Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...

Featured Replies

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2 ரன்னில் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 330 ரன்களை விரட்டிய தென்ஆப்பிரிக்கா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

 
பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2 ரன்னில் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா
 

சவுத்தாம்ப்டன்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

அதன்படி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 24-ந்தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் இங்கிலாந்து அணியை முதலில் விளையாட அழைத்தார்.

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 79 பந்துகளில் 101 ரன் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். 55-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும். பட்லர் 53 பந்தில் 65 ரன் (7 பவுண்டரி) எடுத்தார்.

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் அந்த அணி 2 ரன்னில் தோற்றது.

 

201705281343443893_england-won-s._L_styv

வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கிறிஸ்மோரிஸ், மில்லர் களத்தில் இருந்தனர். மார்க் வுட் வீசிய அந்த ஓவரில் முதல் 2 பந்தில் 2 ரன்னே எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மில்லர் ரன் எடுக்க தவறினார். 4-வது பந்தில் 1 ரன் எடுத்தார்.

இதனால் கடைசி 2 பந்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மோரிஸ் ரன் எடுக்க தவறினார். இதனால் ஆட்டம் பரபரப்பை எட்டியது.

கடைசி பந்தில் 4 ரன் தேவை. பவுண்டரி அடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட மோரிசால் 1 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 2 ரன்னில் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் 2 ரன்னில் தோற்றது அதிர்ச்சியானதே. தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 98 ரன்னும், மில்லர் 51 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டிவில்லியர்ஸ் 52 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் பிளெங்கெட் 3 விக்கெட்டும், பென்ஸ்டோக்ஸ், மொய்ன்அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மார்க் வுட் கடைசி ஓவரை மிகவும் நேர்த்தியாக வீசியதால் இங்கிலாந்துக்கு வெற்றி கிடைத்தது.

இந்த தோல்வி மூலம் தென்ஆப்பிரிக்கா 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/28134343/1087621/2nd-ODI-england-beats-south-africa-by-two-runs.vpf

  • Replies 236
  • Views 21.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 
பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
 
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது.

முதல் பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஒவ்வொரு அணியிலும் 15 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் 11 பேர் பேட்டிங் செய்யலாம். 11 பேர் பீல்டிங் செய்யலாம். பேட்டிங் செய்தவர்கள்தான் பீல்டிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

இந்திய அணியில் யுவராஜ் சிங் வைரஸ் காய்ச்சல் காரணமாகவும், ரோகித் சர்மா இங்கிலாந்து செல்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலும் பங்கேற்கவில்லை. மற்ற 13 பேரும் விளையாடுவார்கள்.

இந்த போட்டிகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டி. பயிற்சி ஆட்டம் என்பதால் முக்கியத்துவமற்ற போட்டியாக கருதக்கூடாது. ரோகித் சர்மா இன்று அணியுடன் வந்து இணைவார். யுவராஜ் சிங் குணமடைந்து வருகிறார். மற்ற 13 பேர் இன்று விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/28145336/1087633/Warm-Up-New-Zealand-win-the-toss-and-choose-to-bat.vpf

  • தொடங்கியவர்
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மற்றும் வீரர்களின் சாதனைகள்
 
 
Tamil-e.jpg

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மற்றும் வீரர்களின் சாதனைகள்

 
 
 

கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்ந்து 10ஆவது தடவையாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.  

இம்முறை இத்தொடர் கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளதால் பல்வேறான புதிய சாதனைகள் உருவாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

எனவே, பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த கால சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை சார்பான நிலைநாட்டப்பட்ட சில சாதனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்.

 

Farveez Maharoof2006 ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் பர்வீஸ் மஹரூப், 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே, சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடர் ஒன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட சிறந்த பந்து வீச்சாக உள்ளது. இந்த சிறந்த பந்து வீச்சு சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

Sangakkara and Mahelaஅதிகளவான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் உள்ளனர். இவ்விருவரும் மொத்தமாக 22 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய 20  போட்டிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

Ranjan Madugalleவீரர்கள் மாத்திரமன்றி, நடுவர்கள் குறித்த சாதனையும் இலங்கை வசமே உள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான ரஞ்சன் மடுகல்ல ஆகக்கூடுதலாக 23 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு, போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்  

.

 

Malinga and Muralitharanசம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் நியூசிலாந்து வீரர் கைல் மில்ஸ் முதலிடத்தை பிடித்திருந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முரளிதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் முறையே 24 மாற்று 22 விக்கெட்டுகளுடன் உள்ளனர். அத்துடன், ஏற்கனவே முரளிதரன் ஒய்வு பெற்றுள்ள நிலையிலும், கைல் மில்ஸ் இம்முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இடம்பெறாத நிலையிலும் இந்த சாதனையை முறியடிக்க லசித் மாலிங்கவுக்கு வாய்ப்புள்ளது.

Mahelaமுன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 2000 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 22 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 15 பிடியெடுப்புகளை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார். மஹேலவை அடுத்து 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களில் ஜேபி டுமினி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் 8 பிடியெடுப்புகளுடன் இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

Sangakkaraவிக்கெட் காப்பாளராக 22 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கிய குமார் சங்கக்கார, மொத்தமாக 33 ஆட்டமிழப்புகளை பதிவு செய்துள்ளார். சங்கக்காரவுக்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில் க்ரிஸ்ட் உள்ளார். இவ்விருவரும் ஒய்வு பெற்றுள்ள நிலையில், இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கவுள்ள தி பினிஷெர் என்றழைக்கப்படும் மஹேந்திரசிங் டோனி, 11 போட்டிகளில் 15 ஆட்டமிழப்புகளை செய்து குறித்த வரிசையில் 4ஆவது இடத்தில உள்ளார்,

Tharanga and Sangakkaraஇதுவரை நடைபெற்றுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், ஏனைய அணிகளை விட 58 ஓவர்களுக்கும் மேலான ஓட்டமற்ற ஓவர்களை வீசிய ஒரே அணியாக இலங்கை அணி திகழ்கின்றது.

அதேபோன்று, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை பகிர்ந்து கொண்ட அணிகளாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் உள்ளன.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது விக்கெட்டுக்காக உபுல் தரங்க மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கிடையில் இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட 165 ஓட்டங்கள் இன்று வரை குறித்த தொடர்களில் பதிவு செய்யப்பட்ட ஆகக்கூடிய இணைப்பாட்டமாக உள்ளது.

Sangakkaraஇறுதியாக 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 294 என்ற ஓட்ட இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை அணி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்கா 282 ஓட்ட இலக்கை எட்டியிருந்ததே சாதனையாக இருந்தது. குறித்த போட்டியில் குமார் சங்கக்கார 134 ஓட்டங்களை விளாசியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் முன்னிருந்ததை விட பல்வேறுபட்ட அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுடன் கடும் போட்டிக்கு மத்தியில், வலிமை மிக்க பல அணிகள் களமிறங்க உள்ளன

http://www.thepapare.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நியூசீலாந்து போட்டியை மைதானத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். ?

நியுஸிலாந்து 200 க்குள் சுருண்டுவிடும்?

  • தொடங்கியவர்
9 minutes ago, கிருபன் said:

இந்தியா நியூசீலாந்து போட்டியை மைதானத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். ?

நியுஸிலாந்து 200 க்குள் சுருண்டுவிடும்?

New Zealand 189 (38.4 ov)

இலண்டன் ஓவல் மைதானத்தில் இருந்து இடைக்கிடை ஸ்கோர் விபரங்களை தாருங்கள் கிருபன்..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

30 - 1

Rahane out

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபியிலும் தொடரும்: பென் ஸ்டோக்ஸ்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் சிறப்பான ஆட்டம் சாம்பியன்ஸ் தொடரிலும் தொடரும் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

 
 
 
 
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபியிலும் தொடரும்: பென் ஸ்டோக்ஸ்
 
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மோர்கன் சதத்தால் 339 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 267 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 330 ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 79 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 101 ரன்கள் சேர்த்தார். பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 328 ரன்கள் சேர்த்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.

201705281836103078_EnglandTeam-s._L_styv

சதம் அடித்து அணியின் ஸ்கோர் 330 ரன்கள் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அப்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் சிறப்பான ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘எங்களால் இந்த வெற்றியை தொடர முடியும். இந்த ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரும் என்று நம்புகிறேன். முழங்காலில் சற்று காயம் ஏற்பட்ட உணர்வு இருப்பதால் மூன்று ஓவர்களுக்கு மேல் பந்து வீசவில்லை. ஆனால், பேட்டிங், பீல்டிங் மற்றும் ஓடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/28183608/1087673/Ben-Stokes-Urges-England-to-Take-South-Africa-Form.vpf

  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டம்: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 45 ரன்னில் வெற்றி

 

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையினால் தடைபட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
பயிற்சி ஆட்டம்: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 45 ரன்னில் வெற்றி
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஞ்சி 66 ரன்னும், நீசம் அவுட்டாகாமல் 46 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் மொகமது மற்றும் புவனேஸ்வர் குமார் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரகானேவும், தவானும் களம் இறங்கினார்கள். ரகானே 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன், டோனி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விராட் கோலி 52 ரன்னுடனும், டோனி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 26 ஓவர் முடிவில் 84 ரன்கள் எடுத்திருந்தலே வெற்றிக்கு போதுமானது. ஆகையால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

30-ந்தேதி நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/28223302/1087705/Warm-up-match-india-beats-new-zealand-by-45-runs-duckworth.vpf

  • தொடங்கியவர்

42 ஆண்டு கால இங்கிலாந்தின் கனவு... சொந்த மண்ணில் பலிக்குமா? #ChampionsTrophy2017

 
 

Eng_22_19500.jpg

வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி ஆரம்பிக்கிறது கிரிக்கெட்டின் 'மினி உலகக் கோப்பை' என்று கூறப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி. நடப்பு சாம்பியன் இந்தியா, நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, ஃபார்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து என பலரும் 'மினி உலகக் கோப்பையை' வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறார்கள். 

ஆனால் சொந்த மண்ணில் நடப்பதாலும், மிகவும் பலமான ஒருநாள் அணி இருப்பதாலும் இங்கிலாந்து இம்முறை கோப்பை வெல்லும் என்று பலர் கருத்து கூறுகின்றனர். 

முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது 1975-ம் ஆண்டு. அப்போது கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த மேற்கிந்திய தீவுகள் அணி, மிகச் சுலபமாக கோப்பையைக் கைப்பற்றியது. பின்னர் நடந்த உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என்று பலரும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆனால் கிரிக்கெட்டின் தாய் தேசம் என்று சொல்லப்படும் இங்கிலாந்து 42 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு முறை கூட, சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. 

இதுவரை இங்கிலாந்து அணி வென்ற ஒரே உலகக் கோப்பை, 2010-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை மட்டும்தான். மூன்று முறை ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. கடைசியாக 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியிலும் இங்கிலாந்து அணி, இந்திய அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்வதற்கான வாய்ப்பை இழந்தது.

ஆனால், இம்முறை எப்பாடு பட்டாவது கோப்பை தன் வசமாக்கும் முனைப்புடன்தான் இருக்கிறது இங்கிலாந்து. 
இது குறித்து அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான மொயீன் அலியும், 'எங்களிடம் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் வெற்றி பெறுவதற்கான அணி இருக்கிறது' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், 'இதுதான் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறப்பான இங்கிலாந்து அணி.' என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

 

இம்முறையாவது இயன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இறுதி ஆட்டம் முடிந்த பின்னர் வெற்றியடைந்த பக்கம் இருக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

http://www.vikatan.com/news/sports/90618-will-england-win-2017-champions-trophy.html

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி 2-வது பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் நாளை மோதல்

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.

 
சாம்பியன்ஸ் டிராபி 2-வது பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் நாளை மோதல்
 
லண்டன்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந்தேதி சந்திக்கிறது. 8-ந்தேதி இலங்கையுடனும், 11-ந்தேதி தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகிறது.

இந்தப்போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 45 ரன்னில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய நியூசிலாந்து 38.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. ரோஞ்சி அதிகபட்சமாக 66 ரன்னும், நீசம் 46 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதி பின்பற்றப்பட்டது. 26 ஓவர்களில் இந்திய அணி 85 ரன் தான் இலக்கு. 129 ரன் எடுத்து இருந்ததால் 45 ரன்னில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோலி 53 ரன்னும் (அவுட் இல்லை) தவான் 40 ரன்னும் எடுத்தனர்.

பயிற்சி ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதுகின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29110738/1087761/India-vs-Bangladesh-in-Champions-trophy-warm-up-match.vpf

  • தொடங்கியவர்

தெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி ? சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5

 
 

CT2017

 

சாம்பியன்ஸ் டிராபி கனவு இன்னமும் இலங்கைக்குக் கனவாகவே இருக்கிறது. ஒருநாள் உலகக்  கோப்பையிலும் சரி, டி20 உலகக் கோப்பையிலும் சரி இலங்கையின் ஆதிக்கம் அதிகம். 1996முதல் 2015 வரை நடந்த ஆறு  உலகக் கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் ஒரு முறை சாம்பியனும் கூட. ஆறு டி20 உலகக்கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. அதில் ஒரு முறை வின்னர். சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை அணி இதுவரை சாதித்தது என்னென்ன.. சறுக்கியது எங்கே... இம்முறை சாம்பியன் வாய்ப்பு எப்படி? 

இலங்கை

1998ல் நடந்த முதல் மினி உலகக்கோப்பையில் நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இலங்கை அணி. நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்துடன் மோதியது. முரளிதரன் சுழலில் 188 ரன்களுக்கு சுருண்டது. சேஸிங் ஈஸி என நினைத்தார் கேப்டன் ரணதுங்கா. ஆனால் நியூசிலாந்து சைமன் டவுல் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். டாப் ஆர்டரை அடக்கினால் பின் வரிசை வீரர்கள் திமிர முடியாது எனத் திட்டம் போட்டார்.  அதைச் சரியாக செயல்படுத்தவும் செய்தார். விளைவு... ஐந்து ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் காலி. இலங்கை முடங்கிவிடும் என்றே மேட்ச் பார்த்த எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் கேப்டன் அர்ஜுனா  ரணதுங்கா பொறுப்புடன் ஆடி  90 ரன்கள் குவித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். 

காலிறுதியில் தென் ஆப்ரிக்காவைச் சந்தித்தது இலங்கை. தென் ஆப்ரிக்கா முக்கியமான போட்டிகளில் ஆடுகிறதென்றால் இயற்கை அன்னை குஷியாகிவிடுவது அப்போதே வாடிக்கை. அன்றும் அப்படி மழை பெய்தது. 50 ஓவர் போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. காலிஸ் எடுத்த சதத்தால் சேஸிங்கில் 241 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை நோக்கி ஓட ரெடியாக இருந்தது இலங்கை. மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 224 ரன்கள் எடுக்க வேண்டும் என்றனர் நடுவர்கள். இலங்கை சோர்ந்தது. அது பேட்டிங்கிலும் அப்படியே எதிரொலித்தது. ஹன்ஸ் குரோனியேவுக்குச் சிக்கல் தராமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி  ஓடினார்கள் இலங்கை பேட்ஸ்மேன்கள். 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 132 ரன்கள் எடுத்து தொடரிலிருந்து வெளியேறியது ரணதுங்கா அணி. 

இரண்டாவது மினி உலகக்கோப்பை கென்யாவில் நடந்தது. இம்முறை தகுதிச் சுற்றி ஆடி வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இலங்கைக்கு. தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. குணவர்தனே மற்றும் ஜெயவர்த்தனே அதிரடியால் நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சயீத் அன்வர் சதமடிக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை அணி.

2002 ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. முதல் போட்டியிலேயே இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி தந்தது இலங்கை அணி. சயீத் அன்வரின் அரை சத உதவியோடு 200 ரன்கள் அடித்தது பாக். ஜெயசூர்யாவின் அதிரடி சதத்தில் 37வது ஓவரில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை. நெதர்லாந்தை 206 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முரளி சுழல், அட்டப்பட்டு மற்றும் சங்கக்காரா இணையின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. 

2002, செப்டம்பர் 29 அன்று இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது இலங்கை. முதலில் பேட் பிடித்தது. ஜெயசூர்யா களத்தில் வாணவேடிக்கை காட்டியபோது 275 நிச்சயம் 350 லட்சியம் என பெவிலியனில் இருந்த அர்னால்டும், ஜெயவர்த்தனேவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கங்குலி சுழல் மன்னன் ஹர்பஜனை வைத்து கதையை முடித்தார். இதனால் இந்தியாவுக்கு இலக்கு 245 என்றானது. நிச்சயம் இம்முறை இந்தியா வெற்றி பெறும்  என பலரும் நம்பியிருந்தார்கள். முதல் ஓவரை வாஸ் வீசினார். மெய்டன். மோங்கியாவுக்கு எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த சேவாக் இப்போது பேட்டிங் பிடிக்க வந்தார். சந்தித்த ஐந்து பந்துகளில் மூன்றை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். இலங்கை ரசிகர்கள் பதறினர். திடுமென மழை வந்தது. விடவேயில்லை கொட்டித் தீர்த்தது. மேட்ச் ஆடமுடியவில்லை. மறுநாள் மீண்டும் போட்டி என அறிவித்தார்கள்  நடுவர்கள். 

செப்டம்பர் 30 அன்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொண்டது. மீண்டும் முதலில் பேட் பிடித்தது இலங்கை. கும்ப்ளே, ஹர்பஜன், சேவாக், டெண்டுல்கர் என சுழல் வீரர்களை வரிசையாக அனுப்பினார் கங்குலி. தட்டுத்தடுமாறினாலும் ஜெயவர்தனேவின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 222 என்ற எண்ணை அடைந்தது இலங்கை. மெதுவாக இலக்கை நோக்கி நகரலாம் என முடிவு செய்திருந்தார் கங்குலி. விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என உறுதியாகயிருந்தார். ஆனால் வாஸ் பந்தில் டக் அவுட் ஆனார் மோங்கியா. சேவாக் மெதுவாக ஆட வேண்டும் என நினைத்தாலும் அவரது பேட் பந்துகளை விரட்டியடித்தே பழக்கப்பட்டதால் 22 பந்தில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கால் சதத்தை எடுத்தார். மறுமுனையில் 22 பந்துகளைச் சந்தித்து ஏழு ரன்கள் எடுத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மீண்டும் மழை. போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்  நடுவர்கள். கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபியில் முதல் கோப்பையை வென்றது இலங்கை. 

ஜெயசூரியா - கங்குலி

2004 சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் ஜிம்பாப்வேயை வென்றது. ஆனால் லீக் சுற்றில் இங்கிலாந்திடம் டக் வொர்த் லூயிஸ் முறையில் தோற்றது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. 

2006 சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச் சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்தது இலங்கை. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய  அணிகளைத் தகுதிச் சுற்றில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி ஆடுவதற்கு தகுதி பெற்றது. இரண்டு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கையும் இடம்பிடித்தது. நியூசிலாந்தை மட்டும்தான் லீக் சுற்றில் வெல்ல முடிந்தது. ஆகவே இம்முறையும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தென் ஆப்பிரிக்காவை மட்டுமே டக் வொர்த் லூயிஸ் விதிப்படி வென்றது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை இறுதியில் நுழைய முடியாத சோகத்துடன் வெளியேறியது இலங்கை. 

2013 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிருந்த பிரிவில் இலங்கையும் இடம்பெற்றது. கடினமான பிரிவில் இடம்பெற்றாலும் அருமையாக ஆடியது. நியூசிலாந்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனினும் இங்கிலாந்தையும், ஆஸியையும் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. 2011 உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் என்றார் சங்கக்காரா. ஆனால் தோனியின் வியூகங்களை சமாளிக்கமுடியாமல் சொந்த நாட்டுக்கே விமானம் ஏறியது இலங்கை அணி. 

இப்போது ?

2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒன்பது ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்திருக்கிறது. ஆடிய 37 போட்டிகளில் வெறும் 13ல்  மட்டுமே வென்றிருக்கிறது. வலுவான அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்திருக்கிறது. 

இலங்கை அணியின்  சமீப கால சாதனை எனச் சொல்ல வேண்டுமெனில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததைத்தான் குறிப்பிட முடியும். சங்கக்காரா, ஜெயவர்த்தனே என இரண்டு சீனியர்கள் வெளியேறியதில் இலங்கை அணி ஆட்டம் கண்டிருக்கிறது. சரியான கேப்டன், நல்ல அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இலங்கை அணி ஆடும் பல போட்டிகள் கத்துக்குட்டிகளின் ஆட்டத்தைப் போலவே இருக்கின்றன. கிரிக்கெட் என்பது  தனிநபர் விளையாட்டு அல்ல. அது ஒரு குழு விளையாட்டு. தனிநபரைச் சார்ந்திருந்தால் ஒரு அணி எந்த அளவுக்குச் சரிவை சந்திக்கும் என்பதற்கு இலங்கை நல்ல உதாரணம்.

இலங்கை

சாம்பியன்ஸ் டிராபியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில்தான் இலங்கை விளையாடும். தென் ஆப்ரிக்கா, இந்தியா என இரண்டு வலுவான அணிகளைத் தாண்டி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது என்பது  சாதாரண விஷயமில்லை. இங்கிலாந்தில் தற்போது பேட்டிங்குக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதில் மலிங்கா, குலசேகரா எந்தளவுக்குச் சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் மாத்யூஸ் எப்படி ஆடப்போகிறார் என்பது முக்கியமான கேள்வி. இலங்கை அணிக்கு மாத்யூஸ் மிகச்சிறந்த கேப்டன் எனச் சொல்ல முடியாது. அவரது முடிவுகள் மெச்சத்தக்கதாக இல்லை. 

இலங்கை அணியில் இம்முறை ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அசேலா குணரத்னே ஆகியோர்  சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக நிரோஷன் பந்துகளைப் பவுண்டருக்கும் சிக்ஸருக்கும் விளாசி வருகிறார். ஆனால், இவரால் பெரிய ஸ்கோர்களைக் குவிக்க முடியவில்லை என்பது மைனஸ். உபுல் தரங்கா சீனியர் பிளேயர். அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பினால் இலங்கை கவுரமான ஸ்கோர் குவிக்க முடியும். இவர்களைத் தவிர தினேஷ் சந்திமால் குறிப்பிடத் தக்க பேட்ஸ்மேன். ஆனால், நிலையற்ற ஆட்டம் என்பது இவரது மைனஸ். திசேரா பெரேரா, ஆஞ்சலோ மாத்யூஸ், அசேலா குணரத்னே என மூன்று பேரும் ஆல்ரவுண்டர்களாக ஜொலித்தால் அரையிறுதி வரையாவது இலங்கை வரும் என நம்பலாம். 

எதிர்பார்க்கப்படும் லெவன் :-

உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குஷால் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சமாரா கப்புகெதரா, ஏஞ்சலோ மேத்யூஸ், அசலா குணரத்னே, திசேரா பெரேரா,  செக்கியூகே பிரசன்னா, நுவான் குலசேகரா, லசித் மலிங்கா 

இலங்கை

 

 

பொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2019 உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும். கப்புகெதராவை எந்த அடிப்படையில் அணியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் இப்போதுதான் அணி சற்றே பலம் பெற்றிருக்கிறது. சீனியர்களும் ஜுனியர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இதுவரை ஓர் அணியாக ஆடிய அனுபவமில்லை. இப்படியொரு அணியை மாத்யூஸும் சமீப காலங்களில் தலைமையேற்று நடத்தியதில்லை. "இம்முறை எங்களின்  திட்டங்களில் மாற்றம் இருக்கிறது. அதிர்ச்சியான சில முடிவுகளை நீங்கள் பார்ப்பீர்கள்" எனச் சொல்லியிருக்கிறார் மாத்யூஸ். பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல சவால் தந்தது இலங்கை. ஓர் அணியாக இணைந்து ஒற்றுமையோடு ஆடினால் சாம்பியன்ஸ் டிராபியில் நாம் எதிர்பார்க்காத முடிவுகளை மாத்யூஸ் அணி தரக்கூடும். இலங்கையைப் பொறுத்தவரையில் நஷ்டம் எதுவுமில்லை; ஜெயிக்கும் ஒவ்வொரு போட்டியும்  லாபம். எத்தனை கட்டத்தைத் தாண்டுகிறது என்பதையும்தான் பார்க்கத்தானே போகிறோம் ! 

http://www.vikatan.com/news/sports/90680-will-srilanka-win-the-champions-trophy-.html

  • தொடங்கியவர்

ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி: ‘ஏ’ பிரிவு அணிகள் கண்ணோட்டம்

 

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ‘ஏ’ பிரிவு அணிகள் கண்ணோட்டத்தை பார்க்கலாம்.

 
ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி: ‘ஏ’ பிரிவு அணிகள் கண்ணோட்டம்
 
மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 1-ம் தேதி தொடங்குகிறது.

இந்தப்போட்டியில் தர வரிசையில் ’டாப் 8-ல்’ உள்ள அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடம் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கும் அரை இறுதிக்குக் தகுதி பெரும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 2006-ல் வெஸ்ட் இண்டீசையும், 2009-ல் நியூசிலாந்தையும் வீழ்த்தி கோப்பையை வென்று இருந்தது. கடந்த முறை அரை இறுதியில் வாய்ப்பை இழந்த அந்த அணிக்கு தற்போது நாக் அவுட் சுற்றுக்கு நுழைவதில் சிக்கல் இருக்காது என்றே கருதப்படுகிறது.

பேட்டிங்  மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் அந்த அணி இருக்கிறது. இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு எடுபடும். மிக்சேல் ஸ்டார்க், கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.
201705291521338190_aus._L_styvpf.gif


ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், கிறிஸ்லின், கும்மின்ஸ், ஹாஸ்டிங்ஸ், டிரெவிஸ் ஹெட், ஹாசல்வுட், மேத்யூ வாடே, ஸ்டோனிஸ், பேட்டின்சன், ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இங்கிலாந்து

இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஒரு நாள் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. சிறந்த ஆல்ரவுண்டர்களையும், அதிரடி பேட்ஸ்மேன்களையும், துல்லியமாக விக்கெட் கைப்பற்றும் பவுலர்களையும் கொண்ட அந்த அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

இரண்டு முறை இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்த அந்த அணி தற்போது பட்டம் வெல்ல வாய்ப்புள்ள முன்னணி அணியாக திகழ்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமே. ஜோரூட், பென்ஸ்டோக்ஸ் அந்த அணியின் துருப்பு சீட்டுகள்.
 
201705291521338190_englamd._L_styvpf.gif


மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், ஜோரூட், மொய்ன் அலி, பேர்ஸ்டோவ், சாம்பில்லிங்ஸ், பட்லர், ஹால்ஸ், ஜேக்பால், புரென் கெட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

நியூசிலாந்து

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் வேட்கையில் உள்ளது.

இதற்கு முன்பு அந்த அணி 2000-ம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி பட்டம் பெற்று இருந்தது. தற்போதைய நியூசிலாந்து அணி சமபலத்துடன் திகழ்கிறது. அரை இறுதியில் நுழைவது சவாலானதே. கேப்டன் வில்லியம்சன், வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
 
201705291521338190_new._L_styvpf.gif


வில்லியம்சன் (கேப்டன்), ஆண்டர்சன், குப்தில், ரோஸ் டெய்லர், டாம்லாதம், கோலின் கிரண்ட்ஹோம், நீல்ரூம், போல்ட், மெக்லகன், ரோஞ்சி, ஆடம் மிலின், ஜேம்ஸ், நீசம், ஜித்தன் பட்டேல், சவுத்தி, சான்ட்னெர்.

வங்காளதேசம்

வெஸ்ட்இண்டீசை தர வரிசையில் பின்னுக்கு தள்ளியதால் வங்காளதேசம் வாய்ப்பை பெற்றது. அந்த அணி 3-வது முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்கிறது. இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. முஷ்பிகுர் ரகீம், சவுமியா சர்க்கார் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.

மொர்தாசா (கேப்டன்), இம்ருல் கய்ஸ், மகமதுல்லா, மெகதி ஹசன், முஷ்பிகுர் ரகீம், ரூபெல் உசேன், சகீப்-அல்-ஹசன், மொசடக் உசேன், முஷ்டாபிசுர், ரகுமான், சபீர் ரகுமான், சைபுல் இஸ்லாம், சவுமியா சர்க்கார், சன் சாமுல் இஸ்லாம், தமிம் இக்பால், தக்சின் அகமது.
 
201705291521338190_bangadesh._L_styvpf.g


மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

இந்தப்போட்டியில் தர வரிசையில் ‘டாப் 8-ல்’ உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29152131/1087819/A-group-teams-overview-in-champion-trophy.vpf

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: யூனிஸ்கான் நம்பிக்கை

 

சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று முன்னாள் பேட்ஸ்மேன் யூனிஸ்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: யூனிஸ்கான் நம்பிக்கை
 
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வியாழக்கிழமை (ஜூன்-1) தொடங்குகிறது. ஜூன் 4-ந்தேதி நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் உள்பட கிரிக்கெட் விமர்சகர்கள் இந்தியா வெற்றிபெறும், பாகிஸ்தான் வெற்றி பெறும். பாகிஸ்தானின் பந்துவீச்சு இந்தியாவின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்கும் என ஆருடம் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னைக் கடந்த ஒரே பாகிஸ்தான் வீரருமான யூனிஸ்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘தற்போதைய பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்தக்கூடிய திறமை உள்ளது. கடந்த காலங்களில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியுள்ளது.

பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக உள்ளது. என்னுடைய கருத்து என்னவெனில், சாம்பியன்ஸ் டிராபியில் 400 ரன்னைக்கூட எளிதாக சேஸிங் செய்துவிடலாம். 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் பீல்டிங் மிகவும் முக்கியமானது. அதில் பாகிஸ்தான் அணி கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு கேட்ச் வாய்ப்பையும் தவற விட்டுவிடக்கூடாது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29174615/1087877/ICC-Champions-Trophy-2017-Younis-Khan-believes-Sarfraz.vpf

  • தொடங்கியவர்

மழையினால் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது

 

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் மழையினால் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது.

 
 
மழையினால் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது
 
இங்கிலாந்து, வேல்ஸில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்தேதி) சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. மழைக் காரணமாக ஆட்டம் காலதாமதமாக தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார்.

ஆஸ்திரேலியா 10.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கீட்டது, இதனால் 10.2 ஓவருடன் போட்டி கைவிடப்பட்டது. பிஞ்ச் 36 ரன்னுடனும், ஸ்மித் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மொகமது ஆமிர் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29202857/1087901/Rain-stopped-Australia-vs-pakistan-Warm-up-Match.vpf

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.

 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்
 
லண்டன் :

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 4-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தற்போது சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்த நிலையில் லண்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, வங்காளதேச அணியை சந்திக்கிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி 38.4 ஓவர்களில் நியூசிலாந்து அணியை 189 ரன்னில் சுருட்டியது. வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ்யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட இந்திய வீரர் ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் விராட்கோலி (52 ரன்கள்) அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டோனி 17 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 7 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

மழையால் இந்திய அணியின் இன்னிங்ஸ் 26 ஓவர்களில் முடிவுக்கு வந்ததால் கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

201705301007434926_India-vs-Bangladesh._

காய்ச்சல் காரணமாக கடந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத யுவராஜ்சிங் இன்னும் முழு உடல் தகுதியை பெற்று விட்டாரா? என்பது தெரியவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

குட்டி அணியாக இருந்தாலும் வங்காளதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் கொண்ட வங்காளதேச அணி களத்தில் கடைசி வரை வெற்றிக்காக போராடும் குணம் கொண்டதாகும். முதல் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் போராடி தோல்வி கண்டது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்து அசத்தியது.

2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய வங்காளதேச அணி, அந்த ஆண்டில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதை மறந்து விட முடியாது. எனவே வங்காளதேச அணி எல்லா வகையிலும் இந்திய அணிக்கு சவால் அளிக்க முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், யுவராஜ்சிங், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், ரஹானே.

வங்காளதேசம்: மோர்தசா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கார், சபிர் ரஹ்மான், மக்முதுல்லா ரியாத், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், ருபெல் ஹூசைன், முஸ்தாபிகுர் ரஹமான், தஸ்கின் அகமது, மெஹதி ஹசன், மொசாடெக் ஹூசைன், சன்ஜாமுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/30100740/1087956/Champions-Cup-Cricket-practice-India-vs-Bangladesh.vpf

  • தொடங்கியவர்

இந்த முறை தென் ஆப்ரிக்காதான் சாம்பியனா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? - மினி தொடர் 6

 

Champions trophy

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒருநாள் போட்டி அது. வழக்கமாக  வெற்றி தோல்விகளில் பெரிய ஆர்ப்பாட்டம் காட்டாத தென் ஆப்ரிக்க அணி அன்றைய தினம் நடந்த போட்டியில் தோற்றதற்கு மைதானத்திலேயே  கண்ணீர் சிந்தியது. அணித்தலைவர்  ஏபி டிவில்லியர்ஸ் விழியோரம் கண்ணீர் கசிந்ததையும் அதைக் கட்டுப்படுத்தியதையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களுக்குள் சோகம் புகுந்தது. அந்த மேட்சில் நியூசிலாந்து வென்றது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரும் ஆறுதலாக நின்றது தென் ஆப்ரிக்கா அணிக்குத்தான். அந்த மேட்ச் கடந்த உலகக்கோப்பையில் நடந்த அரையிறுதிப் போட்டி ! 

தென் ஆப்ரிக்காவுக்கும் நாக் அவுட் சுற்றுக்கும் எப்போதும்  டிஷ்யூம் டிஷ்யூம்தான்.  ஒரு முறை ஒரு ரன்னில் தோல்வியைத் தழுவும்; இன்னொரு முறை மழை தென் ஆப்ரிக்க ரசிகர்களின் கனவை தவிடுபொடியாக்கும்; மற்றொரு முறை டக் வொர்த் லூயிஸ்  பெருந்தடையாய் வந்து நிற்கும். பாகிஸ்தான் இந்தியாவை உலகக்கோப்பையில் வெற்றி கொள்ளும் என காத்திருந்த பாக் ரசிகர்களை விட தென் ஆப்ரிக்க ரசிகர்கள் ரொம்பவே பாவம். ஆனால் எப்போதும் அவர்களது அணியை அந்த மக்கள்  விட்டுக்கொடுப்பது இல்லை.  டிவியை போட்டு உடைப்பதில்லை, வீரர்கள் வீட்டில் கல் எறிவதில்லை. உலகக்கோப்பையை ஜெயிப்பது, ஓர் அணியின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு மகுடம். தென் ஆப்ரிக்காவிடம் அந்த மகுடம் இல்லைதான். ஆனாலும், இப்போதைய சூழ்நிலையில் தலை சிறந்த அணிகளில் முக்கியமானது தெ.ஆ. 

ஏ பி டிவில்லியர்ஸ்

கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்ரிக்க அணி அளவுக்கு தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எந்த உலகக்கோப்பை வந்தாலும் சரி தென் ஆப்ரிக்காவுக்கு கோப்பையை ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் கோப்பைதான் பெரும்பாலும் கைகூடுவது இல்லை. அதிர்ஷ்டம் இல்லை; அதனால் கோப்பையை அடையமுடியவில்லை என  தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில், பல சமயங்களில் தென் ஆப்ரிக்க அணியினர் நம்பவே முடியாத வகையில் அதீத பதற்றத்தால் தவறு  செய்திருக்கிறார்கள். தலைசிறந்த வீரர்களே சில சமயங்களில் அணிக்கு வில்லனாவார்கள்.

இப்போதும்  ஏபி டிவில்லியர்ஸ் முதல் டி காக் வரை நாக் அவுட் என்றால் பதற்றம் கொள்கிறார்கள். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட வெற்றியின் விளிம்புவரை வந்தபிறகும் பதற்றத்தால் தவறான ஷாட் ஆடி இரண்டு ரன்களில் தோற்றது தெ.ஆ. 

இப்போதும் தென் ஆப்ரிக்காதான் ஐசிசி தர வரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மிக வலுவான அணி என பெயரெடுத்திருக்கிறது. இதெல்லாம் மட்டுமே சாம்பியன் ஆக போதுமானதா... சாம்பியன்ஸ் டிராபியில்  தென் ஆப்ரிக்கா கடந்து வந்த பாதை என்ன... இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு எப்படி? 

முதல் சாம்பியன் : -

தென் ஆப்ரிக்கா இதுவரை ஜெயித்த ஒரே ஐசிசி கோப்பை 1998 ஆம் ஆண்டு நடந்த நாக் அவுட் டிராபி கோப்பை தான்.  குரோனியே தலைமையில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா கோப்பையை தூக்கியது. முதல் நாக் அவுட் டிராபி தொடரில் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது தெ.ஆ. அங்கே இங்கிலாந்தைச் சந்தித்தது. 282 ரன்கள் எனும் கடினமான இலக்கை நேர்த்தியாக ஆடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

அரையிறுதியில் இலங்கையை டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. லாரா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் வாலஸ் ஒரு முனையில் நிதானமாக ஆடி சதமடித்தார். மறுமுனையில் விக்கெட்டுகளை விறுவிறுவென வீழ்த்தினார் காலிஸ். ஐந்து விக்கெட்டுகளை அன்றைய தினம் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் அவர்.  "1975ல் நடந்த முதல் உலகக்கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ். முதல் மினி உலகக் கோப்பையும் நாம் தான் வெல்லப் போகிறோம். 20 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறோம். எனினும் நம்மால் வெற்றி பெற முடியும். இடையில் சில ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் சரிவைச் சந்தித்தோம். நாம் நம் பெருமையை மீட்டெடுக்க வேண்டும். மீண்டும் கிரிக்கெட் உலகை ஆள வேண்டும். இந்தப் போட்டியை வெல்வதே அந்த இலக்கை அடைய நாம் எடுத்து வைக்கும் முதல் அடி"  என வீரர்கள் மத்தியில் உரையாற்றினார் கேப்டன் லாரா. இன்னொரு பக்கம் குரோனியே தென் ஆப்ரிக்க வீரர்களை உற்சாக மூட்டினார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு ஓரளவு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதன்பிறகு, வெ.இ பந்து வீச்சாளர்கள் மேட்சை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 137/5 என தடுமாறியது தெ.ஆ. அப்போது களத்தில் இருந்தது இளம் வீரர் பென்கென்ஸ்டீயினும், கேப்டன் ஹன்ஸ் குரோனியவும்தான். ஒரு கேப்டன் தனது அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு  உதாரணமான ஆட்டத்தை ஆடினார் குரோனியே. 77 பந்துகளில் அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 61 ரன்கள் குவிக்க,  நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் நாடே கோலாகலம் பூண்டது. உலகப் புகழ் பெற்றார் குரோனியே. 

தென் ஆப்ரிக்கா  சாம்பியன்

இந்தியாவிடம் தொடர்  தோல்வி : -

கென்யாவில் நடந்த இரண்டாவது  மினி உலகக் கோப்பையில் காலிறுதியில் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியாவை சந்தித்தது தெ.ஆ. கங்குலி அதிரடியில் 295 ரன் குவித்தது  இந்தியா. சேஸிங்கில் சத்தம் காட்டாமல் சரிந்தது பொல்லாக் அணி. 

2002 உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீசை  இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கென்யாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதியில் நுழைந்தது தென் ஆப்ரிக்கா. மீண்டும் அங்கே இந்தியா.  சேஸிங்கில் 262  ரன்களைத் துரத்தியது. ஸ்மித் நான்கு ரன்னில் அவுட் ஆனாலும் கிப்ஸ் - காலிஸ் இணை அதிரடியாக ஆடியது. இந்தியாவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெற்றி வாய்ப்பே இல்லை. தென் ஆப்ரிக்காவின் ஸ்கோர் 192/1 என இருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார் கிப்ஸ். அதன் பிறகு நடந்தது நம்பவே முடியாத மேஜிக். காலிஸ் 97 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இன்றளவும் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இரண்டாவது முறையாக இந்தியாவிடம் தோற்று அரையிறுதியோடு வெளியேறியது தென் ஆப்ரிக்கா. 

2004 : லீக் சுற்றோடு மூட்டையை கட்டிய கதை : -

இந்த மினி உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. வங்கதேசத்தை 93 ரன்களில் சுருட்டி எறிந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீசை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்தது தெ.ஆ. ஸ்மித் - கிப்ஸ் அணி அதிரடி ஆட்டம் காட்டியது . 20 ஓவரில் ஸ்கோர் 100 ரன்களை தொட்டது. அப்போது கெயிலை பந்து வீச அழைத்தார் லாரா. உடனே பலன் கிடைத்தது கெயில் பந்துவீச்சில் போல்டானார் ஸ்மித்.  கிப்ஸ் சதமடித்த கையோடு கெயிலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ரூடால்ஃபையும் அன்றைய தினம் பெவிலியன் அனுப்பியது கெயில்தான். 280 ரன்களை தொடவேண்டிய மேட்சில் 246  ரன்களோடு திருப்திப்பட்டது தெ.ஆ.

ஸ்மித்தின் பாச்சா லாராவிடம் பலிக்கவில்லை. சர்வான், லாரா, சந்திரபால் இணையின் பொறுப்பான ஆட்டத்தால்  49-வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வெ.இ. லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது தென் ஆப்ரிக்கா.

2006 :  மீண்டும் அரையிறுதி 

இந்தமுறை நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இருந்தன. முந்தைய தொடர்களை விட வலிமையான அணியாக காணப்பட்டது தென் ஆப்ரிக்கா. இந்திய மண்ணில் நடந்த தொடரை நிச்சயம் தென் ஆப்ரிக்காவே கைப்பற்றும் என அடித்துச் சொன்னார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். முதல் போட்டியில் நியூசிலாந்தை 195 ரன்களில் அடக்கியது. ஆனால் தென் ஆப்ரிக்காவும் 108 ரன்களில் அடங்கியது. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளை ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். 

வாஸ் - மலிங்கா இணையின் பொறிபறந்த  வேகப்பந்தில் 30/3  என அல்லாடியது தெ.ஆ. காலிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்கள். நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார்கள். டிவில்லியர்ஸ் அரை சதம் அடித்தார். அவர் அவுட் ஆனதும் ரன் ரேட் ஒடுங்கியது. 219 ரன்களை மட்டுமே சேர்த்து தெ.ஆ. ஆனால் நெல், நிதினி, பொல்லாக் கூட்டணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் இலங்கை 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

மொஹாலியில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சில் 42/5  என சரிந்தது. ஆனால் ரன்ரேட்டை ரிப்பேர் செய்து, கெம்ப்பும் பவுச்சரும் கவுரமான ஸ்கோர் குவிக்க உதவினார்கள். பாக்குக்கு இலக்கு 214 ரன்கள். மகாயா நிதினி பந்துவீச்சில் சிதைந்தது பாக்கின் பேட்டிங் ஆர்டர். 47/8 என நிலை குலைந்தது. 124 ரன்கள் வித்தியாச மெகா வெற்றியுடன் அரையிறுதியில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா. அங்கே  வெஸ்ட் இண்டீஸ் வந்தது. 

கிறிஸ் கெயில் கொம்பனாக அவதாரம் எடுத்தார். ஒடுங்கியது தென் ஆப்ரிக்கா. கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் பவுலிங்கில் குடைச்சல் கொடுத்த கெயில் இம்முறை பேட்டிங்கில்  வெளுத்தார். 44 ஓவர்களில்  258 ரன்களை சேஸிங் செய்து இறுதியில் காலடி எடுத்து வைத்தது வெ.இ. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெளியேறியது தெ.ஆ. 

 2009 : மறக்க வேண்டிய தொடர் 

இந்த  சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து  அணிகள் இடம்பெற்ற பிரிவில் இருந்தது தென் ஆப்ரிக்கா. இதில் நியூசிலாந்தை மட்டுமே வெல்ல முடிந்ததால் அரை இறுதிக்குத் தகுதி பெறவில்லை. 

2013 - மீண்டும் நாக் அவுட்டில் மண்ணை கவ்வியது 

இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்ற பிரிவில் தென் ஆப்ரிக்கா இடம் பிடித்தது. தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதின. முதலில் பேட்டிங் பிடித்த இந்தியா 331 ரன்களை குவித்தது. தவான் சதமடித்தார். சேஸிங்கில் டிவில்லியர்ஸும், மெக்லாரனும் 70 ரன்களை அடித்தனர். எனினும் இலக்கை அடைய முடியவில்லை. 

பாகிஸ்தானுடனான போட்டியில் மெக்லாரனின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தானை வென்றது. வெஸ்ட் இண்டீசுடனான போட்டியில் மழை குறுக்கிட 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 230 ரன்கள் இலக்கு வைத்தது தெ.ஆ. 26 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்திருந்தது வெ.இ.  27-வது ஓவரை மெக்லாரன் வீச வந்தார். முதல் பந்தில் பொல்லார்டு அவுட். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. மேட்ச் நடைபெறவே வாய்ப்பில்லை  என தெரிந்த பிறகு டக் வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது 26.1 ஓவர்களில் 190 ரன்கள் என்பதுதான் இலக்கு. வெஸ்ட் இண்டீஸ் சரியாக 190 ரன்கள் எடுத்திருக்க போட்டி டை என அறிவிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இரண்டு அணிகளும் ஒரு வெற்றி ஒரு டை என புள்ளிகளின் அடிப்படையில் சமநிலையில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதியில் நுழைந்தது. அரையிறுதியில்  இங்கிலாந்துடன் ஆடியது. 76/7 என சரிந்த தென் ஆப்ரிக்காவின் ஸ்கோரை மில்லர் ஓரளவு சரி செய்தார். எனினும் 175 ரன்கள் என்பது வெற்றி பெற போதுமான ஸ்கோராக இல்லை. இங்கிலாந்து சிரமமே இல்லாமல் வென்றது. நொந்து கொண்டே ஊருக்கு திரும்பியது டிவில்லியர்ஸ் அணி. 

இம்முறை என்ன நடக்கும்? 

தென் ஆப்ரிக்கா இடம்பெற்றிருக்கும் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன. இந்தியாவைத் தவிர மற்ற அணிகளும் சுமாரான ஃபார்மிலேயே உள்ளன. எனவே ஜாக்கிரதையோடு நேர்த்தியாக ஆடினால் அரையிறுதி வரை செல்வதில் சிரமம் இருக்காது. இந்த சீசனில் அசுர வலிமையோடு இருக்கிறது தென் ஆப்ரிக்கா. ஆடும் 11 பேரில் பாதிக்கும் மேலானவர்கள் மேட்ச் வின்னர்கள். இந்த சீசனில் மிகச்சிறந்த படை தென் ஆப்ரிக்காவிடம் தான் இருக்கிறது. பல வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். 

2015 உலகக்கோப்பைக்கு பிறகு அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் அணிகளில் முக்கியமானது தென் ஆப்ரிக்கா. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஒருநாள் தொடர்களில் ஆடியிருக்கிறது . இதில் ஏழு முறை கோப்பையை வென்றது தென் ஆப்ரிக்கா. பலம் வாய்ந்த இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது குறிப்பிடத்தக்க அம்சம். வங்கதேச மண்ணில் ஒரு தொடரை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முத்தரப்பு தொடரில் கோப்பையை இழந்தது. அதற்குப் பிறகு சமீப நாள்களில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என இழந்திருக்கிறது தெ.ஆ. 

தென் ஆப்ரிக்கா

கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 25 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி சதவீதம் 62.5%. 

40 ஒருநாள் போட்டிகளில் 20 முறை முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. 20 முறை சேஸிங் செய்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த 20 போட்டிகளில் 14 முறை வென்றுள்ளது.  சேஸிங் செய்தபோது 11 போட்டிகளில் வென்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா

முதலில் பேட்டிங் செய்யும்போது வெற்றி சதவீதம் 70% . சேஸிங்கில் வெற்றி சதவீதம் 55 %. இந்த புள்ளிவிவரங்களே தென் ஆப்ரிக்காவின் பலம், பலவீனத்தைச் சொல்லி விடுகின்றன. தென் ஆப்ரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் பிடித்தால் மிகவும் அபாயகரமான அணி. 20 போட்டிகளில் 10 முறை 300 ரன்களுக்கும் மேலாக குவித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும்போது தென் ஆப்ரிக்காவின் சராசரி 288  ரன்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 162 ரன்களையும், அதிகபட்சமாக 438 ரன்களையும் எடுத்திருக்கிறது தென் ஆப்ரிக்கா. 

இம்முறை நான்கு பேட்ஸ்மேன்ககள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று ஆல்ரவுன்டர்கள். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற கலவையில் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. 

எதிர்பார்க்கப்படும் லெவன் : -

ஹாஷிம் ஆம்லா, குயின்டன் டீ காக், ஃபாப் டு பிளசிஸ், ஏபி டி வில்லியர்ஸ், டுமினி, மில்லர், மோரிஸ், ககிசோ ரபடா, ஆண்டிலே ஃபெலுக்வாயோ, இம்ரான் தாஹீர், மோர்னே மோர்கல்

South Africa

பிளஸ் - மைனஸ் :- 

ஆம்லா அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல்லில் வெளுத்துக் கட்டிய கையோடு சமீபத்தில் அரை சதமும் அடித்திருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய வெகு  சில அயல்நாட்டு வீரர்களில் ஆம்லாவும் ஒருவர். மெதுவாக வரும் பந்துகளை கையாளுவதில் தேர்ந்தவர். அவர் 25 - 30 ஓவர்கள் வரை களத்தில் இருப்பது அவசியம். 

டீகாக் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டிகளில் சத்தமில்லாமல் ஜாம்பவான்களின் சாதனையை உடைத்து வருகிறார். சுழற்பந்தை  பயப்படாமல் பெரிய ஷாட் ஆடக் கூடிய வீரர். பேட்டிங் பிட்ச்களில் இவர் நின்றால் ரன் ரேட் ஏழுக்கு கீழ் குறையாது. 

ஃபாப் டு பிளசிஸ் பொறுப்பான பேட்ஸ்மேன். அவர் இன்னமும் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. தென் ஆப்ரிக்கா அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் தான் டெஸ்ட் தொடர் ஆடவிருக்கிறது. ஆகவே இப்போதே பார்முக்கு வரவேண்டியது டெஸ்ட் கேப்டனுக்கு அவசியம். சுழற்பந்தை நன்றாக கையாளக் கூடியவர்.  லீக் சுற்றில் இவர் மேட்ச் வின்னராக திகழ வாய்ப்பு அதிகம். 

ஏபி டிவில்லியர்ஸ் அபாயகரமான வீரர். நம்பர் 1 பேட்ஸ்மேன். ஆனால் சமீப காலங்களாக பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு நீண்ட இன்னிங்ஸ் ஆடுவதில் சற்றே தள்ளாட்டம் தெரிகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 18 போட்டிகளில் பேட்டிங் பிடித்தும் ஒரு முறை சதம் அடிக்க வில்லை. அதே சமயம் 2013 - 2015 காலகட்டத்தில் இவர் 10 சதங்களை  அடித்திருந்தார். சமீப காலங்களாக இவரது ஸ்ட்ரைக்ரேட்டும் சற்றே குறைய ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் 15 இன்னிங்ஸ்களில் இவர் ஒரு முறை கூட சதமடிக்க வில்லை. மூன்று முறை அரை சதம் எடுத்திருக்கிறார். இங்கிலாந்தில்  ஒருநாள் போட்டி சராசரி 37.46 மட்டுமே. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மண்ணில் எல்லாம் வியக்கத்தக்க சராசரி வைத்திருக்கும் டி வில்லியர்ஸ் இங்கிலாந்து மண்ணில் அடக்கிவாசிக்கிறார். 

ஏ பி டியிடம் சுட்டிக்காட்ட ஒரே ஒரு குறை என்றால் அது இங்கிலாந்து மண்ணில் அவர் இன்னமும் பெரிய இன்னிங்ஸ்  ஆடவில்லை என்பதே. பொதுவாக வேகப்பந்துகளையும்  சரி, மெதுவாக வரும் பந்துகளையும் சரி அபாரமாக கையாளும் திறன் பெற்றவர் ஏபிடி. ஆனால், நன்றாக ஸ்விங் ஆகும் பந்துகளில் அவசரப்பட்டு ஷாட் ஆட முயன்று அவுட்டாகிவிடுகிறார். ஆமீர், புவனேஷ்வர் குமார் என லீக்கிலேயே சவாலான பவுலர்கள் காத்திருக்கிறார்கள்.  அதே சமயம், டிவில்லியர்ஸ் ஒரு சாம்பியன் பிளேயர். நவீன கிரிக்கெட்டில் புது புது யுக்திகளை கையாளுபவர். ஈரப்பதம் இல்லாத பிட்ச் எனில் இவரிடம் மாட்டும் பவுலர்கள் சின்னாபின்னமாவார்கள். பழைய பன்னீர்செல்வமாக மட்டுமல்ல, இந்த முறை கோப்பையையும் முத்தமிட வேண்டும் என ஆவலுடன் இங்கிலாந்து மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் டிவில்லியர்ஸ். இம்முறை இங்கிலாந்து மண்ணில் வரலாற்றை மாற்றி எழுதுவார் என நம்பலாம். 

தென் ஆப்ரிக்கா அணி

டுமினி கடைசியாக சதம் அடித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதே காலகட்டத்தில் நான்கு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார் . இங்கிலாந்து மண்ணில்  13 இன்னிங்ஸ்களில் இவரது சராசரி வெறும் 17.91 மட்டுமே. அணிக்கு வலு சேர்க்கும் பார்ட் டைம் சுழற்பந்து வீச்சாளர் என்பதன் அடிப்படையிலேயே அணியில் இவரை வைத்திருக்கிறார்கள். டுமினியிடம் நிறைய மைனஸ் இருந்தாலும் மேட்ச் வின்னிங் பிளேயர் என்பது பெரிய பிளஸ். நல்ல ஃபினிஷரும் கூட. எனினும் தொடர்ந்து சொதப்பல் ஆட்டம் ஆடினால் பெஹார்டீன் இவரது இடத்தை பிடிக்கக்கூடும். 

மில்லர் வேகப்பந்து மைதானங்கள் என்றால் கில்லர் பேட்ஸ்மேன். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாகவே ஆடியிருக்கிறார். இந்த தொடரில் இவரது பங்களிப்பு முக்கியமானது. கிறிஸ் மோரிஸ்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு துருப்புச் சீட்டு. ஏழாம் நிலையில் களமிறங்கி இவர் வெளுத்ததுக் கட்டினால் தெ.ஆ நிம்மதியுறும். மோரிஸ் பந்துகள் பெரிதாக ஸ்விங் ஆகாது என்பதால் இங்கிலாந்து மண்ணில் இவர் சுமார் பவுலர். வெய்ன் பார்னெல் இங்கிலாந்து மண்ணில் நன்றாக வீசக்கூடியவர். ஆல்ரவுண்டர் எனும் அடிப்படையில் இவரை பிளெயிங் லெவனில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு  உரிய நியாயம் செய்ய வேண்டும். மோரிஸ் பேட்டிங்கில் வேகப்பந்தை நன்றாக கையாளக்கூடியவர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார் ஏபிடி. 

ரபாடா ... இந்த இளம் வீரரிடம் இருக்கும் எனெர்ஜி ப்ப்பா. ஸ்விங், லெங்த், பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என எல்லா  அஸ்திரங்களையும் சரியாக பயன்படுத்தத் தெரிந்தவர். மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், பார்னெல் என சீனியர் வீரர்கள் அணியில் இருந்தாலும் இப்போதைய தென் ஆப்ரிக்க அணியில் டாப் பவுலர் இவர் தான். இந்த இளம் வயதிலேயே ஓய்வின்றி,  எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் சமாளிக்கிறார். இவர் முழு பார்மில் ஆடினால் இவர் தான் மேட்ச் வின்னர்.

ஃபெலுக்வாயோ கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய நல்ல ஆல்ரவுண்டர். இவருக்கு இன்னமும் பெரிய அளவில் வாய்ப்புகள் கைகூடவில்லை. இந்த சீசனில் இவர் சாதிக்க வேண்டும். டுவைன் ப்ரீடோரியஸ் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சர்யமான விஷயம். அதிகளவில்  ரன்களை விட்டுத்தரமாட்டார். சிக்கனமான பவுலர் என்பது பிளஸ். இவர் நல்ல ஆல்ரவுண்டரும் கூட. மோரிஸை நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இவர் அணியில் இடம்பெறுவார். 

மோர்னே மோர்கல் சமீப காலங்களில் பெரிதாக சாதிக்க வில்லை. எனினும் இவரது அனுபவம் அணிக்குத் தேவை. இம்ரான் தாகீர் மேட்ச் வின்னிங் பவுலர். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனையும் அவுட் ஆக்கும்  திறன் படைத்தவர். நல்ல ஃபார்மில் இருக்கிறார். இவர் விக்கெட்டுகளை வீழ்த்த ஆரம்பித்தால் தென் ஆப்ரிக்கா எளிதில் வெற்றிக்கோட்டைத் தொடும். 

South Africa

 

ஏகப்பட்ட சாதகமான விஷயங்கள் தென் ஆப்ரிக்க அணியில் உள்ளன. எனினும் முக்கியமான போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது தென் ஆப்ரிக்காவின் மைனஸ். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். சேஸிங்கில் இன்னமும் தென் ஆப்ரிக்க சிறந்த அணியாகவே விளங்குகிறது. டுமினி, மில்லர், மோரிஸ் இணை நன்றாக ஆடினால் சேஸிங்கில் பல சாதனைகளை புரியும் இந்த அணி. 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இம்முறை மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என நம்புவோம். சாம்பியன்ஸ் டிராபியில் இந்த முறை சாம்பியன் ஆவதற்கு தென் ஆப்ரிக்காவுக்கே வாய்ப்பு அதிகம். ஆனால் அரையிறுதியில் என்ன செய்யப்போகிறது என்பது முக்கியமான கேள்வி. அந்தத் தடையை முதலில் உடைக்க வேண்டும் டிவில்லியர்ஸ் அணி.

http://www.vikatan.com/news/sports/90768-will-de-villiers-co-win-the-champions-trophy.html

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: ‘பி’ பிரிவு அணிகள் கண்ணோட்டம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்து ஒரு கண்ணோட்டம்.

 
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: ‘பி’ பிரிவு அணிகள் கண்ணோட்டம்
 
மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

இந்தப்போட்டியில் தரவரிசையில் ‘டாப் 8-ல்’ உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளும் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா:

201705301518541478_icc._L_styvpf.gif

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.
2013-ல் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு முன்பு 2002-ல் இலங்கையுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது. தற்போது 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றிய பிறகு இந்திய அணி தற்போது தான் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அனுபவமும், இளமையும் கொண்ட அணி சமபலத்துடன் திகழ்கிறது. மிடில் ஆர்டர் வரிசை நிலையுடன் காணப்படுகிறது. டோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தை மாற்றக்கூடிய அதிரடி வீரர்கள் ஆவார்கள்.

கேப்டன் விராட் கோலியும், வேகப்பந்து வீரர் பும்ராவும் அணியின் துருப்பு சீட்டாக திகழ்வார்கள். முகமது ஷமியின் வருகை பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

அணி விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ரகானே, யுவராஜ் சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், பும்ரா.

தென்னாப்பிரிக்கா:

201705301518541478_cudm7mcn._L_styvpf.gi

உலக தரவரிசையில் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா முக்கியமான ஐ.சி.சி. போட்டிகளில் ‘நாக்அவுட்’டில் தோல்வி அடைந்துவிடும். 1992-ம் ஆண்டில் இருந்து ஐ.சி.சி.யின் 20 போட்டியில் 11-ல் அரையிறுதிக்கு நுழைந்து இருந்தது.

1998-ம் ஆண்டு நடந்த அறிமுக சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்றது. அதன்பிறகு அந்த அணி இறுதிப்போட்டியை எட்டியது கிடையாது. தற்போதைய தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கேப்டன் டிவில்லியர்ஸ், வேகப்பந்து வீரர் ரபடா ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டுகள். 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருந்தது

அணி விவரம்:-

ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டிகாக், டு பிளிஸ்சிஸ், டுமினி, மில்லர், பெகருதீன், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாகீர், கேசவ் மகராஜ், மார்னே மார்கல், பர்னல், பிரிஸ்டோரியஸ், ரபடா, பெகுல்வாயோ.

பாகிஸ்தான்:

201705301518541478_bmcm2nnv._L_styvpf.gi

பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு கூட நுழைந்தது இல்லை. 3 தடவை அரையிறுதி வரை வந்து தோற்று இருக்கிறது. தற்போது உள்ள பாகிஸ்தான் பேட்டிங்கில் பலம் பெற்று இருக்கிறது. கேப்டன் சர்பிராஸ் அகமது, பாபர் ஆசம் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

அரையிறுதியில் நுழைவது சவாலானதே. கடந்த முறை அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் இந்த போட்டியில் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு நுழைவதை இலக்காக கொண்டுள்ளது.

அணி விவரம்:-

சர்பிராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, ஹபீஸ் அகமது, பாபர் ஆசம், ஹாரிஸ் சோகைல், இமாத் ஹசிம், ஜூனைத்கான், பகீம் அஸ்ரப், பக்கர் ஜமான், ஹசன் அலி, முகமது அமீர், சோயிப் மாலிக், சதாப்கான், வகாப் ரியாஸ்.

இலங்கை:

201705301518541478_mwlqqip7._L_styvpf.gi

ஜெயவர்த்தனே, சங்ககரா, தில்சான் ஓய்வு பிறகு இலங்கை திணறியே வருகிறது. கடந்த 1 ஆண்டில் 25 ஒருநாள் ஆட்டத்தில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் தான் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.

மலிங்கா அணிக்கு திரும்பி இருப்பது மட்டுமே ஆறுதலான விஷயமாகும். கேப்டன் மேத்யூஸ், சண்டிமால், குஷால் பெரைரா ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள். அரையிறுதியில் நுழைவது சவாலானதே.

2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது.

அணி விவரம்:-

மேத்யூஸ் (கேப்டன்), உபுல் தரங்கா, சன்டிமால், நிரோஷன் டிக்வெலா, நுவன் பிரதீப், குணரத்னே, கபுகேந்திரா, குலசேகரா, லக்மல், மலிங்கா, குஷால், மெண்டீஸ், குஷால் பெரேரா, திசாரா பெரேரா, பிரசன்னா, லக்சன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/30151850/1088057/ICC-Champions-Trophy-B-Division-teams-overview.vpf

  • தொடங்கியவர்

தற்சமயம் நடைபெற்று கொண்டு  இருக்கும் பயிற்சி ஆட்டங்களின் ஸ்கோர்

Sri Lanka 188/2 (27.4 ov)
New Zealand
 
India 183/3 (32.0 ov)
Bangladesh
  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டம்: வங்காள தேசத்தை 84 ரன்னில் சுருட்டி இந்தியா அசத்தல் வெற்றி

பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 84 ரன்னில் சுருட்டி இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
பயிற்சி ஆட்டம்: வங்காள தேசத்தை 84 ரன்னில் சுருட்டி இந்தியா அசத்தல் வெற்றி
 
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காள தேசத்தை இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தவான் (60), தினேஷ் கார்த்திக் (94), ஹர்திக் பாண்டியா (80) மற்றும் ஜடேஜா (32) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் டோனி ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.

பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள். சர்கர் 2 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த சபீர் ரஹ்மான் ரன்ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

இந்திய வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காள தேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து  வெளியேறிக்கொண்டே இருந்தனர்.

201705302216109782_TeamIndia11111-s._L_s

முஷ்பிகுர் ரஹிம் (13), ஷாகிப் அல் ஹசன் (7), மெஹ்முதுல்லா (0), மொசாடெக் ஹொசைன் (0), மெஹெதி ஹசன் மிராஸ் (24), சன்சாமுல் இஸ்லாம் (18), ருபெல் ஹொசனை் (0) ரன்னிலும் வெளியேற வங்காள தேசம் 23.5 ஓவரிலேயே 84 ரன்னில் ஆல்அவுட் ஆகி தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 4-ந்தேதி எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/30221607/1088127/Warm-Up-india-beats-bangladesh-by-240-runs.vpf

  • தொடங்கியவர்
Sri Lanka 356/8 (50.0 ov)
New Zealand 359/4 (46.1 ov)
New Zealand won by 6 wickets (with 23 balls remaining)
 
   
  • தொடங்கியவர்
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் – ஒரு கண்ணோட்டம்
 
18664206_1545814232158803_68487278217826

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் – ஒரு கண்ணோட்டம்

,
 
 

நாளுக்கு நாள் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை நெருங்கி வருகின்ற சூழ்நிலையில், யார் கிண்ணத்தைக் கைப்பற்ற போகின்றார்கள், யார் சிறந்த வீரர் போன்ற பல சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்ற இந்த நிலையில், ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி வரலாற்றில் நடந்துள்ள சில சுவாரஷ்யமான தகவல்கள் பற்றி பார்ப்போம்.

 

இம்முறை பங்குபற்றவுள்ள எட்டு நாடுகளும், 2015ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அன்று, ஐ.சி.சி தரப்படுத்தலுக்கு அமைவாக தகுதி பெற்றுள்ளன. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று நடப்பு சம்பியனாக இம்முறை களமிறங்கவுள்ளது.

அந்த வகையில், உலகிலுள்ள சிறந்த எட்டு கிரிக்கெட் விளையாடும் நாடுகள் கிண்ணத்தை வெற்றிகொள்ள ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் உலக தொடர்களில், இரண்டாவது மாபெரும் 50 ஓவர்கள் போட்டியாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் உள்ளது. மேலும், இந்த மினி உலக கிண்ணப் போட்டியானது குறித்த நாடுகள் வெற்றியீட்டி தமது அணிகளின் பலத்தை நிரூபிக்கும் களமாக கணிக்கப்படுகின்றது.

அந்தவகையில், கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அணிகள் எவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளன என்று பார்ப்போம்.

1. அதிகமுறை கிண்ணத்தை கைப்பற்றிய அணிகள்

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இரண்டு முறைகள் கிண்ணத்தை சுவீகரித்து தமது பலத்தை நிரூபித்த அணிகளாக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணியும் 2002 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை வெற்றியீட்டி இந்திய அணியும் தமது பலத்தை நிரூபித்தன.

2. அதிகமுறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணி

கிண்ணத்தை வெற்றியீட்டாமல் அதிகளவான இறுதிப் போட்டிகளில், பங்குபற்றிய அணியாக இங்கிலாந்து அணி உள்ளது. 2004 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவ்வணிக்கு கிண்ணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

3. சம்பியன்ஸ் கிண்ணத்தை மட்டும் கைப்பற்றிய அணி

வலிமை மிக்க அணியான தென்னாபிரிக்க அணி, உலக கிண்ண போட்டிகளின் போது பல தடவைகள் முக்கிய தருணங்களில் கோட்டை விட்டு தொடரிலிருந்து வெளியேறுவது வழக்கமானது. எனினும், முதல் தடவையாக பங்களாதேஷில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் கிண்ணத்தை கைப்பற்றியது. இதுவே, தென்னாபிரிக்கா அணி சர்வதேச சம்பியன்ஷிப் மட்டத்தில் கைப்பற்றியுள்ள ஒரேயொரு கிண்ணமாகும்.

4. 1998ஆம் ஆண்டு முதன் முதலாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றது.

5. 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு இலங்கை மற்றும் இந்திய அணிகள் கூட்டு சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

6. பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற முதலாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி நொக் அவுட் போட்டியாகவே நடைபெற்றது. அதாவது ஒரு அணிக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

7. மொத்தமாக 13 அணிகள் இதுவரை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு தடவையாவது தகுதி பெற்று போட்டியிட்டுள்ளன. அந்தவகையில், ஏழு அணிகள் எல்லா இறுதி போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ள அதேநேரம் அதில் 6 அணிகள் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

8. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வலிமை மிக்க அணியான மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.  

9. 1998ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக 2009ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டு தென்னாபிரிக்க நாட்டில் நடைபெற்றது. அன்றிலிருந்து உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளைப் போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

10. 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக பங்களாதேஷ் அணி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுகின்றது.

11 டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து இதுவரை கிண்ணத்தைக் கைப்பற்றாத அணிகளாக இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் காணப்படுகின்றன.

முன்னர் ஐ.சி.சி நொக் அவுட் போட்டிகள் என்று பெயரிடப்பட்ட இந்த போட்டித் தொடர் 2002ஆம் ஆண்டு தொடக்கம் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் என பெயர் மாற்றம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி தக்க வைக்கும்: சங்கக்கரா

 

‘சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி தக்க வைக்கும்’ என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

 
சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி தக்க வைக்கும்: சங்கக்கரா
 
லண்டன் :

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை (1-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் ‘டாப்-8’ அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் 4-ந் தேதி பாகிஸ்தானையும், 8-ந் தேதி இலங்கையையும், 11-ந் தேதி தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

201705311034026134_Sangakkara._L_styvpf.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆசிய மண்டலத்தை சேர்ந்த 4 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய மண்டலத்தில் இந்தியா தான் முன்னணி அணியாக விளங்குகிறது. இந்திய அணி 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இந்த ஆண்டும் இந்த கோப்பையை வெல்லும் ஆற்றல் அந்த அணிக்கு உள்ளது.

உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி வலுவானதாகும். அணி வீரர்கள் கலவை நேர்த்தியாக உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு உண்மையிலேயே பலம் பொருந்தியதாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் போட்டியில் குறிப்பிடத்தக்க வீரர்கள். ஐ.பி.எல். போட்டி தொடரில் ஏமாற்றம் அளித்த விராட்கோலி நிச்சயம் நல்ல நிலைக்கு திரும்புவார். இந்திய அணியின் ஆடும் லெவன் வீரர்கள் தேர்வு மட்டும் தான் லேசான கவலைக்குரிய விஷயமாகும். இந்த விஷயத்தில் அவர்கள் பழமைவாதத்தை கடைப்பிடிக்கக்கூடியவர்கள்.

இறுதிப்போட்டிக்கு எந்த அணி முன்னேறும்? என்பதை கணிப்பது கடினமான விஷயமாகும். ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று நான் கருதுகிறேன். ஒரு கால கட்டத்தில் ஒன்றிரண்டு அணிகள் மட்டுமே ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தின.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல அணிகள் வியத்தகு முன்னேற்றம் கண்டு இருக்கின்றன. தற்போது 4 முதல் 5 அணிகள் சமபலம் வாய்ந்ததாக விளங்குகின்றன. பெரிய போட்டியில் வெல்வது எல்லா அணிகளின் நோக்கமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் சில உலக தரம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/31103358/1088188/Indian-team-will-retain-the-champions-trophy-Sangakkara.vpf

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி

பர்மிங்காமில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி
 
பர்மிங்காம் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் விதமாக பர்மிங்காமில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 110 ரன்னும், குசல் மென்டிஸ் 57 ரன்னும், சண்டிமால் 55 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி தலா 2 விக்கெட்டும், ஆடம் மில்னே, மெக்லெனஹான், கிரான்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 116 ரன்னிலும் (76 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன்), கனே வில்லியம்சன் 88 ரன்னிலும் (60 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்) ஓய்வு பெற்றனர். இலங்கை அணி தரப்பில் பிரசன்னா 2 விக்கெட் வீழ்த்தினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/31093715/1088170/Sri-Lanka-against-Training-Cricket-New-Zealand-win.vpf

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

 
 
சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்
 
லண்டன்:

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதுவரை 7 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்றுள்ளன.முதல் 2 போட்டியும் ஐ.சி.சி. நாக்அவுட் டிராபி என்று அழைக்கப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அதிகபட்சமாக தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்திய அணி 2002-ல் இலங்கையுடன் இணைந்து கூட்டாக வென்றது.

தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தலா 1 முறை வென்றன. தொடக்கத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறையும், பின்னர் 3 ஆண்டுக்கு ஒரு முறையும், அதை தொடர்ந்து 4 ஆண்டுக்கு ஒரு முறையும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது. ஜூன் 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
 
201705311043567471_dencd1p8._L_styvpf.gi


இதில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கின் படி தரவரிசையில் உள்ள ‘டாப் 8’ நாடுகள் தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ் 9-வது வரிசையில் இருந்ததால் வாய்ப்பை இழந்தது. வங்காளதேசம் அணி அந்த அணியை பின்னுக்கு தள்ளி வாய்ப்பை பெற்றது. 2006-க்கு பிறகு வங்காளதேசம் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு திரும்பி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம்:-

‘ஏ’ பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), நியூசிலாந்து, வங்காளதேசம்.

‘பி’பிரிவு: இந்தியா (நடப்பு சாம்பியன்ஸ்), தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

12-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. 13-ந்தேதி ஓய்வு நாளாகும். 14-ந்தேதி முதல் அரை இறுதியும், 15-ந்தேதி 2-வது அரை இறுதியும் நடைபெறும். 16 மற்றும் 17-ந்தேதி ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி 18-ந்தேதி நடக்கிறது.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
 
201705311043567471_iecf3pu8._L_styvpf.gi


இந்தப்போட்டியில் விளையாடும் அணிகள் இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் தான் கோப்பையை வெல்லவில்லை. இங்கிலாந்து 2 முறை இறுதிப் போட்டியில் தோற்று இருக்கிறது. இதனால் அந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் நியூசிலாந்து, வங்காளதேசத்தையும் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

ஏற்கனவே வென்ற அணி கோப்பையை வெல்லுமா? புதிய அணி பட்டம் பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/31104352/1088192/ICCChampions-Trophy-England-vs-Bangladesh-match-tomorrow.vpf

  • தொடங்கியவர்

தோனி - யுவராஜ் - கோலி கூட்டணி, இந்தியாவை சாம்பியன் ஆக்குமா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர்

 
 

champions trophy

 

தோனிக்கும் யுவராஜுக்கும் அநேகமாக இதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர். விராட் கோலிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் முதல் ஐசிசி தொடர். கோப்பையை வென்று கரியரை நிறைவு செய்ய வேண்டும் என சிலருக்கு ஆசை, கோப்பையை வென்று சரித்திரத்தில் தனது பெயரை பதியவைக்க வேண்டும் என்ற கோலிக்கு ஆசை . ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், பும்ரா புதிய கனவுகளோடு இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார்கள். அணியில் இடம்பெற்றிருக்கும் 15 பேருக்கு மட்டுல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை  தக்கவைக்க வேண்டும் என்பது ஆசை. நிச்சயமாக  அது பேராசையல்ல. 

Virat, Dhoni, yuvraj

இந்தியா இடம்பெற்றிருக்கும் பிரிவில் இரண்டு ஆசிய அணிகளும், தென் ஆப்ரிக்காவும் இடம்பெற்றுள்ளன. சூப்பர் சீனியர்கள், சீனியர்கள், ஜுனியர்கள் என  செம காம்போவுடன் களமிறங்குகிறது இந்திய அணி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்குச் சவால் என்ன? மீண்டும் சாம்பியன் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிளஸ் - மைனஸ்,  சாம்பியன்ஸ் டிராபியில் கடந்துவந்த பாதை என பல விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 

வரலாறு என்ன சொல்கிறது ?

1998-ம் ஆண்டு நடந்த முதல் நாக் அவுட் டிராபியில் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இந்திய அணி. காலிறுதியில் ஆஸியுடன் மோதியது. எட்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, சச்சினும்  டிராவிடும் இணைந்தார்கள். அதன் பின்னர் சோர்ந்தார்கள் ஆஸி பவுலர்கள். சச்சின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் ஆடினார். ஆஸ்திரேலிய  ஃபீல்டர்களை மைதானம் முழுவதும் ஓட விட்டார். அவ்வப்போது பந்துகளை பார்வையாளர்களிடமும் நேர்த்தியாக அனுப்பினார். மைதானமே அதிர்ந்தது. டேமியன் பிளமிங், காஸ்பிரோவிச், மார்க் வாஹ், பிராட் யங், டேரன் லீமான் என பந்துவீச வந்தவர்களையெல்லாம் புரட்டி எடுத்தார் சச்சின். அவர் களத்தில் இருந்தபோது ஸ்கோர் 325 ரன்களைத் தாண்டும் என எதிர்பாக்கப்பட்டது. 46 வது ஓவரில் தேவையே இல்லாமல் நன்றாக ஆடிக் கொண்டிருந்த சச்சினும், ஜடேஜாவும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். டெண்டுல்கர் 128 பந்தில் 141 ரன்கள் எடுத்தார். இந்தியா 307 ரன்கள் குவித்தது. 

சேஸிங்கில் மார்க் வாஹ், கில்கிறிஸ்ட், பாண்டிங் என எல்லோரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 29.2 ஓவரில் 172/4 என இருந்தது ஆஸியின் ஸ்கோர். 'சச்சின் சதம் வீண் தானா' என கன்னத்தில் கை வைத்தனர் ரசிகர்கள். அன்றைய தினம் சச்சின் பந்து வீச்சிலும் கலக்கினார். அவர் மட்டும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்குச் சுருட்டினார். 'ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோற்கவில்லை, சச்சினிடம் மீண்டும் ஒருமுறை தோற்றது' என எழுதின ஊடகங்கள். 

சச்சின் டெண்டுல்கர்

முதல் நாக் அவுட் டிராபியை வெல்ல வேண்டும் என நினைத்த ஆஸியின் கனவுக்கு முடிவுரை எழுதிவிட்டு அரையிறுதியில் நுழைந்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்தித்தது. முதலில் பேட் பிடித்த இந்திய அணி கங்குலி மற்றும் ராபின் சிங்கின் பொறுப்பான அரை சதங்களால் 242 ரன்களை குவித்தது. சேஸிங்கில் பட்டையை கிளப்பியது வெ.இ. சீனியர் பவுலர்கள் சொதப்ப சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கை கொடுத்தார். வாலெஸ் மற்றும் சந்திரபாலின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் சச்சினைத் தவிர வேறு யாரும் ஒழுங்காக பந்து வீசாததால் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது  இந்தியா. 

இரண்டாவது நாக் அவுட் டிராபி கோப்பை கென்யாவில் நடைபெற்றது. அப்போது இந்திய அணிக்கு சோக காலம். தரவரிசையில் மிக மோசமான நிலையில் இருந்ததால் தகுதிச் சுற்றி விளையாடி வென்றால் தான் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமுடியும் என அறிவித்தது ஐசிசி. தொடரை நடத்திய கென்யாவோடு தகுதிச் சுற்றில் ஆடியது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று நாக்அவுட் சுற்றில் நுழைந்தது இந்திய அணி. 

முதலில் பேட்டிங் பிடித்தது இந்தியா. மெக்ராத் பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸருக்கும்  அனுப்பிக் கொண்டிருந்த சச்சினை வீழ்த்தினார் பிரட் லீ.  சச்சினை வீழ்த்தியாகிற்று இனி மேட்ச் நமக்குத் தான் என நினைத்தது ஆஸி. ஆனால் அப்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 18 வயது பையன் ஆஸியின் வேகப்பந்துகளை  உரித்தெடுத்தான். ஸ்டீவ் வாகின் எந்த திட்டமும் அந்த இளங்கன்றிடம்  எடுபடவில்லை. அந்த பையன்  84 ரன்களை குவித்தான். 266 ரன்களை துரத்திய ஆஸி 245 ரன்களை மட்டுமே எடுத்தது.  அறிமுகமாகி பேட்டிங் பிடித்த முதல் போட்டியிலேயே அசத்திய அந்த இளைஞனுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது கிடைத்தது. ஆஸ்திரேலியாவின் அரையிறுதி  கனவை மீண்டும் கால் இறுதியிலேயே காலி செய்தது இந்தியா. அந்த போட்டிக்கு பின்னர் பதினோரு வருடங்கள் கடந்து நடந்த உலகக் கோப்பையில்,  மீண்டும் அதே இளைஞன் காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் கனவை குழி தோண்டி புதைத்தான். அந்த இளைஞன் இப்போது சூப்பர் சீனியராக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடுகிறார். சரியாக யூகித்துவிட்டீர்கள் தானே? ஆம், அது யுவராஜ் சிங். 

அரையிறுதியில் வலிமையான தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது இந்திய அணி. கங்குலி சதம், யுவராஜின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றின் பலனால் 295 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்கா 200 ரன்களில் சுருண்டது. ஜான்டி ரோட்ஸின் விக்கெட்டை கைப்பற்றினார் யுவராஜ் சிங். இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. கங்குலியும் - டெண்டுல்கரும் கூட்டணி போட்டு அசத்தலாக ஆடினார்கள். 27 வது ஓவரில் முதல் விக்கெட்டாக விழுந்தார் சச்சின். அவர் 69 ரன்கள் எடுத்தார். சச்சின் அவுட் ஆகும் போது ஸ்கோர் 141. இந்தியா 300 ரன்களைத் தாண்டும் என நினைத்த போது அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். கங்குலி மட்டும் சதம் அடித்தார். நியூஸிக்கு இலக்கு 266 ரன்கள். இந்தியா முதல் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து  கைப்பற்றியது. ஆனால் கிறிஸ் கெயின்ஸ்  தனி ஆளாக நின்று சதமடித்து அணிக்கு கோப்பை பெற்றுத் தந்தார். தகுதிச்சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்து இறுதிப்போட்டி வரை வந்த மகிழ்ச்சியோடு ஊருக்கு புறப்பட்டது இந்தியா.

2002 - சாம்பியன்

முதல் போட்டியில் ஜிம்பாப்வேயுடன் ஆடியது. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா. சேவாக் பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருக்க மறுமுனையில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை  அள்ளினார் ஜிம்பாப்வே பவுலர் ஹோண்டோ. ஒரு கட்டத்தில் 87/5 என நிலை குலைந்தது. பின்னர்  டிராவிடும் கைஃபும் இணைந்து அணியைக் காப்பாற்றினார்கள். கைஃப் சதத்தால் 288 ரன்கள் குவித்தது இந்திய அணி . ஜாகீர் கான் ஒரு பக்கம் விக்கெட்டுகளை வீழ்த்த, ஆண்டி பிளவர் வெளுத்துக் கட்டினார். அவர் களத்தில் இருக்கும் வரை இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே போனது. 145 ரன்கள் எடுத்த ஆண்டி பிளவரின் விக்கெட்டை வீழ்த்தினார் சச்சின் டெண்டுல்கர். அந்த விக்கெட் விழுந்ததும்  போட்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்தியா, 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இரண்டாவது போட்டியில் 270 ரன்கள் இலக்கு வைத்தது இங்கிலாந்து. சேவாக்கும் கங்குலியும் தொடக்க  வீரர்களாக களமிறங்கினார். இன்றளவும் இந்தியாவின் சிறந்த சேஸிங்கில் இதுவும் முக்கியமான போட்டி. சேவாக்கும், கங்குலியும் நாசர் ஹுசைனுக்கு கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு வெளுத்துத் தள்ளினார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து 33 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்  அடித்தார்கள். 28.4 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 192. அப்போது முதல் விக்கெட்டாக நடையை கட்டினார்  சேவாக். அவர் 104 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.  ஒரு பெரும் மழை ஓய்ந்தது போல இருந்தது கேப்டன் நாசர் ஹுசேனுக்கு. ஆனால் கங்குலி, சேவாக் விட்ட இடத்தில் தொடர்ந்தார். 39.3 ஓவரில் சேஸிங்கை முடித்து அரை இறுதியில் கால் வைத்தது இந்தியா. கங்குலி 117 ரன்கள் எடுத்தார். 

இங்கிலாந்துக்கு எதிராக எப்படி  சேஸிங் செய்ய வேண்டும் என மற்ற அணிகளுக்கு சாம்பிள் காட்டிய இந்தியா,  அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக  சேஸிங்கில் எப்படி இலக்கை காப்பாற்ற வேண்டும் என முன்னுதாரணமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 261 ரன்கள் குவித்தது. ஸ்மித் நான்கு ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் கிப்ஸும் காலீசும் இணைந்து இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தார்கள். குறிப்பாக கிப்ஸ் பொளந்து கட்டினார். இந்திய ரசிகர்கள் பொறுமையிழந்து டிவியை ஆஃப் செய்தார்கள். 37 வது ஓவரில் தென் ஆப்ரிக்காவின் ஸ்கோர் 192/1. இன்னும் 13 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. கிப்ஸ் காயம் காரணமாக போட்டியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 39 வது ஓவரை வீச வந்தார் ஹர்பஜன் சிங். ஒரே ஓவரில் ஜாண்டி ரோட்ஸ்,  டிப்பன்னர் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார். தடாலென மேட்ச் மாறியது. கங்குலி இறுக்கிப்பிடிக்க ஆரம்பித்தார். வேகப்பந்தை நிறுத்திவிட்டு சேவாக்கை அழைத்தார். அதன் பின்னர் கும்ப்ளேவை கூப்பிட்டார். டெண்டுல்கரை வைத்து சுழல் வலை பின்னினார். இதனால், காலிஸ் களத்தில் இருந்தாலும் பெரிய ஷாட் ஆட வில்லை. பவுச்சரும் ஒரு கட்டத்தில் அவுட் ஆக, காலிஸ், குளூஸ்னர் இணைந்தார்கள். கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 39 ரன்கள் தான். கையில் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை கங்குலி. 

46 வது ஓவரை  சேவாக்கிடம் தந்தார். மூன்று ரன்கள் மட்டுமே விட்டுத்தந்தார் அவர். 47 வது ஓவரை டெண்டுல்கரிடம் ஒப்படைத்தார். அவரது ஓவரில் 9 ரன்கள் எடுத்தது தெ.ஆ. சேவாக்கிடம் 48 வது ஓவரை தந்தார். அவர் ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்தார். அடுத்த ஓவரை புத்திசாலித்தனமாக ஜாகீர் கானிடம் கொடுத்தார். மிக அருமையாக வீசிய ஜாகீர் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார். அந்த ஓவரில் ஐந்து பந்துகளை சந்தித்த குளூஸ்னர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேட்ச் இப்போது இந்தியாவின் கையில். கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது தெ.ஆ. 

சேவாக்கிடம் பந்தைத் தந்தார் கங்குலி. முதல் பந்தில் சிக்ஸர் வைத்தார் காலிஸ். பதறினர் இந்திய ரசிகர்கள். அடுத்த பந்திலேயே காலிஸ் அவுட். குளூஸ்னருக்கு சேவாக் பந்தை எப்படி கையாள வேண்டுமென்றே தெரியவில்லை. அடுத்த நான்கு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்த கையோடு கடைசி பந்தில் அவுட். 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதியில் நுழைந்தது இந்தியா. ஒரு அணி எப்படி மீண்டு வர வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த மேட்ச். கங்குலிக்கு சல்யூட்.

இலங்கையுடனான இறுதிப்போட்டி மழை காரணமாக இரண்டு முறை நடந்தது. இரண்டு நாட்களிலும் இந்தியாவின் பேட்டிங்கின் போது மழை பெய்யவே ஆட்டம் கைவிடப்பட்டு கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

2004 : பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா 

கென்யா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றன. டெண்டுல்கர் ஆட வில்லை. கென்யாவை எளிதில் வீழ்த்தியது இந்தியா. பர்மிங்ஹாமில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்தது இந்தியா. 73/5 என தள்ளாட்டம் கண்ட அணியை டிராவிடும், அகர்கரும் 200 ரன்கள் வரை அழைத்துச் சென்றார்கள். 2003 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்றதால் உண்டான காயம் ஆறாமல் இருந்தது. அதற்கு இந்த மினி உலகக் கோப்பையில் மருந்து போட்டது இன்சமாம் அணி. 27/3 என லேசாக ஆட்டங்கண்டாலும் இன்சமாம், யூசுப் யுஹானா  இணை பொறுப்பாக ஆடியது.  ரன் ரேட் எகிறிய சமயத்தில் ஷாஹித் அப்ரிடி 12 பந்துகளில் 2 சிக்ஸர் , ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் குவிக்கவே பாகிஸ்தான் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

2006 : உள்ளூரில் மோசமான ஆட்டம் 

ஐந்தாவது சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடந்தது. உள்ளூரில் நடக்கும் தொடர் என்பதால் இந்தியா சாம்பியன் ஆகும் என எதிர்பார்ப்பு இருந்தது. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இருந்தன. 

இந்திய அணி டிராவிட் தலைமையில் களமிறங்கியது. கங்குலி  அணியில் இல்லை. ஜாகீர்கான், கும்பிளேவும் சேர்க்கப்படவில்லை. பேட்டிங்கில் பலமாகவும், பவுலிங்கில் படு சுமாராகவும் இருந்தது அணிச் சேர்க்கை. 

முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது. அப்போதைய இங்கிலாந்து அணி மிக வலுவானது. அந்த அணியை 125 ரன்களில் சுருட்டியது. முனாப் படேல், சரத்  பொவார் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர் . டெண்டுல்கர் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்தது விழுந்தாலும் யுவராஜ் அணியை காப்பாற்றி கரை சேர்த்தார். நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. 

வெஸ்ட் இண்டீசுடனான போட்டியில் டிராவிட் 49 ரன்களிலும், தோனி 51 ரன்களிலும் ரன் அவுட் ஆயினர். இந்தியா 223 ரன்கள் மட்டுமே எடுத்தது.  பொறுமையாக விளையாடி கடைசி ஓவரில் வென்றது வெஸ்ட் இண்டீஸ். ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் சேவாக் 65 ரன்கள் எடுத்தார். டிராவிட் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா நேர்த்தியாக ஆடி 46 வது ஓவரில் வென்றது. மார்ட்டின் 73 ரன்கள் சேர்த்தார். சொந்த மண்ணில் படு தோல்வி அடைய ரசிகர்கள் சோர்ந்தனர். 

2009 : லீக் சுற்று 

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் , இந்தியா ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன.  யுவராஜ் சிங், ஜாகீர் கான், சேவாக் இல்லாமல் இந்த மினி உலகக்கோப்பையில் ஆடியது.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் போட்டியில் 303 ரன்களை துரத்தி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 128  ரன்கள் எடுத்த சோயிப் மாலிக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஆஸ்திரேலியா இந்தியாவை புரட்டி எடுத்தது. அந்த அணி 42.3 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை வந்தது. அதன் பிறகு ஆட்டம் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் பிரவீன் குமார், ஹர்பஜன் , நெஹ்ராவின் அபார பந்துவீச்சால் 129 ரன்களுக்கு சுருண்டது வெ.இ. இந்த போட்டியில் தோனி இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை எடுத்தார்.  12/2 என லேசாக தடுமாறினாலும் விராட் கோலியின் பொறுப்பான 79 ரன்களால் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் மூன்று புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

Virat Kohli dance

2013 : சாம்பியன் 

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த சேவாக், கம்பீர், சச்சின், ஜாகீர் கான், யுவராஜ், ஹர்பஜன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் படையுடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித், தவான், கோலி, ஜடேஜா,அஷ்வின், புவனேஷ்வர் குமார் என இளம் படையுடன் இங்கிலாந்து வந்திறங்கிய தோனியை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த இளம் படை சாதித்தது. சரித்திரம் படைத்தது. சீனியர்கள் வீரர்களை ஒருங்கிணைத்தும் கோப்பையை வெல்ல முடியும், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியும் கோப்பையை ஜெயிக்க முடியும் என உலகுக்குச் சொன்னார் தோனி. 

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இருந்த பிரிவில் இந்தியாவும் இருந்தது. முதல் போட்டி தென் ஆப்ரிக்காவுடன் நடந்தது. ஸ்டெயின் இல்லாத தென் ஆப்ரிக்க அணியில் மோர்க்கலும் பாதி போட்டியிலேயே காயத்தால் வெளியேற ஷிகர் தவான் வாய்ப்பை பயன்படுத்தி அபாரமான சதம் எடுத்தார். ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 331 ரன்கள் குவித்தது இந்தியா. டிவில்லியர்ஸ் - பீட்டர்சன் கூட்டணி அபாரமாக ஆடியது. பீட்டர்சன் ரன் அவுட் ஆகவே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. அதன் பின்னர் டிவில்லியர்ஸும் 70 ரன்களில் அவுட் ஆனார். அபாயகரமான மில்லரை ரன் எதுவும் எடுக்கும் முன்னரே ரன் அவுட் ஆக்கியது இஷாந்த் சர்மா, ரெய்னா, தோனி கூட்டணி. 154/2 என  இருந்த ஸ்கோர் 188/6  என சரிந்தது. அதன் பின்னர் வந்த மெக்லாரன் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டினார். 61 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு ஆதரவாக மறுமுனையில் எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக ஆடாததால் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது தெ.ஆ. 

வெஸ்ட் இண்டீஸ் 234 ரன்கள் இலக்கு வைத்தது. தவான் மீண்டும் சதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் அரை சதம் எடுத்தார். 40 ஓவர்களில் மேட்சை முடித்தது இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபாரமாக பந்து வீசியது. விளைவு - 165 ரன்களுக்கு ஆல் அவுட். இந்தியா விளையாடும் போது 22 ஓவர்களில் 102 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காரணம்- மழை மற்றும் டக் வொர்த் லூயிஸ் விதி. தவான் மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் குவிக்க, இந்தியா 20 ஓவர்களில் மேட்சை முடித்து  அரை இறுதியில் துண்டை போட்டது. 

அரை இறுதியில் எளிதாக இலங்கையை வென்றது இந்தியா. இஷாந்த் மற்றும் அஷ்வின் அபாரமாக பந்து வீசி தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தவே 181  ரன்களில் சுருண்டது. தோனி நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அசத்தல் ஃபார்மில் இருந்த தவான் 68 ரன்கள் குவித்தார். கோலி 58 ரன்கள் எடுத்தார். 35 ஓவர்களில் எளிதாக  வென்றது இந்தியா. 

இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் நடந்தது. மழையால்  20 ஓவர்கள் கொண்ட போட்டியாக  நடந்தது. தவான் 31, கோலி 43 ரன்கள் எடுத்தனர். கார்த்திக், ரெய்னா, தோனி மூவரும் சேர்ந்து ஏழு ரன்கள் எடுத்தனர். கடைசி  நேரத்தில் ஜடேஜா அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். இந்தியா 129 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் 46/4 என தடுமாறியது இங்கிலாந்து. அதன் பின்னர் இயான் மோர்கன், பொபாரா இணை பொறுப்போடு ஆடியது. 

எளிதாக இங்கிலாந்து வென்று விடும் என எதிர்பார்த்த போது  18 வது ஓவரில் மேஜிக் நிகழ்த்தினார் இஷாந்த் ஷர்மா. அடுத்தடுத்த பந்துகளில் மோர்கனையும், பொபாராவையும் வெளியேற்றினார். தோனி உடனே ஃபீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார். 19 வது ஓவரில் பட்லரை வீழ்த்தினார் ஜடேஜா. சமயோசிதமாக செயல்பட்டு ப்ரெஸ்னனை  ரன் அவுட் செய்தனர் ரோஹித் ஷர்மா மற்றும் தோனி. மேட்ச் இந்தியாவின் பிடியில் வந்தது.  அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஜடேஜா. கடைசி ஓவரை அஷ்வினிடம் ஒப்படைத்தார் தோனி. இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்துகளில் 9 ரன்கள் கொடுத்தார் அஷ்வின். கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற நிலை. டிரெட்வெல் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. குதூகலித்தது இந்தியா. டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தார் தோனி.

இப்போது என்ன நிலைமை ?

கடந்த காலங்களை ஒப்பிடும்போது வலுவான அணியாக இம்முறை களமிறங்குகிறது இந்திய அணி. 2002 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு நிறைய மேட்ச் வின்னர்களை கொண்டிருக்கும் அணி இது தான். அரை இறுதிக்குச் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படும் அணிகளில் இந்தியாவும் ஒன்று. 2015  அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றது இந்திய அணி. அதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு தொடர்களில் விளையாடியிருக்கிறது. இதில் நான்கு தொடர்களில் இந்தியாவுக்கு வெற்றி (அதில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இரண்டு தொடர்களில் வெற்றி) . வலிமையான தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடரை இழந்தது இந்திய  அணி. வங்கதேச மண்ணிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது. நியூசிலாந்தை 3-2 என வீழ்த்தியதும், இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தியதும் மட்டுமே இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா செய்த சாதனை. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் 27 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 15 போட்டிகளில் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோற்றுள்ளது.

இந்தியா

27 போட்டிகளில், 12 முறை முதலில் பேட்டிங்கும், 15 முறை சேஸிங்கிலும் விளையாடியிருக்கிறது. முதலில் பேட் பிடித்த 12 போட்டிகளில் எட்டில் இந்தியாவுக்கு வெற்றி. தோல்வி சதவீதம் - 33.33% . சேஸிங்கில் 15 போட்டிகளில்  ஏழு முறை வெற்றியும் எட்டு முறை தோல்வியையும் சந்தித்திருக்கிறது. சேஸிங்கில் இந்தியாவின் வெற்றி சதவீதம் - 46.67 % . 

முதலில் பேட்டிங் பிடித்த 12 போட்டிகளில் இந்தியாவின் சராசரி ஸ்கோர் - 285.58 . குறைந்த பட்ச ஸ்கோர் - 200, அதிகபட்சம் - 381. நான்கு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறது. 12 போட்டியில் இந்தியா குவித்த ஸ்கோர் விவரம் கீழே.

கடந்த இரண்டு ஆண்டுகளை திருப்பிப் பார்த்தால் பெரிய அணிகளுக்கு எதிராக  விளையாடும் போது சேஸிங்கில் கடுமையாக திணறியிருக்கிறது இந்திய அணி. கோலி மட்டுமே நம்பிக்கையளிக்கும் வீரராக இருக்கிறார். 

மிகப்பெரிய இலக்கை துரத்தும் போது இரண்டு மூன்று பேட்ஸ்மேன்கள் பொறுப்போடு ஆட வேண்டியது அவசியம். ஆனால் கோலிக்குத் தான் எப்போதும் வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கிறது. இப்போது கேப்டன்சி எனும் கூடுதல் வேலைப்பளுவும் அவருக்கு வந்திருக்கிறது.  சமீப இரண்டு ஆண்டுகளில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவருமே பெரிய அளவில் சோபிக்க வில்லை. ரோஹித் மட்டும் பேட்டிங் பிட்ச்களில் அதிரடி காட்டியிருக்கிறார். தொடக்க வீரர்கள்  50 -100 ரன்களைச் சேர்ப்பதற்கே சிரமப்படுவதால் 10 ஓவர்களுக்குள்ளாகவே பெரும்பாலும் களத்துக்குள் வந்துவிடுகிறார் கோலி. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டாப் ஆர்டர் சொதப்பிய போது கை கொடுத்தது மிடில் ஆர்டர் தான். இப்போதைய இந்திய அணியில் யுவராஜ் - தோனி என இரண்டு  சீனியர் பிளேயர் நான்கு, ஐந்து இடங்களில் களமிறங்கவுள்ளதால் சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார் கோலி. ஆறாவதாக களமிறங்கும் கேதர் ஜாதவ் அருமையாக ஆடி வருகிறார். அவரது ஷாட் துல்லியம் வியக்க வைக்கிறது. அவர் அழகான ஷாட்கள் ஆடுவதில்லை. கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் முறையான ஷாட்கள் அடிப்பதில்லை. அவரது பல ஷாட்கள் ஆம்லாவை நினைவு படுத்துவதாக இருக்கின்றன. இவருக்கு எப்படி ஃபீல்டிங் வியூகம் வகுப்பது என குழம்புகிறார்கள் ஃபீல்டர்கள். மந்தமான பிட்ச்களோ, ஸ்விங்க்குக்கு சாதகமான ஆடுகளங்களோ இல்லாமல் உலர் பிட்ச்சாக இருந்தால் கேதர் இந்தியாவுக்கு மேட்ச் வின்னராகவும், நல்ல பினிஷராகவும் திகழுவார் என நம்பலாம். 

இந்தியா

பயிற்சி போட்டிகளில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் இருவரும் சிறப்பாக ஆடியுள்ளார்கள். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் அருமையாக வீசுகிறார்கள். இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் கோலி. அணியில் யாரை சேர்ப்பது யாரை நீக்குவது என முடிவெடுக்க முடியாத அளவுக்கு பலரும் நன்றாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என முடிவெடுத்தால் ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பதா வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும். 

மூன்று வேப்பந்து வீச்சாளர்கள் போதும் என முடிவெடுத்தால் அதில் யாரை வெளியில் உட்கார வைப்பது என்பதிலும் சிக்கல். பும்ரா மட்டும் தான் பயிற்சி போட்டிகளில் சுமாராக பந்து வீசியிருக்கிறார். ஆனால் அவர் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். மேட்ச் வின்னர். புவனேஷ்வர் குமார் நிச்சயம் அணியில் இருப்பார். முகமது ஷமி நீண்ட காலம் கழித்து இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். பயிற்சி போட்டிகளில் அசத்தியிருக்கிறார். கடைசி பத்து ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் பிரதான பவுலர் ஷமி. அவரை வெளியில் உட்கார வைக்க  வைப்பதா வேண்டாமா  என குழப்பத்தில் இருக்கிறார் கோலி.  உமேஷ் யாதவ் சமீப இரண்டு வருடங்களில் இந்தியாவின் மிக முக்கியமான பவுலராக உருவெடுத்திருக்கிறார். நான்கு பேரில் அதிவேகமாக வீசக் கூடியவர் உமேஷ். நன்றாக பவுன்சரும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசுவார். ஆகவே எந்த மூன்று பேரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இருக்கிறது. 

இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து சுமாராக எடுக்கும். கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு இறுதி ஓவர்களில் பந்து வீசியது அஷ்வினும், ஜடேஜாவும் தான். இந்த இரண்டு பவுலர்களும் ஐசிசி தரவரிசையில்  முதலிரண்டு இடத்தில் இருப்பவர்கள்.  ஒரு ஆஃப் ஸ்பின்னர் , ஒரு லெக் ஸ்பின்னர்  என அம்சமாக இருக்கிறது சுழற்பந்து துறை. இவர்களுக்கு கை கொடுக்க யுவராஜ், கேதர் ஜாதவும் இருக்கிறார்கள். இப்போது கோலிக்கு தலைவலி என்னவெனில்  அஷ்வின், ஜடேஜா இருவரையும் அணியில் சேர்ப்பதா அல்லது இருவரில் ஒருவரை நீக்குவதா என்பதுதான். இருவரில் யாரை நீக்குவது என்பது அடுத்த தலைவலி. 

மிடில் ஆர்டரிலும் போட்டி பலமாக இருக்கிறது. யுவராஜ் கடந்த தொடரில் அசத்தினார். தோனியின் இடத்தை யாரும் அசைக்க முடியாது. கேதர் ஜாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போது போட்டிக்கு வந்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். யுவராஜ் சிங்கிற்கு காய்ச்சல் குணமாகவில்லையெனில் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடுத்தவரிசை, கீழ் நடுத்தர வரிசை, ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என எல்லா துறைக்கும் போட்டி கடுமையாக இருக்கிறது. இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது கோலிக்கு சவால் என்றாலும் அது ஒரு சுகமான சுமை. 

இந்தியாவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்தான் பலவீனமாக இருக்கிறார்கள். தவான் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். ரோஹித் ஷர்மா அல்லது ரஹானேவில் யாரை இறக்குவது என்பதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே பயிற்சி போட்டிகளில் சொதப்பியிருக்கிறார்கள். ஐபிஎல்லில் சுமாராக ஆடியிருக்கிறார்கள். ரோஹித் அதிரடி வீரர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இங்கிலாந்து மண்ணில் ரகானே தான் டாப் பேட்ஸ்மேன். 

தோனிக்கும் கோலிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தோனி பொதுவாக வெற்றி பெறும் அணியில் மாறுதல்களை செய்யமாட்டார். ஓரிருவர் சொதப்பினாலும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார். ஆனால் கோலியின் பாலிசி வேறு. அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பவர்களுக்கும், பேட்டிங் பவுலிங்கோடு பீல்டிங்கும் சிறப்பாக செய்யும் வீரர்களுக்கு வாய்ப்புத் தருவார். அணி வென்றாலும், சரியாக ஆடாத வீரர்களை மாற்றுவார். ஆகவே அவரது வியூகம் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் எப்படியிருக்கும் என்பதை அறிவதற்குள் ரசிகர்கள் மட்டுமல்ல எதிரணி பேட்ஸ்மேன்களும் மண்டையை பிய்த்துக் கொள்வார்கள். 

எதிர்பார்க்கப்படும் லெவன் :- 

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிட் பும்ரா. 

12 வது வீரர் - ஹர்திக் பாண்டியா 

இந்தியா

 

லீக் சுற்றில் இந்திய அணியானது பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி. இந்தியா சமீப காலங்களில் இளம் வீரர்கள் நிறைந்த பாகிஸ்தான் அணியுடன் நிறைய போட்டிகளில் விளையாடாததால் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். யுவராஜ், கோலி, தவான் இந்த மூவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள் என நம்பலாம்.

http://www.vikatan.com/news/sports/90892-will-india-win-the-champions-trophy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.