ஒவ்வொரு கிராமம் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என உழைப்பதற்கு திரை மறைவிலும், வெளிப்படையாகவும் பல அமைப்புக்கள் கைகோர்த்து செயற்பட ஆரம்பித்துள்ளன.

இலங்கைத் தாய் ஒரு யுத்தத்துக்கு முகம் கொடுத்து ஓய்வெடுத்துள்ளது. இந்த யுத்தத்தினால் பிரிந்த இலங்கைத் தாயின் உயிர்களையும், இழந்த சொத்துக்களையும் விட, மனித உள்ளங்களில் படிந்துள்ள படிவுகள் பயங்கரமானதாக நோக்கப்படுகின்றது.

சிறிய வெள்ளம் வந்து விட்டு சென்றால், வீட்டைத் துப்பரவு செய்வது போலவும், பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் வீட்டை மீள் கட்டுமானம் செய்வது போலவும், இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மனித உள்ளங்கள், அந்த வீடுகளைப் போன்று பார்க்கப்பட வேண்டும் என ஒரு சமூக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

மனித உள்ளங்களில் இன்று அச்சமும், நம்பிக்கையீனமும் ஏற்பட்டுள்ளன. ஒரு இனம் மற்றொரு இனத்தை சந்தேகத்துடன் நோக்கும் நிலை இன்னும் நீங்கவில்லை. யுத்தத்தின் பின்னரான இந்த நிலைகள் மாற்றப்பட்டாலேயே மனித உள்ளங்களில் சந்தோஷம் நிலைக்கும், நம்பிக்கை பிறக்கும் என்பது நடைமுறை அரசியலில் வெறுப்புக் கொண்ட சமூக  தொண்டாளர் அமைப்புக்களின் பொதுவான கொள்கையாக இன்று மாறியுள்ளது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் மக்கள் நம்பிக்கைப் பெருமூச்சு விட்டனர். விடிவு பிறந்தது என்ற கனவு வளர ஆரம்பித்தது. இருப்பினும், அப்போதைய அரசு அதற்கு வழியமைக்க வில்லை. உருவாகிய சூழலில் சுயநல லாபம் தேட முயற்சித்தது. இதனால், ஊழல் அதிகமாக காரணமாகியது. கடந்த 2015 இற்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தின் நிலையாக இது சித்தரிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தங்களை விட்டால் ஆட்சிக்கு வர வேறு ஒருவர் பிறந்துவர மாட்டார் என்று கருதிய அப்போதைய அரசியல் தலைமைகளின் சிந்தனைகள், இத்தேசத்தின் மக்களுடைய உளப் பதிவுகளாக மாறியிருந்தன.

பின்னர், நாட்டில் எழுந்துவளர்ந்த ஊழல், மோசடிகளும்,  அப்போதைய ஆட்சியாளர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத இறுமாப்பும், அன்றிருந்த 30 வருட யுத்தத்தைப் போன்று நாட்டை அழிக்கும் ஒன்று என இந்நாட்டு மக்கள் உணர வெகுகாலம் எடுக்கவில்லை. இந்த மக்களின் உணர்வுகள் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்வடிவம் பெற்றன. புதிய அரசை ஆட்சி பீடம் ஏற்றி மக்களின் பலம் அநீதிக்கு முன்னால் எப்படி என்பதை நிரூபித்தனர்.

அடுத்து வந்த புதிய அரசின் கவர்ச்சியான வாக்குறுதிகளை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்பொழுது, மூன்று வருடங்கள் கழியப் போகும் நிலையில் அந்த வாக்குறுதிகளுக்குரிய எந்தப் பெறுமானத்தையும் மக்கள் காணாத நிலையில் உள்ளனர்.

அரசியல் லாபத்துக்காக இனவாதம் பேசி இரு இனங்களை மோத வைக்கும் சிந்தனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாமல்,இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வழி முறைகள் தடைதாண்ட முடியாமல் தத்தளிக்கின்றன. யுத்தத்தை சந்தித்த தேசத்தின் சனங்களின் மனங்களை வெள்ள ஐ.நா.விடம் இன்னும் இரண்டு வருடங்களை அவகாசம் கேட்கும் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதாக மக்கள் யோசிக்க தலைப்பட்டுள்ளனர்.

மக்கள் மனங்களில் அச்சம் நீங்குவதற்கு சட்டமும், அது சார்ந்த நிறுவனங்களின் செயற்பாடும் நம்பிக்கை ஊட்ட வேண்டும். பக்கச்சார்பு, அரசியல்வாதிகளின் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பால் செயற்பட முன்வர வேண்டும் என்பது அந்த நம்பிக்கையின் அடிநாதம். இன்று கூட்டு எதிர்க் கட்சியினாலும் புத்தி ஜீவிகளினாலும் நாட்டின் உயர்ந்த நிறுவனம் விமர்சிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது.

அரசியல் யாப்பு மாற்றப்படும். ஆணைக்குழுக்களை அமைத்து நீதி நிலைநாட்டப்படும். இதனால், ஊழல் ஒழிக்கப்படும். அரச நிறுவனங்கள் சுத்திகரிக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்னும், ஆங்காங்கே இருக்கின்றது.

புதிய அரசியல் யாப்பு, மக்கள் நலனையும், மக்களின் நீண்டகால பிரச்சினைகளையும், பொது மக்களின் மனங்களில் உள்ள நம்பிக்கையீனங்களையும் கலையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கான முயற்சிகள், அரசியல் கட்சிகளின் சுய நலன்களை பாதுகாப்பதனை இலக்காகக் கொண்டு முதன்நிலைப்படுத்தப்படுகின்றது என்பது சமூகப் பற்றாளர்களின் பரந்த விமர்ஷனமாகும்.

ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவகாசம் கேட்டுள்ள அரசாங்கம், வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடங்களிலாவது, தேச மக்களின் மனத் தேவைகளை நிறைவு செய்யுமா ? அல்லது இரண்டு வருடங்களை கழிப்பதற்கு சர்வதேச தலையீட்டைத் தவிர்ப்பதற்கு நாடகமாடுமா? என்பது தான் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ((மு)

– கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

http://www.dailyceylon.com/121670

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.