Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரூபித்தால் எம்.பி பதவியைத் துறப்பேன்! - சிறிதரன் சவால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிரூபித்தால் எம்.பி பதவியைத் துறப்பேன்! - சிறிதரன் சவால் 
 
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கோரியே ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என்றும்,  நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சவால் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கோரியே ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என்றும், நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சவால் விடுத்துள்ளார்.

  

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அங்கு சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது, இலங்கை பாராளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். இந்தநிலையில் ஐரோப்பிய பாராளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன? நடைமுறைகள் என்ன? என்பனவற்றை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன். இதன்போது வெளியே புகைப்படம் எடுத்துக் கொண்டபோது அதில் நிர்பந்தத்தின் பெயரிலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

 

ஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும். நான் இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரி சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே பெல்ஜியம் சென்றேன் எனவும், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட்டேன் எனவும் எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். நான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி நடப்பவன் அல்ல. அவ்வாறான சமூகத்தில் நான் பிறக்கவும் இல்லை என கூறினார்.   http://www.seithy.com/breifNews.php?newsID=182528&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பொய்  இப்பவே பதவி விலகினால் நல்லது முன்னாள் போராளிகளின் சாப்பாட்டில் மண்ணை போடுவது நிக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.