Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தின் மூலம் தீர்வை பெற காத்திருக்கும் மக்கள்

Featured Replies

போராட்டத்தின் மூலம் தீர்வை பெற காத்திருக்கும் மக்கள்

 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளி­யிட வேண் டும். அவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும். பொது

­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் இருந்து படை­யினர் வெளி­யேறி இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து விடுக்­கப்­பட்­டி­ருந்த கடை­ய­டைப்பு அழைப்­புக்குப் பலரும் தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். 

 இத­னை­ய­டுத்து வடக்­கிலும் கிழக்­கிலும் பொது மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் கடை­ய­டைப்பு கார­ண­மாக சிவில் வாழ்க்­கையும் சிவில் நிர்­வாகச் செயற்­பா­டு­களும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அர­சாங்  கத்தின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­கான இந்த எதி ர்ப்பு நட­வ­டிக்கை வட­மா­கா­ணத்தில் முழு­மை­யாக இடம்­பெற்­றி­ருந்­தது. பொதுப் போக்­கு­வ­ரத்து சேவைகள் முழு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. பாட­சா­லைகள் அரச செய­ல­கங்கள், வங்­கிகள் என்­பன செய­லி­ழந்­தி­ருந்­தன.  

ஒப்­பீட்­ட­ளவில் கிழக்கு மாகா­ணத்தில் இந்தக் கடை­ய­டைப்பு வெற்­றி­க­ர­மாக அல்­லது பெரிய அளவில் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தக­வல்கள் வந்­துள்­ளன. பல இடங்­களில் வாழ் க்கை வழ­மை­போல இயல்­பாக இருந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள், இரா­ணு­வத்­தி­னதும், கடற்­ப­டை­யி­ன­ரதும் பிடியில் உள்ள பொது­மக்­களின் காணிகள், அந்த மக்­களின் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு அண்­மித்­துள்ள பொதுப் பயன்­பாட்­டுக்­கான காணி­களை விடு­விப்­பது,

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை வாய்ப்பு போன்­ற­வைகள் இன்று எரியும் பிரச்­சி­னை­க­ளாக தீவி­ர­மாகத் தலை­யெ­டுத்­தி­ருக்­கின்­றன.  வடக்­கிலும் கிழக்­கிலும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி காணாமல் போயுள்­ள­வர்­களின் உற­வுகள் இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாகத் தொடர்ச்­சி­யாகப் போராட்டம் நடத்தி  வரு­கின்­றார்கள். சுழற்சி முறை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் அவர்கள் குதித்­தி­ருக்­கின்­றார்கள். 

வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, யாழ்ப்­பாணம், மரு­தங்­கேணி போன்ற வட­ப­குதி பிர­தே­சங்­க­ளிலும், திரு­கோ­ண­ம­லை­யிலும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போராட்  டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.  இவற்றில் கூடு­த­லாகப் பெண்­களே பங்­கேற்­றி­ருக்­கின்­றார்கள். ஆண்­களின் எண்­ணிக்­கை­யிலும் பார்க்க பெண்­களின் போராட்­டக்­கா­ரர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மாகக் காணப் ­ப­டு­கின்­றது. ஆண்கள் இல்­லாமல் இல்லை. ஆண்­களும் இந்தப் போராட்­டத்தில் சிறிய எண்­ணிக்­கையில் பங்­கெ­டுத்­தி­ருக்­கின்­றனர்.  

தமது பிள்­ளை­களை இழந்த தாய்­மார்­களும், கண­வர்­களை இழந்த மனை­வி­யரும், சகோ­த­ரர்கள். சகோ­த­ரி­களை இழந்த சோகத்தில் பாதிக்­கப்­பட்­டுள்ள பெண்­க­ளு­மாக இள வயது தொடக்கம் வயோ­திப வயது வரை­யி­லான பெண்கள் இந்தப் போராட்­டத்தை நடத்தி வரு­கின்­றார்கள்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் போக எஞ்சி குடும்­பத்தில் உள்ள பிள்­ளைகள், சகோ­ த­ரர்கள் மற்றும் உற­வி­னர்­க­ளு­டைய நலன்­களைக் கவ­னிக்க முடி­யாத நிலையில் இவர்கள் தமது போராட்­டத்தை நடத்தி வரு­வது மிகவும் கவ­லைக்­கு­ரி­யது.  

கொள்கைப் பிடிப்­போடு கூடிய போராட்டம்

காணாமல் போயுள்ள சகோ­தரன் அல்­லது சகோ­தரிக்­காகத் தாயாரும் சில வீடு­களில் தாய் தந்­தையர் இரு­வ­ருமே போராடச் சென்­றி­ருப்­ப­தனால் பல குடும்­பங்­களில் சிறு­வர்­களும், வளர்ந்த பிள்­ளை­­களு­மாகக் குழந்­தைகள் உரிய பரா­ம­ரிப்­பற்ற நிலை­மைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு அன்­றாடம் கிர­ம­மான உணவு கிடைப்­ப­தில்லை.

பாட­சா­லைக்குச் செல்லும் பிள்­ளைகள் பெற்றார் அல்­லது தாயாரின் உரிய பரா­ம­ரிப்பு கிடைக்­காமல் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இந்தப் பாதிப்­புகள் வெளிப்­ப­டை­யா­கவும், அதே­நேரம் வெளியில் தெரி­யாத வகையில் மோச­மான உள­வியல் பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாகக் கல்­வி­யி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றனர்.

இவ்­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு உரி­யதோர் அர­சியல் தலைமை இல்­லாமல் இருப்­பது பெரிய குறை­பா­டாக உள்­ளது. ஆயினும் அத்­த­கைய தலைமை இல்­லாத நிலை­யிலும் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள தமது பிள்­ளை­க­ளுக்கு அரசு உரிய பொறுப்பு கூற வேண்டும்.

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சரி­யான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்­டத்தைக் கைவிடப் போவ­தில்லை என்ற கொள்கைப் பிடிப்­போடு அவர்கள் இரவு பக­லாகத் தமது போராட்­டத்தை நடத்தி வரு­கின்­றார்கள்.

இதே­போன்று முல்­லைத்­தீவு மாவட்டம் கேப்­பாப்­புலவு பூர்­வீகக் கிரா­மத்தில் இருந்து கடற்­ப­டை­யினர் வெளி­யேற்­றப்­பட்டு, அங்கு சொந்தக் கிரா­மத்தில் தங்­க­ளு­டைய காணி­களில் தாங்கள் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு வசதி செய்து தரப்­பட வேண்டும் எனக் கோரி இடம்­பெ­யர்ந்­துள்ள கேப்­பாப்­புலவு மக்கள் தொடர்ச்­சி­யாகப் போராடி வரு­கின்­றார்கள்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஆயுதப் படை கள் தலைமை அலு­வ­லகம் கோப்­பாப்பு­லவு கிரா­மத்­தி­லேயே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு முன்பே இந்த இரா­ணுவ தலை­மை­யகம் கடற்­ப­டை­யி­ன­ரையும் உள்­ள­டக்­கி­ய­தாக இயங்கி வரு­கின்­றது.

பல கிலோ மீற்றர் தொலைவில் உள்ள முல்­லைத்­தீவு நக­ர­மா­னது, கட­லோரப் பட்­டி­ன­மாக அமைந்­துள்­ளது. ஆயினும் முல்­லைத்­தீ­வுக்­கென சரி­யா­ன­தொரு துறை­முகம் கிடை­யாது.

மீன்­பிடி துறையும் அங்கு அமைக்­கப்­ப­ட­வில்லை. பாடுகள் என்ற அடிப்­ப­டையில் கட­லோரப் பகு­திகள் சிறிய அளவில் பிரி­வி­டப்­பட்டு மீன­வர்­க­ளுக்கு மீன்­பிடி தொழி­லுக்­காக அர­சாங்­கத்­தினால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மொத்­தத்தில் ஒரு மீன்­பிடி நக­ர­மா­கவே முல்­லைத்­தீவு இருந்து வந்­துள்­ளது. இப்­போதும் அந்த நிலை­யி­லேயே அது திகழ்­கின்­றது.

மாவட்­டத்தின் அரச நிர்­வாகத் தலைமைச் செய­ல­கங்கள், மற்றும் முக்­கிய திணைக்­க­ளங்கள், நீதி­மன்றம், வங்­கிகள் உள்­ளிட்ட அனைத்து நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்­களும் முல்­லைத்­தீவு நக­ரப்­பு­றத்­தி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றன.

ஆயினும், கடல் பெருக்­கெ­டுக்கும் காலப்­ப­கு­தியில் முல்­லைத்­தீவு நகர்ப்­புறம் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்ற வகை­யி­லான பூலோக நில அமைப்­பா­னது, தேசிய பாது­காப்பு கட­மைக்­காக நிலை­கொண்­டி­ருக்க வேண்­டிய கடற்­ப­டை­யி­ன­ருக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பாதிப்பு ஏற்­படக் கூடாது என்ற கார­ணத்­திற்­கா­கவே கேப்­பாப்­புலவு பகு­தியில் மேட்டு நிலப்­பாங்­கான பிர­தான நிலப்­பி­ர­தே­சத்தில் ஆயு­தப்­ப­டை­களின் தலைமைச் செய­லகம் நிறு­வப்­பட்­டி­ருப்­ப­தாக பாது­காப்புத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் கட­லோ­ரப்­பி­ர­தே­சங்­களை 2004 ஆம் ஆண்டு சுனாமி பேர­லைகள் தாக்­கி­ய­போது, முல்­லைத்­தீவு நகர்ப்­பு­றமே பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

உயர்ந்து எழுந்து கரிய அலைகள் நகர்ப்­பு­றத்தை விழுங்கி கடந்து பல கிலோ மீற்றர் தொலை­வுக்கு வயல் நிலங்­க­ளிலும், நீர்த்­த­டா­கங்­க­ளிலும் நிறைந்து வழிந்து சென்று அளப்­ப­ரிய உயிர்ச் சேத­ச­ங்க­ளையும், பொருட் சேதங்­க­ளையும் ஏற்­ப­டுத்தி, இயற்கை வளங்­க­ளையும் அழித்­தி­ருந்­தது.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே நகர்ப்­பு­றத்­துக்கு வெளியில் கிரா­மப்­ப­கு­தியில் படை­யினர் தமது தலை­மை­யகத்தை கேப்­பாப்­பி­லவில் அமைத்­தி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் படை­யி­னரின் இந்த நட­வ­டிக்கை பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து வந்த பூர்­வீக கிரா­ம­மா­கிய கேப்­பாப்­புலவு மக்­க­ளு­டைய இருப்­பையும் அவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்­தையும் மிக மோச­மாகப் பாதித்து அவர்­களை நிர்க்­க­தி­யாக்­கி­யுள்­ளது.

அவர்­க­ளுக்­கென மாதிரி கிராமம் என்ற பெயரில் தற்­கா­லிக வசிப்­பிட வச­திகள் அர­சாங்­கத்­தினால் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

இருந்த போதிலும், அவர்­க­ளு­டைய பாரம்­ப­ரிய வாழ்­வியல் வழி­மு­றைக்கும் கலா­சார பண்­பாட்டு நெறி முறை­க­ளுடன் கூடிய விவ­சாயம் மற்றும் மீன்­பிடி துறைகள் சார்ந்த வாழ்­வா­தாரச் செயன் முறை­க­ளுக்கும் இந்தத் தற்­கா­லிகக் குடி­யி­ருப்பு ஏற்­பு­டை­ய­தாக இல்­லாத கார­ணத்­தினால் அவர்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றனர்.

சமூ­கத்தின் ஆத­ரவு

அது மட்­டு­மல்­லாமல் தமது சொந்தக் காணி­களில் தங்­க­ளுடன் எந்த வகை­யிலும் சம்­பந்­தப்­ப­டாத படை­யினர் விவ­சாயம் செய்­வ­தையும் தங்­க­ளு­டைய இடங்­களில் குடி­யேறி வாழ்ந்து வரு­வ­தையும் தமது வான்­ப­யிர்­க­ளா­கிய தென்னை மா உள்­ளிட்ட பயன்­தரு மரங்­களின் பயன்­களை அனு­ப­விப்­ப­துடன், அவற்றின் விளைச்­ச­லா­கிய இளநீர் தேங்காய் போன்­ற­வற்றை படை­யினர் தங்­க­ளுக்கே விலைக்கு விற்­ப­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும் சகித்துக் கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும் உள­வியல் ரீதி­யான பாதிப்­புக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.

இந்த மோச­மான பாதிப்­பு­களே அந்த மக்­களை கடற்­ப­டை­யி­ன­ரு­டைய முகாம் வாயிலில் அமர்ந்து இரவு பக­லாக போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தற்­கான முக்­கிய கார­ணங்­க­ளாகும்.

இந்த பாதிப்­பு­களின் தாக்­கமே ஒரு முடிவு தெரியும் வரையில் போராட்­டத்தைக் கைவிடப் போவ­தில்லை என்ற உறு­திப்­பாட்டை அவர்­க­ளுக்­குள்ளே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த மன உறு­தியே அந்த மக்­க­ளையும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளையும் அர­சியல் ரீதி­யான எத்­த­கைய வழி நடத்­தலும், அர­சியல் ரீதி­யான தகுந்த தலை­மைத்­துவம் இல்­லாத ஒரு சூழலில் சமூ­கத்தை நோக்கி தமது போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்­கு­மாறு விடுத்த கோரிக்­கையின் விளை­வாக வடக்­கிலும் கிழக்­கிலும் ஒரு நாள் அடை­யாளக் கடை­ய­டைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

தனியார் பேரூந்­து­உ­ரி­மை­யா­ளர்கள், முச்­சக்­கர வண்டி உரி­மை­யா­ளர்கள், அரச போக்­கு­வ­ரத்துச் சபையைச் சேர்­ந்­த­வர்கள் உள்­ளிட்ட போக்­கு­வ­ரத்­துத்­து­றை­யினர், வர்த்­த­கர்கள், பொது அமைப்­புக்கள், மாண­வர்கள், தொழிற்­சங்­கங்­களைச் சேர்ந்­த­வர்கள் மட்­டு­மல்­லாமல், அர­சியல் கட்­சிகள், மா­காண சபையைச் சேர்ந்த அமைச்­சர்கள், முக்­கி­யஸ்­தர்கள் உள்­ளிட்ட அர­சி­யல்­வா­திகள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர். இது சிறப்­பான ஒரு முன்னுதா­ர­ண­மாகும்.

ஆயினும் பிரச்­சி­னை­க­ளுக்கு இறுதி முடிவு காணும் வரை­யிலும் தமது போராட்­டங்­களைக் கைவிடப் போவ­தில்லை என்ற நிலைப்­பாட்டில் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் உறு­தி­யாக இருக்­கின்­றார்கள். இவர்­க­ளுடன் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களும் வேலை­யில்லா பிரச்­சி­னைக்கு அரசு தீர்வு காண வேண்டும் எனக் கோரி உறு­தி­யாகப் போராடி வரு­கின்­றார்கள்.

தமிழ் – முஸ்லிம் சமூக  ஒன்­றி­ணைவின் அவ­சியம் 

இந்தப் போராட்­டங்­க­ளுக்கு வட­மா­கா­ணத்தில் முஸ்லிம் மக்­களும் தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தமை ஒரு முக்­கிய அம்­ச­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் இந்த நிலைமை கிழக்கு மாகா­ணத்தில் காணப்­ப­ட­வில்லை. அங்கு முஸ்லிம் அமைச்­சர்­க­ளா­கிய ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதி­யுதீன் ஆகிய அர­சி­யல்­வா­தி­களின் ஊடாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் விடுத்த போராட்ட ஒத்­து­ழைப்­புக்­கான அழைப்பை கிழக்கு மாகா­ணத்தில் உள்ள முக்­கி­யஸ்­தர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் அழைப்பை மட்டும் ஏற்று போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்கத் தயா­ராக இருக்­க­வில்லை என அவர்கள் குறிப்­பிட்­டி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நேர­டி­யாகத் தங்­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருக்க வேண்டும். தமது ஒத்­து­ழைப்பைத் தங்­க­ளிடம் நேர­டி­யாகக் கேட்­டி­ருக்க வேண்டும். அவ்­வா­றில்­லாமல் போராட்­டத்­திற்கு ஒத்­து­ழைக்க முடி­யாது என்று அவர்கள் கூறி­யி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்த வகையில் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த சமூக முக்­கி­யஸ்­தர்­களை பிரச்­சி­னை­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஓரங்­கட்டி நடப்­ப­தாக அவர்­க­ளிடம் இருந்து ஒரு குற்­றச்­சாட்டு வந்­துள்­ளது. இந்தக் குற்­றச்­சாட்டு நிகழ்­வு­களின் போக்கில் ஒரு சந்­தர்ப்ப ரீதி­யா­கவே வந்­துள்­ளது என்று ஒரு சாரார் கருதக் கூடும்.

அதற்கு இது கால வரை­யி­லான கிழக்கு மாகாண முஸ்லிம் சமூ­கத்­திற்கும் தமிழ் சமூ­கத்­திற்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள சமூகம் மற்றும் அர­சியல் ரீதி­யான உறவு நிலை இடை­வெளி ஒரு கார­ண­மாகக் கூறப்­ப­டலாம்.

ஆனால் முஸ்லிம் மக்­களும் பேரின சிங்­கள பௌத்த தீவிர அர­சி­யல்­வா­தி­க­ளினால் மத ரீதி­யா­கவும், இன­ரீ­தி­யா­கவும் ஓரங்­கட்டிச் செல்­கின்ற ஓர் அரச தரப்பு அர­சியல் செல்­நெறிப் போக்கில் தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள், அர­சியல், சமூக, பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணைந்து பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கவும், இன்­றைய அர­சியல் சூழலில் அவற்­றுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டிய கட்­டாயத் தேவையும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

இந்தத் தேவை இரு சமூ­கங்­க­ளி­டை­யேயும் தீவி­ர­மாக உண­ரப்­பட வேண்­டிய ஒன்­றாகும். அர­சியல், சமூக, பொரு­ளா­தார ரீதியில் இனம் சார்ந்த நலன்­களில் நாட்டம் கொள்­வ­தை­வி­டுத்து, இரு சமூ­கங்­களும் சிறு­பான்­மை­யினர் என்ற அடிப்­ப­டை­யிலும், ஒரு மொழியைப் பேசு­கின்­ற­வர்கள் என்ற ரீதி­யிலும் ஒன்­றி­ணைய வேண்­டிய காலச் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்­தியும், தாங்­க­ளா­கவே சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்­கியும், பெரும்­பான்­மை­யி­ன­ரா­கிய சிங்­கள பௌத்த அர­சியல் தீவி­ர­வா­தி­க­ளினால் தமிழ் பேசும் சமூ­க­மா­கிய இரு­த­ரப்­பி­ன­ரையும் அடக்கி ஒடுக்கி வரு­கின்ற ஓர் இன­வாத அர­சியல் போக்கின் ஆபத்தை உணர்ந்து கொள்­ளுதல் அவ­சி­ய­மாகும்.

இதன் அடிப்­ப­டையில் அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளா­யி­னும் ­சரி, சமூக ரீதி­யி­லான பிரச்­சி­னை­களா­யி­னும் ­சரி, அர­சியல் வேறு­பா­டு­களைக் கடந்த பாதிக்­கப்­ப­டு­கின்ற தரப்­பினர் என்ற ரீதியில் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

கசட் அறி­வித்தல் மூல­மான காணி தொடர்­பி­லான ஆபத்­துக்கள்

வடக்கில் வலி­காமம் வடக்கில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களின் காணி­களைப் பிடித்து வைத்­துள்ள இரா­ணு­வத்­தினர் அவற்றை விடு­விப்­ப­தற்கு இல்­லாத பொல்­லாத கார­ணங்­களைக் கூறி காலம் கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இரா­ணு­வத்தின் இந்தப் போக்­கிற்கு அர­சாங்கம் முண்டு கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

இதே­போன்று கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார் வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளிலும் பொது­மக்­களின் காணி­களை இரா­ணு­வத்­தினர் பிடித்து வைத்துக் கொண்டு அவற்றை விட்டுச் செல்­வ­தற்கு மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றார்கள்.

இது தொடர்­பாக அரச தரப்­பி­ன­ருடன் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நடத்­திய பேச்­சு­வார்த்­தை­களில் இரா­ணுவம் அதி­கார மிதப்பில் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. அர­சாங்கம் கூறினால், விசே­ட­மாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கூறினால் தாங்கள் இந்தக் காணி­களை விட்டு வெளி­யேறத் தயார் என்று இரா­ணுவத் தள­பதி முகத்தில் அடித்­தாற்­போல பதி­ல­ளித்­துள்ளார்.

இரா­ணுவ தரப்­பி­னரைச் சந்­திப்­ப­தற்கு முன்னர் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேர­டி­யாகச் சந்­தித்து, இரா­ணு­வத்­தினர் வச­முள்ள பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அதற்கு தனது உத்­த­ரவை இரா­ணு­வத்­தி­னரோ அதி­கா­ரி­களோ நிறை­வேற்­றா­தி­ருக்­கின்­றார்கள். எனினும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இந்தக் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அவர்­க­ளுக்கு கூறு­கிறேன் என்று ஜனா­தி­பதி பதி­ல­ளித்து அனுப்பி வைத்­ததன் பின்னர் இரா­ணுவ தள­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போதே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு இத்­த­கைய பதி­ல­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது..

அதே­வேளை, மன்னார் முள்­ளிக்­கு­ளத்தில் இருந்து கடற்­ப­டை­யினர் பொது­மக்­களின் காணி­களில் இருந்து வெளி­யேற வேண்டும் என்ற கோரிக்கை இரா­ணு­வத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்­பின்­போது, கடற்­படைத் தள­ப­தி­யிடம் முன்­வைக்­கப்­பட்­டது. அதற்குப் பதி­ல­ளித்த கடற்­படைத் தள­பதி பாராளுமன்­றத்தில் இது தொடர்­பாக பிர­தமர் அளித்­தி­ருந்த பதி­லையே முன் வைத்­தி­ருந்தார். 

 மன்னார் பிர­தே­சத்தில் இடம்­பெற்று வரு­கின்ற கடல் வழி­யான கடத்தல் நட­வ­டிக்­கை­களைக் கண்­கா­ணித்து முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே முள்­ளிக்­கு­ளத்தில் கடற்­ப­டைத்­தளம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனை அகற்­று­வது இய­லாத காரி­ய­மாகும் என்ற தொனியில் பாராளு­மன்­றத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் ஒரு­வ­ரு­டைய முள்­ளிக்­குளம் தொடர்­பான கோரிக்­கைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இவ்­வாறு இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஒரு­வரை ஒருவர் பொறுப்பு சாட்டி பிரச்­சி­னையை அர­சாங்கம் இழுத்­து­டித்துச் செல்­கின்­றது

அதே­நேரம் முஸ்லிம் மக்­க­ளுக்கும் காணிப்­பி­ரச்­சினை பாரிய அளவில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக மன்னார் மாவட்டம் முசலி பிர­தேச செய­லகப் பிரிவில் மக்கள் வசிப்­பிட காணிகள் உள்­ள­டங்­க­லாக 40 ஆயிரம் ஹெக்டேர் நிலப்­ப­ரப்பை வனத்­துறை திணைக்­க­ளத்­திற்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட காணி­க­ளாக ஜனா­தி­பதி கசட் அறி­வித்தல் ஒன்றின் மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

முசலி பிர­தே­சத்தில் தமிழ், முஸ்லிம் குடும்­பங்கள் கணி­ச­மான அள­விலும் சிங்­க­ளக்­கு­டும்­பங்­களும் வசித்து வரு­கின்­றன. இந்த மூவின மக்­களின் குடி­யி­ருப்பு காணிகள், வாழ்­வ­ாதா­ரத்­துக்­கான வயற் காணிகள், மேய்ச்சல் தரைகள் என்­பன, வனத்­துறை திணைக்­க­ளத்­திற்­கான ரிசேவ் காணிகள் என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பிர­தே­சத்­தினுள் அடங்­கு­கின்­றன.

இதனால் அந்த மக்­க­ளு­டைய குடி­யி­ருப்பும் வாழ்­வா­தா­ரமும் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தாக 38 பொது அமைப்­புக்­களைச் சேர்ந்த 2680 செயற்­பாட்­டா­ளர்கள் இணைந்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் எழு­தி­யுள்­ளனர்.

மறிச்­சுக்­கட்டி, காயக்­குழி உள்­ளிட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளு­டைய கிரா­மங்கள் இன்னும் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாமல் இருப்­ப­தனால் இடம்­பெயர்ந்த மக்கள் குறிப்­பாக அதிக எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் குடும்­பங்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து விடு­த­லைப்­பு­லி­க­ளி­னனால் 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்டு தொடர்ந்து இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக மீள்­கு­டி­யேற முடி­யாமல் போயுள்ள இந்தக் குடும்­பங்­களின் குடி­யி­ருப்பு காணி­களை கடற்­ப­டை­யினர் அப­க­ரித்­தி­ருப்­பதும் அவர்­களைப் பாதித்திருப்­ப­தாக அந்தக் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

தமது குடி­யி­ருப்பு காணி­களில் இருந்து கடற்­ப­டை­யி­னரை வெளி­யேற்றி தங்­களை மீள்­கு­டி­யேற வழி செய்ய வேண்டும் எனக் கோரி, மறிச்­சுக்­கட்டி பகு­தியில் முஸ்லிம் குடும்­பங்கள் ஒரு மாதத்­திற்கு மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தப் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள வில்பத்து மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கான சரணாலய பிரதேசத்திற்குள் முஸ்லிம் குடும்பங்கள் அத்துமீறி பிரவேசித்து குடியேறுவதற்கு முயற்சித்தார்கள் என சிங்கள பௌத்த அரசியல் தீவிரவாத சக்திகளினால் முன் வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டையடுத்து, இந்த 2011/34 என்ற இலக்கத்தைக் கொண்ட கசட் அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கசட் அறிவித்தல் மூலமாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்ற காணிகள் வனத்துறை திணைக்களத் திற்கும் மகாவலி திட்டத்திற்கும், அது மட்டு

மல்லாமல் தொல்பொருள் ஆய்வு திணைக் களத்திற்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட காணிகளிலிருந்து, எந்த நேரத்திலும் அரசாங்கம் அங்குள்ள பொதுமக்களை காணி உரிமையற்றவர்கள் எனக்கூறி வெளியேற்றுவதற்கான அரசியல் ஏதுநிலைகள் காணப்படுகின்றன.  

ஏனெனில் பொதுமக்கள் குடியிருக்கின்ற காணிகள் அரச திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று கசட் மூலமாகப் பகிரங்கமாக அரசு பிரகடனப்படுத்தும்போது அங்குள்ளவர்கள் உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அதற்கு எதிராக உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான உரிமை கோரும் நடவடிக்கை களை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றி ணைந்து எடுப்பதற்குத் தொடர்ந்து தாமதிப்  

பார்களேயானால், எதிர்காலத்தில் மிக மோச மான சட்ட ரீதியான அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது இந்த விடயத்தில் அதிக எண் ணிக்கையிலான முஸ்லிம் பொது அமைப்புக் களும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் பொது அமைப்புக்களுமே ஒன்றிணைந்து முசலி 

பிரதேச பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலை வர்கள் ஈடுபாடு காட்டியுள்ள போதிலும், தமிழ் அரசியல் தலைவர்கள் தரப்பில் இருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை.  இரு சமூகங்களையும் சேர்ந்த அரசியல் தலை  வர்கள் இதுவிடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமை ஒன்று உருவாகியிருக்கின்றது என்பதை அவர்கள் உடனடியாகக் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

செல்வரட்னம் சிறிதரன்

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-29#page-1

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

]]

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.