Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

எங்கட்ட நாடோ???ஹி ஹி ஹி வெள்ளைக்காரன் பயப்படுவதிலும் நியாயம் இருக்கதான் செய்கின்றது. யம்மு விட்டால் உங்கட வ்ளமிங்டன தமிழ் ஊராக்கு என்று கேட்பீர்கள் போல ;)

எத்தனை தூரம் ஒஸ்திரேலியர்கள் விளையாட்டில் கெட்டிக்காரர்களோ, அத்தனை தூரம் வாயிலும் கெட்டிக்காரர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அதை இல்லை என்று கதைக்க முடியாது, காரணம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஏன் விளம்பிங்கடன் ,முழு சிட்னியும் என்றே என்று தான் சொல்லுவேன் அவ்வளத்துக்கு எனக்கு சுகந்திரத்தை அள்ளி தந்திருக்கிறான் நான் கதைப்பதில் என்ன பிழை தங்கா எவனுக்கு ஆற்றல் இருக்குதோ அப்ப அவன் கதைப்பான் தானெ இதுக்கு போய் அலட்டிக்கலாமா

:(

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காயம் காரணமாக "சுப்பர் 8" சுற்றிலிருந்து விலகினார் வொட்சன்.

அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷேன் வொட்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய "சுப்பர் 8' சுற்று ஆட்டங்களில் அவர் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ஒரு சோதனைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. உலகக் கிண்ண போட்டி தொடங்குவதற்கு முன்பு பிரெட்லீ காயமடைந்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். ஹெய்டன், கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோரும் காயத்தில் சிக்கினர். இருப்பினும், அவர்கள் குணமடைந்து இப்போது உலகக் கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷேன்வொட்சன் காயமடைந்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தனது 2 ஆவது ஓவரில் 4 பந்துகள் வீசிய நிலையில், காலில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்கேன் எடுத்து பரிசோதித்த போது, இடது முழங்காலுக்கு கீழ் பின் பகுதியில் லேசான தசைநார் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு 3 வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அணியின் உடற்றகுதி நிபுணர் அலெக்ஸ் கோண்டோரிஸ் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கோண்டோரி கூறியதாவது:

ஆட்டத்தின் பாதியில் வொட்சன் காயம் அடைந்து இருப்பது கவலை அளிக்கிறது. அவர் இனி இந்த உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் எந்த திகதியில் விளையாடுவதற்கு ஏற்ற உடல் தகுதியை அவர் பெறுவார் என்பது குறித்து அணித்தலைவர், பயிற்சியாளர் ஆகியோரிடம் ஆலோசிக்க உள்ளேன் என்றார்.

இருப்பினும் வொட்சன் உலகக் கிண்ண போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்படவில்லை. "சுப்பர் 8" சுற்றின் எஞ்சிய ஆட்டங்களில் வொட்சன் விளையாட முடியாது. அவுஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு நிச்சயம் தகுதி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதிப் போட்டிக்குள் வொட்சன் குணமடைந்து விடுவார் என்று நம்பப்படுகிறது.

எனவே வரும் 24 ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி நடக்கும் அரை இறுதிப் போட்டியில் ஆடும் நம்பிக்கையுடன் வொட்சன் உள்ளார். வரும் 8 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வொட்சனுக்கு பதிலாக பிரட் ஹொட்ஜ் களம் இறங்குகிறார்.

-Virakesari-

மலிங்க வீசுகின்ற பந்துகளுக்கு அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடிக்கின்ற சிக்சர்கள் ஒவ்வொன்றும் ஆர்முடுகியவாறு சீறிக்கொண்டு போய் ஸ்ரேடியத்துக்கு வெளியில தான் விழும் அன்றய தினம் இலங்கை வீரர்கள் ஓடி ஓடி பந்து பொறுக்க வேண்டிய நிலமை ஏற்படும் இங்கிலாந்து அணி கூட விளையாடும் போது 235 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை அணியினர் சான் ரைற், நாதன் பிறேக்கன் ஆகியோர் வீசுகின்ற பந்து வீச்சுகளை எப்படி எதிர்கொள்ள போகின்றார்களோ தெரியவில்லை. அவுஸ்ரேலியா அணியின் சகல துறை ஆட்டக்காரன் சான் வட்சன் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் அதனால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்று ஆறுதல்ப் பெருமூச்சு விட்டபடி மேலே யாரோ கருத்து எழுதியிருக்கினம் அவுஸ்ரேலியா அணியின் றிசேவ் பிளேயர்கள் கூட ரொம்ப டேஞ்சரானவர்கள் தான் பிறட் கொட்ஜ் என்பவர் றிசேவ் பிளேயர் தான் ஆனால் அவர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு போட்டியில் சதம் அடித்துள்ளார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

அப்பு பொறுத்திருந்து பாரும் மாலிங்கட்ட பந்துக்கு யார்ட்ட பொல்லு போகுது என்டு

விளையாடும்போது அடிக்கடி துடுப்பாட்டக்காரர்கள் நடுவில் சந்தித்து ஏதோ கதைத்துக் கொள்வார்கள் அல்லவா? அவர்கள் என்ன கதைப்பர்கள் என்ற ஒரு கற்பனை. இலங்கை இந்தியா போட்டியின்போது இந்திய வீரர்கள் இப்படித்தான் கதைத்திருப்பர்களாம்--

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வதேச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பனை

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலைமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கறேயே. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியலை.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கறேன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்தை.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.

உத்தப்பா: (நக்கலான சிரிப்போட ) என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கலை?

கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 போல்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளயே இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.

உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.

கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்னை அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி :: என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?

ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.

கங்கூலி : இவனுங்களை என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சதை விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.

ஷேவக் : என்ன 113ஆ?

கங்கூலி : இல்லை 14.

10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.

கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறதை பார்த்தா அடிக்க முடியும்னு தோனலை. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தோன அடிக்கலாம்.

ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவரை பார்த்துக்கறேன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடறேன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்)

:lol::rolleyes::lol:

காயம் காரணமாக "சுப்பர் 8" சுற்றிலிருந்து விலகினார் வொட்சன்.

அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷேன் வொட்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய "சுப்பர் 8' சுற்று ஆட்டங்களில் அவர் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ஒரு சோதனைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. உலகக் கிண்ண போட்டி தொடங்குவதற்கு முன்பு பிரெட்லீ காயமடைந்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். ஹெய்டன், கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோரும் காயத்தில் சிக்கினர். இருப்பினும், அவர்கள் குணமடைந்து இப்போது உலகக் கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷேன்வொட்சன் காயமடைந்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தனது 2 ஆவது ஓவரில் 4 பந்துகள் வீசிய நிலையில், காலில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்கேன் எடுத்து பரிசோதித்த போது, இடது முழங்காலுக்கு கீழ் பின் பகுதியில் லேசான தசைநார் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு 3 வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அணியின் உடற்றகுதி நிபுணர் அலெக்ஸ் கோண்டோரிஸ் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கோண்டோரி கூறியதாவது:

ஆட்டத்தின் பாதியில் வொட்சன் காயம் அடைந்து இருப்பது கவலை அளிக்கிறது. அவர் இனி இந்த உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் எந்த திகதியில் விளையாடுவதற்கு ஏற்ற உடல் தகுதியை அவர் பெறுவார் என்பது குறித்து அணித்தலைவர், பயிற்சியாளர் ஆகியோரிடம் ஆலோசிக்க உள்ளேன் என்றார்.

இருப்பினும் வொட்சன் உலகக் கிண்ண போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்படவில்லை. "சுப்பர் 8" சுற்றின் எஞ்சிய ஆட்டங்களில் வொட்சன் விளையாட முடியாது. அவுஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு நிச்சயம் தகுதி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதிப் போட்டிக்குள் வொட்சன் குணமடைந்து விடுவார் என்று நம்பப்படுகிறது.

எனவே வரும் 24 ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி நடக்கும் அரை இறுதிப் போட்டியில் ஆடும் நம்பிக்கையுடன் வொட்சன் உள்ளார். வரும் 8 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வொட்சனுக்கு பதிலாக பிரட் ஹொட்ஜ் களம் இறங்குகிறார்.

-Virakesari-

யாழ் வினோ எதுக்கோ இப்பவே ஆயத்தம் பண்ணராரு..

இல்லியா

வானவில், danklas..தூயா..கந்தப்பு.. என்ன நினைக்கிறீங்க..?

:lol::rolleyes:

விளையாடும்போது அடிக்கடி துடுப்பாட்டக்காரர்கள் நடுவில் சந்தித்து ஏதோ கதைத்துக் கொள்வார்கள் அல்லவா? அவர்கள் என்ன கதைப்பர்கள் என்ற ஒரு கற்பனை. இலங்கை இந்தியா போட்டியின்போது இந்திய வீரர்கள் இப்படித்தான் கதைத்திருப்பர்களாம்--

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வதேச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பனை

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலைமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கறேயே. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியலை.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கறேன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்தை.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.

உத்தப்பா: (நக்கலான சிரிப்போட ) என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கலை?

கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 போல்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளயே இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.

உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.

கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்னை அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி :: என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?

ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.

கங்கூலி : இவனுங்களை என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சதை விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.

ஷேவக் : என்ன 113ஆ?

கங்கூலி : இல்லை 14.

10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.

கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறதை பார்த்தா அடிக்க முடியும்னு தோனலை. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தோன அடிக்கலாம்.

ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவரை பார்த்துக்கறேன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடறேன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்)

:lol::rolleyes::lol:

அப்பு பொன்னி உமது இந்திய கிரிக்கட் சம்பந்தமான நகைச்சுவைகளை இங்கே பதிந்தால் நன்றாகவிருக்கும்

http://www.yarl.com/forum3/index.php?showt...20&start=20

யாழ் வினோ எதுக்கோ இப்பவே ஆயத்தம் பண்ணராரு..

இல்லியா

வானவில், danklas..தூயா..கந்தப்பு.. என்ன நினைக்கிறீங்க..?

:rolleyes::lol:

ஆகட்டும் அப்பு எல்லாம் போடியில தெரியும் :lol:

அப்பு பொன்னி உமது இந்திய கிரிக்கட் சம்பந்தமான நகைச்சுவைகளை இங்கே பதிந்தால் நன்றாகவிருக்கும்

http://www.yarl.com/forum3/index.php?showt...20&start=20

உண்மைதான்.. இனி அப்படி செய்யவில்லை

:lol::rolleyes:

  • தொடங்கியவர்

ஆகட்டும் அப்பு எல்லாம் போடியில தெரியும் :rolleyes:

2007 உலக கிண்ணம் மட்டும் இல்லை எதிர்வரும் காலங்களில் வரப்போகும் உலக கிண்ணங்களும் இனிமேல் தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. கிரிக்கெற் என்றால் அவுஸ்ரேலியா அவுஸ்ரேலியா என்றால் கிறிக்கெற் ஒரு சில போட்டிகள் மாத்திரம் இந்த கூற்றுக்கு விதிவிலக்காக அமையலாம் இனிவரும் காலங்களில் ஐசிசி கிண்ணம் மற்றும் உலக கிண்ணம் எல்லாமே அவுஸ்ரேலியாவுக்கு தான் கிடைக்கும் தவறினால் தென்னாபிரிக்கா, நியூசிலாந்துக்கு போன்ற அணிகளுக்கு கிடைக்கும் தெற்காசிய நாடுகளுக்கு இனிமேல் ஐசிசி கோப்பையும் கிடையாது உலக கோப்பையும் கிடையாது தெற்காசிய நாடுகளுக்கு இப்படி ஒரு கால கட்டம் உருவாகும் என்பதை தீர்க்க தரிசனத்தால் அறிந்து தான் தெற்காசிய பிராந்தியத்தார் எல்லாரும் திட்டமிட்டு ஆசிய நாடுகளுக்கு என சிறப்பாக ஆசிய கிண்ண போட்டியை ஆரம்பித்தார்கள் போல இருக்கு. அந்த போட்டியில் கூட ஆசிய பிராந்தியம் அல்லாத ஒரு நாடு விளையாட வேண்டும் என்று ஐசிசி கூறியிருக்கின்றது இது தெற்காசிய நாடுகளுக்கு தலையிடியாக உள்ளது. இனி இலங்கை போன்ற நாடுகள் வெற்றிக்கிண்ணம் எடுக்க வேண்டும் என்றால் விசேஷமாக அணிகளை தெரிவு செய்து ரை ஆங்கிளர் சீறிஸ் தான் நடத்த வேண்டும் உதாரணத்துக்கு இப்படி:- பெர்மூடா - கென்யா - இலங்கை அல்லது பங்களாதேஸ் - நெதர்லாந்து - இலங்கை. :mellow:

Edited by யாழ்வினோ

2007 உலக கிண்ணம் மட்டும் இல்லை எதிர்வரும் காலங்களில் வரப்போகும் உலக கிண்ணங்களும் இனிமேல் தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. கிரிக்கெற் என்றால் அவுஸ்ரேலியா அவுஸ்ரேலியா என்றால் கிறிக்கெற் ஒரு சில போட்டிகள் மாத்திரம் இந்த கூற்றுக்கு விதிவிலக்காக அமையலாம் இனிவரும் காலங்களில் ஐசிசி கிண்ணம் மற்றும் உலக கிண்ணம் எல்லாமே அவுஸ்ரேலியாவுக்கு தான் கிடைக்கும் தவறினால் தென்னாபிரிக்கா, நியூசிலாந்துக்கு போன்ற அணிகளுக்கு கிடைக்கும் தெற்காசிய நாடுகளுக்கு இனிமேல் ஐசிசி கோப்பையும் கிடையாது உலக கோப்பையும் கிடையாது தெற்காசிய நாடுகளுக்கு இப்படி ஒரு கால கட்டம் உருவாகும் என்தை தீர்க்க தரிசனத்தால் அறிந்து தான் ஆசிய நாடுகளுக்கு என சிறப்பாக ஆசிய கிண்ண போட்டியை ஆரம்பித்தார்கள் போல இருக்கு. அந்த போட்டியில் கூட ஆசிய பிராந்தியம் அல்லாத ஒரு நாடு விளையாட வேண்டும் என்று ஐசிசி கூறியிருக்கின்றது இது தெற்காசிய நாடுகளுக்கு தலையிடியாக உள்ளது. இனி இலங்கை போன்ற நாடுகள் வெற்றிக்கிண்ணம் எடுக்க வேண்டும் என்றால் விசேஷமாக அணிகளை தெரிவு செய்து ரை ஆங்கிளர் சீறிஸ் தான் நடத்த வேண்டும் உதாரணத்துக்கு இப்படி:- பெர்மூடா - கென்யா - இலங்கை அல்லது பங்களாதேஸ் - நெதர்லாந்து - இலங்கை. :rolleyes:

உமக்கு ஆகவும்தான் மறை கழண்டு போச்சு.. என்னதான் நினைக்கிறீர்..ஆகவும்தான் வெள்ளைக்கு அடி வருடுகிறீர்.. Forecast சொல்லுற அளவிற்கு நீர் பெரிய மண்ணாங்கட்டி..

:angry: :angry:

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

சுப்பர் - 8 இல் இங்கிலாந்து அணியை மிக இலகுவாக வீழ்த்துவோம்: மெக்ராத்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தாங்கள் இலகுவாக வெற்றி பெறுவோம் என்று அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் `சுப்ப -8' சுற்றில் அவுஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் 8 ஆம் திகதி மோதுகின்றன. உலகக் கிண்ணப் போட்டிக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 5-0 என்று வென்ற அவுஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் நடந்த 3 நாடுகள் போட்டியில் கோட்டைவிட்டது. 3 போட்டிகள் கொண்ட இறுதிப் போட்டியில் 2-0 என்று அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் ஆனது. இந்தத் தோல்வி அவுஸ்திரேலியாவின் முதலிட நிலைக்கே உலை வைத்தது.

இந்த நிலையில் 8 ஆம் திகதி போட்டியை அவுஸ்திரேலிய வீரர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், இங்கிலாந்தை பழி தீர்க்கக் காத்திருக்கிறார். இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியா சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று மெக்ராத் நம்புகிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, இறுதிக்கட்டத்தில் சிறப்பாக ஆடியது. இதில் நாங்கள் எங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.

ஆனால், உலகக் கிண்ணப் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். நாங்கள் ஆடிய போட்டிகளில் எங்களது அணிக்கு நிகராக எந்த அணியின் ஆட்டமும் இல்லை. இங்கிலாந்து ஆடும் விதத்தையும் நாங்கள் ஆடும் விதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்களுக்கு எதிராக நாங்கள் இலகுவாக வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்.

நான் எப்போதும் இங்கிலாந்து அணியுடன் ஆடுவதையும் அவர்களைத் தோற்கடிப்பதையும் விரும்புவேன். இந்த உலகக் கிண்ணப் போட்டியுடன் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதால் அவர்களை கடைசி முறையாக சந்திக்கவுள்ளேன். எனவே, இதனை நல்ல விதமாக முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

-Thinakkural-

பங்களாதேஷ் ரசிகர்களும் சீற்றம் கப்டனின் கொடும்பாவியை எரித்தனர்.

உலகக் கிண்ணப் போட்டியில் `சுப்ப-8' சுற்றில் அடுத்தடுத்து இரண்டு தோல்வியை தழுவியதால் பங்களாதேஷ் அணிக் கப்டனின் கொடும்பாவியை ரசிகர்கள் எரித்துள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷிடம் தோல்வியடைந்ததால் `சுப்ப-8' சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள், அணி வீரர்களின் கொடும்பாவியை எரித்தனர்.

இந்திய அணியை வென்ற பங்களாதேஷ் `சுப்ப - 8' சுற்றுக்கு முன்னேறி விளையாடி வருகிறது. `சுப்ப-8' சுற்றில் பங்களாதேஷ் அணி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பலமான அணிகளுக்கு எதிராக மோதி படுதோல்வியடைந்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் தொடர்ச்சியான இரண்டு தோல்விகளை கண்டித்து, இந்திய ரசிகர்கள் பாணியில் பங்களாதேஷ் ரசிகர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் பங்களாதேஷ் அணி கப்டன் ஹபிபுல் பஷாரின் கொடும்பாவியை பல்கலைக்கழக மாணவர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். பஷார் கப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பஷார் 21 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

பங்களாதேஷ் ரசிகர்கள் கொடும்பாவி எரிப்பது இதுவே முதல் முறை.

குட்டி அணியாக கருதப்படும் பங்களாதேஷ் அணி, இதுவரை 154 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 117 ஆட்டங்களில் தோற்றுள்ளது.

வளர்ந்து வரும் அணியான பங்களாதேஷ் அணி, முதல் முறையாக `சுப்ப-8' சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்தது. வலுவான அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த போதிலும், அந்த நாட்டு ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்தாக தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, மேற்கிந்தியா அணிகளுக்கு எதிராக பங்களாதேஷ் அணி விளையாடவுள்ளது.

-Thinakkural-

Edited by யாழ்வினோ

உமக்கு ஆகவும்தான் மறை கழண்டு போச்சு.. என்னதான் நினைக்கிறீர்..ஆகவும்தான் வெள்ளைக்கு அடி வருடுகிறீர்.. Forecast சொல்லுற அளவிற்கு நீர் பெரிய மண்ணாங்கட்டி..

:angry: :angry:

பொன்ஸ் இது மண்ட கழன்ட கேஸ் பேசுற பேச்சில்லை, மண்டைக்குள்ள எதுவுமே இல்லாதது பேசுறது, பாவம் ஆசைக்கு பேசுறாரு பாவம் பேசிட்டு போகட்டும் :icon_idea:

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டம் தென்னாபிரிக்காவுக்கும் தெற்காசியா நாடு ஒன்றுக்கும் இடையே தான் நடைபெறப்போகின்றது இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அமோக வெற்றியீட்டுவதன் மூலம் சுப்பர் 8 சுற்றுப் போட்டி புள்ளி அடிப்படையில் தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்துக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. :icon_idea:

நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தை தான் எழுதுகிறேன் அது சரியா அல்லது தவறா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் தானே ஏன் இப்படி பொறுமையில்லாமல் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள், ரென்ஷனாகின்றீர்கள் கூல் டவுண் கூல் டவுண் :icon_idea:

பொன்ஸ் இது மண்ட கழன்ட கேஸ் பேசுற பேச்சில்லை, மண்டைக்குள்ள எதுவுமே இல்லாதது பேசுறது, பாவம் ஆசைக்கு பேசுறாரு பாவம் பேசிட்டு போகட்டும் :icon_idea:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:lol::lol::D:( :P

:lol::lol::D:( :P

என்ன நக்கலா

:angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - பங்களாதேஷ் இடையேயான இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெற்றுக்களை இழந்து 251 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டம் பங்காளதேசததிற்கும் தென்னாபிரிக்காவிற்குமிடையி

இன்னுமொரு அதிர்ச்சியை வங்காள தேசம் ஏற்படுத்துமா? 251 என்பது போட்டியைக் கொடுக்கக்கூடிய எண்ணிக்கை தான்.

அதிலும் முக்கியமான துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான கிப்ஸ் தசைப்பிடிப்புக் காரணமாக பெரும்பாலும் துடுப்பாட மாட்டார் என்று கருதப்படுகிறது.

ஆக தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக் காரர்களினதும் வங்காள தேச சுழல் பந்து வீச்சாளர்களினதும் பலப் பரீட்சையில் யார் வெற்றி பெறுகிறார்கள் என் று பொறுத்திருந்து பார்ப்போம்

smith out bowled..

:mellow:

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா அணி சிறந்த ஒரு அணி ஆனால் இன்று பங்களாதேஷ் அணியுடனான ஆட்டத்தில் கவலைக்குரிய முறையில் தோல்வியை தழுவிக்கொண்டது. தென்னாபிரிக்காவின் இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி ஆட்டத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. :mellow:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா அணி இன்று சந்தித்தது போன்ற நெருக்கடியான நிலமைகளில் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு றிக்கி பொன்டிங் போன்றவர்களது தலமைத்துவம் வேண்டும். நெருக்கடியான நிலமைகளில் சிறந்த முறையில் களத்தடுப்பு வியூகம் அமைத்தல், பந்து வீச்சாளர்களை மதிநுட்பத்துடன் பயன்படுத்துதல், சிறந்த முறையில் பந்து பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல், துடுப்பாட்ட வீரர்களை ஏற்ற முறையில் களத்துக்கு அனுப்புதல் இது போன்ற மிக முக்கிய அதிரடி மாற்றங்களை உடனுக்குடன் மேற்கொள்ளக்கூடியவர் றிக்கி பொன்டிங் மட்டும் தான் அவர் ஒரு அனுபவம் மிக்க சிறந்த தலைவர். :mellow:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

ஒரு நாள் ஆட்டத்துக்கான ஐசிசி யின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது!!

ஒரு நாள் ஆட்டத்துக்கான ஐசிசி யின் தரவரிசை பட்டியலில் தற்போது அவுஸ்ரேலியா அணி முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோல்வியடைந்த காரணத்தினால் ஒரு நாள் ஆட்டத்துக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

1- Australia - (Points - 6221) (Rating -127)

2- South Africa - (Points - 4866) (Rating - 125)

3- New Zealand - (Points - 4730) (Rating - 115)

Edited by யாழ்வினோ

இன்றைய ஆட்டம் தென்னாபிரிக்காவுக்கும் தெற்காசியா நாடு ஒன்றுக்கும் இடையே தான் நடைபெறப்போகின்றது இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அமோக வெற்றியீட்டுவதன் மூலம் சுப்பர் 8 சுற்றுப் போட்டி புள்ளி அடிப்படையில் தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்துக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. :mellow:

நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தை தான் எழுதுகிறேன் அது சரியா அல்லது தவறா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் தானே ஏன் இப்படி பொறுமையில்லாமல் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள், ரென்ஷனாகின்றீர்கள் கூல் டவுண் கூல் டவுண் :lol:

:o:o:) :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் வெற்றிபெற்றுட்டாம் அதற்கு காரணம் கோச் நம்ம ஆளு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.