Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பை....... இலங்கை, தெற்காசியா, அதற்கும் அப்பால் ஒரு பார்வை

Featured Replies

குப்பை...

இலங்கை, தெற்காசியா, அதற்கும் அப்பால் ஒரு பார்வை

 

வறுமை ஒழிப்­புக்கு அர்ப்­ப­ணிக்­கப்­பட்­ட­தாக இலங்கை அர­சாங்­கத்­தினால் பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருக்கும் இவ்­வ­ரு­டத்தின் நான்­கா­வது மாதத்தை நாம் கடந்து விட்டோம். அச­மத்­துவம் மிகுந்­தி­ருக்கும் ஒரு நாட்டில் சமத்­து­வத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் அர­சாங்கம் தன்னை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கி­றது என்று நாம் நினைத்­துக்­கொள்­வோம். 2017 இல் வறுமை எவ்­வாறு கையா­ளப்­படப் போகின்­றது என்­பதை நாம் இன்­னமும் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆனால், சித்­திரைப் புத்­தாண்டு தினத்­தன்று அச­மத்­து­வத்தின் இருண்ட முகத்தை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சக மனிதப் பிற­வி­களின் வீடு­க­ளுக்கு அரு­காக குப்பை கொட்டிக் குவிக்­கப்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டதைப் பார்க்கும் போது இந்த அச­மத்­து­வ­மான சமு­தா­யத்­துடன் இலங்கை எந்­த­ளவு தூரத்­துக்கு ஒத்­துப்­போகக் கூடி­ய­தாக இருந்­தது என்ற விறைப்­பான யதார்த்­தத்தைப் புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அந்த மக்கள் கொழும்பின் குப்­பை­யுடன் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மல்ல. எதிர்ப்பைக் காட்­டி­ய­போது கைது செய்­யப்­படும் ஆபத்­தையும் எதிர்­நோக்க வேண்­டி­யி­ருந்­தது.

நீண்ட கால­மாக முடை நாற்­ற­மெ­டுத்த இந்த குப்பைப் பிரச்­சினை மீது இப்­போது பெரும் பர­ப­ரப்­புடன் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது. குப்பை கொட்­டு­வதை எதிர்த்து ஆர்ப்­பாட்டம் செய்­வதை தடுப்­ப­தற்கு வர்த்­த­மானி பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. புதிய கொள்­கை­களும் அணு­கு­மு­றை­களும் அறி­விக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக எமக்குக் கூறப்­ப­டு­கி­றது. மீதொட்­ட­முல்ல குப்பை மேட்­டுக்குள் உரு­வா­கின்ற மீதேன் வாயு பாரிய வெடிப்­புக்கு வழி­வ­குக்­கப்­போ­கி­றது என்று இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த ஜப்­பா­னிய நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கி­றார்கள். தங்­க­ளது மனித உரி­மைகள் அப்­பட்­ட­மான முறையில் மீறப்­பட்­ட­தற்கு எதி­ராகப் பல வரு­டங்­க­ளாக போராட்­டங்­களை நடத்­திய மக்கள் நாட்டின் சுகா­தாரம் மற்றும் கழி­வு­அ­கற்றல் ஏற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய அடிப்­படைக் கொள்­கைகள் மீது அர­சாங்­கத்தின் கவ­னத்தைத் திருப்­பு­வ­தற்கு சாக­வேண்­டி­யி­ருக்­கி­றது. இது எவ்­வ­ளவு பெரிய அநி­யா­ய­மாகும்.

அர­சாங்­கத்தின் புதிய குப்பை அகற்றல் மற்றும் மீள் சுழற்சிக் கொள்கை என்­ன­வென்­பதை அறிந்து கொள்­வ­தற்கு நாம் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை, தற்­போது வழக்கில் உள்ள கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நாடு மல்லுக் கட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. குப்­பை­களை பிரித்து வகைப்­ப­டுத்­து­வது ஒவ்­வொரு வீட்­டு­ரி­மை­யா­ள­ரி­னதும் பொறுப்பு என்று அறி­வு­றுத்தும் அண்­மைய ஒழுங்­கு­விதி பல சந்­தர்ப்­பங்­களில் தலை­நகர் கொழும்பில் மேட்டுக் குடி­யினர் வாழ்­கின்ற சில பகு­தி­களில் நாட்­க­ணக்­காக குப்பை சேக­ரிக்­கப்­ப­டாமல் வெளியில் கிடக்கும் நிலைக்கு வழி­வ­குத்­தி­ருந்­தது. ஏனென்றால், அந்தப் பகு­தி­களில் வாழ்­ப­வர்கள் தங்­க­ளது குப்­பை­களை வகைப்­ப­டுத்த விரும்­ப­வில்லை. இந்த நிலைமை பொறுப்­பு­ணர்வு தொடர்பில் குடி­மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வை தோற்­று­விக்க வேண்­டிய அவ­சி­யத்தை உணர்த்தி நிற்­கி­றது. நமது நாட்டு மக்கள் மத்­தியில் அந்தப் பொறுப்­பு­ணர்வு தற்­போது அறவே இல்லை என்­றுதான் சொல்ல வேண்டும். அடுத்­த­வரைப் பற்றி யோசிக்­காமல் கழி­வு­களை ரயில்கள், பஸ்கள் மற்றும் ஆடம்­பரக் கார்­க­ளுக்குள் இருந்து வெளியே வீசு­கி­றார்கள். ஜப்பான், சுவீடன் அல்­லது திண்­மக்­க­ழி­வு­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஒரு­வ­ருக்கு இருக்க வேண்­டிய கடப்­பாடு குறித்த கடு­மை­யான சட்­டங்­களும் வழி­காட்­டல்­களும் நடை­மு­றையில் உள்ள நாடு­க­ளுக்கு விஜயம் செய்­யும்­போது இவ்­வாறு நடந்து கொண்டால் இலங்­கை­யர்கள் அப­ராதம் செலுத்­த­வேண்­டி­யி­ருக்கும் அல்­லது சிறை­வா­சத்தைக் கூட அனு­ப­விக்க வேண்­டி­யி­ருக்கும்.

குப்­பையின் மூல­மாக இலங்கை அதன் மக்­களைக் கொல்­வ­துடன் பொன்­முட்­டை­யிடும் வாத்து என்று வர்­ணிக்­கப்­ப­டக்­கூ­டிய சுற்றுலாத்­து­றை­யையும் மெது­மெ­து­வாக கொன்­று­வி­டு­கி­றது. நாட்டின் இயற்கை எழில் கொண்ட பல பகு­தி­களில் அங்­கு­மிங்கும் பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழி­வுகள் குவிந்து காணப்­ப­டு­கின்­றன. இது­மி­கவும் கவ­லைக்­கு­ரி­ய­தொரு நிலை­வ­ர­மாகும். பாட­சாலை மட்­டத்தில் இருந்தே சுற்­றாடல் பாது­காப்பு தொடர்­பான உறு­தி­யான நெறி­முறை பற்­றிய போத­னை­களைச் செய்­வதன் மூல­மாக குப்­பை­களைக் குறைந்­த­பட்­ச­மாக்­கு­வது, அப்­பு­றப்­ப­டுத்­து­வது மற்றும் மீள் சுழற்சி செயற்­பா­டு­களை சமூ­கத்­துக்கு பரிச்­ச­ய­மாக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இலங்­கையில் குப்பை அகற்றல் செயன்­மு­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்த வேண்­டிய தேவையை பல அறிக்­கை­களும் ஆய்­வு­களும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. குப்பை சேக­ரிப்­ப­வர்கள் செய்­கின்ற முக்­கி­ய­மான சேவைக்கு ஒரு கண்­ணி­யத்தைக் கொடுப்­ப­தற்கு தேவைப்­ப­டு­கின்ற அடிப்­ப­டை­யான துணை உப­க­ர­ணங்­களை வழங்­கு­வதன் மூல­மாக இந்த நவீ­ன­ம­ய­மாக்­கத்தைத் தொடங்க முடியும். வறுமை பற்­றிய ஆய்­வுக்­கான நிலையம் அண்­மையில் மேற்­கொண்ட ஆய்­வொன்று குப்பை சேக­ரிப்­ப­வர்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்பில் கூடுதல் கவ­னத்தைச் செலுத்­தி­யி­ருந்­தது. குப்பை சேக­ரிக்கும் பணிகள் வெறும் கைக­ளா­லேயே பெரும்­பாலும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்றும் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு இந்த குப்பை அகற்றும் தொழி­லுடன் அடை­யாளம் காட்­டப்­ப­டு­கி­றது என்றும் அந்த ஆய்வில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. குப்பை சேக­ரிக்கும் பணி­களில் ஈடு­ப­டு­கின்ற தொழி­லா­ளர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் முது­மை­ய­டைந்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளாக இருப்­பதன் கார­ணத்­தினால் அந்தப் பணிகள் பாதிக்­கப்­ப­டு­வ­தையும் பல அறிக்­கைகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன. இந்தத் தொழி­லா­ளர்கள் மிகவும் குறைந்த வேத­னத்­தையே பெறு­கின்­றார்கள் என்­ப­தையும் அவ­தா­னிக்கத் தவறக் கூடாது. சுத்­தி­க­ரிப்பு பணி­க­ளுடன் இணைந்­த­தாகக் காணப்­ப­டு­கின்ற சாதி மற்றும் வர்க்க அடிப்­ப­டை­யி­லான போக்கை மாற்­று­வ­தற்கு மிகவும் அக்­க­றை­யுடன் ஆழ­மாக சிந்­தித்து நீண்­ட­காலத் திட்­ட­மொன்றை வகுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கொழும்பில் உயர்­வர்க்­கத்தைச் சேர்ந்­த­வர்கள் தங்­க­ளது குப்­பை­களைத் தாங்­களே வகைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வதன் மூலம் இதைத்­தொ­டங்க முடியும்.

ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றைக்­கான தேவை  

2010 ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்ட பிலி­சறு தேசிய திண்மக் கழிவு முகா­மைத்­துவ செயற்­றிட்டம் போன்ற ஏற்­க­னவே நடை­மு­றையில் இருக்கும் முன்­மு­யற்­சி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மாந­கர சபைகள், நக­ர­ ச­பைகள் மற்றும் பிர­தேச சபைகள் மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கார சபை­யு­டனும் நாட்டு மக்­க­ளு­டனும் தனியார் துறை­யு­டனும் எவ்­வாறு சேர்ந்து பணி­யாற்ற முடி­யு­மென்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றை­யொன்று நாட்­டுக்கு மிக­மிக அவ­சி­ய­மாகத் தேவைப்­ப­டு­கி­றது.

பிலி­சறு தேசிய திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவச் செயற்­றிட்டம் எதிர்­நோக்­கிய முக்­கி­ய­மான சவால் மக்­க­ளி­ட­மி­ருந்து போது­மான ஒத்­து­ழைப்புக் கிடைக்­கா­மை­யே­யாகும். கொரிய மற்றும் ஜப்­பா­னிய அர­சாங்­கங்கள், உல­க­வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி ஆகி­ய­வற்றின் நன்­கொ­டை­களின் ஆத­ர­வுடன் 560 கோடி ரூபா செலவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென்ற உறு­தி­மொ­ழி­யுடன் இலங்கை அர­சாங்­கத்­தினால் தொடங்­கப்­பட்ட அந்த செயற்­திட்டம் குப்பை அகற்றல் முகா­மைத்­துவம் தொடர்பில் தேசியக் கொள்­கை­யொன்­றையும் தேசியத் தந்­தி­ரோ­பா­ய­மொன்­றையும் வகுப்­ப­தையும் இந்­தத்­து­றை­யுடன் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு பயிற்­சி­களை வழங்­கு­வ­தையும் விழிப்­பு­ணர்வு பிர­சா­ர­மொன்றை முன்­னெ­டுப்­ப­தையும் நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தது.

மீள் சுழற்சி செயற்­றிட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கா­ர­சபை 125 க்கும் அதி­க­மான உள்­ளூ­ராட்சிச் சபை­க­ளுக்கு நிதி­யு­த­வி­யையும் தொழில்­நுட்ப ஆத­ர­வையும் கொடுக்­கி­றது என்­கின்ற அதே­வேளை, முறை­யாக பிரித்து வகைப்­ப­டுத்­தப்­ப­டாத குப்­பை­களை மீள் சுழற்சி செய்­வதில் பெரும் செலவு ஏற்­ப­டு­கி­றது என்­பது இங்கு வலி­யு­றுத்தி சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டிய விட­ய­மாகும். உள்­ளூ­ராட்சி சபை­க­ளினால் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்ற கழி­வுகள் முறை­யாக வேறாக்கி வகைப்­ப­டுத்­தப்­ப­டா­த­வை­யா­கவும் மிகவும் தரக்­கு­றை­வா­ன­வை­யா­கவும் இருப்­ப­தாக மீள் சூழற்சி இயந்­திர சாதன நிலை­யங்­களில் பெரும்­பா­லா­னவை முறை­யிட்­டி­ருந்­தன. இது பிர­தேச சபைகள் எதிர்­நோக்­கு­கின்ற ஒரு குறிப்­பி­டத்­தக்க பிரச்­சி­னை­யாகும். இதனால் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்ற கழி­வுகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு மீண்டும் குப்பை கொட்டும் இடங்­க­ளுக்கே அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்­றதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

அதே­வேளை, அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­ப­ட­வி­ருக்கும் புதிய கொள்கை குப்பை கொட்டும் இடங்­களைச் சுற்­றி­வர போது­மான அரண் வல­ய­மொன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை மீது கவனம் செலுத்­து­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. குப்பை அகற்றலைக் கையா­ளு­வதில் வலு­வான சட்­டங்­களின் ஆத­ர­வுடன் விஞ்­ஞான பூர்­வ­மான வழி­மு­றை­களைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு முன்­னு­ரிமை கொடுக்­கின்ற ஏனைய நாடு­க­ளி­ட­மி­ருந்து இலங்­கையின் கொள்கை வகுப்­பா­ளர்கள் அனு­ப­வங்­களை இன்­னமும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

உல­க­ளா­விய சில உதா­ர­ணங்கள்  

சிறிய தீவு­க­ளாக அமைந்­தி­ருக்கக் கூடிய நாடுகள் குப்பை அகற்­று­வதில் எதிர்­நோக்­கப்­ப­டக்­கூ­டிய சவால்­களை, மக்­களின் பங்­கேற்பை உறு­தி­செய்­கின்ற சட்­டங்­களை பெரு­ம­ள­வுக்கு அடிப்­ப­டை­யாகக் கொண்டு எவ்­வாறு நடை­முறைச் சாத்­தி­ய­மான முறை­யிலும் விஞ்­ஞா­ன­பூர்­வ­மா­கவும் கையா­ளு­கின்­றன என்­ப­தற்கு ஜப்­பானும் சிங்­கப்­பூரும் நல்ல உதா­ர­ணங்­க­ளாகும்.

முழு நலம் வாய்ந்­த­தொரு மூலப் பொருள் சுழற்சிச் சமு­தா­யத்தை (Material cycle Society) நிறு­வு­வ­தற்­கான அடிப்­படைச் சட்­ட­மொன்றை ஜப்பான் கொண்­டி­ருக்­கி­றது. இயற்கை வளங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை மிகவும் சிக்­க­ன­மான முறையில் மேற்­கொண்டு சாத்­தி­ய­மா­ன­ள­வுக்கு சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாதிப்பைக் குறைத்து உற்­பத்­தி­களை உகந்த முறையில் மீள் சுழற்­சிக்­குட்­ப­டுத்திப் பயன்­ப­டுத்தி கழிவுப் பெருக்­கத்தைக் குறைக்­கின்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற ஒரு சமு­தா­யத்­தையே மூலப்­பொருள் சுழற்சிச் சமு­தாயம் என்று அழைக்­கி­றார்கள். குடி­மக்­களின் ஒத்­து­ழைப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கென நன்கு வரை­ய­றுக்­கப்­பட்ட ஒழுங்­கு­வி­தி­க­ளையும் ஜப்பான் கொண்­டி­ருக்­கி­றது. குப்­பைகள் முறை­யாகப் பிரித்து வகைப்­ப­டுத்தத் தவ­று­ப­வர்­களை அவர்கள் வசிக்­கின்ற பகு­தி­களில் இருந்து வெளி­யேற்­று­வதும் இந்த ஒழுங்­கு­வி­தி­களில் அடங்கும். குப்­பைகள் தவ­றான முறையில் வகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் அவற்றைத் திருப்பி உரி­மை­யா­ள­ருக்கே (அவரை அவ­மா­னப்­ப­டுத்தும் குறிப்பு எழு­தப்­பட்ட துண்டு ஒட்­டப்­பட்டு) அனுப்­பி­வைக்கும் நடை­மு­றையும் பின்­பற்­றப்­ப­டு­கி­றது. ஜப்­பானில் குறை­யே­து­மில்­லாத வகையில் துப்­பு­ர­வான குப்பை அகற்றும் நிலை­யங்கள் நக­ரங்­களின் மத்­தி­யில்தான் அமைந்­தி­ருக்­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சர்­வ­தேச மட்­டத்தில் ஜப்பான் மூன்று அம்ச முன்­மு­யற்சி யோச­னை­யொன்றை 2004 ஆம் ஆண்டில் உலகின் முன்­னணி கைத்­தொழில் மய நாடு­களின் உச்­சி­ ம­ா­நாட்டில் (G–8 Summit) முன்­வைத்­தது. குறைப்புச் செய்தல், மீளப்­ப­யன்­ப­டுத்­துதல் மற்றும் மீள் சுழற்சி செய்தல் என்­ப­துவே அந்த யோச­னை­யாகும். (3R–Initiative–Reduce, Reuse and Recycle) தோற்­று­விக்­கப்­ப­டு­கின்ற கழி­வு­களின் அளவை குறைப்­பதை நோக்­க­மாகக் கொண்டு உல­க­ளா­விய ரீதியில் இந்த மூன்று அம்ச முன்­மு­யற்­சியை மேம்­ப­டுத்­து­வதே ஜப்­பானின் திட்­ட­மாகும்.

மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தொரு இடப்­ப­ரப்­பிற்குள் ஒரு­மி­கு­தி­யான கழி­வுத்­தி­றனைக் கையா­ள­வேண்­டிய சவாலை எதிர்­நோக்­கு­கின்ற போதிலும், சிங்­கப்பூர் அறவே கழிவு இல்­லாத – அறவே குப்பை கொட்­டு­மிடம் இல்­லாத இலக்­கு­களை நோக்கி முயற்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட திட்­ட­மி­ட­லுக்­கான ஒரு வகை­மா­தி­ரி­யான நாடாக விளங்­கு­கி­றது. கழி­வு­களை எரித்து நீறாக்கும் இயந்­திர சாத­னத்தின் ஊடாக சக்­தி­யாக மாற்­று­கின்ற நடை­மு­றை­யொன்றை சிங்­கப்பூர் பிர­தா­ன­மாக பின்­பற்­று­கி­றது. அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெ­று­கின்ற உறு­தி­யான முத­லீட்டின் உத­வி­யுடன் மீள் சுழற்­சியை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற சுவீடன் குப்பை போதாமல் போகின்ற நிலையில் மீள் சுழற்சி இயந்­திர சாத­னங்­களை தொடர்ந்தும் இயங்கச் செய்­வ­தற்­காக வெளி­நா­டு­களில் இருந்து குப்­பையை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கி­றது. 1980களின் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து தென்­கொ­ரி­யாவில் குப்பை கொட்டும் இடங்கள் 90 சத­வீ­தத்­தி­லி­ருந்து 10 சத­வீ­தத்­துக்கு குறை­வ­டைந்­தி­ருப்­ப­தா­கவும் மீள்­சு­ழற்சி 10 சத­வீ­தத்­தி­லி­ருந்து 80 சத­வீ­தத்­துக்கு உயர்­வ­டைந்­தி­ருப்­ப­தா­கவும் 2015 கழிவு முகா­மைத்­துவ ஆய்வு அறிக்­கையின் மூலம் தெரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

தெற்­கா­சிய நிலை­வரம்

ஒப்­பீட்­ட­ளவில் தெற்­கா­சி­யாவின் பெரும்­ப­குதி குப்பை அலையில் மூழ்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இதற்குக் காரணம் அப்­பி­ராந்­தி­யத்தின் நாடுகள் மத்­தியில் உருப்­ப­டி­யான கொள்கைத் திட்­டங்கள் இல்லை. அவ்­வாறு இருந்­தாலும் அக்­கொள்கைத் திட்­டங்கள் வெறு­மனே காகி­தத்­தி­லேயே இருக்­கின்­றன. நடை­மு­றையில் இல்லை. தெற்­கா­சி­யாவைப் பொறுத்­த­வரை பூட்டான் நாட்டை ஒரு நேர்­ம­றை­யான உதா­ர­ண­மாகக் கூற­மு­டியும். பெரு­ம­ள­வுக்கு நுகர்வுக் கலா­சா­ரத்­திற்குள் மூழ்­காமல் இருக்கும் பூட்டான் கழிவை பச­ளை­யாக்­கு­வ­தற்கு முன்­னு­ரிமை கொடுக்கும் செயற்­பா­டு­களின் மூல­மாக 2030 ஆம் ஆண்­ட­ளவில் அறவே கழிவு இல்­லாத நாடாகும் இலக்­குடன் ஒரு தெளி­வான நோக்கைக் கொண்­டி­ருக்­கி­றது. இதை அந்த நாடு சுற்­றாடல் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய அதன் கொள்­கை­க­ளுக்கு சம­தை­யான முறை­யி­லேயே முன்­னெ­டுக்­கி­றது. பூட்­டானின் 72 சத­வீத நிலப்­ப­ரப்பு வனப்­போர்­வைக்­குள்­ளேயே இருக்­கி­றது. 60சத­வீத பகுதி பாது­காக்­கப்­பட்ட பகு­தி­யாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. 1999 ஆம் ஆண்டு பிளாஸ்­டிக்கைத் தடை செய்த அந்த நாடு 2005 ஆம் ஆண்­டிலும் 2009 ஆம் ஆண்­டிலும் அந்தத் தடையை மீளவும் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. 2012 ஆம் ஆண்டில் கொண்­டு­வ­ரப்­பட்ட கழிவுத் தடுப்பு மற்றும் முகா­மைத்­துவ ஒழுங்­கு­வி­தி­களின் கீழ் பிளாஸ்டிக் பயன்­பாட்டை உற்­சா­கப்­ப­டுத்­தாத செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதன் கொள்­கை­களை பொது­மக்கள் பின்­பற்றிச் செயற்­ப­டு­வதைக் கண்­கா­ணிப்­பதில் வளப்­பற்­றாக்­கு­றையை பூட்டான் எதிர்­நோக்­கு­கின்­ற­போ­திலும், அனர்த்­தங்கள் நிகழ்­வ­தற்கு முன்­ப­தா­கவே அவற்றைத் தடுப்­ப­தற்­கான ஒரு அர­சியல் மற்றும் தேசிய துணி­வாற்றல் இருப்­பதன் கார­ணத்­தினால், தெற்­கா­சி­யாவின் ஏனைய நாடு­களைக் காட்­டிலும் பூட்டான் இது­வி­ட­யத்தில் முன்­னேற்­ற­மான நிலையில் இருக்­கி­றது.

தெற்­கா­சிய நாடுகள் அவற்றின் குப்­பை­களை பச­ளை­யாக்­கு­வது குறித்து ஏன் அக்­க­றை­யுடன் சிந்­திக்­க­வில்லை என்­பது கேட்­கப்­ப­ட­வேண்­டி­ய­தொரு முக்­கி­ய­மான கேள்­வி­யாகும். ‘தெற்­கா­சி­யாவில் மாந­கர சேதனக் கழி­வை­நோக்கி’(Towards Municipal organic waste in south Asia) என்ற தலைப்­பி­லான ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் 2011 அறிக்­கை­யொன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டதைப் போன்று தெற்­கா­சிய பிராந்­தி­யத்தின் திண்­மக்­க­ழி­வு­களில் குறைந்­த­பட்சம் 70 சத­வீ­த­மா­னவை சேதனப் பொருட்­க­ளாகும்.

தெற்­கா­சி­யாவில் அநேக­மாக சகல நாடு­களும் நக­ரங்­களில் குப்பை அகற்றல் மற்றும் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு தொடர்பில் அதுவும் குறிப்­பாக பிளாஸ்டிக் ஆபத்து தொடர்பில் ஏதோ ஒரு ‘கொள்­கையை’க் கொண்­டி­ருக்­கின்­ற­போ­திலும், மெத்­த­ன­மான போக்­கி­னாலும் செயற்­தி­ற­னின்­மை­யாலும் சிக்கல் ஏற்­பட்­டு­வி­டு­கி­றது. இது தெற்­கா­சியா பூரா­கவும் காணப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற ஒரு பொது­வான நிலை­மை­யாகும். பைகள் மற்றும் கரண்டி வகைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்­களை குப்­பை­யுடன் சேர்த்து எறி­வதை இந்­தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அண்­மைய வரு­டங்­களில் தடை­செய்­தி­ருக்­கின்ற போதிலும், அதன் நடை­மு­றைப்­ப­டுத்தல் பெரு­ம­ள­வுக்கு அலங்­கோ­ல­மா­கவே இருக்­கி­றது.

மாலை­தீவில் 2020 ஆம் ஆண்­ட­ளவில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்­வ­தற்­கான ஒரு மக்கள் இயக்கம் 2016 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. மாலை­தீவு சுங்­க­சேவை வெளி­யிட்ட தக­வல்­களின் பிர­காரம் 2015 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா பெறும­தி­யான 6கோடியே 60 இலட்சம் பிளாஸ்டிக் பைகள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­தாக அறிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இவற்றில் பெரும்­பா­லான பைகள் இந்து சமுத்­தி­ரத்­தையே சென்­ற­டைந்­தி­ருந்­தன.

இலங்­கை­யிலே பைகள், போத்­தல்கள் மற்றும் உணவு பொதி செய்யும் தாள்கள் என்று தினமும் பெரு­ம­ளவு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மீள்­சு­ழற்சி என்­பது தேசியக் கொள்­கை­யொன்றின் அங்­க­மாக உள்­வாங்­கப்­ப­டாத நிலையில், தற்­போது சிறி­ய­ளவில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற தனியார் மீள் சுழற்சி செயற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு தனி­யார்­து­றையை ஈடு­ப­டுத்­து­வதில் நாட்டம் காட்­டப்­ப­ட­வில்லை.

தெற்­கா­சி­யாவில் குப்­பையை அகற்றும் செயற்­பா­டுகள் குறை­பா­டு­டை­ய­தாக இருக்­கி­ற­தென்றால், மருத்­துவக் கழி­வு­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் படு­மோ­ச­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்­றுதான் கூற­வேண்டும். ஒரு திட்­ட­மிட்ட வகை­யி­லான மருத்­துவக் கழிவு அகற்றும் செயற்­பாடு இல்லை.

பெரும்­பா­லான தெற்­கா­சிய நாடு­க­ளிலே, சுகா­தாரப் பரா­ம­ரிப்புக் கழி­வுகள் விளை­வு­க­ளைப்­பற்றி பொருட்­ப­டுத்­தாமல் கவ­ன­மற்ற முறையில் மாந­கர திண்­மக்­க­ழிவு கொட்டும் இடங்­களில் அல்­லது திறந்த வெளி­களில் போடப்­ப­டு­கின்­றன என்று தெற்­கா­சி­யாவில் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு கழிவு முகா­மைத்­துவ தொடர்பில் சி.விஸ்­வ­நா­தனும் ராதா அதி­கா­ரியும் மேற்­கொண்ட ஆய்­வுக்குப் பிறகு அவர்­க­ளினால் 2006 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. பெரும்­பாலும் பதிவு செய்­யப்­ப­டாத முறையில் பல்கிப் பெருகும் கிளி­னிக்­கு­களும் சுகா­தார நிலை­யங்­களும் பொறுப்­பற்ற முறையில் உயி­ரியல் மருத்­துவக் கழி­வு­களை கொட்­டு­வதன் மூல­மாக பெரும் சுற்றுச் சூழல் அழிவை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. இதன் விளை­வாக இந்த நிலை­யங்கள் தொற்­று­நோய்கள் பர­வு­வ­தற்கு பெரிதும் கார­ணி­க­ளாக இருக்­கின்­றன. அர­சாங்க ஆஸ்­பத்­தி­ரி­களில் கூட கழிவு முகா­மைத்­துவம் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை என்றும் அந்த ஆய்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

மருத்­துவக் கழி­வு­களை உகந்த முறையில் அப்­பு­றப்­ப­டுத்­தாமல் விடு­வது ஒரு குற்­றச்­செயல் என்று இலங்கை மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கார சபை­யினால் ஒழுங்கு விதிகள் வர்த்­த­மா­னியில் பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், நடை­மு­றையில் இது ஒரு பிரச்­சி­னைக்­கு­ரிய விவ­கா­ர­மா­கவே தொட­ரு­கி­றது. செலவுச் சுருக்­க­மான முறை­யிலும் விரை­வா­கவும் மருத்­துவக் கழிவு அகற்­றலை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு ஒரு சில உள்ளூர் செயற்­றிட்­டங்­களே கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போது உல­க­றிந்­த­தா­கி­விட்ட மீதொட்­ட­முல்ல குப்பை மேடு குறித்தும் அங்கு கந்­தல்­களைப் பொறுக்­கு­கின்­ற­வர்கள் குறித்தும் 2016 ஆம் ஆண்டு செய்­தி­ய­றிக்­கை­யொன்றை வெளி­யிட்ட இலங்­கையின் சண்டே ஒப்­சேவர் பத்­தி­ரிகை குப்­பை­க­ளுக்குள் ஆஸ்­பத்­திரிக் கழி­வு­களும் மனித குடல்­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தைப்­பற்றி விப­ரித்­தி­ருந்­தது. ‘குப்பை மீது காலடி வைத்து முடை­நாற்­ற­மெ­டுக்கும் கழி­வு­களின் ஊடாக நடந்து சென்ற போது நரகத்தின் ஊடாக செல்­வது போன்று இருந்­தது. உணவுக் கழி­வுகள், பிளாஸ்டிக் பொருட்கள், துத்த நாகத்­த­க­டுகள், கட­தா­சிகள், உடுப்­புகள், ஆஸ்­பத்­திரிக் கழி­வுகள், இலத்­தி­ர­னியல் கழி­வுகள், பிரா­ணி­களின் சட­லங்கள் மற்றும் மனித உள்­ளு­றுப்­புகள் எங்­குமே பரவிக் கிடந்­தன என்று கட்­டு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆஸ்­பத்­திரிக் கழி­வுகள் தொடர்பில் குப்பை மேட்டில் காணப்­பட்ட நிலை­வரம் குறித்து மேலும் விளக்­கிய அக்­கட்­டு­ரையில் ‘கழி­வு­களை ஏற்­றிக்­கொண்டு ஒரு லொறி அந்தப் பகு­தியில் பிர­வே­சித்­தது. கந்­தல்­களைப் பொறுக்கிக் கொண்­டி­ருந்­த­வர்கள் உடனே அந்த லொறியின் பின்னால் ஓடி­னார்கள். அலா­வு­தீனும் அதன் பின்னால் ஓடினார். குப்­பை­க­ளுக்கு மேலால் நடப்­பது சில வேளை­களில் மிகவும் ஆபத்­தா­னது. ஏனென்றால், வீசி­யெ­றி­யப்­பட்ட மருந்­தூசிக் குழாய்கள், ஊசிகள், போத்­தல்கள் மற்றும் மனித சதைகள் என்று பெரு­வா­ரி­யான கழி­வுகள் அங்கே கிடக்கும் என்று அலா­வுதீன் கூறினார் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதே­வேளை இலங்­கையில் பின்லேய்ஸ் கொழும்பு என்ற தனியார் நிறு­வனம் மருத்­துவக் கழி­வு­களை அழிப்­ப­தற்­கான முதன் முத­லான திட்­டத்தை 2009 ஆம் ஆண்டில் முன்­னெ­டுத்­தது. ஆனால், அந்த நிறு­வனம் தனது ‘கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட’ கார­ணங்­களைக் காட்டி 2013 ஆம் ஆண்டில் அதன் சேவையை நிறுத்திக் கொண்­டது. மருத்­துவக் கழி­வு­களை அழிப்­ப­தற்கு இலங்கை மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கார சபை­யினால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்த ஒரே கம்­பனி பின்லேய்ஸ் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

‘மருத்­துவக் கழி­வு­களை அகற்றும் எமது தொழில்­து­றையில் (Sterifirst business) எமது கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக கழி­வு­களை அகற்றும் பணி­களை பொறுப்­பான முறையில் தொடர்ந்து முன்­னெ­டுப்­பது சாத்­தி­ய­மில்­லாமல் போய்­விட்­டது. டிசம்பர் மாதத்

தில் இருந்து எமது தொழில்­து­றையை நிறுத்­து­வ­தற்கு நாம் நிர்ப்­பந்­திக்­கப்­பட்டோம்’ என்று 2013 வரு­டாந்த அறிக்­கையில் அந்த நிறுவனம் தெரி­வித்­தி­ருந்­தது. கழி­வு­களை வகைப்­ப­டுத்­து­வ­தற்­கென்று கொள்­க­லன்­களை ஆஸ்­பத்­தி­ரிக்கு வழங்­கிய பின்லேய்ஸ் நிறுவனம் பிறகு அந்தக் கொள்­க­லன்­களை சேக­ரித்­துக்­கொண்டு ஹைட்ரோ கிளேவ் (Hydroclave) என்ற இயந்­தி­ரத்தின் ஊடாக

அவற்றைச் செலுத்­தி­யது. அந்த இயந்­ திரம் அக்­க­ழி­வுகள் குப்பை கொட்டும் இடங்  களில் போடப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக அவற் றைத் தொற்று நீக்கம் செய்­தது. அத்­த­கை­ய­தொரு செயற்­றிட்­டத்­துக்கு அவ­சி­ய­மான சகல ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் வழங்­கப்­பட்­டி­ருந்தால், வேறு பல நிறுவனம் அது­போன்ற பணி­களில் ஈடு­பட முன்­வந்­தி­ருக்கும் என்­பது தெளி­வா­னது. மருத்­துவக் கழி­வு­களை தொற்று நீக்­கிய பிறகு குப்பை கொட்டும் இடங்­களில் போடு­கின்ற பணி பெரு­ம­ள­வுக்கு விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­ய­தொன்­றாக இருக்­கி­றது.  

நேபா­ளத்தில் நகர சனத்­தொகை வள­ரத்­தொ­டங்­கி­யி­ருப்­ப­த­னாலும் சுகா­தாரப் பரா­ ம­ரிப்பு நிலை­யங்கள் கணிசமானளவுக்கு விரி வடையத் தொடங்கியதனாலும் ஆபத்தை விளைவிக்கத்தக்க திண்மக் கழிவு பெருகும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

சுகாதாரப் பராமரிப்பு கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பில் மிகவும் மட்டுப் படுத்தப்பட்ட அளவிலான தகவல்களை மாத்திரமே பெறக்கூடியதாக இருக் கிறது என்று காத்மாண்டு நகரில் உள்ள நேபாள சுகாதார ஆராய்ச்சி கவுன்சில் 2013ஆம் ஆண்டில் அதன் ஆய்வு அறிக்கை யொன்றில் சுட்டிக்காட்டியிருந்தது. குப்பைகளை வகைப்  படுத்தல் திட்டமிட்ட ஒரு முறையில் இடம்பெற  வில்லை என்றும் அந்த கவுன்சில் தெரிவித் திருந்தது.  

பாகிஸ்தானில் 250,000 தொன் மருத்துவக் கழிவுகள் பல்வேறு வகைப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களினால் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று 2005 ஆம் ஆண்டின் சுற்றாடல் பாதுகாப்பு நிலைவர அறிக்கையின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இந்தப் பிரச்சினை குறித்து பல்வேறு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் திட்டமிட்ட முறையில் மருத்துவக் கழிவுகள் வகைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கிய பிறகு குப்பை கொட்டும் இடங்களில் போடப் படுவதற்கான வழிமுறைகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பங்களாதேஷில் மருத்துவக் கழிவு முகாமைத் துவம் என்பது தரையைக் கூட்டித் துப்புர வாக்கி சகல விதமான கழிவுகளையும் மிக  அண்மையாக இருக்கின்ற குப்பைக் கூடைக்  குள் போடுவதாக மாத்திரமே அர்த்தப்  படுகிறது என்று அந்நாட்டின் செய்திச் சஞ்சிகையான புரோப் (Probe) அறிக்கை யொன்றில் குறிப்பிட்டிருக்கிறது.  

தெற்காசியாவில் திண்மக் கழிவுகளை கையாளுவதிலும் அகற்றுவதிலும் உள்ள பலவகைப்பட்ட சவால்களைக் கையாளு வதில் தனியார் துறையின் பங்கு உச்சபட்சத் துக்கு பயன்படுத்தப்படவில்லை. பல வகைப்  பட்ட திண்மக் கழிவுகளையும் திட்டமிட்ட ஒரு முறையில் அகற்றுவதற்கான தீர்வு களை நாடும் முயற்சிகளை, கூட்டாக மேம்  படுத்தக் கூடிய செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்த தனியார் கம்பனிகள் முன்வர வேண்டும். இதுவே இலங்கைக்கும் தெற்காசி  யாவின் ஏனைய நாடுகளுக்கும் இன்று தேவைப்படுகின்றது.  

கழிவு அகற்றலை ஒரு தேசியப்பிரச்சி னையாகவும் அதேவேளை, பிராந்தியரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக வும் கருதுகின்ற ஒரு மனநிலையை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய பொறிமுறையொன்று அவசியம். அத்தகைய பொறிமுறையின் ஊடாக ஒத்துழைத்துச் செயற்படுவதே அரசினதும் பொதுமக்களினதும் கடமையாகும். கழிவு

அகற்றலில் வெற்றிகரமான ஒரு செயற்றிட்டத்தை இலங்கை முன்னெடுக் குமாக இருந்தால், எமது பிராந்தியத்தில் இருந்து குப்பை என்ற கறையை அழிப்பதற்கு உதவுவதில் அயல்நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். 

நாட்டுக்காகவும் அதற்கு அப்பாலும் மாற்றத்துடனான எதிர்காலமொன்றை உறுதிப்படுத்த வேண்டியது மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களுக்கு இலங்கை செய்கின்ற பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். அவர்களுக்கு நாடு கடமைப்பட் டிருக்கிறது.  

பிரான்சிஸ் புளத்சிங்கள 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-13#page-4

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.