Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பை மேட்டில் ஒளிந்திருந்த எமன்

Featured Replies

குப்பை மேட்டில் ஒளிந்திருந்த எமன்

 

ரொபட் அன்­டனி

எவ­ராலும் அனு­ம­திக் ­கப்­பட முடி­யாத ஒரு அனர்த்தம் எமது நாட்டில் இடம்­பெற்­றுள்­ளது. அதா வது இயற்கை அனர்த்­த­ மாக இன்றி மனி­தனால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற் ­பாட்டின் விளை­வாக ஏற்­பட்ட அனர்த்­த­மாக இது உள்­ளது. இவ்­வா­றான நிகழ்­வுகள் எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெ­றாமல் இருக்க நடவ­டிக்கை எடுக்­கப்­ப­ட  வேண்டும். இவ்­வா­றான விட­யங்­களில் அர­சாங்கம் உலக நாடுகள் பின்­பற்றும் முறை­மை­களை கையாண்டு மிகவும் முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யதே அவ­சி­ய­மா­க­வுள்­ளது 

எமது நாட்­டில் தான் அடிக்­கடி விசித்­தி­ர­மான சம்­ப­வங்கள் நடை­பெ­று­வ­துண்டு. இப்­ப­டியும் நடக்­குமா என்று ஆச்­ச­ரி­யப்­படும் வகை­யி­லான சம்­ப­வங்கள் எமது நாட்­டில்தான் நடை­பெறும். உலகில் இயற்கை அனர்த்­தங்­க­ளினால் மக்கள் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­வது சொத்து சேதங்கள் இடம்­பெ­று­வது குறித்து நாம் கேள்­வி­யுற்­றி­ருக்­கின்றோம்.  

ஆனால் குப்­பை­மேடு சரிந்து விழுந்து 40 உயிர்­களை காவு­கொள்ளும் விசித்­தி­ர­மான சம்­பவம் எமது நாட்­டி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. உலகில் ஒரு­சில நாடு­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றாலும் இலங்­கையில் இது­போன்று இடம்­பெ­று­வது குறிப்­பிட்டு கூறக்­கூ­டி­ய­தாகும்.

ஏப்ரல் 13, 14 ஆம் திக­திகள் என்­பது எமது நாட்டில் சிங்­கள, தமிழ் சித்­திரைப் புத்­தாண்டை மக்கள் வெகு­வி­மர்சையாக வர­வேற்கும் தினங்­க­ளாகும். கடந்த ஏப்ரல் 14 ஆம் திக­தியும் இவ்­வா­றுதான் அனைவர் முகத்­திலும் மன­திலும் சந்­தோ­ஷத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வாறு மலர்ந்­தது. ஆனால் அந்த புத்­தாண்­டா­னது மீதொட்­ட­முல்ல என்ற பிர­தே­சத்­திற்கு என்­னவோ மகிழ்ச்­சி­யா­ன­தாக அமை­ய­வில்லை.

அதா­வது அந்த சித்­திரைப் புத்­தாண்டு பல உயிர்­களை காவு­கொண்­டு­விடும் என யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. முழு நாட்­டையே சோகத்­திற்குள் இந்த புத்­தாண்டு தள்­ளி­விடும் என எவரும் எதிர்­பார்க்­க­வில்லை. குப்பை மேட்­டுக்குள் உயிர்­களை கொல்லும் எமன் ஒளிந்­தி­ருப்பான் என எவரும் சற்றும் எதிர்­பார்க்­க­வில்லை.

ஆனால் அவ்­வாறு மக்கள் எதிர்­பார்க்­காத அனைத்தும் அன்­றைய தினம் இடம்­பெற்­றன. குப்பை மேட்­டுக்குள் ஒளிந்­தி­ருந்த எமன் சிறு குழந்­தைகள் முதல் பெரி­ய­வர்கள் வரை பல­ரையும் பலி­யெ­டுத்தான். பலரும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்கி மண்­ணுக்குள் புதை­யுண்டு உயி­ருக்குப் போராடி உயி­ரி­ழந்த சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

மீதொட்­ட­முல்­லயில் இடம்­பெற்ற இந்த குப்பை மேட்டு சரிவுப் பேர­னர்த்­தத்தில் இது­வரை 32 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 8 பேர் காணா­மல்­போ­யி­ருக்­கின்­றனர். அத்­துடன் நூற்­றுக்கும் மேற்­பட்ட வீடுகள் அழிந்து நாச­மா­கி­யுள்­ள­துடன் மக்­களின் பெறு­மதி மிக்க சொத்­துக்­களும் மண்­ணுக்குள் புதை­யுண்டு போயுள்­ளன.

இன்று வரை மீதொட்­ட­முல்ல பிர­தேசம் கண்­ணீ­ருடன் சோக­ம­ய­மா­கவே காணப்­ப­டு­கி­றது. பிள்­ளைக­ளையும், மனை­வி­யையும் இழந்த தந்தை தவித்து கொண்­டி­ருக்­கிறார். பெற்­றோரை இழந்த பிள்­ளைகள் செய்­வ­த­றி­யாது திகைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். உற­வி­னர்­களை இழந்த பாதிக்­கப்­பட்டோர் தவிப்­புடன் இருக்­கின்­றனர். மேலும் காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது கூடத் தெரி­யாமல் அவர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக போராட்­டங்கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறு மீதொட்­ட­முல்ல பிர­தே­சமே சோகத்தில் மூழ்­கி­யுள்­ளது. எங்கு பார்த்­தாலும் கண்ணீர் கதை­களே ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. மீட்புப் பணிகள் இடம்­பெற்­றாலும் பாரிய முன்­னேற்­றங்கள் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை. ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கண்­ணீ­ருக்கு குறை­வில்­லாமல் இருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி நூற்றுக் கணக்­கான குடும்­பங்கள் நலன்­புரி நிலை­யங்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளன.

இவ்­வாறு குப்­பை­மேடு சரிந்து விழுந்­ததன் விளை­வுகள் மிகவும் பார­தூ­ர­மாக காணப்­ப­டு­கின்­றன. நாம் இதற்கு முன்னர் மலை­யகப் பகு­தி­களில் மண்­ச­ரிவு அனர்த்தம் ஏற்­பட்டு உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றதை கேட்­டி­ருக்­கின்றோம். மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு அனர்த்தம், அர­நா­யக்க மண்­ச­ரிவு, புலத்­கொ­ஹு­பிட்­டிய மண்­ச­ரிவு அனர்த்தம் என இயற்கை அனர்த்­தங்கள் குறித்து நாம் கேள்­வி­யுற்­றி­ருக்­கின்றோம். ஆனால் இலங்­கையில் முதன் முறை­யாக மனி­தர்­களால் நிரப்­பப்­பட்ட குப்பை மேடு சரிந்து விழுந்­ததில் 30 க்கும் மேற்­பட்ட உயிர்கள் காவு கொள்­ளப்­பட்ட சந்­தர்ப்­பத்தை இப்­போ­துதான் காண்­கிறோம்.

உலகில் இயற்கை அனர்த்­தங்­க­ளையே குறைப்­ப­தற்கும் அதனால் ஏற்­படும் சேதங்­களை குறைப்­ப­தற்கு பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது நாட்­டி­லும்­கூட இயற்கை அனர்த்­தங்­க­ளினால் ஏற்­படும் சேதங்­களை குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக சுனாமி அனர்த்தம் ஏற்­பட்­டதன் பின்னர் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் ஒத்­திகை நட­வ­டிக்­கைகள் என பல்வேறு வேலைத்­திட்­டங்கள் நாட்டில் அவ்­வப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன.

அவ்­வா­றா­ன­தொரு சூழலில் மக்­களால் உரு­வாக்­கப்­பட்­ட­தொரு குப்­பை­மேடு சரிந்து விழுந்­ததில் இந்­த­ளவு அதி­க­மான சேதம் ஏற்­பட்­டுள்­ளது என்­பது நாம் எங்கு சென்று கொண்­டி­ருக்­கின்றோம் என்ற கேள்­வியை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

அதா­வது அர­சாங்­கங்­களின் தீர்­மா­னங்­களின் பிர­காரம் நிரப்­பப்­பட்ட குப்­பை­மேடு சரிந்து விழுந்­த­தினால் இந்த ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது இதனை மனி­தனால் உரு­வாக்­கப்­பட்ட மண்­ச­ரிவு என்று நாம் ஒரு­வ­கையில் வரை­ய­றுக்­கலாம். அது­மட்­டு­மன்றி இந்த மீதொட்­ட­முல்ல பகு­தியில் இவ்­வாறு குப்­பை­களை கொட்ட வேண்டாம் என பல வரு­டங்­க­ளாக போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

மேலும் இந்த குப்பை மேட்­டினால் பாரிய சேதங்கள் ஏற்­படும் என்றும் மனித உயிர்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும் என்றும் தொடர்ச்­சி­யாக பல்­வேறு தரப்­பி­ன­ராலும் கூறப்­பட்டு வந்த நிலை­யி­லேயே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. அதா­வது இது தடுக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய ஒரு அனர்த்­த­மாகும். கவ­ன­யீனம், பொறுப்­பற்ற தன்மை, மற்றும் தாமதம் போன்ற கார­ணங்­க­ளினால் இன்று மீதொட்­ட­முல்ல பல உயிர்­களை இழந்து தவிக்­கின்­றது.

தற்­போது அனர்த்தம் நிகழ்ந்து உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்­டதன் பின்னர் ஒரு­வ­ருக்­கொ­ருவர் குற்றம் சாட்டிக் கொண்­டி­ருப்­பதை காண முடி­கின்­றது. அதா­வது அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரிகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் பரஸ்­பர குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் தற்­போது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பதில் என்ன பயன் இழந்து விட்ட உயிர்­களை மீளப்­பெற முடி­யுமா? என்ன நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் இழந்த உயிர்­களை மீளப்­பெற முடி­யாது. இதனை நாம் கூற­வில்லை. மாறாக இது மக்­களின் மனக்­கு­மு­ற­லா­கவே காணப்­ப­டு­கி­றது.

இந்த நிலையில் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் மேல் மாகாண முத­ல­மைச்சர் இசுறு தேவப்­பி­ரிய இந்த விட­யத்தில் கடும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்ளார். பல்­வேறு நிறு­வ­னங்­க­ளி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் செயற்­பா­டு­க­ளையும் மேல் மாகாண முல­மைச்சர் கடு­மை­யாக விமர்சித்­தி­ருக்­கிறார். அதா­வது இசுறு தேவப்­பி­ரிய முன்­வைத்­துள்ள கருத்­துக்­களை இங்கே பார்க்­கலாம். "" நான் முத­ல­மைச்சர் பத­வியை ஏற்­ற­வுடன் கொழும்பின் குப்­பைகள் தொடர்பில் சரி­யான வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்க முயற்­சித்தேன். இந்த விட­யத்­துடன் தொடர்­பு­டைய பலர் என்னை தொடர்பு கொண்­டனர். மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டை பொறுப்பு எடுக்க வேண்டாம் என எனக்கு வலி­யு­றுத்­தினர். அது எனது உயி­ருக்கும் அச்­சு­றுத்­த­லாக அமையும் என கூறினர்.

இதன் பின்­ன­ணியில் பாரிய வியா­பாரம் ஒன்றும் பாதாள கோஷ்­டி­களின் நட­வ­டிக்­கை­களும் உள்­ள­தா­கவும் எனக்கு தெரி­வித்­தனர். ஆனால் அந்த அச்­சு­றுத்தல் எதையும் கவ­னத்தில் கொள்­ளாது யாருக்கும் பய­மின்றி நான் இந்த வேலைத்­திட்­டத்தை மாற்ற முயற்­சித்தேன். இப்­போது இந்த வியா­பா­ரமே அழிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நல்ல முத­லீட்­ட­ாளர்­களை கொண்­டு­வந்து இந்த குப்­பை­களை அகற்றும் வேலைத் திட்டம் ஒன்றை முன்­னெ­டுத்தேன். இதில் அந்த பகுதி மக்­களை பாது­காக்கும் பிர­தான நோக்­கமே எம்­மிடம் இருந்­தது. அதேபோல் நகர அபி­வி­ருத்து அதி­கார சபை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இந்த பிர­தே­சத்தை எமக்கு ஒப்­ப­டைக்­கு­மாறு தெரி­வித்தோம். கொழும்பில் நாளொன்றில் கொட்­டப்­படும் 800 தொன் குப்­பை­களை அகற்றி இந்த பிர­தே­சத்தை சுத்­தப்­ப­டுத்தும் வேலை­களை மேற்­கொள்ள நாம் அப்­போது தெரி­வித்தோம். ஆனால் எமது கருத்­துக்­களை இவர்கள் கருத்தில் கொள்­ள­வில்லை. நாம் சரி­யாக முன்­வைத்த கருத்­துக்­களை கருத்தில் கொள்­ளாது வெறும் வியா­பார நோக்­கத்தில் மாத்­தி­ரமே செயற்­பட்­டனர்.

இப்­போது மக்கள் இந்த குப்­பை­களின் கீழ் சிக்­குண்டு இறந்­த­மைக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என சிந்­தித்து பார்க்க வேண்டும். அன்று நாம் முன்­வைத்த கருத்­து­களை செவி­ம­டுக்­காது செயற்­பட்ட நபர்­களே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­ச­ரவை என அனை­வ­ருக்கும் இதை நாம் தெரி­வித்தோம். இந்த பிரச்­சி­னைக்கு என்னால் தீர்வு காண முடி­யாது போனால் வேறு யாராலும் தீர்­வுக்­கான முடி­யாது என தெரி­வித்தேன். ஆனால் எனது கருத்தை எவரும் கவ­னத்தில் கொள்­ள­வ­வில்லை. என்னால் இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடியும். நாளைக்கே இந்த பிரச்­சி­னைக்குச் சரி­யான தீர்வை பெற்­றுத்­தர என்னால் முடியும். ஆனால் எம்மை தடுத்து வரு­கின்­றனர். அர­சியல் அமைப்பு தொடர்பில் பேசு­கின்­றனர், அதி­கார பகிர்வு தொடர்பில் பேசு­கின்­றனர். ஆனால் மாகா­ண­ச­பைக்­கான அதி­கா­ரங்­களை பறித்­துக்­கொள்­கின்­றனர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வேடிக்கை பார்க்­கின்­றனர். மாகாண சபைகள் மற்றும் பிர­தேச சபை­களின் அதி­கா­ரங்­களை பிடிங்­கிக்­கொண்டு செயற்­படும் அமைச்­சர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னை­களை வழங்க வேண்டும் என நாம் தெரி­விக்க வேண்டும்""

இவ்­வாறு கடு­மை­யான விட­யங்­களை மேல் மாகாண முத­ல­மைச்சர் முன்­வைத்­தி­ருக்­கிறார். இந் நிலையில் இவரின் இந்த விமர்­ச­னத்­துக்கு உட­ன­டி­யா­கவே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க பதி­ல­ளித்­தி­ருக்­கிறார். அதா­வது மேல் மாகாண முத­ல­மைச்சர் இசுறு தேவப்­பி­ரி­ய­வி­னூ­டாக முன்­வந்த வெ ளிநாட்டு நிறு­வ­ன­மா­னது மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டை அகற்­று­வ­தற்­கான போது­மான நிதி வச­தியை கொண்­டி­ருக்­க­வில்லை என சம்­பிக்க ரண­வக்க கூறி­யி­ருக்­கிறார்.

இந்த இடத்தில் மேல் மாகாண முத­ல­மைச்சர் முன்­வைத்­துள்ள மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் குறித்த விட­யத்­தையும் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்டும். அதா­வது தமிழ் பேசும் மக்கள் கடந்த பல தசாப்­தங்­க­ளாக அதி­கா­ரங்­களை வழங்­கு­மாறு கோரி போரா­டி­வ­ரு­கின்ற நிலையில் மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்கள் இன்­மை­யினால் இந்த அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ள­தாக மேல் மாகாண முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டுள்ளார். எனவே இது குறித்து அர­சாங்கம் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது அனர்த்தம் நிகழ்ந்து மக்கள் உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டு­விட்­டன. அது மட்­டு­மன்றி தற்­போது கொழும்பில் உள்ள குப்­பை­களை கொட்­டு­வது தொடர்பில் பாரிய சிக்கல் நிலை தோன்­றி­யுள்­ளது. எந்த இடத்­திலும் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு மக்கள் இட­ம­ளிக்­காமல் உள்­ளனர். மக்கள் தொடர்ச்­சி­யாக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை இந்த வி்டயத்தில் நடத்­தி­வ­ரு­கின்­றனர். அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது இந்­த­ளவு பெரிய அனர்த்தம் நிகழ்ந்த பின்­னரும் இந்த பிரச்­சி­னைக்கு இன்னும் உறு­தி­யான தீர்வைக் காண முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்கம் இந்த விட­யத்­திலும் அவ­ச­ர­மா­கவும் பொறுப்­பு­டனும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க மீதொட்­ட­முல்­லவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக அனைத்து உத­வி­க­ளையும் அர­சாங்கம் செய்­து­கொ­டுக்­க­வேண்டும். குறிப்­பாக வீடுகளை நிர்மாணித்துகொடுப்பதுடன் அவர்களுக்கு ஏனைய வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும்.

இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கடந்த சில தினங்களாக அனைத்து தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்த நிலையில் பிரதமர் இந்த அனர்த்தத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் இதற்கு பின்னர் இவ்வாறு ஒரு அனர்த்தம் ஏற்பட இடமளிப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும் என்றும் மேலும் இரண்டரை இலட்சம் ரூபா நிதியும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே அதற்கேற்ப உரிய வசதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்துகொடுக்கப்படவேண்டும்.

 எவராலும் அனுமதிக்கப்பட முடியாத ஒரு அனர்த்தம் எமது நாட்டில் இடம்பெற்றுள்ளது. அதாவது இயற்கை அனர்த்தமாக இன்றி மனிதனால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டின் விளைவாக ஏற்பட்ட அனர்த்தமாக இது உள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் உலக நாடுகள் பின்பற்றும் முறைமைகளை கையாண்டு மிகவும் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியதே அவசி யமாகவுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-22#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.