Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும்

Featured Replies

இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

 

pramila-1.jpg

பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.

அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார்.

இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார்.

‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார்.

‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.

‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.

‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.

அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.

எனினும் அந்த பெண் பொறியியலாளர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இணைந்த போது பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பியிருந்தனர்.

1960களில் அவர் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொள்ளும் போது பெண்கள் மருத்துவம், ஆசிரியம் மற்றும் தாதியர் ஆகிய உத்தியோகங்களிலேயே அதிகளவில் ஈடுபட்டனர்.

எனினும், அவர் இலங்கை பெண்களின் வரலாற்றில் புதிய ஓர் அத்தியாயத்தை ஆரம்பித்து முதல் பெண் பொறியியலாளராக உருவாகியிருந்தார். அவரது பெயர் பிரமிளா சிவபிரகாசிப்பிள்ளை சிவசேகரம் ஆவார்.

‘எனது தந்தை கொழும்பு துறைமுகத்தில் பொறியியலாளராக கடமையாற்றியிருந்தார். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்த போது எனது குடும்பத்தினர் மீளவும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டனர்’ இலங்கையின் முதல் பெண் பொறியியிலாளரான பிரமிளா தான் பிறக்கும் முன்னதாகவே பெற்றோர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறுகின்றார்.

ரீ. சிவபிரகாசபிள்ளை, மனைவி லீலாவதி, பிள்ளைகளான பூமன் மற்றும் பிரபான் ஆகியோருடன் மனைவியின் சகோதரான மாவட்ட நீதவான் சீ.குமாரசுவாமியின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த வீடு யாழ்ப்பாணம் கோட்டைக்கு உள்ளே அமைந்திருந்தது. பிரமிளா அங்கேதான் பிறக்கின்றார். 1943ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி பிரமிளா பிறந்தார்.

1950ம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்படும் ரீ.சிவபிரகாசபிள்ளை தனது மனைவி பிள்ளைகளுடன் கொழும்பில் மீளவும் குடியேறுகின்றார்.

‘தரம் ஒன்று முதல் எச்.எஸ்.சீ வரையில் நான் கொழும்பு மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன்’. பாடசாலை காலத்தில் பிரமிளா மிகவும் சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.

PremilaChild.jpg

‘விளையாட்டில்; எனக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை. எனினும் இசை மற்றும் நடனம் என்பனவற்றை நான் மூன்று வயதிலிருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்’ என அவர் கூறுகின்றார்.

‘திருமதி ஞானபிரகாசத்திடம் நான் பரதம் மற்றும் மனிப்பூரி ஆகிய நடனங்களை கற்றுக்கொண்டேன். அந்த இடத்தில் திருமதி பலிஹக்காரவும் கற்பித்தார். திருமதி சிவபிரகாசம் சில நாட்களுக்கு இந்தியாவிற்கு சென்றிருந்தார். அவருக்கு பதிலீடாக கோவிந்த ராஜபிள்ளை என்பவர் நடனம் கற்றுக் கொடுத்தார். அவர் மதுவிற்கு அடிமையாகியிருந்த காரணத்தினால் ஒழுங்காக பாடம் எடுக்கவில்லை. இதனால் பரதம் கற்றுக் கொள்வதனை கைவிட நேரிட்டது. எனினும் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் மனிப்பூரி கற்றுக் கொண்டேன்.’ என இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்.

படிக்கும் போது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது சில நடனங்களை ஆடியிருந்தார். ஓர் தடவை நடைபெற்ற கூட்டு நடன நிகழ்வில் பிரமிளா கிருஸ்ணன் வேடமிட்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுக் கொண்டு சில காலங்களில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பிரிவின் விரிவுரையாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.

1959ம் அண்டில் நான் எச்.எஸ்.சீ பரீட்சைக்கு தோற்றியிருந்தேன். அந்த ஆண்டில் கொழும்பு மகளிர் கல்லூரியில் இருந்து இரண்டு பேர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுக்கொண்டனர். அந்த இருவரில் நானும் ஒருவராவேன். மற்றையவர் லெலானி சுமனதாச. அவர் வீட்டு நிர்மான கற்கை நெறியை பயின்றார். பிரமிளா இவ்வாறே பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொண்டார்.

1960ம் ஆண்டில் பொறியியல் பீடத்தில் அவர் இணைந்து கொண்ட போது பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. அவரது பெற்றோர் கூட வேறும் ஒர் துறையை தெரிவு செய்யுமாறு கோரியிருந்தனர்.

‘பொறியியல் கற்கை நெறியில் இரும்பு வேலைகள், மரத் தளபாட பாஸ்மார், வெல்டிங், பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பெண் பிள்ளையொன்று எவ்வாறு இதனை செய்வது என சிலர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.’

எனினும் தன்னை தைரியமிழக்கச் செய்யும் மக்களின் கருத்துக்கைள ஒரு சதத்திற்கேனும் பிரமிளா கண்டுகொள்ளவில்லை.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் பெண் பிள்ளையொன்று பொறியியல் பீடத்தில் இணைந்து கொள்வதில்லை எனக் கூறி அதனை விரும்பவில்லை என அவர் கூறுகின்றார்.

பிரமிளவிற்கு முன்னதாக பொறியியல் பீடத்தில் இணைந்து கொள்வதற்காக இரண்டு பெண்கள் விண்ணப்பம் செய்த போதிலும், இருவரிடமும் போதியளவு புள்ளிகள் கிடையாது எனக் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்திருந்தது என பிரமிளா கூறுகின்றார்.

‘பெண் ஒருவர் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் தொழிலை விட்டு விடுவார்கள் என பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறியது. இதனால் ஆண்களுக்கான தொழில் வாய்ப்பு முடக்கப்படுகின்றது என கூறியது. பெண் ஒருவர் பொறியியலாளர் பதவியை பெற்றுக் கொள்வதனை ஆண்கள் எவ்வாறு எதிர்த்தார்கள் என்பதனை பிரமிளா விபரிக்கின்றார். எனினும் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி தொழில் பெற்றுக் கொhண்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பிள்ளைகள் பிறந்ததன் பின்னரும் 95 விதமானவர்கள் தொழில்களில் ஈடுபடுகின்றார்கள்’

அந்தக் காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறிறியல் பீடம் தகரத்தினால் அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றிலேயே காணப்பட்டது. இதன் காரணமாக பொறியியல் பீடம் அந்தக் காலத்தில் தகரப் பெகல்டீ என அழைக்கப்பட்டது.

பல்வேறு தடைகளைத் தாண்டி பிரமிளா 1960ம் ஆண்டில் தகரப் பீடத்தில் இணைந்து கொண்டார்.

‘அந்தக் காலத்தில் பகிடிவதை இவ்வளவு கடுமையாக இருக்கவில்லை. மிகவும் எளிமையான நகைச்சுவைகள் காணப்பட்டன, எனக்கு எவரும் பகிடி வதை செய்யவில்லை. எனினும் எல்லோருக்கும் கூக்குரல் எழுப்பப்பட்டது.’ என அந்தக் கால பகிடிவதை பற்றி பிளமிளா விபரிக்கின்றார்.

அந்தக் காலத்தில் மருத்துவம் பொறியியல் பீடங்களின் மாணவ மாணவியர் முதலாம் ஆண்டில் ஒரே வகுப்பிலேயே அப்போது கல்வி பயின்றிருந்தனர்.

எச்.எஸ்.சீயில் கற்பிக்கப்பட்ட பாடங்களே மீளவும் கற்பிக்கப்பட்டது. இதனால் முதலாம் ஆண்டு மிகவும் எளிமையாக கடந்து சென்றது. இரண்டாம் ஆண்டிலேயே மருத்துவ மற்றும் பொறிறியல் பீடங்கள் தனித்தனியாக பிரிகின்றன.

பல்கலைக்கழகம் சென்ற போது நான் சேலையே அணிந்தேன். அது எனது தந்தையின் சட்டமாக அமைந்ததிருந்தது. அது மட்டுமல்ல தலை வாரிச் செல்ல வேண்டும் என தந்தை உத்தரவிட்டிருந்தார். பொறியியல் பீடத்திற்கு சென்ற காரணத்தினால் இந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க பிரமிளாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பொறியியல் மாணவர்கள் அந்தக் காலத்தில் உருக்கு வேலைகள், மர வேலைகள், வேல்டிங் வேலைகள் போன்றவற்றை நடைமுறை ரீதியாக கற்றுக்கொண்டனர். யுவதி என்ற காரணத்தினால் அந்தப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து பிரமிளாவினால் அதனை விட்டு விலகியிருக்க முடியவில்லை. ஏனைய ஆண் மாணவர்களைப் போன்றே பாரிய இரும்பு தகடுகளை வெட்டி வீசினார். வேல்டிங் செய்தார்.

அனைத்து நடைமுறை பயிற்சிகளின் போதும் ஆண் மாணவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யப்பட்டன, எனினும் எனக்கு அவ்வாறு உதவி வழங்கப்படவில்லை. மர வேலை குறித்து போதிக்கும் விரிவுரையாளர் மொரட்டுவ பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தளபாட வேலைகள் செய்வார்கள் என கூறியிருந்தார். என தனியாகவே நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த அடக்குமுறைகள் அவருக்கு நன்மையையே ஏற்படுத்தியிருந்தது. நடைமுறைப் பயிற்சிகளை உரிய முறையில் மேற்கொண்ட காரணத்தினால் பின்னொரு காலத்தில் பணியில் ஈடுபட்ட போது எந்தவொரு தொழிலாளியும் அவரை ஏமாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் உருவாக்கிய மரத்திலான மின்குமிழ் தாங்கியொன்றும் இன்னமும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள இந்த மின்குமிழ் தாங்கியை பாதுகாப்பாக வைத்திருப்பதாக பிரமிளா தெரிவித்துள்ளார்.

PremilaYoung.jpg

1964ம் ஆண்டில் இலங்கையின் முதல் பெண் பொறியியலாளராக பிரமிளா சிவபிரகாசபிள்ளை பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

‘நான்தான் முதல் பெண் பொறியியலாளராவேன், எனக்கு பின்னர் 1966ம் ஆண்டில் சுசி முனசிங்க (சுனில் முனசிங்கவின் மனைவி) மின் பொறிறியல் பயிற்சி நெறியை தெரிவு செய்தார். எனக்கு பத்து ஆண்டுகளின் பின்னர் அதாவது 1970ம் அண்டில் இந்திரா அருள்பிரகாசம் மெக்கானிக்கல் பொறியியல் பட்ட கற்கை நெறியை தெரிந்திருந்தார். இந்திரா சமரசேகர தற்போது கனடாவின் அல்பர்ட்டாவின் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக கடமையாற்றி வருகின்றார் என பிரமிளா கடந்த காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பீடு செய்துள்ளார்.

பட்டக் கற்கை நெறியை பூர்த்தி செய்ததன் பின்னர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவியொன்று வழங்கப்டப்டது. இந்தக் காலத்தில் கொழும்பில் காணப்பட்ட பொறியியல் பீடம் பேராதனைக்கு மாற்றப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் அநேகமான இயந்திரங்களை நிறுவுவதற்கு நாம் மிகுந்த சிரமப்பட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக கடமையாற்றிய பிரமிளா சிறிது காலத்தின் பின்னர் அரசாங்கத் திணைக்களமொன்றில் பொறியியலாளர் பதவி வழங்கப்பட்டது.

எனினும், சில மாதங்களின் பின்னர் இங்கிலாந்தில் பட்டப்பின் கற்கை நெறி ஒன்றை கற்க அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்கியருந்தது. இதனால் எனக்கு களத்தில் பணிகள் வழங்கப்படவில்லை. சில மாதங்கள் காரியாலயப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.

1965ம் ஆண்டு பிரமிளா பட்ட பின் கற்கை நெறி ஒன்றி;ற்காக பிரித்தானியா சென்றார். அவருடன் ஹர்சா சிறிசேன என்ற மற்றுமொரு யுவதியும் பட்ட பின் கற்கை நெறிக்காக பிரிட்டன் சென்றிருந்தார். ஹர்சா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், பிரமிளா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்கை நெறிகளை ஆரம்பித்தனர்.

‘நான் சமர்வில் கல்லூரிக்கு சென்றிருந்தேன் அங்கு பெண்கள் மட்டுமெ கற்றுக்கொண்டனர்.’ இந்தக் காலத்தில் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் கல்லூரியில் பட்டக் கற்கை நெறி ஒன்றை கற்று வந்தார்.’

SivaFamily.jpg

பிரமிளா சிவபிரகாசபிள்ளை, சிவசேகரம் என்ற பெயர் மாற்றம் பெறும் நிகழ்வு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றக் காலத்தில் இடம்பெற்றது. 1968ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி பிரமிளா திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

பிரமிளாவின் கணவர் சிவானந்தம் சிவசேகரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்றுவந்தார். கல்வி கற்கும் காலத்தில் பிரமிளா குறித்த ஓர் ஈர்ப்பு சிவசேகரத்திற்கு ஏற்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் இருவரும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.

‘என்னை பிடிக்குமா என நான் பிரமிளாவிடம் கேட்டேன்’ என பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்தார்.
என்ன சொன்னார் பிரமிளா?முடியாது என்றார் பிரமிளா என்றார் சிவசேகரகம். ‘இல்லை அப்பாவிடம் கேட்குமாறு நான் கூறினேன்’ என 72 வயதான பிரமிளா வெட்கத்துடன் தெரிவித்தார்.

அவர்கள் இருவரினதும் காதலின் பிரதிபலனை தற்போது பிரித்தானியாவில் காண முடிகின்றது. அவர்களது ஒரே மகன் மணிமாறன் சிவசேகரம் ஆவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான மணிமாறன் ஐக்கிய இராச்சியத்தில் ஓர் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் பொறியியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்ற பிரமிளாவிற்கு சந்தர்ப்பம் கிட்டியது. எதிர்வரும் நூற்றாண்டில் பெண் பொறியியலாளர்களின் பணி என்ற தொனிப் பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் ஓர் அமர்வின் தலைவியாகவும் பிரமிளா கடயைமாற்றியிருந்தார்.

பட்ட பின் கற்கை நெறியை பூர்த்தி செய்த பிரமிளா மீளவும் இலங்கை அரச சேவையில் இணைந்து கொள்கின்றார். 1971ம் ஆண்டு அரச கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளராக நியமனம் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டுத்தாபனத்தின் முதல் பொறியியலாளராக கடமையாற்றினார்.

பெண்களினால் முடியாது என கூறப்பட்ட தொழிலை நான் திறம்பட செய்தேன். பணியாற்றும் போதே நான் சில விடயங்களை பாஸ்மாரிடம் கற்றுக்கொண்டேன். எனது காலத்தில் மாத்தளை வைத்தியசாலைக்கு ஒர் களஞ்சியசாலை அமைக்கப்பட்டது. பல மாடிகளைக் கொண்ட ரெலிகொம் நிறுவனத்தின் பல கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டன.

முதல் நியமனமாக கட்டட திணைக்களத்தின் கண்டி காரியாலயத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பிரமிளா பகிர்ந்து கொள்கின்றார். இந்த அனுபவம் மறக்க முடியாதது என்கின்றார்.

‘ஒரு நாள் கண்டி அரசாங்க அதிபர் என்னை அழைத்து தமது அலுவலக மலசல கூடங்கள் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அதனை சோதனையிடுமாறும் கோரியிருந்தார். இந்த விடயம் குறித்து மாவட்ட பிரதம பொறியியலாளருக்கு அறிவித்தேன். பீ.எச்டி பட்டம் பெற்ற ஒருவர் அவ்வாறு பணியாற்ற வேண்டியதில்லை என பிரதம பொறியியலாளர் கூறினார்.’ பெண் என்ற காரணத்தினால் எனக்கு இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகவே நான் இதனைக் கருதுகின்றேன்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச உள்ளுராட்சி மன்ற மற்றும் வீடமைப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நான் கொழும்பு கட்டட திணைக்களத்தின் பொறியியலாளராக கடமையாற்றியிருந்தேன்.

‘பிரேமதாச அவர்கள் ஓர் நாள், தான் கல்வி கற்ற வாழைத்தோட்ட பாடசாலையை இரண்டு மாடிகளாக தரம் உயர்த்துமாறு’ கோரியிருந்தார்.

இந்தப் பாடசாலை அமைந்துள்ள மண்ணை பரிசோதனை செய்த போது நிலக்கீழ் சேற்று மண் காணப்பட்டமை தெரியவந்தது. அவ்வாறான ஓர் மண்ணில் மாடிகளைக் கொண்ட கட்டடம் அமைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

‘பிரேமதாசவிடம் சென்று கட்டடம் அமைக்க முடியாது என கூறுவதற்கு பிரதான பொறியியலாளர்கள் அஞ்சினார்கள். பெண் ஆகிய என்னிடம் அந்தப் பணியை ஒப்படைத்தனர்.’

பிரமிளா, பிரேமதாசவிடம் சென்று நிலைமையை விளக்கினார். இந்த விளக்கத்தை பிரேமதாச ஏற்றுக்கொண்டார். ஆண் பொறியியலாளர்கள் அஞ்சிய பிரச்சினைக்கு பிரமிளா இலகுவில் தீர்வு வழங்கினார்.
அவர் கட்டட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய காலத்தில் இதேவிதமான ஓர் அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டது.

பாரிய கட்டடம் அமைக்கும் போது இரவு வேளையில் அத்திவாரத்தை சென்று பார்வையிட வேண்டும், அந்தப் பணி ஓர் கனிஸ்ட பொறியியலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தப் பணியை மேற்கொள்கின்றீர்களாக என பிரமிளா குறித்த கனிஸ்ட பொறியியலாளரிடம் கேட்டார்.

இது உங்கள் பணமில்லையே என கனிஸ்ட பொறியியலாளர் பதிலளித்திருந்தார். அப்போது நான் கூறினேன் இது மக்களின் பணமாகும், எனவே அது எனதும் பணமாகும் எனக் கூறினேன் என பிரமிளா தெரிவித்துள்ளார்.பெண் என்ற காரணத்தினால் இந்த நிலையை எதிர்நோக்க நேரிட்டது என அவர் கருதுகின்றார்.

1978ம் ஆண்டில் கட்டடத் திணைக்களத்தின் பிரதம கட்டுமான பொறியியலாளராக நியமிக்கப்பட்டார். பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தேசிய நூலகம், காவல்துறை தலைமையகம், மாளிகாவத்தை அரச கட்டடங்கள் சில என்பன பிரமிளாவின் தலைiமையில் நிர்மானிக்கப்பட்டவையாகும்.

கொரிய நிறுவனம் செத்சிரியபா கட்டடத்தை அமைத்த போதும், ஜப்பான் இசுறுபாயவை அமைத்த போதும் அவற்றை கண்காணித்த பிரதம பொறியியலாளராக பிரமிளா செயற்பட்டிருந்தார்.

இசுறுபாய நிர்மானிக்கப்பட்ட போது அந்த மண்ணை தெற்காசியாவில் புகழ்பூத்த திரு.துரைராஜா பரிசோதனையிட்டிருந்தார். இந்தப் பகுதியில் கபுக் மண் காணப்படுவதாகவும் இதனால் உறுதியான கட்டடத்தை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியிருந்தார், இந்த விடயம் கொரிய பொறியியலாளர்களுக்கு புரியவில்லை என பிரமிளா கூறியுள்ளார்.

1976ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரையில் இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்படும் தி இன்ஜினியர் என்ற சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றியிருந்தார். 1906 முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியை மையமாகக் கொண்டு 2006ம் ஆண்டில் இலங்கை பெறியியலாளர் வரலாறு என்ற பெறுமதி மிக்க நூல் ஒன்றை உருவாக்கியிருந்தார். 1997ம் ஆண்டு முதல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய பிரமிளா 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.

இலங்கையின் சிலுமின பத்திரிகையில் வந்த இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் என்ற இந்த நேர்காணலை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வழங்குகிறது. இதனை மீள் பதிவு செய்பவர்கள் மொழிபெயர்ப்பின் தமிழ் மூலமான குளோபல் தமிழ்ச் செய்திகளை குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.

https://globaltamilnews.net/archives/25498

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.